🎵மலையாளக்கரையோரம் தமிழ் பாடிய குருவிகள்🎵
முகநூலெங்கும் ஓணம் வாழ்த்துக்கள் நிறைந்திருக்கின்றன. எப்பொழுதும் போல் மனது திரையிசையின் பக்கம் துள்ளிச்சென்றது.
தமிழ் படங்களில் மலையாள வரிகள் இடம்பெற்றிருந்த பாடல்கள் அல்லது கேரள தொடர்புடைய பாடல்கப் ஒவ்வொன்றாக நினைவில் வந்தன. அவற்றை பட்டியலிட்டால் என்ன என்று தோன்றவே... இதோ... எதோ ஒன்று மறந்து போவதற்குள்... (இந்த பாடல்கள் ஒன்றைக்கூட யேசுதாஸ் பாடவில்லை!)
1. லட்டு லட்டு- அபூர்வ சகோதரர்கள் (1949)
பல மொழிகள் பேசும் படையினரை விதவிதமாக சமையல் செய்து அவரவர் மொழிகளில் பாடி அவர்கள் கவனத்தை திசைத்திருப்புகிறார் பானுமதி. இதில் மலையாள வரிகளும் வருகின்றன.. 'காலன் ஓலன் எரிசேரி...' என்று கேரள உணவு வகைகளை நாவூரும் வகையில் பாட்டிலேயே பட்டியலிடுகிறார்...
https://youtu.be/6IsdQUhG9hk?feature=shared
2. திராவிடமாம்- நாடோடி மன்னன் (1958)
நான்கு தென்னக மொழிகளில் பாடல் வரிகள் கொண்ட இந்த பாடலில் மலையாள வரிகளை எழுதியவர் P. பாஸ்கரன், பாடியவர் சாந்தா P. நாயர்.
https://youtu.be/eOE9lcJhRn0?feature=shared
3. அழகான மலையாளம்- வாழ்க்கை வாழ்வதற்கே (1964)...
பச்சை குத்தும் ஒரு கேரளத்து பெண் தமிழில் பாடும் பாடல்... விஸ்வதாதன்- ராமமூர்த்தி இசையில் L.R. ஈஸ்வரி அழகாக பாடுகிறார்.....
https://youtu.be/27GTkUSMzys?feature=shared
4. சேதி கேட்டோ சேதி கேட்டோ- எதிர் நீச்சல் (1968)
V. குமாரின் இசையில் வாலியின் வரிகளை S.C.கிருஷ்ணன், P. சுசீலா, ஜமுனாராணி மற்றும் K. சுவர்ணா பாடுகிறார்கள்
https://youtu.be/uImeB1GLhEg?feature=shared
5. அழகே தமிழே நீ வாழ்க- திருமலை தென்குமரி (1970)
குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த இந்த படத்தில் வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாய் கொண்ட பிரயாணிகள் பேருந்தில் போகும்போது பொழுதை கழிக்க அவரவர் மொழிகளில் சில வரிகளை பாடுகிறார்கள். 'கண்ணுகள் பூட்டி' எனத்தொடங்கும் மலையாள வரிகளை மாதுரி பாடுகிறார்.
https://youtu.be/eVqpe4E86u8?feature=shared
6. விருந்தோ நல்ல விருந்து- நீரும் நெருப்பும் (1971)
இது அதே அபூர்வ சகோதரர்கள்- Corsican Brothers- கதை. பானுமதி நடித்த பாத்திரத்தில் ஜெயலலிதா. படையினரை பல மொழிகளில் பாடி ஏமாற்றும் அதே பாடல்காட்சி- மலையாள வரிகளை பாடகர்/ நடிகர் சதனுடன் இணைந்து L.R. ஈஸ்வரி 'குட்டநாடன் புளிசேரி' என்று தொடங்கும்போதே சுவையூட்டும்...
https://youtu.be/nOrWLBnf_00?feature=shared
7. இந்திய நாடு என் வீடு- பாரத விலாஸ் (1973)
(தமிழ் கலந்து) பல மொழிகள் ஒலிக்கும் இந்த பாடலில் 'படைச்சோன் படைச்சோன்' என்றும் மலையாள பாகத்தை மெல்லிசை மன்னரும் ஈஸ்வரியும் பாடுகிறார்கள். திரையில் V.K. ராமசாமியும் ராஜசுலோச்சனாவும்.
https://youtu.be/DnGCsPQjcls?feature=shared
8. மந்தார மலரே மந்தார மலரே- நான் அவனில்லை (1974)- செண்டைகள் முழங்க கதகளி நடனம் போல் நளினமான அசைவுகள் கொண்ட அமர்க்களமான பாடல்- கண்ணதாசனுடன் P. பாஸ்கரனும் இணைந்து இயற்றிய பாடலை பாடியது ஜெயச்சந்திரனும் L.R. ஈஸ்வரியும்.
https://youtu.be/WSx2dyIT46A?feature=shared
9.கரலின்டே கரையே- பாப்பாத்தி (1979) ஜெய்கணேஷ்- ரதிதேவி நடிப்பில் வந்து பல(!) காரணங்களால் பிரபலமடைந்த படம். இசை- ஜெயவிஜயா இரட்டையர்கள். (இவர்களில் ஜெயனின் மகன் தான் நடிகர் மனோஜ் K. ஜெயன்). அம்பிலியும் ஷெரீன் பீட்டர்ஸும் பாடும் மென்மையான பாடல்:
https://youtu.be/_JgXV7fP7lA?feature=shared
10. ஞான் ஞான் பாடனும்- பூந்தளிர் (1979) மலையாள பெண்ணாக வரும் சுஜாதாவுக்கு ஜென்ஸி பாடிய பாடல். இளையராஜாவின் அற்புதமான இசைவார்ப்பு:
https://youtu.be/uqWwm_0SNyk?feature=shared
11. ஸ்வரராக ஸ்ருதியோடு- அந்த 7 நாட்கள் ( 1981)
மெல்லிசை மன்னரின் இசையில் ஜெயச்சந்திரன்- வாணி ஜெயராம் குரல்களில்
https://youtu.be/2Et4ZHQbMnA?feature=shared
12. சப்தசுரதேவி உணரு- அந்த 7 நாட்கள் (1981)
மெல்லிசை மன்னரின் இசையில் ஜெயச்சந்திரன்- ஜானகி குரல்களில்
https://youtu.be/sb65lkOAHA8?feature=shared
13. மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது- மூக்கணாங்கயிறு (1985) கார்த்திக், விஜி, வனிதா நடித்ததாக ஞாபகம். தமிழ் வரிகளை வாலியும் மலையாள வரிகளை மாங்கொம்பு கோபாலகிருஷ்ணனும் எழுத, மெல்லிசை மன்னரின் இன்னிசையில் மலையாளியான ஜெயச்சந்திரன் தமிழ்வரிகளை பாட, தமிழரான வாணி ஜெயராம் மலையாள வரிகளை பாடுகிறார்:
https://youtu.be/HqZ8TP8AHS8?feature=shared
14. மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி- ராஜாதி ராஜா (1989)
மலையாள வரிகள் இல்லையென்றாலும் இந்த பாடலை சேர்க்காமல் இருக்க முடியமா💁♂️
https://youtu.be/xoFIgsMm-Ts?feature=shared
15. சுந்தரி நீயும்- மைக்கில் மதன காமராஜன் (1990)
இளையராஜாவின் இசையில் கமல்- ஜானகி....ஆஹா 💖💖
https://youtu.be/mXlPF2L4pDY?feature=shared
16. குலாவில்லே முத்து வந்தல்லோ- முத்து (1995)
A.R. ரகுமானின் G.V. பிரகாஷ் குரலில் ஆரம்பிக்கும் பாடல் உதித் நாராயண், சித்ரா பாட, இடையில் கல்யாணி மேனனின் வருகையுடன் கேரள கலை கட்டுகிறது
https://youtu.be/GtE1JK8yjVc?feature=shared
17. நெஞ்சினிலே நெஞ்சினிலே- உயிரே (1998)
A.R. ரகுமான் இசையில் வைரமுத்து, கிரீஷ் புத்தஞ்சேரி வரிகளை ஜானகியுடன் M.G. ஸ்ரீகுமார் குழுவினர் பாடுகிறார்கள்.
https://youtu.be/FnQYEdC-Tw0?feature=shared
18. திருவோணம் திருநாளாம்- கவலை படாதே சகோதரா (1998)
இளையராஜா இசையமைத்து சுஜாதாவுடன் பாடும் பாடல்:
https://youtu.be/vHo6URYGqIM?feature=shared
19. மலையாளக்கரையோரம்- அன்பே அன்பே (2003)
பரத்வாஜின் இசையில் கார்த்திக் குழுவினர்.
https://youtu.be/A5LWT0WLZ8A?feature=shared
20. மனசுக்குள்ளே தாகம்- ஆட்டோகிராஃப் (2004)
பரத்வாஜின் இசையில் ஹரீஷ் ராகவேந்திரா, ரேஷ்மி.
https://youtu.be/RtLVOXrEnws?feature=shared
21. தேன் குடிச்ச நிலவு- நான் அவனில்லை (2007)
நரேஷ் ஐயர், தீபா பாடியது
https://youtu.be/SWUa-7ZoqZY?feature=shared
22. ஓமணப்பெண்ணே- விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
A.R. ரகுமான் இசையில் பென்னி தயாள், கல்யாணி மேனன்.
https://youtu.be/vj2_z1GYXcU?feature=shared
23. ஆரோமலே- விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
A.R. ரகுமான் இசையில் அல்லயன்ஸ் ஜோசெஃப்/ ஷ்ரேயா கோஷால்.
https://youtu.be/q7OUFE3dw6E?feature=shared
24. சில்லென்ன ஒரு மழைத்துளி- ராஜா ராணி (2013)
G.V. பிரகாஷ் குமார் இசையில் க்ளின்டன் கெரேஜோ, அல்ஃபோன்ஸ் ஜோசஃப், அல்கா அஜித்
https://youtu.be/kQBuN9e_qbU?feature=shared
25. கேரளா போலொரு- கேரள நாட்டிளம் பெண்களுடனே (2014)
S.S.குமரன் இசையில் ஜெஸ்ஸி கிஃப்ட், கல்யாணி மேனன், குமரன்
https://youtu.be/0ruWwql5U1k?feature=shared
26.கேரளச் சேச்சியல்லோ- துணை முதல்வர் (2015)
ஜெய் இசையில் அனுராதா ஸ்ரீராம்
https://youtu.be/sWgDb1wCKGU?feature=shared
27. ஜிமிக்கி கம்மல்- காற்றின் மொழி (2018)
வேலபடின்டே புஸ்தகம் என்ற மலையாள படத்தில் ஷான் ரகுமான் இசையில் வினீத் ஸ்ரீனிவாசன், ரெஞ்சித் உன்னி பாடிய பிரபல பாடல் அப்படியே காற்றின் மொழி படத்திலும் இடம்பெற்றிருந்தது.
https://youtu.be/a8d-Pk7tlco?feature=shared
28. எங்க ஸ்டேட்டு கேரளமானோ- நட்பே துணை (2019)
ஹிப்ஹாப் தமிழா இயற்றி, இசையமைத்து, பாடிய பாடல்
https://youtu.be/CtyIEJIP_zE?feature=shared
29. தும்பி துள்ளல்- கோப்ரா (2022)
A.R.ரகுமான் இசையில் ஷ்ரேயா கோஷால், நிதின் அபயங்கார்
https://youtu.be/dtK-4Oh7qlk?feature=shared
இன்னும் பல பாடல்கள் இருக்கலாம். நினைவில் வரும்போது சேர்த்துக்கோள்கிறேன்.
ஓணம் ஆஷம்ஸகள்💖💖
#songpostsfromme
- Saravanan Natarajan
No comments:
Post a Comment