Tuesday, October 6, 2026

புலமைப்பித்தன்

 புலவரின் பிறந்தநாள் 💖


'நான் யார் நான் யார் நீ யார்?' என்று எழுதி மெல்லிசை மன்னரின் இதயத்தை கவர்ந்தவர். 'ஆயிரம் நிலவே வா!' என்று அழைத்து திரையிசை திலகம் K.V. மகாதேவனின் பாராட்டை பெற்றவர். 'ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்...அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்..' என்ற வரிகளை எழுதி (அந்தப்புரத்தில் ஒரு மகராணி) இசைஞானி இளையராஜாவின் வியப்புக்கும் மதிப்புக்கும் ஆளானவர். 'பட்டுவண்ண ரோசாவாம்' எழுதி சங்கர்-கணேஷுக்கு ஒரு பெரும் வெற்றியை ஈட்டி தந்தவர். "காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்..

கன்னித்தமிழ் தொண்டாற்று.. அதை முன்னேற்று...பின்பு கட்டிலில் தாலாட்டு.." என்று மரகதமணியை மயங்கச்செய்தவர்...


புலவர் புலமைப்பித்தன்! 


இத்தனையும் செய்தவர் மெல்லிசை மாமணிக்கும் ஒரு விலைமதிப்பற்ற பாமணியை தந்தார்... 1976ல் வந்த 'நல்ல பெண்மணி' படத்தில் யேசுதாஸ்- சுவர்ணா குரல்களில்....


* * * * * 


இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்

மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்

மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்

என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்


இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்

மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்

மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்

என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்


நீயே என் செல்வ ரத்தினம்

நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம்

நீயே என் செல்வ ரத்தினம்

நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம்


தாங்காது கண்ணா

என் தளிர் மேனி பூவினம்

தூங்காத கண்கள் உன்

துணை தேடும் மீனினம்

குறுநகை முத்தினம்

கொடி இடை இது நூலினம்


இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்

மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்

மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்

என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்


கண்ணா உன் காதல் தரிசனம்

கையால் நீ பூசு சந்தனம்

தென்பாங்கு பாடும்

உன் செவ்வாயோ தேனினம்

தேன் உண்ண வந்தேன்

பொன் வண்டோடு ஓரினம்

விழி நிறம் அஞ்சனம்

சிவந்தது ஒரு நூதனம்


இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்

மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்

மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்

என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்...


* * * * * 


'கல்யாண தேன்நிலா... காய்ச்சாத பால்நிலா' என்று பொழிந்த புலவரின் பேனா பல வருடங்களுக்கு முன்னேயே இப்படி ஒரு அபாரமான கவிதையையும் வடித்தது...🙏

Saravanan Natarajan 

https://www.facebook.com/share/v/18JDB5JG6H/

No comments:

Post a Comment