Sunday, October 30, 2016

DHASARATHANIN THIRUMAGANAI - DEVI SRI DEVI


The King’s Treasuries- 2
ராகதாளமாலிகை --------------------------- ராகமாலிகை என்றால் எல்லோருக்கும் தெரியும்... ஒரு பாடலின் பல்லவியும், சரணங்களும் ஒன்றுக்கு மேற்பட்டு பல ராகங்களில் அமைவது ராகமாலிகை.
அதே போல பல தாளங்களிலும் அமைவது ராகதாளமாலிகை என்று அழைக்கப்படும்.
உதாரணமாக 'மாசிலா நிலவே' என்று தொடங்கும் அம்பிகாபதி படப்பாடல்.. மாண்டு ராகத்தில் ஆதி தாளத்தில் ஆரம்பித்து, அன்பே இன்பம் என்று நடபைரவி ராகத்தில் திஸ்ரத்தில் பயணித்து, வானமெங்கே என்று புன்னாகவராளியில் மிஸ்ரத்தில் முடியும்.
ராஜாவின் இசையில் இது போன்று சில பாடல்கள் உண்டு. இன்று நாம் கேட்கப் போவது 'தேவி ஸ்ரீதேவி' என்ற படத்தில் வரும் 'தசரதனின் திருமகனை தினம் தினம் தொழுதிடு நீ மனமே' என்ற பாடல்.
ஆபேரியில் ஆதி தாளத்தில் தொடங்கி, சங்கராபரணம், காபி, சிந்துபைரவி ஆகிய ராகங்களில் வெவ்வேறு தாளகதியில் செல்லும் பாடல்.
ஏவிஎம் ராஜன்-புஷ்பலதாவின் அழகான மகள் மகாலக்ஷ்மி, சுரேஷ், திலீப், கங்கா மற்றும் கமலாகர் நடித்த இப்படத்தில் இந்தப் பாடல் நகைச்சுவையுடன் படமாக்கப் பட்டிருக்கும்.. இன்றுபோய் நாளை வா படத்தில் வரும் மதன மோக ரூபசுந்தரி பாடல் போல ஒரு கற்பனைப் பாடல். ஒவ்வொரு நாயகனும் கனவில் நாயகியுடன் பாடும் போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான இசையில் மெட்டு அமைத்திருப்பார் ராஜா..


கங்கை அமரன் எழுதிய பாடலை மலேஷியா வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி, எஸ்.என்.சுரேந்தர் மற்றும் க்ருஷ்ணசந்தருடன் இணைந்து எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்.
மகளிர் மட்டும் படத்திலும் இதே போன்று கறவை மாடு பாடலில் எஸ்பிபி ஜானகி இணைந்து ராகதாளமாலிகையாக ராஜாவின் இசையில் வந்தது.

No comments:

Post a Comment