Tiruchendurai Ramamurthy Sankar writes:
என் மனைவி ( 1942)நகைச்சுவையின் வேறு பரிமாணம்.

80களில் தூர்தர்ஷனில் இந்தப்படத்தைப் பார்க்கும்போதுகூட வில்லனாக வந்த மஹாதேவனின் தோற்றம் வெகுவாகவே கவர்ந்தது. சம்பவக்கோர்வைகள் கிட்டத்தட்ட ஆங்கிலபடப்பாணி. இன்றைக்கும் இதே கதையை ஸ்டீவ் மார்ட்டின், பென் அஃப்லாக் வைத்து எடுத்து வெற்றிப்படமாக்க முடியும். டைரக்டர் சுந்தர்ராவ் நட்கர்னியும் , AVM செட்டியாரும் 1940 களின் தமிழில் சினிமா மீடியத்தைப் புரிந்துகொண்டிருந்திருக்கிறார்கள். என் மனைவி பெரிய வெற்றிப் படம்.
கே.ஆர்.செல்லம், அந்தகால அராத்தாக இருந்திருக்கவேண்டும். ஜோதிகா போல் மொத்தம் 2 எக்ஸ்பிரஷன். தன்னை சந்தேகப் படுகிறான் கணவன் என்று லவலேசமும் புரிந்துகொள்ளாமல் சரமாரியான வசனங்களை முரட்டு அப்பாவித்தனத்துடன் பேசும்போது நகைச்சுவையின் காலகட்டத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.
சுந்தரவாத்தியார், ஆர்.சுதர்சனம் போன்ற, AVM செட்டியாரின் ஆஸ்தானக் கலைஞர்கள். இந்தப் பாடலும் , சாரங்கபாணி பார்க்கில் பாடும் பாடலும் எனக்கு விருப்பமான பாடல்கள். ஆர்.நடேசம் என்னும் இந்த நகைச்சுவை நடிகரின் இந்த வெகுளித்தனமான முகபாவங்களுக்காகவே இந்தப்பாட்டைப் பார்க்கவேண்டும். ரேடியோ பாடகராகவேண்டும் என்ற இன்றைய சூப்பர் சிங்கர் ஆர்வத்தில் நன்றாகவே நடித்திருப்பார். ஒரே இடத்தில் ஆணி அடித்து நிறுத்தப்பட்ட காமெராவும் அழகாகவே எடுத்திருக்கிறது.
இந்தப் பாடலை பதிவிட்டத்தில் எந்தவித உள்குத்தும் இல்லை
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1251958081502582/