Tiruchendurai Ramamurthy Sankar writes:
இது சினிமா சம்பந்தப்பட்ட ஒருவர் 1993ல் என்னிடம் விவரித்தது. அப்போது ஆடிட் அசைன்மெண்டுகள் வேறொருவருக்கு செய்து கொண்டிருந்தபோது சினிமா சம்பந்தப்பட்ட பலருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. சித்ராலயாவில் ஆபீஸ் நிர்வாகத்தில் இருந்த இவர் அப்போது(1993) வேறொரு சினிமா கம்பெனியில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார். ஹிந்தியில் பேய்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த ராம்சே சகோதரர்களின் அப்போதைய ஹீரோயின் ஸ்ரீப்ரதாவின் கால்ஷீட் வைத்திருப்பதாக என்னிடம் சொல்வார். சற்று பாவமாக இருக்கும்.
16.2.1967
சிவாஜிக்கு காமராஜரின் தேர்தல் பற்றிய பயங்கர ஸ்ட்ரெஸ். லேசான ஜுரம் வேறு. ஸ்ரீதருக்கோ பட ரிலீஸ் பற்றிய ஸ்ட்ரெஸ். மார்ச் 2 1967 ரிலீஸ் செய்தாகவேண்டும். இன்றைக்குள் இந்தப் பாட்டை எடுக்கவேண்டும். வாலி எழுதி எம்.எஸ்.வி இசையில் பாடல் நன்றாக வந்துவிட்டது. இன்றைய அண்ணா சதுக்கத்திலிருந்து லைட் ஹவுஸ் வரை படமெடுக்க அனுமதி வாங்கியாகிவிட்டது. திடீரென பசுமார்த்தி ( நடன இயக்குநர்) வரவில்லை. உதவி சுந்தரம் மட்டும். ரிகர்சலுக்கு நேரமில்லை.
ஸ்ரீதர் சிவாஜியிடம் " இந்தப் பாட்டுக்கு இன்று ஒரு நாள் தான். படம் 10 நாளில் ரிலீஸ். நீங்க ஆடறதுதான் டான்ஸ். முத்துராமனும் கோபாலகிருஷ்ணனும் உங்களை ஃபாலோ செய்வார்கள்". பசுமார்த்தியும் சுந்தரமும் முதலில் கம்போஸ் செய்த கோரியோகிராபி நினைவிருக்கிறதா" .
சற்று யோசித்த சிவாஜி சரி என்று சொல்லிவிட்டார். (முத்துவும், கோபுவும் சிவாஜியைப் பார்த்து ஆடுவதைப் பார்க்கலாம். தெலுங்கு கிருஷ்ணா , ஹீரோயினைப் பார்த்து ஆடுவதை மகேஷ்பாபுவிற்காக மன்னிச்சிருங்க!) காலை 10 மணியிலிருந்து 2 மணிக்குள் ஷூட்டிங். வெய்யில் மண்டையைப் பிளக்கிறது. கடற்கரை சாலைக் கல்லூரி மாணவர்களை சமாளித்தாகிவிட்டது. ஆனால் சிவாஜியைப் பார்க்க வந்த பெண்கள் கல்லூரி மாணவிகளைச் சமாளிப்பது பெரும்பாடாகி போலீஸ் வரவழைக்கப்பட்டது !
மூன்று ( அல்லது 4-5) இளைஞர்களை வைத்து பல படங்கள் ( உத்தரவின்றி உள்ளே வா, மூன்று தெய்வங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, நிழல்கள், பாலைவனச் சோலை, புது வசந்தம்) இவற்றில் உ.உ.வா தவிர மற்ற படங்களில் வேலையில்லாத திண்டாட்டம், வறுமை ஒரு பொது விகுதி. ஆனால் இந்தப் படம் மட்டும்தான் நம் நெஞ்சிருக்கும் வரை.
பாட்டு எடுப்பதில் ஸ்ரீதர் தொட்ட சிகரங்களை யாரும் தொடவில்லை. இந்தப் பாடல் மற்றுமோர் உதாரணம். ஆனால் இந்த பாட்டுக்கு சிவாஜி என்ற ஒரு கலைஞர்களின் கலைஞன் இல்லாவிட்டால் எம்.எஸ்.வியின் விசில் டியூனும், வாலியின் நட்சத்திர வரிகளும் ( இருந்தால்தானே செலவு செய்ய , அக்னி நட்சத்திரத்தில் வரவும் இன்றி செலவும் இன்றி வரவும் செலவும் உண்டு ஆனது!) , ஸ்ரீதரின் இயல்பான இயக்கமும் , இன்றும் நாம் பேசக் காரணமாயிருப்பது இந்த ஆள் சிவாஜிதான். சரியான மாலுமி இல்லாது தமிழ் சினிமா மூழ்கடித்த டைட்டானிக் கப்பல்.
மவனே! என்னா ஸ்டைலு! நீ ராசாய்யா! உனக்கு இத்தினி ரசிகர்கள் மணிமண்டபம் மனசுல கட்டி வச்சிருக்கோம், தனியா எதுக்கு ?
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1740088582689527/
No comments:
Post a Comment