dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Wednesday, November 30, 2016

KANNAN KOVIL PARAVAI IDHU - AKKA

Saravanan Natarajan writes:

கண்ண(தாச)ன் கோயில் பறவையிது...

It is the birthday today of the dulcet diva. When I called her to wish her this morning, I just played the opening lines of her own 'ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்..'. Vani ji sounded moved and happy “So kind of you, Saravanan!” she exclaimed, filling me with a pleasurable thrill, for I had not spoken a word until then! “I know it is you” was her simple explanation when I asked her how she guessed who the caller was, for I had called her old-fashioned land-line and she had no way of noticing the number. I was at a loss for words, and as if to ease the silence, she went on to enquire pleasantly about the well-being of my family, mentioning my wife and son by name. I could hear her cell phone ringing and even as I tried to end our conversation with my wishes and prayers, she continued unhurriedly talking to me, conveying her blessings and thanks. Blessed I am, truly!

It is my pleasure to celebrate this joyous occasion by posting a song that has remained close to my heart ever since the first listen decades ago- Thanks to Radio Ceylon, an ennui filled afternoon transformed to sheer enchantment as I listened transfixed to Vani ji’s soulful soiree...

The first time I met Vani ji at her home, I started off by referring to Kannadasan’s singular tribute to her in his ‘சந்தித்தேன் சிந்தித்தேன் ’ (originally serialized in குமுதம் as ‘இந்த வாரம் சந்தித்தேன்’). She folded her palms in salutation to the greatest bard of our times. ‘That write-up gave me a honor that even a Bharat Ratna cannot equal’ she commented. As memories seem to rush in, she continued musingly, ‘Kannadasan Sir has worked with generations of singers…great singers who have done justice to his lyrics over the decades, yet to think that he chose to single me out for that rare honor, of being the only singer he devoted an episode to, I’m overwhelmed!’ she said humbly, her eyes moist with emotion.

‘That morning, when the Kumudam issue containing his write-up on me hit the stands, he called me up at 6 and said ‘வாணி, உன்ன பத்தி என் மனசில தோன்றதெல்லாம் எழுதி இருக்கேன். படிச்சு பாரு', she recollected with a smile. She went on to share with us some special memories of Kannadasan. “He looked upon me as a member of his family. Once when he was celebrating his birthday with only his family members, he took Jairam ji and me along with his family to Madurai, and we were fortunate to be with them during the special pooja at Meenakshi Amman temple, and share some intimate moments with his family’

Vaniji and Jairamji seemed to be lost in memories of the Kaviyarasar and the special relationship they shared with him- After a pause, Vani ji continued ‘Again, another time, when he was contributing to some Annadaanam scheme, he called me and affectionately demanded ‘வாணி, நீயும் உன் பங்குக்கு ரெண்டு மூட்டை அரிசி கொடு ’- that was how close he was to us.’
‘A great man. His simplicity, goodness of heart, limitless creativity and humility are qualities that set him apart. I am privileged to have sung so many of his songs, and blessed to have received his good wishes and fatherly affection in abundance’ she said feelingly.

‘I am happy that Kannadasan Sir’s family still continues to shower affection on us. Even last week I had been to Kannadasan Pathippagam –Sir’s son gifted me a book titled ‘கண்ணன் கோயில் பறவை...'

I couldn’t resist interrupting her flow of thought and said excitedly ‘That’s one of my favorite songs!’ Vani ji smiled indulgently, and….did what I was waiting for with bated breath….she sang the pallavi, and the first charanam of that spellbinding classic. Oh, the ageless allure! Her voice, as sweet as ever, took us briefly to another world, another time, when giants like Kannadasan, MSV & Vani Jairam were making magic with Tamil film music….
* * * * *

‘Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air’

I can never, never understand why this magnificent composition did not hit the popularity charts.
The movie அக்கா (1976) had K.R. Vijaya in the title role, with Jaiganesh, Vijayakumar and a debutant Vijayabala (who was never heard of since) as her co-actors. The புன்னகை அரசி essayed the role of a vocalist Kamala. Her love for her younger sister and the villainous machinations of her husband formed the crux of the narrative.

The movie opens with a series of mysterious events. Vijaya makes her appearance well into the proceedings as part of the flash back narrated by her sister, and this is the song where we are introduced to the acclaimed vocalist Kamala…

கண்ணன் கோயில் பறவை இது
கருணை மன்னன் தீபம் இது
அண்ணல் கடலின் ஓடமிது
அதுதான் இப்போது பாடுவது...

What a virtuoso performance!! இதில் கண்ணன் கோயில் பறவை யார்- கிருஷ்ணகானம் படைத்த கவியரசரா, அதற்க்கு மெட்டமைத்த மெல்லிசை மன்னரா, இவ்விருவரின் கூடத்தில் அகல்விளக்காய் ஜொலிக்கும் வாணியா....அல்லது மூவருமா? I used to wonder at Vani’s exclusion from the immortal MSV- Kannadasan collaboration ‘Krishna Ganam’, released the same year, wherein all the popular singers of the time found place. I get the answer every time I listen to கண்ணன் கோயில் பறவை இது...perhaps MSV and Kannadasan felt this song equaled if not surpassed that album! The rendition is punctuated by spellbinding and swift Swara sojourns (particularly towards the end) and amazing alaapanais. The brughas are reminiscent of the great S. Varalakshmi in her prime. Also mention must be made of the subtle variations in each repetition of the refrain 'அதுதான் இப்போது பாடுவது'. A wonderful ragamalika, which MSV had masterfully woven in Hamsadhwani, Charukesi, Aarabhi, Dhanyasi, Behaag….

Many may recognise the similarity in structure, which this song shares with the pathos filled தேவியின் கோயில் பறவை இது - (Janaki), from அவளுக்கென்று ஒரு மனம் . Both songs are by Kannadasan and tuned by MSV. While the line ‘அது தான் இப்போது பாடுவது’ recurs at the end of each verse in this song, the corresponding last line in தேவியின் கோயில் is 'கண்ணீர் எழுதும் கவிதை இது'. And most lines end with 'இது' in both songs. However, while தேவியின் கோயில் is an emotional cascade, கண்ணன் கோயில் is a classic, soulful Krishnaganam, which Kannadasan created with poetic lyrics in ode to his favorite God.

I leave you with this song and with Kannadasan’s eloquent tribute to his Vani in his சந்தித்தேன் சிந்தித்தேன் – “முறையான சங்கீதப்பயிற்சி உள்ளதால் எளிய கர்நாடகத்தில் வாணியின் குரல் ஒலிக்கும் போது அதன் சுகமே அலாதி. ஏழு சுரங்களில் பாடலை நான் எங்கே கேட்டாலும் என்னை மெய்மறக்கச் செய்து நிற்கவைக்கிறது. பானுமதி, வரலக்ஷ்மி, சூரியகுமாரி போல் வாணியின் குரலும் தனித்தன்மை வாய்ந்தது. அவர் குரலில் ஒரு குடும்ப சுகம் இருக்கிறது. எல்லா பாஷைகளிலும் அவற்றினுடைய த்வனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே. பெயர் பொருத்தம் பலருக்கு அமையாது- வாணிக்கு அமைந்திருக்கிறது. வாணி உண்மையிலேயே ஒரு கலைவாணி தான்!"

To add anything to that would be sheer arrogance!

https://www.youtube.com/watch?v=8mWDq7GbOp0


https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1403282769703445/

Sunday, November 27, 2016

YUGANDHAR The Kings's Treasuries - 6

Tiruchendurai Ramamurthy Sankar writes:

The Kings's Treasuries - 6
மீகோசமே நேனொச்சானு ( உங்களுக்காகவே நான் வந்தேன்! )
1979ல் தமிழில் இளையராஜா ஒரு முழுமையான இசையமைப்பாளராக நிலை நின்றாகிவிட்டது. எம்.எஸ்.விக்கு இருந்த ஒரே போட்டியாளர் அவர்தான். சங்கர்-கணேஷ் அதிக படங்களுக்கு வேலை செய்துகொண்டிருந்தாலும் , நண்பர் சரவணன் வார்த்தையில் சொல்வதென்றால் சாந்தி, ஆனந்த், அபிராமி தியேட்டர்களில் ராஜா, எம்.எஸ்.வி படங்கள் ஓடினால், பாரகன், ஓடியன், சித்ரா தியேட்டரில் சங்கர்-கணேஷ் படங்கள்.

அதே நேரத்தில் ராஜாவின் பிரபலமான படங்கள் ( இளமை ஊஞ்சலாடுகிறது, அன்னை ஓர் ஆலயம் போன்றவை) மொழிமாற்றப் படமாகி ஆந்திராவில் பிரபலமடைந்து கொண்டிருந்தன. துரதிர்ஷடவசமாக 16 வயதினிலே ம்இசையமைப்பாளர் சக்கரவர்த்தி பெயரில் வந்தது . ( கிழக்கே போகும் ரயில் / தூர்ப்பு வெள்ளின ரயிலு படத்திற்கு இசை SPB) ராஜா முதன் முதலில் இசையமைத்த முதல் நேரடி தெலுங்குப்படம் சந்திரமோகனின் (1979) பஞ்ச பூதாலு. ஆனால் அதே 1979ல் கே.எஸ்.ஆர்.தாஸின் இயக்கத்தில் NT ராமாராவ் நடித்து வந்த யுகந்தர் ( ஹிந்தி : Don தமிழ் : பில்லா (1980 ஜனவரி 26) ) முதல் ஸ்டார் படம். அந்தப்படத்தில் போட்ட "நா பருவம் நீ கோசம்" ( ஜெயமாலினி டான்ஸ்) தமிழில் ராம் லக்‌ஷ்மணில் "வாலிபமே வா வா "ஆகியது. கமர்ஷியல் மற்றும் NTR அழுத்தத்தினால் கல்யாண்ஜி-ஆனந்த்ஜியின் ஹிந்தி டியூனான பான் பனாரஸ் வாலா பாடலை அப்படியே தெலுங்கியிருப்பார். அந்தப் பாட்டை காப்பிஅடிக்கும் அளவிற்கு ராஜா போன்ற திறமையாளருக்கு வேறு காரணங்கள் இருந்திருக்க முடியாது.

பின்னாளில் வெங்கடேஷ் ( ப்ரேமா,கூலி நம்பர் 1) சிரஞ்சீவி ( ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி) , மணிரத்னம் ( கீதாஞ்சலி) , கே.விஸ்வநாத் ( பல படங்கள்) படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தாலும் தெலுங்குப் படங்களின் அப்போதைய அடையாளமான NTR க்கு அவர் இசையமைத்த ஒரே படம் யுகந்தர்.

"நா பேரே யுகந்தர்" பாடல் தமிழில் மை நேம் இஸ் பில்லாவிற்கான பாட்டு. இந்தப் பாடல் NTR க்கு ஒரு புது இமேஜ் கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது. சக்கரவர்த்தியின் டிங் சக் டிங் சக் இசையிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்த முதல் படம், முதல் sophisticated பாடல். ( இதைப் புரிந்துகொள்ள டிரைவர் ராமுடு, வேட்டகாடு, ஆட்டகாடு போன்ற 1979 படங்களைப் பார்த்தல் நலம்! ) இன்றைய பாஷையில் சொன்னால் NTR செம குத்து குத்தியிருப்பார். .......மறைக்க போடவேண்டிய பாண்ட்டை, நெஞ்சை மறைக்கப் போட்டுக் கொண்டு சால பாக கொட்டேசிய ஸ்டெப்புலு...... 40 இஞ்ச் பெல்பாட்டம், வெள்ளை பெல்ட்லு மற்றும் ஷூவுலு! நடுவில் எல்விஸ் ஸ்டைலுடன்! எனக்கு இன்றும் உற்சாகமளிக்கும் பாடல்களில் ஒன்று. என்னை 80களின் ஏலூருவிற்கு அழைத்துச் செல்லும் பாடல் ( என் தந்தை ஏலூருவின் அருகில் உள்ள குக்கிராமத்தில் கிளையைத் திறந்த மானேஜராக ஒரு தேசிய வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நாங்கள் விடுமுறைக்கு போய் முழு நேரம் சினிமா பார்ப்போம்)

ஹீரோவின் சிக்னேச்சராக வரும் இந்த டியூன் மற்றும் அரேஞ்மெண்ட்டில் ராஜா அபார நம்பிக்கை வைத்திருக்கவேண்டும். இந்தப் படத்திற்குப் பிறகும் ( பேய் ஹிட்!) அவருக்கு அங்கீகாரம் கிடைக்காததும் அவரை பாதித்திருக்கவேண்டும். இந்தப் பாடலின் தாக்கத்தை கீழ்க்காணும் அவரது மற்ற பாடல்களில் தாராளமாகக் காணலாம், முக்கியமாக ரிதம், brass section.

போய்யா போய்யா ( தர்மயுத்தம்)
ஆகாயம் மேலே ( நான் வாழவைப்பேன்)
வருது வருது ( தூங்காதே தம்பி தூங்காதே)
நூறு வருஷம் ( பணக்காரன்)
ஆசை நூறு வகை ( அடுத்த வாரிசு)
வச்சுக்கவா ஒன்ன மட்டும் ( நல்லவனுக்கு நல்லவன்)
கஸ்தூரி மான் ( சங்கர்லால் / கங்கை அமரன்)
வால்துகள்:
பில்லா 2007ல் அஜித் நடித்துத் தமிழில் வந்தபோது எம்.எஸ்.வியின் மை நேம் இஸ் பில்லா டியூனே பயன்படுத்தப்பட்டது. தெலுங்கில் பிரபாஸ் அதே வேடத்தைச் செய்தபோது யுகந்தர் பாடல்கள் பயன்படுத்தப்படவில்லை. படமும் யுகந்தராக வராமல் பில்லாவாகவே வந்தது. யுவன் யுகந்தர் படத்தின் "தாசேதா தாகேதா " பாடலை 2007 பில்லாவில் டூயட்டாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆரம்பகால ராஜா! ஆனந்தங்கா சூடண்டி!

Sunday, November 20, 2016

Kabhi Kabhi - Avar Enakke Sondham

Saravanan Natarajan writes:

The King's Treasuries- 5

Kabhi Kabhi Mere Dil MeinV

Who would have thought of a classical interpretation of ‘Kabhi kabhi mere dil mein’ and a Carnatic one at that! The very idea defies imagination, doesn’t it? Well not so, at least for Ilaiyaraja. Nothing seemed impossible for the young and upcoming Maestro and he did just that in the 1977 Tamil movie அவர் எனக்கே சொந்தம்.

The situation is this. An impoverished and unassuming Bagavathar (V.K. Ramaswamy) has been engaged to give a classical concert for the inauguration of a cultural ‘Sabha’. His concert is to be followed by a performance of film songs. To his dismay, he finds that his accompanists have not arrived and it is time for the show to begin. Much against his wishes, he is persuaded to sing with the ‘light music’ instrumentalists accompanying him. What follows is a sheer laugh riot!

Ilaiyaraja invites veteran T.M. Soundararajan to do the honors here.While it is well known that TMS never enjoyed a comfortable relationship with Ilaiyaraja, the songs that he did get to sing for Raja are are all a connoisseur’s delight. I have with me all the TMS-Ilaiyaraja collaborations in a CD, collected over many years from different sources. Yes, right up to the elusive கோலமயில் ஆடுவதை (கவரிமான்) and the TMS version of என்னோடு பாடுங்கள் (நான் வாழவைப்பேன்)! The philosophy tinged with poignancy in நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு, the understated majesty in அந்தபுரத்தில் ஒரு மகராணி, the strident sorrow that is just what அம்மா! நீ சுமந்த பிள்ளை needs, the abject sense of loss and the vengeful determination in நண்டூருது நரியூருது, the mischievous mien of ஐம்பதிலும் ஆசை வரும்… are but instances of piecemeal distribution from a prematurely dissolved partnership; each piece is for us to pick and savour! This fallout combined with the fact that his voice had aged by the late-70s, TMS found himself gradually sidelined as SPB, Yesudas, Jayachandran and Malaysia Vasudevan took center stage.

However, here, TMS is clearly in his elements and joins the fun in right earnest. Ilaiyaraja selects the Tyagaraja kriti ‘Toli Nenu Jeyu Poojaapalamu' as the song the Bagavathar opens his account with. It is supposed to be a poignant composition of Saint Tyagaraja where he sorrowfully accepts the indifference of Lord Rama and laments that his good deeds have not been adequate to capture the attention of the Lord. However, the sorrow transforms to irreverent merry making here with the ‘light music’ accompanists having a blast at the Bagavathar’s discomfiture.

Thankfully, the Bagavathar’s accompanists arrive midway and spare him from further ordeal. He is now happily set to perform a proper cutchery and starts with a stretch of a soulful Kalyani.
Alas, he is now booed by the audience who demand that he sing popular numbers from Yaadon Ki Baaraat and Julie! The wretched man is at his wit’s end, when by a stroke of luck he recalls a song he had heard in the street and launches into ‘Kabhi kabhi mere dil mein’… Lo and behold…. Khayyam’s composition transforms into a Carnatic Kriti by a mere wave of Ilaiyaraja’s wand…. Hark at the Bagavathar’s co-singers request for ‘Coffee, Coffee’ when he asks them to repeat ‘Kabhi Kabhi’ :)

TMS is at his mischievous best- he simply freaks out in the swift classical passages culminating in a delightful dappankuthu. As a fitting finale, the penitent Bagavathar seeks forgiveness from Saint Tyagaraja as he beats a hasty retreat at the completion of the song!

https://www.youtube.com/watch?v=SzxVaAj7Y_Y


Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1391746537523735/

Friday, November 18, 2016

NAALAI NAAMORU RAJANGAM AMAIPPOM - PUNNAGAI

Saravanan Natarajan writes:

நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
It was the birth anniversary of Gemini Ganesh yesterday. Remembering the actor with a song from a movie to which I believe he bequeathed one of his finest performances ever…
* * * * *

An honest man's the noblest work of God.
- Alexander Pope (Essay on Man)

Narain Sanyal is a name well known in Bengali literary circles. His wide-ranging works include insightful studies on science (Vaastu Vignaan), politics (Cheen-Bharat Long March), literature (Parikalpita Paribar) and Art (Biography of Rodin). His repertoire of fiction is no less enviable- Timi Timmingil, Abak Prithbi, Laadlibegum, Bakulthala P.L. Camp, Sutanuka Kono Devadasir Naam Nay, Mahaakaler Mandir, Ashlilater Daye- novels ranging from science fiction, history, and various social issues. He has been honoured with the coveted 'Rabindra Puraskar' in recognition of his worthy literary efforts.

And lying hidden among Sanyal's numerous works was a simple story that looked at the relevance of being principled in a largely unprincipled world. Titled 'Satyakaam', it traced the travails that an idealist young engineer Satyapriya has to undergo just because he has chosen the path of truth. For him, there is only black and white in moral issues; there is no grey. He has to bear the backlash of the jeering world when he places his sublime scruples atop a lofty pedestal high over all compulsions and commitments. He suffers, yes, but with a serene smile. For the trials and tortures that the world taunts him with can only trouble his physical well-being; his mental bliss is invincible. Indeed, the smile on his lips is but the reflection of the smile of his joyous, pristine soul. And he so dies, with the smile firmly in place.

It was this story then, that Hrishikesh Mukherjee chose to craft on celluloid. Satyakaam (1969/ Panchi Arts) had Dharmendra playing the chief protagonist Satyapriya Acharya, with Sharmila Tagore, Sanjeev Kumar, Ashok Kumar and Baby Sarika playing other pivotal roles. Hrishikesh Mukherjee turned the story into an inspirational saga of epic proportions, extracting unbelievably riveting performances from his actors. The film is held as a hallowed classic in the history of Hindi Cinema, yet I believe it didn't send the cash boxes jingling when it was released.
* * * * *
Our KB was so moved by Satyakaam, that he felt compelled to tell it in Tamil. புன்னகை was the name he gave his version, and the title said it all. For the only armour that shielded Satya from the weapons that the treacherous world let loose on him was his disarming smile. புன்னகை (1971/Amudham Pictures) had Gemini Ganesh essaying the lead role and coming out with a magnificent performance, punctuated with understated histrionics and subtle nuances. Jayanthi, Muthuraman, Nagesh, MRR Vasu, S.V. Sahasranamam, V.S. Raghavan and Ramdas were others in the cast.
To me, புன்னகை is a work of art that transcends the very notion of watching a film, for its frames are chiselled with wonderful high points, emotionally surcharged moments that fasten their tentacles and tug at ones' heart. The heart-warming exchanges between Gemini Ganesh and Jayanthi in the aftermath of CID Shakunthala's scandalous accusation, the divine smile that lights up the dying Gemini Ganesh's face and the cascading love and understanding that parade in Jayanthi's smile as she tears up the fraudulent papers that he had just affixed his signature on, a repentant Sahasrananam's wonderstruck look when Jayanthi's son (Baby Mythili), tells him with a beatific smile that he knows that Gemini was not his father…Oh.. these surely are moments that touch the innermost core of our hearts!

I have seen the movie thrice. I first saw it on TV when I was in my early teens, and I remember letting the tears roll down my cheek, unhindered. But they were not tears wholly of sorrow, they were mixed with awe and yes, faith. I saw it again when in my 20s; and saw it again few years back. The halo around Satya remained intact. Punnagai's Satya, much like The Fountainhead's Howard Roark, seems an old school teacher whom we revered as children, and keep turning to even now to seek inspiration and guidance. புன்னகை , for me is not merely a movie, but a cathartic magic potion, to be treasured, savoured and imbibed every now and then.

Last year, on the way to Tiruvannamalai, I was thrilled to observe that புன்னகை was being screened at an old roadside theater…I managed to click a picture of the half-torn poster on the walls even as our car turned around the corner….
* * * * *
KB's screenplay didn't leave any avenues for song sequences, and so quite unlike most of his movies, the songs here seemed forced inclusions. And sorry to say, KB inadvertently filmed a song that can perhaps effortlessly walk away with the award for most absurd song sequence ever- Jayanthi singing when she is being molested! That Kannadasan, MSV and Janaki came up with a good song ஆணையிட்டேன் நெருங்காதே even within the shackles of this preposterous scheme speaks volumes of their talents. The other song is the satirical நானும் கூட ராஜா தானே (TMS) filmed on Nagesh in a running train.
* * * * *
And so we come to this song.
As Rajbabu (Nagesh) narrates to Major, this was the day the five friends (Gemini Ganesh, Muthuraman, Nagesh, MRR Vasu & Gopalakrishnan) graduated. They take a solemn oath of honesty in front of the statue of the Mahatma. And then they go painting the town red in celebration, little knowing that only four of them would remain at the end of the day! Their speeding car goes out of control, and Gopalakrishnan is the casualty. In the coming years, Mandiramoorthi (MRR Vasu) would turn out to be a corrupt scoundrel, Rajbabu (Nagesh) would drift aimlessly from place to place, and even Ranjan (Muthuraman) who starts off with noble intentions would allow himself to be drawn gradually into the vortex of the wily world. Satya alone would be steadfast in holding to the pledge of truth.

All this, however, comes much later. Today they are all delirious with joy and sing excitedly with hope and confidence of a bright future that beckons with a radiant smile.

நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே

MSV matches the ebullience of the lyrics in his attractive arrangements. TMS, SPB, Saibaba and Veeramani give a spirited performance- each repetition of நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை is nothing short of encapsulated euphoria! A class song from a classic movie.

Saturday, November 12, 2016

THANGA KUDATHUKKU POTTUM ITTEN - MARIAMMAN THIRUVIZHA

Saravanan Natarajan writes:

The King's Treasuries- 4

நானே நெருப்பல்லவோ....

இந்தத் தொடரில் இன்று நான் தேர்வு செய்திருக்கும் பாடல்.... கண்ணதாசன் , சுசீலா, இளையராஜா என்ற மூன்று உன்னத கலைஞர்களின் கூட்டில் உருவான ஒரு மறந்துபோன பொக்கிஷம். தமிழ்த் திரையிசையின் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் சுசீலா. தன் இனிய குரலால் கோடானு கோடி தமிழர்களின் நெஞ்சமெங்கும் நிறைந்தார், நிறைந்திருப்பார். நாளை இந்த வேளை தன் பிறந்தநாளை அவர் கொண்டாடுவார். அந்த இனிமையான கொண்டாட்டத்தை நாம் இன்றே தொடங்குவோம்...



வலுவான கதை, அற்புதமான நடிப்பு, செவிக்கு இதமான இசை - இது எல்லாம் இருந்தும் சில படங்கள் ஜெயிப்பதில்லை. 1978இல் வெளிவந்த 'மாரியம்மன் திருவிழா' என்ற படம் இதற்கு அத்தாட்சி. ஒரு பெரிய பண்ணை வீட்டில் திருமணம் செய்து கொண்டு போகிறாள் ஒரு பெண் (சுஜாதா). அங்கு தன் அன்பாலும் பண்பாலும் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்கிறாள்.

குறிப்பாக தன் கணவனின் தம்பியிடம் (சிவகுமார்) தாயைப்போல பரிவு காட்டுகிறாள். அந்த இளைஞனும் அவளது அன்புக்கு கட்டுண்டு அவளிடம் பெற்ற மகனைப்போல் உரிமை கொண்டாடுகிறான். இந்த உறவு அந்த வீட்டில் சிலருக்கு எரிச்சலூட்டுகிறது....நாளிடைவில் கேட்போர் பேச்சைக் கேட்டு அவளது கணவனே (டெல்லி கணேஷ்) அவளுக்கும் தன் தம்பிக்கும் உள்ள புனிதமான உறவை சந்தேகப்படுகிறான்...அவள் உடைந்து போகிறாள்...அந்த மூவரின் தவிப்பும், நெஞ்சை நெகிழவைக்கும் இறுதி கட்டங்களும் திரைக்கதையின் மிக அழகான தருணங்கள்...

சிறு வயதில் இந்தப் படத்தை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் ..என் அபிமான நடிகை சுஜாதாவின் மிகைப்படுத்தாத, கண்ணியமான நடிப்பு என் மனதில் இன்றும் நிற்கிறது. Subtle and heartwarming performances in challenging roles were always her forte! இன்று இப்படத்தின் பிரதி எங்கும் கிடைப்பதில்லை... கோலாலம்பூரில் உள்ள கொலம்பியா ரெகார்டிங் சென்டரிலும் எனது தேடுதல் ஏமாற்றத்தையே அளித்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் சிறு வயதில் கேட்ட உடனே என் மனதிலும் இடம் பிடித்து விட்டது..

அந்தப் பெண் தன் குழந்தையை உறங்க வைக்க ஒரு தாலாட்டு பாடுகிறாள்...அந்த இரவு வேளையில் அவள் பாடலில் எத்தனை அர்த்தங்கள்...தன் நெஞ்சின் குமுறல்களை அந்த தாலாட்டின் வரிகளுடன் இணைத்து தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்கிறாள்...இது போன்ற கட்டங்களில் கண்ணதாசன் இயக்குனரின் வேலையை எளிதாக்கிவிடுவார்...இந்தப்  பாடலிலும் அவரின் வரிகளில் எத்தனை அழகுகள்...தாலாட்டினூடே அந்தப் பெண் தன் புனிதத்தை எவ்வளவு ஆணித்தரமாக பதிவு செய்கிறாள்!

தந்தைக்குத் தான் இந்த முந்தானை...
தந்தை கொடுத்தார் செந்தேனை
தாய் அறிந்தே வரும் பிள்ளையடா...
தாரம் தரம் கெட்டதில்லையடா

இளையராஜாவின் மெட்டில் இந்த வரிகள் எவ்வளவு சுகமாக அமர்கின்றன...பாடல் வரிகளை முன்னிறுத்தி மெல்லிய சோகக் கீற்றுகளை சுமந்து வரும் இடை இசையின் நேர்த்தி பாடலுக்கு எவ்வளவு மெருகு சேர்க்கிறது! சுசீலாவின் குரல் இனிமைகள் இந்தப் பட்டுப்பஞ்சணை மேல் தூவிய அன்னச்சிறகுகள் ...அவர் பாடலில் தான் எத்தனை புரிதல்...வேதனையின் விளிம்பில் ஒரு வியாஸம்...தாலாட்டுப்பாடலுக்கேற்ற கனிவு, காயப்பட்ட நெஞ்சின் குமுறல், பொய் களங்கத்தை எதிர்கொள்ளும் ஒரு பத்தினியின் கோபம்...அத்தனை உணர்ச்சிகளும் அளவிற்கேற்ப வெளிப்படுகின்றன. திரையிலோ சுஜாதா...சுசீலாவுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல...மடியில் தவழும் குழந்தையை நோக்கும் போது வாஞ்சையை வாரி வழங்கும் விழிகள், தனிமைப்படுத்தப்பட்ட தன் நிலையை எண்ணும் போதோ அதே விழிகளை சூழ்ந்திடும் வாட்டம், விரக்தியான புன்னகையை உதடுகளில் சுமந்து வலம் வரும் அந்தப் பாங்கு...அந்தப் பாத்திரத்தின் பரிதவிப்பை எவ்வளவு நளினமாக, நெஞ்சைத் தொடும் விதமாக உணர்த்துகிறார்...

"நெருப்பினையே அவள் சாட்சி வைத்தாள்" என்று சீதையைப் பற்றி பாடிவிட்டு, "நானே நெருப்பல்லவோ!" என்று முத்தாய்ப்பாக முடிக்கும் போது சுசீலாவின் குரலில் ஒலிக்கும் அந்த கம்பீரம்...ஆஹா....சுஜாதாவின் தீர்க்கமான பார்வையில் மிளிரும் அந்த தன்னம்பிக்கை...மின்னலென வந்து மறையும் அந்த நொடிப்பொழுதில் அங்கே கலை அற்புதமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது!

பி.கு: 2007இல் விடுமுறையில் சென்னை சென்றிருந்தபோது ஒரு திருமண வரவேற்பில் சுஜாதாவை சந்திக்க நேர்ந்தது. மகன் மற்றும் மகளுடன் வந்திருந்த அவர் அடக்கமாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். திரையில் பார்ப்பதை விட இன்னும் அழகாக இருந்தார். The years had been kind to her….She had aged gracefully. மிகுந்த சங்கோஜத்துடன் அவரிடம் சென்று 'நான் உங்கள் தீவிர ரசிகன்' என்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். ஒரு அன்பான புன்சிரிப்போடு என்னைத் தன்னருகில் அமரச் செய்தார், தன் மகனையும் மகளையும் அறிமுகம் செய்து வைத்தார். அவரின் படங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் இந்த 'மாரியம்மன் திருவிழா' படத்தில் அவரின் நடிப்பை புகழ்ந்தேன். அந்த அழகான கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன. பின்பு கலகலவென நகைத்துவிட்டு சுஜாதா கூறினார்- "மாரியம்மன் திருவிழா படத்தை நீங்களும் நானும் தான் ஞாபகம் வைத்திருக்கிறோம்!"

இன்று சுஜாதாவும் இல்லை...

https://www.youtube.com/watch?v=q4oeYOBffNM


Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1384248878273501/

Tuesday, November 8, 2016

VIVIDHA BHARATHI UNGAL VIRUPPAM SIGNATURE TUNE

Tiruchendurai Ramamurthy Sankar writes:

உங்கள் விருப்பம்

Camille Saint-Saëns ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேற்கத்திய சாஸ்திரீய இசைஅமைப்பாளர். பிறந்தது அல்ஜீரியாவில் என்பதால் இசையில் அராபிய இசையின் தாக்கம் இருக்கும். இவர் உருவாக்கிய பிரபல இசைநாடகம் ( ஓபரா) சாம்சன் அண்ட் டிலைலா. 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் குரல்களை வைத்து செய்யப்படும் choral பாணியில் ஹேண்டல், மெண்டொஹல்சன் போன்றவர்களின் இசையால் பெரிதும் கவரப்பட்டார். எனவே இவரது இசையில் choral அதிகமாகத் தென்படும். இதன் இயற்கையான அடுத்தகட்டம் பாடக/நடிகர்கள் பங்கேற்கும் இசைநாடகமான ஓபரா.

பைபிள் கதைகளை ( பழைய ஏற்பாடு ) ஆதாரமாகக் கொண்ட இந்த ஓபரா சாம்சன் அண்ட் டிலைலா இன்றும் மிகப்பிரபலமானது. ஆனால் 1876ல் முதலில் அரங்கேற்ற பிரான்ஸில் எந்த ஒரு ஓபரா ஹவுசும் தயாராகவில்லை. லிஸ்ட் (Liszt ) போன்ற பிரபல இசை அமைப்பாளர்கள் துணையுடன் வெய்மரில் அரங்கேற்றப்பட்டது.

இந்தக்குறிப்பிட்ட பகுதி Bacchanale என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட மது அருந்திவிட்டு கலாட்டா செய்வது என்று அர்த்தம். சாம்சன் அண்ட் டிலைலா இசைநாடகத்தின் மூன்றாவது பகுதி ( காட்சி 2) ல் , பாலஸ்தீனியர்கள் டாகனின் கோவிலில் தங்களது வெற்றியைக் கொண்டாட பலி ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறாத்கள். அந்தப் பூசாரிகள் மது அருந்திவிட்டு ஆடும் போது வரும் இசையே நீங்கள் கேட்கப்போவது. இந்த இசை முடிந்ததும் சாம்சன் இறைவனிடம் தன்னுடைய பலத்தை மீட்டுத்தருமாறு கேட்டு , பலத்தைப் பெற்றவுடன் அந்த வழிபாட்டு இடத்தின் தூண்களைப் பெயர்த்து அந்த இடத்தை நாசம் செய்கிறான்.

இந்த இசையை தன் கற்பனை வளத்துடன் நெறிப்படுத்தும் வெனிசூலா நாட்டைச் சேர்ந்த , 35 வயதான, குஸ்டாவ் டுடுமெல் இன்று மேற்கத்திய இசையின் நம்பிக்கை நட்சத்திரம்.

சம்பந்தமில்லாமல் எழுதுவது என்பது என் மேல் உள்ள குற்றச்சாட்டு. இந்த இசைக்கும் தமிழ்சினிமா பாடல்களுக்கும் என்ன சம்பந்தம்?

என்னால் உங்கள் பலத்தை திருப்பிக் கொடுக்க முடியாது. ஆனால் இந்த இசை மூலம் உங்கள் இளமைக்கால நினைவுகளைச் சற்றே திருப்பிக்கொடுக்கமுடியும்.



Discussion at:

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1376838879014501/

Monday, November 7, 2016

NEENGADHA ENNAM ONRU - VIDIYUM VARAI KAATHIRU

Pandian Hanumanthan writes:

The King’s Treasuries – 3

இளையராஜாவின் தாள வாத்திய உபயோகத்தில நான் கண்டு ரசித்த சில துளிகள்.

ஆரம்ப காலத்தில் எங்களுக்குள் ஒரு போட்டி. இளையராஜா பாடல்களில் இடையில் வரும் இசையில் சில வினாடிகளே ஒருவர் பாடி காட்ட அது என்ன பாட்டு என்று மற்றவர் கண்டு பிடிக்கவேண்டும்.

பிறகு அதையும் தாண்டி பாடல்களில் வரும் தாளத்தை மட்டும் மேஜை மீது நான் வாசிக்க (பல வருடங்கள் மற்றவர்கள் பாட தாளம் வாசிப்பதுதான் என் வேலை, காலேஜ் வந்த பிறகு தான் கிட்டார் , சார்ட்டர்ட் அக்கௌன்டன்சி போதுதான் பாட்டு ஆரம்பம.)

ஆக தாளத்தை வைத்து பாட்டு கண்டு பிடிக்க வேண்டும்.
அப்படி கண்டுபிடிக்க கூடிய தனித்தன்மை வாய்ந்த பாடல்கள் எண்ணிலடங்காது. உதாரணத்திற்கு சில பாடல்கள் இங்கு குறிப்பிடுகிறேன்.

1. ஆட்டமா தேரோட்டமா ( காப்டன் பிரபாகரன் )
2. மலை கோயில் வாசலில் ( வீரா)
3. தண்ணீ கருத்திருச்சு ( இளமை ஊஞ்சலாடுகிறது)
4. மாசி மாசம் ஆளான பொண்ணு ( தர்மதுரை)
5. வெத்தல வெத்தல வெத்தலையோ ( ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த பாடல்களில் வெறும் தாளத்தை மட்டும் உன்னிப்பாக கவனித்து வந்தால் அதன் தனித்தன்மை புரியும். மேற்சொன்ன பாடல்களில் வரும் தாளத்தை வேறு எந்த பாடல்களிலும் ராஜா உபயோகப்படுத்திய மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை.

இன்று நான் தரும் பாடல் " நீங்காத எண்ணம் ஒன்று " படம் விடியும் வரை காத்திரு, பாடல் வாலி, பாடியவர்கள் மலேஷியா வாசுதேவன் எஸ் ஜானகி . ஒரு வித்தியாசமான திரில்லர் , பாக்யராஜ் இயக்கி நடித்த படம்.( மற்றும் கராத்தே மணி ,சத்யகலா.)

இந்த பாடலிலும் ஒரு புதுமையை ராஜா கையாண்டுள்ளார். இரண்டு சரணத்திலும் முதல் வரியில் தாளத்தை கவனியுங்கள். முதல் சரணத்தில் வாசு " மேலே பறக்குது " என்று பாடும்பொழுதும் இரண்டாவது சரணத்தில் " ஆசை நினைவுகள் " என்று பாடும்போதும் தாளம் மாறுபடுவதை கவனியுங்கள். அபரீத கற்பனை. சில வினாடிகள்தான். இது இல்லை என்றாலும் பாட்டு பாதிக்கப்பட போவதில்லை. இதை ஏன் ராஜா அங்கு போட்டார் ? இது தேவையா ? என்று கேட்டால் ஒரே பதில்தான்
" அதுதான் இளையராஜா !!!

இப்போது பாட்டை கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=mSlVcxuUkGg Neengaatha ennam onru - Vidiyum Varai kaathiru


Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1375971739101215/

NITHIRAIYIL VANDHU NENJIL IDAM KONDA UTHAMAN YAARODI - N C VASANTHAKOKILAM

Saravanan Natarajan writes:

Thanks to YouTube, many of the vintage non-film classics are now accessible. Presenting today a Tamil classic from the early 40s- நித்திரையில் வந்து set in Jonpuri, written by Sudhanandha Bharathiar and sung by N.C. Vasantakokilam.
* * * * *

Sudhanandha Bharathiar (1893-1990) was a talented poet with a spiritual bent of mind. His lyrics for film songs such as மாலை மயங்குகிற நேரம் ((Radha) Jayalakshmi in மரகதம்), சிரிப்பு தான் வருகுதய்யா (Seergazhi Govindarajan’s first song in பொன் வயல்) and வெட்கமாய் இருக்குதடி (P. Leela & Soolamangalam Rajalakshmi in பார் மகளே பார்) are unforgettable. It was Sudhanandha Bharathiar’s adaptation of Victor Hugo’s Les Miserables that K. Ramnoth filmed as ஏழை படும் பாடு. Vasantakolilam’s ஆனந்த நடனம் ஆடினாள் and D.K. Pattamal’s எப்படி பாடினாரோ are Sudhanandha Bharathiar’s compositions that are rendered in classical concerts to this day.
* * * * *

'ஹூம்...இதே பாட்ட வசந்தகோகிலம் என்னமா பாடுவா!' exclaimed my friend’s grandmother with a wistful sigh as she brought from the kitchen a plate of piping hot vadais along with a bowl of chutney. Sitting in the verandah of their house in Adyar, Chennai, we could hear some nondescript singer traverse the Ragamalika passages of ஏன் பள்ளிக்கொண்டீரய்யா in the Anantapadmanabhaswmi Temple just across the road. It was that evening during my college years that I heard the name of NCV for the first time, and the very name ‘Vasantakokilam’ (The Spring Cuckoo) sounded so musical.

A few months later, I found a HMV cassette of a NCV compilation “Old Gems” at the annual music sale in Shankara Hall. And listening to the songs, I was instantly hooked! ஆசை கொண்டேன் வண்டே, தித்திக்கும் செந்தமிழால், ஆனந்த நடனமாடினாள், அந்த நாள் இனி வருமோ, வருவானோ வனக்குயிலே...magic was in the air as I listened to her songs. That she had sung in movies as well was a revelation- the compilation included பாங்கானச்சோலை அலங்காரம் and கலைவாணி அருள் புரிவாய் (கங்காவதார்/1942)!

Nagapattinam Chandrashekhar Kamakshi (NCV’s real name) was born in 1919 in Irinjalakkuda, and the family soon shifted to Nagapattinam. Sensing his daughter’s inclination, Chadrashekhara Iyer got her to train under Nagapattinam Gopala Aiyyar. In the late 30s, he took his talented daughter to Madras, so that she may get the opportunities she richly deserved. She soon won critical notice, wining the first prize at Annual Conference of the Music Academy in 1938 and became a name to reckon with in the concert circles.

Her father got her married, but the marriage proved to be short-lived as she found her husband not inclined to encourage her music pursuits.

It was at this juncture that Saachi (C.K. Sadasivam) who had earlier worked with Ellis Dungan, and also had independently directed ராதா கல்யாணம் (1935), took her under his fold. He soon set about directing சந்திரகுப்த சாணக்யா (1940/ Trinity Theatres), with NCV playing the role of the princess Chaaya, rendering songs such as மனமயக்கம் ஏனோ and எந்த நேரம் தன்னிலும். வேணுகானம் (1941/ Jewel Pictures) followed next. The songs that NCV rendered for the movie under the baton of veteran Govindarajulu Naidu- எப்போ வருவாரோ, இன்பம் இன்பம் and புண்ணிய தினமின்றே were all hugely popular in their time. The success of வேணுகானம் heralded NCV as a singing star, and Saachi embarked on கங்காவதார் (1942/ Sundaram Sound Studios). NCV’s songs ஆனந்தம் மிக அளவில்லா ஆனந்தம், இதுவென்ன வேதனை and காவின் மனோஹர காட்சியின் helped make the film a grand success.

NCV next appeared as M.K. Tyagaraja Bagavatar’s wife in the hugely successful ஹரிதாஸ் (1944/ Royal Talkie distributors), and sang கதிரவன் உதயம் கண்டு கமலங்கள் முகம் மலரும், கண்ணா வா மணிவண்ணா வா, எனது மனம் துள்ளி விளையாடுதே, எனது உயிர் நாதன் ஹிருதயம் நொந்தே and even a unique duet with MKT: தொட்டதெற்க்கெல்லாம் தப்பெடுத்தால். வால்மீகி and குண்டலகேசி, both 1946, followed and NCV had significant roles in both films. Her last film, கிருஷ்ண விஜயம் (1950/ Jupiter Pictures) had her singing songs such as நவநீத கண்ணனே, கருணாநிதே மாதவா and பொறுமை கடலாகிய பூமாதேவி.

Even while she was donning the grease paint, NCV had steadfastly pursued her career as a classical singer, and was ranked among the top performers of the time. Many records were released containing her classical/ semi-classical songs, and NCV rose to dizzying heights of popularity. No less a personage than Tiger K. Varadchariar conferred upon NCV the august title ‘Madhura Geetha Vaani’.

The talented genius S. Rajam had this to say of NCV: "Hers was was a voice with a rich and pleasant timbre, very pliant and malleable. Although she was thin and frail, her voice combined melody with tensile strength.Her voice rang with vibrancy,a reenkara, as she crossed the tara shadja and dwelt on the rishaba. It is my impression that MS Subbulakshmi took NCV's music as a model.In the Simhendramadhyamam kriti உன்னை அல்லால் வேறே கதி, NCV sang a number of sancharas above the panchamam and in the tarashayi. Listeners were astounded by her rendition of this Kotiswara Iyer composition."

Her personal life however, was far from happy. She was ostracized by her relatives and shunned by her friends due to her relationship with Saachi. NCV fell victim to a severe attack of tuberculosis and passed away in 1951 when she was just thirty years old.

Listen to NCV’s rousing delineation of Periyasami Thooran’s ஆடு ராட்டே, follow it up with her moving rendition of Sudhdhanandha Bharathi’s அந்த நாள் இனி வருமோ, savor at leisure her exquisite treatment of Dikshithar’s ஸாரஸ தல நயனா, hark at her nonchalantly lift to divine heights Vedayanakam Pillai’s இந்த வரம் தருவான் and top it up with her soulful interpretation of Thyagaraja’s நீ தயராதா, and you will discover the enchantment of this long lost voice of yore. The voice, who, borrowing from Macbeth, “should have died hereafter…” A cuckoo whose spring that was all too short…

https://www.youtube.com/watch?v=38X_biEHlus&index=4&list=RDw8t86GrQVlc


Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1382554985109557/

Wednesday, November 2, 2016

KETPADHELLAM KADHAL GEETHANGALE - ILLARA JOTHI

Saravanan Natarajan writes:

கேட்பதெல்லாம் காதல் கீதங்களே…..

October 31 marked the death anniversary of the voice of the 50s- P. Leela.
Remembering the chanteuse with a scintillating instance of her magnificent vocal skills- கேட்பதெல்லாம் காதல் கீதங்களே from இல்லற ஜோதி. Lyrics by Kannadasan. Music by G. Ramanathan.
* * * * *

இல்லற ஜோதி (1954) was a Modern Theatres venture, produced by T.R. Sundaram. It had Sivaji Ganesan, Padmini and Sriranjini as the lead actors. It was the first film for which Kannadasan wrote the story and dialogues as well, besides the lyrics. The story was that of a talented young poet struggling for recognition, finding a beautiful patroness and the havoc that this relationship brings upon his marital life.

With Illara Jothi, the Wordsmith of Tamil Cinema had finally arrived, for the dialogues (including the scintillating Anarkali drama) sparkled with exceptional literary luminescence. And as for the songs, Kannadasan sat with the virtuoso GR, and they worked painstakingly to create 11 songs--immortal instances of exquisite éclat.

We find that besides A.M. Raja, Jikki and P. Leela, GR had also employed some little-known singers of the 50s such as Gajalakshmi, S.J. Kantha and Swarnalatha.
* * * * *

Modern Theatres was the bastion of Thiruchengodu Ramalinga Sundaram B.S.C. (Leeds); and he ruled over it with an iron hand, discipline being his watch word.. He was a trail blazing filmmaker and a visionary far ahead of his times.

In 1949, when TRS started a magazine called ‘Sandamaarutham’, he appointed Kannadasan as its editor at a princely salary of Rs.120! Kannadasan is said to have accepted the job, as he was strongly attracted to the well-stocked library at Modern Theatres. He worked assiduously at his duties, and gradually the circulation of the magazine touched 65O. Piqued by a small issue of permission being denied for publishing an article written by Nedunchezhiyan, Kannadasan dashed off his resignation letter. But TRS, who didn’t want to let him go, transferred him to the Story Discussion Crew, giving him a raise of Rs. 30/- to boot!

In 1953, Modern Theatres produced Thirumbipaar, which had story & dialogues by Karunanidhi, and lyrics by Kannadasan (save a Bharathidasan song). And இல்லற ஜோதி, with Kannadasan at the helm, came the subsequent year. Sadly for Kannadasan, he was in prison when இல்லற ஜோதி was released- he was incarcerated for taking an active part in the Dalmiapuram agitation.

However, Kannadasan had a great experience of working with G. Ramanathan. It was an honour to sit with the revered master, and watch him coming up with captivating tunes and adorn them up with pristine orchestral notes. For this song in particular, GR worked on a Bhimpalasi base to construct an edifice with layers and layers of lilting passages each one returning to the Pallavi. And Kannadasan filled the lines with verses of poetic perfection.
* * * * *

‘Krishna Krishna Mukuntha Janardhana, Krishna Govinda Narayana Hare’- at daybreak, in the temple town of Guruvayoor, it is this divine call that rouses the inhabitants from their slumber, and day after day, the voice that brings them to this serene awakening is that of P. Leela.

‘Kalaimaamani’, 'Padmabhushan' Porayathu Leela (1935- 2005) started training in classical music as a child in Cochin, first under Tirubhuvanam Mani Bhagavathar and later under Vadakkancherry Rama Bhagavathar.

Sensing a bright future for her, her father V.K. Kunjan Menon shifted the family to Madras, where she commenced rigorous training under Pathamadai Krishnan and Maruthuvakodi Rajagopala Iyer. Her father ensured that the child attended concerts by the great doyens of classical music and observed in person the brass tacks of concert performances. Leela was soon singing in concerts, though the opportunities were few and far between. Her performance in a concert organized by Dr. Durgabhai Deshmukh for the Andhra Mahila Sabha caught the attention of some leading personalities from the film world.

And when she did get her first offer to sing for Cinema, her reluctant father accepted with misgivings, for he was not sure if this was a respectable receptacle for his daughter’s talents. Leela’s first film song when she was just 12 years old was for music director Padmanabha Sastri in the film கங்கணம் (1948). The song ஸ்ரீ வரலக்‌ஷ்மி is said to have been popular in its time. She made her debut in Malayalam, Telugu and Kannada cinema shortly thereafter, and rose to dizzying heights of popularity. Her father now watched with pride as Leela’s vocals filled each year of the golden 50s with a prodigious output of immortal songs…

When hardly in her teens, she came under the tutelage of the great C.R. Subburaman, who coached her to sing some breathtaking songs, before his untimely demise. ‘எல்லாம் இன்ப மயம்’ (மணமகள்), her dazzling duet with the formidable MLV is a brilliant illustration of the faith that Subburaman reposed in her. Soon she was singing for all the reputed composers in the South and gradually became the most sought after singer in the 50s. S. M. Subbiah Naidu, S.V. Venkataraman, S. Rajeswara Rao, V. Dakshinamoorthy, M.S. Gnanamani, Pendyala Nageswara Rao, T.G. Lingappa, T.R. Papa and even Viswanathan- Ramamoorthy…they all came to Leela for challenging or classical based compositions and she exceeded their expectations at every instance with an endearing nonchalance.

However, special compartments in Leela’s portmanteau ought to be reserved for her works for three composers and each one of them collaborated with her to come out with some immortal works that stand the test of time. The first was the talented singer-composer Ghantasala who could not think of an album without Leela- Can we ever forget the songs of Paatala Bhairavi or Maya Bazar that Ghantasala reserved for his prima donna? The second composer who kept aside for Leela some of his best compositions in the 50s was K.V. Mahadevan. He was so enamoured of her voice that when he chose to don the singer’s hat himself for Madanamohini, he insisted on Leela singing along with him. Even as late as 1959- 1960, when her innings was all but drawing to a close, KVM ensured that some choice compositions came Leela’s way- Thai Piranthaal Vazhi Pirakkum, Padikkatha Methai, Engal Selvi, Aada Vantha Deivam were brilliant flashes from the dying embers.

The third composer who considered Leela as his lucky mascot was the great G. Ramanathan. G.R reserved some of his best compositions for Leela, and she justified his choice by bringing to beguiling life his intricate creations—‘Naadhar mudi melirukkum’ (Dhigambara Saamiyaar), ‘Pandiyan en sollai thaandi ponaandi’ (Thirumbippaar), ‘Sundari Soundari’ & ‘Vaaranamaayiram’ (Thookku Thookki), ‘Kaadhal konda poovil vandu’ (Puthuyugam), ‘Thaen suvai mevum senthamizh geetham’ (Dr. Savitri), ‘Kundruthoraadivarum’ & ‘Vaanga machaan vaanga’ (Madurai Veeran), ‘Vizhiyodu Vilaiyaadum’ (Karppukkarasi), ‘Niththirai illaiyadi’ (Kaathavarayan), ‘Sri Saraswathi maatha’ (Rani Lalithaangi), ‘Kaathirupaan Kamalakkannan’ (Uththama Puthiran), ‘Ennamellam inbakkathai pesuthe’ & ‘Aada vaanga’ (Chakravarthi Thirumagal), ‘Aththaane aasai aththaane’ (Arasilankumari), ‘Endru thaniyum intha sudhandhira dhaagam’ (Kappalottiya Thamizhan), ‘Nilave nee indha seithi sollayo’ (Pattinathaar)…

The exacting taskmaster GR is said to have demanded several retakes of கேட்பதெல்லாம் காதல் கீதங்களே before Leela sang it to his satisfaction. In between Leela is said to have shed copious tears at the master’s curt insistence at repeated retakes. Yet she persevered, and the final take showcases Leela’s singing prowess in full. The spellbinding progressions where the Veenai and the Violin seem to obey each minute wave of GR’s baton, and Leela’s spectacular Swara passages ensure that this song is worth cherishing.

https://www.youtube.com/watch?v=ZOF4N21uECQ


Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1373672945997761/

Tuesday, November 1, 2016

PAAVAIYARGAL MAAN POLE - ORE MUTHAM

Tiruchendurai Ramamurthy Sankar writes:

காவிரியின் நீர்போலே.....

ஹார்மோனியத்தை பிரதான வாத்தியமாகக் கொண்டு எம்.எஸ்.வி இசையில் பல பாடல்கள் உண்டு. நாடோடி, அந்த 7 நாட்கள் படப்பாடல்கள் குறிப்பிடத் தக்கவை. கவாலி வகையில் வந்த, பாரடி கண்ணே கொஞ்சம் பாட்டிலும் ஹார்மோனியம் முக்கியத்துவம் பெற்றது. ரஹ்மானின் "கண்ணாளனே " மற்றும் ஓர் முக்கியமான பாடல்.

கிஸ்மத்(1968) ஹிந்திப்படத்தில் ஓ.பி.நய்யரின் இசையில் வந்த " கஜுரா மொஹொபத்வாலா" ஹார்மோனிய இசையில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். சாதாரணமாக ஆண்வேஷமிட்டு வரும் பிஸ்வஜித் பெண்வேஷம் இட்டு , பபிதாவுடன் பாடும் பாடல் இன்றும் பிரபலம். பஞ்சாபி இசையில் ஹார்மோனியத்திற்குப் பெரும்பங்கு உண்டு. அதை சிறப்பாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் ஓ.பி.நய்யார்.

இளையராஜாவிற்கு பாடலில் ஹார்மோனியத்தை பெரிதும் பயன்படுத்தும் வாய்ப்புக் கிட்டியது முதன்முதலாக இந்தப் பாட்டில்தான். பல இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்த ஒரு இசையமைப்பாளராக இருந்தாலும் ஹார்மோனியம் வாசிக்கவரும்போது அவருடைய home coming தெரியும் பாடல் இது. பாவலர் பிரதர்ஸ் குழுவில் ஹார்மோனியம் வாசித்த ராஜா, கித்தார், பியானோ என்றெல்லாம் தன் ஆளுமையைக் காட்டி வந்த நேரத்தில் இந்தப் பாடல் இடைச்செருகலான ஒரு மெலிதான தென்றல்.

பாடலின் பல்லவியும் , முதல் சரணம் வரையில் கூட வரும் ஹார்மோனியம் , ஜானகி பாட்டில் நுழைந்ததும் அவரது வழக்கமான fox trot ற்குப் போய் , பிறகு திசை மாறிப் போவது சற்றே வருத்தம். இருந்தாலும் SPB யும் , ஜானகியும் போட்டி போட்டு இளையராஜாவின் உற்சாகத்திற்கு ஈடு கொடுத்திருப்பார்கள். ( நான் கங்கை அமரனின் ரசிகன். இந்தப் பாட்டில் இரண்டாவது சரணத்தில் ராஜாவை விட அமரன் அதிகமாகத் தெரிவார்! ) தொகையறா இல்லாததால் கவாலி வகைக்கு சற்றே வெளியே இருக்கும் பாடல்.

சனிக்கிழமை காலை 9.30 க்கு திரைவிருந்து. கே.எஸ்.ராஜா , இளையராஜாவின் இந்தப்பாடல் கம்போசிங்கை திரை விருந்தாக வழங்குகிறார். மைக்கில் ராஜாவின் குரல் " ராஜகோபால் ( என்று நினைவு!) , அந்த இடத்தில் இன்னும் சரியா வர்ல! தான தனனே தானதனே, இன்னும் ஒரு தடவை வரணும்! ரிதம் இன்னும் க்ளோஸா வாங்க! " . கம்போஸிங்கை நேரில் பார்க்க முடியாத சிறு நகரப் பிரஜைக்கு இது பிரமிப்பு. அடுத்த திங்கட்கிழமை பள்ளியில் இது பற்றிப் பேசியிருக்கிறோம். எம்.எஸ்.வி ரசிகனுக்கு கொஞ்சம் சிரம தசையான நேரமது!

இளையராஜா மோகன், ராமராஜன் இருவருக்கும் சோறுபோட்டு குழம்பு ஊத்தியிருக்கிறார். அவரும் எம்.எஸ்.வியும் சேர்ந்து சோறுபோட்டு குழம்பு ஊற்றி வளர்த்த இன்னொரு சுமார் நடிகர் ஜெய்கணேஷ். எந்தப் பாணியும் இல்லாமல் , ஏராளமான படங்களில் நடித்தும், வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் , எதுவுமே சாதிக்காமல் இருந்தவர்களில் இரண்டாமவர் ஜெய் கணேஷ். முதலாமவர்........சரி வேண்டாம்! உடன் சுமித்ரா, ஶ்ரீகாந்த்! பார்ப்பதற்கு எந்த ஆவலையுமே தூண்டாத நடிகர் குழாம்!

ஒரே முத்தம் (1980) , என் போன்ற சினிமாபைத்தியங்கள் பார்ப்பதற்கு முன்பே திரையரங்குகளை விட்டுப் போய்விட்டது. வந்ததா? என்றுகூட சந்தேகத்தை சரவணனிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம், என் மனதுக்குள் SPB, ஜானகி, இசைக்குழுவுடன் இளையராஜாவும், கங்கை அமரனும் , கண்ணதாசனோடு சேர்ந்து உட்கார்ந்து கம்போஸ் செய்வது காட்சியாய் விரியும். எந்த டெம்ப்ளேட் குழப்பங்கள், இசை ஞானி போன்ற அவஸ்தையான கிரீடங்கள் இன்றி, ஒரு துடிப்பான இளம் இசையமைப்பாளராக அவர் இருந்த நேரம்.

https://youtu.be/z_a8TSsB890


Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1371852009513188/