dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Sunday, October 4, 2026

சிங்கீதம்

 தொடவரவோ தொந்தரவோ...

உனதுளமே சம்மதமோ...🎵


சிங்கீதம் ஸ்ரீனிவாசராவின் படங்களை பற்றி, முக்கியமாக அவற்றில் இடம்பெற்ற பாடல்களை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.


சிங்கீதம் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றிலும், அவை எந்த மொழியில் இருந்தாலும், பாடல்கள் அற்புதமாய் அமையும். அவர் அபாரமான இசை ஞானம் கொண்டவர். 


'அபூர்வ சிங்கீதம்' என்ற தலைப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் கமல் ஏற்பாட்டில் நடைப்பெற்ற நிகழ்வில் 'அந்தி மழை பொழிகிறது' பாடலின் முதல் இடையிசையை இத்தனை வருடங்களுக்கு பிறகும் முழுமையாக ஞாபகம் வைத்து பாடிக்காட்டி அனைவரையும் அசத்தினார் 92 வயது சிங்கீதம்:


https://youtube.com/shorts/QFHnCN_6uhw?si=FbLBA_3-U2bO3ylq


இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும் போதே 'இரு நிலவுகள்' படத்தின் 'தொடவரவோ தொந்தரவோ' பாடல் அனிச்சையாய் உதட்டில் உட்கார்ந்துக்கொண்டது. சிறு வயது முதல் மிகவும் பிடித்த பாடல். ராஜன்- நாகேந்திரா இசையமைத்தது.


இந்த மெட்டை ராஜன்- நாகேந்திரா முதல்முதலில் 'கிரி கன்யா' (1977) என்ற படத்துக்காக உருவாக்கினார்கள். 'நகுநகுதா நீ பருவே' பாடல் பெரிய ஹிட்!


சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் இருவேடங்களில் நடித்த தெலுங்கு படம் 'சொம்மக்ககோடிதி சோக்ககோடிதி'.(1979) சிங்கீதம் இயக்கத்தில் கமல் நடித்த முதல் படம் இதுதான். 


இதற்கு இசையமைத்த ராஜன்-நாகேந்திரா 'நகுநகுதா நீ பருவே' பாடல் மெட்டை அப்படியே எடுத்து உருவாக்கிய 'தொலிவலபு தொந்தரலு' தெலுங்கு பாடலும் மெகா ஹிட்! தமிழில் இந்த படம் 'இரு நிலவுகள்' என்று டப் செய்து வந்தப்போது 'தொடவரவோ தொந்தரவோ' பாடல் இலங்கை வானொலியிலும் விவித் பாரதியிலும் ஒலிக்காத நாளில்லை. 


மலையாளத்திலும் 'ஜீவிக்கான் படிக்கனும்' என்று இந்த படம் டப் செய்யப்பட்டது. அங்கும் 'ஒரு வசந்தம் தொழுதுணர்னு' பாடல் மிகப்பெரிய ஹிட்!


இது டூயட் பாடல். கன்னடத்தில் பாடிய ஆண்குரல்- ராஜ்குமார். தெலுங்கிலும் தமிழிலும்- SPB. மலையாளத்தில், of course, யேசுதாஸ். 


ஆனால் நான்கு மொழிகளிலும் ஒலித்த ஒரே பெண் குரல்- ஜானகி! எப்பேர்ப்பட்ட வித்தகி!


நான்கு மொழிகளிலும் இந்த அழகான பாடலை கேளுங்கள். அவற்றை ஒருங்கினைத்து பதிவேற்றிய என் நண்பன் வினய்க்கு நன்றி 💖

Saravanan Natarajan 

https://www.facebook.com/share/v/19phrVd9MZ/

Thursday, October 1, 2026

Sivaji birthday post

 என் பாட்டுக்கு தாளம் போடலாம் 🎵

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் அற்புதமானப் பாடல்களைக் கொண்டிருந்தன. பல தசாப்தங்களைக் கடந்து, பல தலைமுறை  இசைமேதைகளின் கைவண்ணத்தில் உருவான அந்தப் பாடல்கள், இன்றும் ‘சிவாஜி பாடல்கள்’ என்றே மக்களால் கொண்டாடப்படுகின்றன—நடிகர் திலகத்தின் ஆளுமை அப்படி!

கடந்த ஆண்டுகளில், சிவாஜிக்குக் குரல் கொடுத்தப் பாடகர்களையும், அவரோடு இணை சேர்ந்து நடித்தக் கதாநாயகிகளையும் வரிசைப்படுத்திப் பார்த்தோம். இந்த தடவை, இந்த நன்னாளில் சிவாஜி கணேசனின் திரைப்படங்களுக்கு இசையமைத்துப் பெருமை சேர்த்த இசைமேதைகளைப் பட்டியலிட முயற்சி செய்வோம்.

எம்.எஸ். விஸ்வநாதனும், கே.வி. மகாதேவனும் சிவாஜி கணேசனின் பெரும்பாலான படங்களுக்கு இசைக் கிரீடம் சூட்டியது நிஜமே. ஆயினும், அந்தப் பெருநிழலின் கீழ் ஒதுங்கிவிடாமல், தங்கள் தனித்துவ இசையால் சிவாஜியின் நடிப்புப் பேழையை நவரத்தினங்களாக அலங்கரித்த பிற இசை மேதைகளின் வார்ப்புகளையும் கொண்டாலாமே!

1. R. சுதர்சனம்- பராசக்தி (1952)

https://youtu.be/JncJ1BCqWBI?si=aVTVfds03tcoaadJ

2. ஆதிநாராயண ராவ் & M. ரங்காராவ்- பூங்கோதை (1953)

https://youtu.be/rtjzbjGYM5o?si=8i6IwOKIfSPDIYjy

3. T.R. பாப்பா- அன்பு (1953)

https://youtu.be/Db29mgTWPs0?si=oVj-tk0REZetb88k

4. G. கோவிந்தராஜூலு நாயுடு- மனிதனும் மிருகமும் (1953)

https://youtu.be/HvsHvYsNiOo?si=8id2l3TWSiOpJnX2

5. K.N. தண்டாயுதபாணி பிள்ளை- துளி விஷம் (1954)

 https://youtu.be/mjDl-bJuMG0?si=RdoZ7a79viXYIdvA

6. C.N. பாண்டுரங்கன்- எதிர்பாராதது (1954)

https://youtu.be/O7SNWFoOJAA?si=Kmvn1qXdPdnXKc9f

7. N.S. பாலகிருஷ்ணன்- உலகம் பலவிதம் (1955)

 https://youtu.be/BW7aKkbOQYM?si=Odv09dg7Hk5y75pI

8. S. தட்சிணாமூர்த்தி- மங்கையர் திலகம் (1955)

https://youtu.be/mXCq_W5v_Ws?si=ytv-Xf-DUZihtYou

9. கண்டசாலா- கள்வனின் காதலி (1955)

https://youtu.be/SnOCfi783Aw?si=1mGU1KYjF2Vv_aPM

10. கிருஷ்ணமூர்த்தி & நாகராஜ ஐயர்- நல்ல வீடு (1956)

https://youtu.be/yxU-sYsTmKs?si=Pj0rceCMODmqJwjN

11. T.R. ராம்நாத்- நானே ராஜா (1956)

https://youtu.be/BTpg_EpdVzU?si=ds0iJW8RjhQQd_4y

12. B. நரசிம்ம ராவ் & A. ராமா ராவ்- பெண்ணின் பெருமை (1956)

 https://youtu.be/qTioowRjepA?si=KoYgUMdG6Pdnz8Qr

13. T. சலபதி ராவ்- அமர தீபம் (1956)

https://youtu.be/nPtdMNdX1iQ?si=RPBKJ4BdBd73p7Mt

14. G. ராமநாதன்- உத்தம புத்திரன் (1958)

https://youtu.be/dey1jpy3AiU?si=-w4fifFidc3YrTQD

15. S.M. சுப்பையா நாயுடு- அன்னையின் ஆணை (1958)

https://youtu.be/MPgdMvXACrk?si=q9Z0D8ZaTBZdwD5c

16.T.G. லிங்கப்பா- சபாஷ் மீனா (1958)

 https://youtu.be/P-rsntYfBvU?si=g3ldV417fLX-Byaj

17. S. ராஜேஸ்வர ராவ்- அவள் யார் (1959)

https://youtu.be/rNbBCwF3eoQ?si=mu6G4DgjoYlCpjzu

18. S.V. வெங்டராமன்- இரும்புத்திரை (1960)

https://youtu.be/s_af4H7W5_Q?si=SXlMyNGcR-xZDs0L

19. A.M. ராஜா- விடிவெள்ளி (1960)

https://youtu.be/hYGuOjQQZyg?si=qCoTyQKjRIiejrKj

20. விஸ்வநாதன்- ராமமூர்த்தி - பாசமலர் (1961)

https://youtu.be/imwsn-J8NuM?si=9mxK88njE_uIw324

21. K.V. மகாதேவன்- திருவிளையாடல் (1965)

https://youtu.be/eoCybcpf6m0?si=TJNChhyU1qwX1-Hr

22. M.S. விஸ்வநாதன்- நெஞ்சிருக்கும் வரை (1966)

https://youtu.be/M8-gHWCl0cI?si=1zSGg3idV0dDvVL_

23 G. தேவராஜன் - காவல் தெய்வம் (1969)

.https://youtu.be/VyuZWFpv9P4?si=AFAYYSj99-IPlTSq

24. T.K. ராமமூர்த்தி- தங்கச்சுரங்கம் (1969)

https://youtu.be/4vl3GXaylMk?si=nDwNFvUrxY9dDMCI

25. R. கோவர்தனம் - அஞ்சல் பெட்டி 520 (1969)

https://youtu.be/8K5G9cPjf8c?si=scwkRLmCTOK3o_q_

26. V. குமார்- நிறை குடம் (1969)

https://youtu.be/bRPgUfLb7O4?si=hJMxhe3UY-BJV5o-

27. T.K. புகழேந்தி- குருதட்சணை (1969)

https://youtu.be/Y6JIMF4L8E0?si=jMTI-3sKeYRbrSJv

28. குன்னக்குடி வைத்தியநாதன்- ராஜராஜன் சோழன் (1973)

https://youtu.be/geWPCLSfPWQ?si=Wgn6h2-HJd8gY9yj

29. இளையராஜா- தீபம் (1977)

https://youtu.be/2l1Y0X7Abl0?si=S3nDHp9CtemDcPn8

30. சக்கரவர்த்தி- யமனுக்கு யமன் (1980)

https://youtu.be/-3TuiYMGva0?si=xIFlp_cj-Xno3fzK

31. கங்கை அமரன்- நீதிபதி (1983)

https://youtu.be/9hLkzoyCNqE?si=Pg0EGZNHrIIjlpyB

32. சந்திரபோஸ்- விடுதலை (1986)

https://youtu.be/N7ghpqpwmRI?si=utktloIUEjA8qQWO

33. தேவேந்திரன்- மண்ணுக்குள் வைரம் (1986)

https://youtu.be/hI9Rk6X8pPg?si=SHPXPNi43uLi7TXP

34. ரவீந்திரன்- லட்சுமி வந்தாச்சு (1986)

https://youtu.be/lrHIKX4ycgY?si=00RkUjBcHrtUd1tv

35. M. ரங்காராவ்- குடும்பம் ஒரு கோவில் (1987)

https://www.youtube.com/watch?v=X3cY8lBjx7U

36. சங்கர் கணேஷ்- அன்புள்ள அப்பா (1987)

https://www.youtube.com/watch?v=yXnbMxFpT7A

37. T. ராஜேந்தர் - முத்துக்கள் மூன்று (1987)

https://www.youtube.com/watch?v=WlndK9h-Du4

38. மனோஜ் கியான்- தாம்பத்தியம் (1987)

https://youtu.be/k-oNVSlWLQ8?si=YD9jcnoj7tTaAAmS

39. ஹம்சலேகா- புதிய வானம் (1988)

https://www.youtube.com/watch?v=R9Q1clJhxQI

40. ஸ்ரீராஜ்-  சின்ன மருமகள் (1992)

https://www.youtube.com/watch?v=aKol8ytZpV8

41. தேவா- Once More (1997)

https://youtu.be/F656X5qXe5k?si=bnrEhztzzMGPuEn5

42. கீதப்ரியன்-  மன்னவரு சின்னவரு (1998)

https://www.youtube.com/watch?v=WudGhQlXQW0

43. வித்யாசாகர்-  பூப்பறிக்க வருகிறோம் (1999)

https://www.youtube.com/watch?v=Op19TZCbkKU

- Saravanan Natarajan 

Monday, September 28, 2026

Nagesh - Remembrance post

 சிரிக்க வைத்து எம்மை சிறையிலிட்டாய்...


He was thrilled at the summons from Chitralaya, for it was every aspiring actor's dream at the time to act in a movie directed by Sridhar. He said a silent thanks to his bosom friend Balaji who taken it upon himself to fetch for him the big break that had seemed elusive so far, and had got him introduced to Sridhar. He was now part of the cast of 'Nenjil Or Aalayam', the movie that Sridhar was making wholly inside a hospital set. He was slated to play a rather insignificant part of a villager who comes to the hospital. 


However, the Gods seemed to smile at him that day. For Ramarao, who was to play the relatively bigger role of the ward boy was unexpectedly delayed, and cameraman Vincent wanted to check the lighting for a sequence involving the ward-boy. Vincent's gaze fell on this newcomer who was watching the proceedings, and asked him to enact the role of the ward-boy just for the rehearsal. The scene was that of the ward-boy searching for a mischievous little girl who is hiding somewhere to avoid another dose of a bitter medicine.

 

Our man did not take the instruction lightly as a mere stand-in; he decided intelligently to do something different and comical. Rather than to merely search behind the door or under the bed, with perfect timing and droll seriousness he also looked under the pillow and inside a table drawer!

 

Sridhar and Vincent exchanged a few words, and the talented newcomer was told that the ward-boy's role was his! Nenjil Or Aalayam went on to become a colossal success, and his innovative comedy fetched Cheyyur Krishnarao Nageswaran instant stardom and mass appeal. Though after his screen debut much earlier in Thamaraikkulam (1959) Nagesh did get to make sporadic screen appearances, it was after eliciting notice as Peter in Nenjil Or Aalayam that he soared high in the firmament of filmdom. 


Nagesh soon became a mandatory inclusion in most movies; he had to work day and night to fulfill his commitments. There were even occasions when MGR and Sivaji Ganesan had to wait for Nagesh to turn up in the sets, so much was he sought after in the next decade. By provoking instant and unreserved laughter at his endearing antics, he walked into the hearts of the Tamil filmgoers like none other.

 

* * * * * * *


"If I get a hard audience they are not going to get away until they laugh. Those seven laughs a minute…I've got to have them!" declared Comedian Ken Dodd. 


Likewise, our own Nagesh was similarly determined to make us laugh, and so we did. And we will keep laughing for only Nagesh has passed on, Dharumi would still be lamenting aloud at not being able to win the 1000 gold coins promised by the King. Chellapa will forever scare his father with his gripping narrative of a horror sequence. Given a chance, Ramiah would once again let out the sprawling guest house of the absent owner. Vaithi, unscrupulous as always, would no doubt continue to fare well in his detestable profession... Truly, the characters donned by Nagesh seem so life-like, that they have acquired a halo of immortality as each successive generation of Tamil moviegoers discovers anew the genius of Nagesh.

 

The full-length role of a nagging old woman in ‘Naan’ (with her 'Komattula kuthtthuven!' refrain), the son who disguises himself as an old woman to rob his banker father in Kudiyundha Koyil, the hilarious triple role of grandfather, father and son in Panakkaara Kudumbam, the hen-pecked husband in Chandrodhayam, the doctor determined to win a reward by tracing a missing girl in Ooty Varai Uravu, and my personal favorite- the absent-minded LIC agent Panju in Poojaikku Vandha Malar (with utmost seriousness, he even asks Manorama if her name was Krishnamoorthi!) - how much have we laughed outright at Nagesh's convincing antics! Pudhiya Paravai, Pachchai Vilakku, Saadhu Mirandaal, Soapu Seepu Kannaadi, Madras to Pondicherry,Then Mazhai, Ninaivil Nindraval, Bommalaattam, Adhe Kangal, Uththaravindri Ulle Vaa, Veetukku Veedu- memories of Nagesh in these movies bring an involuntary smile. 


And even while extracting hilarious performances from Nagesh in movies such as Bhama Vijayam and Anubavi Raja Anubavi, K. Balachander brought to focus on the serious side of Nagesh- Server Sundaram, Neerkumizhi, Major Chandrakant, Ethirneechal, Paththaam Pasali, Poova Thalaiya, Navagraham, Nootrukku Nooru, Thamarai Nenjam and Aboorva Raagangal had Nagesh donning roles of dazzling dimensions. Nagesh played himself with panache in the hilarious Thillu Mullu. 


Chinnanjiru Ulagam, Thenkinnam, Hello Partner, Kai Neraya Kaasu were some movies in which Nagesh played the lead role. JK and Bhimsingh brought out arresting facets of Nagesh in their landmark adaptations of ‘Sila Nerangalil Sila Mnaithargal’ and ‘Oru Nadigai Nadagam Paarkiraal’. Even earlier, Nagesh was picked by JK to essay the role of the simpleton Joseph in his ‘Yaarukkaga Azhuthaan’, and in his memoirs JK recalled with gratitude that Nagesh, then at the peak of his career, came to enact his scenes in the middle of the night after a packed day.

 

In later years, Kamalhasan, always an ardent fan of Nagesh, gave him memorable roles in movies such as Aboorva Sahodarargal, Michael Madana Kamarajan, Magalir Mattum, Nammavar, Avvai Shanmugi, Panchathanthiram, Vasoolraja MBBS….Nagesh’s last screen appearance was in Kamal’s ‘Dasavatharam’. An animated version of Nagesh was seen in Kochadiyan. 


* * * * * * * 


Much as he made us laugh, Nagesh's life had more than a fair share of sorrows. Initial success did not come easily; his pock-marked face came for repeated derision and he had to face rejection and humiliation in plenty. He did taste success at length, but legend has it that when he piled his car with riches and rushed to his hometown, he was too late even to watch his mother's mortal remains being consigned to flames.


When he married Regina, he supposedly faced ostracism from his family and community. And when he thought he had settled to a life of tranquil matrimony, Nagesh was embroiled in a criminal case pertaining to the murder of a close family member, and the accompanied notoriety played havoc with his personal and professional life. A misunderstanding with his onscreen pair- Manorama led a parting of ways. Then years of alcohol abuse took their toll- Nagesh fell dangerously ill-indeed it was indeed a miracle, aided by the medicine that Balaji procured from the U.S. just in the nick of time, that Nagesh lived to tell his tale of woe. 


A movie titled ‘Athirshtakaran’ with Nagesh playing the hero came out in 1978. Amateurishly made with a hackneyed story line, it brought Nagesh only ignominy. A slump in his career lead to financial worries; even the theater that he constructed in his name was besieged with troubles and he had to ultimately sell it. Despite being among the finest actors of the country, Nagesh never received the recognition that he deserved; the National Award for the Best Supporting Actor that he received in 1994 for his superb performance in ‘Nammavar’ was a tardy and tightfisted acknowledgement from the powers that be. 


'Paartha Gnyabagam Illaiyo', a movie that Nagesh made to bolster the sagging fortunes of his son Anandbabu saw his finances dwindling further. Anandbabu's battle with alcohol and drugs filled Nagesh with depression, and after his wife's demise, Nagesh lived the life of a recluse. After a fall in November 2008, his health witnessed a rapid deterioration; his death on 31 January 2009 was perhaps a blessed release he was craving for. 


Ten years have passed by. We salute his memory with awe; we celebrate the laughter he has left behind….


Fear no more the heat o' the sun, 

Nor the furious winters rages; 

Thou thy worldly task hast done, 

Home art gone, and ta'en thy wages...


- William Shakespeare (Cymbeline) 


* * * * * * * *


In memory of the brilliant performer, let us recall an obscure little movie titled 'Engal Vaathiyaar'. Released for Deepavali of 1980 and directed by Durai, the movie had Nagesh essaying the role of an impoverished village schoolmaster Krishnadas trying to muster the funds required to get his daughter married. His daughter Lakshmi falls in love with the village bigwig’s son, and Rs. 25K is demanded as dowry. Unable to bear the tears of his daughter and coaxed by his wife, a reluctant and shamefaced Krishnadas travels to Madras to seek help from some of his former students. 


The heartwarming sequences that follow are filled with moments that sparkle with the offhand brilliance of the actor. His body-language, gestures, reactions and even silence are riveting in every frame- a magnificent performance that went sadly unnoticed. The movie itself, released on the same day as Varumaiyin Niram Sigappu, Moodupani, Nizhalgal, Pollathavan and Viswaroopam, made an unobtrusive exit from the marquee. 


Here is a song filmed on Nagesh. The song is sung by the schoolmaster during his stay the house of one of his former students who is a now a Police official. The master plays with the children of his student and sings, lamenting on his penury, the expectations of his wife and daughter back home and his own helplessness and discomfiture at having to seek alms from his students.


The song opens with the ancient verses ‘Naaraai Naraai’ written by a poet called ‘Sathimutra Pulavar’. The poet had traveled to meet the Pandiya King Maran Vazhuthi with the hope of singing his glory and receiving a reward. However, he could not meet the King, and sings to the birds ( Storks), imploring them to fly past his house and inform his wife of his piteous plight. Our bard then takes over in style, writing lines that flow like poignant tears of profound philosophy. Our Master chooses to render the song himself, and his numinous tones, baring the heart of a fatigued, disconsolate soul, leave the listener deeply moved.....


   https://www.youtube.com/watch?v=kpZC7-6NFCA

https://www.facebook.com/share/p/14r2A6xwGgM/

Thursday, September 24, 2026

Anbu vandhadhu

 Six years have gone by since we lost SPB.🙏


Remembering him with a beautiful song 


அன்பு வந்தது.....


One evening in the late 60s, AVM Chettiar was having a leisurely tête-à-tête with his old friend KT. Subbiah Chettiar. The latter, along with few partners was just then engaged in producing a movie called ‘நாலும் தெரிந்தவன்’. Subbiah Chettiar spoke very highly of a youngster called V.C. Guhanathan who had written the story. AVM Chettiar had already heard of the young man who had won the admiration of none other than MGR who had commissioned him to write the script for ‘புதிய பூமி.’


Intrigued by the glowing reports of VCG from different quarters, the discerning Movie-Moghul sent for the youngster. He was taken aback when he saw the teenager who then in his second year of Commerce in Pachaiappas College. AVM asked VCG if he could narrate to him a story then and there, and when VCG nodded his readiness, AVM asked his assistant not to disturb them for an hour. Even as VCG narrated his story which he had titled as ‘செல்லத் தங்கை’, he could perceive that the patriarch was greatly impressed by his story-telling; AVM was even seen wiping the tears that were flowing from his eyes as VCG was dwelling upon certain emotional sequences.


The same afternoon, VCG was asked to narrate another story to AVM, and this time it was a story that went on to be filmed as ‘அன்னையும் பிதாவும்.’ VCG soon earned the goodwill and admiration of the entire AVM family and worked in many of the AVM ventures that were produced at the time.


The first story that VCG had narrated to AVM, ‘செல்லத் தங்கை’, had found a special place in the heart of the patriarch, and when the production house had a secured the dates of NTR, he decided to produce the movie in Telugu. Early one morning, VCG was sent to narrate the story to NTR. NTR liked the story and the movie was soon being made with Gummadi, Vanisri, Rajasri and Haranath essaying the other main roles and with Krishnan Nair as the director. Released in 1970, ‘Chitti Chellelu’ was a runaway hit.


Basking in this success, AVM sent for VCG and filled the youngster with incredulous delight by suggesting that he should produce the Tamil version himself, jointly with AVM. VCG commenced work on the project excitedly. Gemini Ganesh, Muthuraman and VA Nirmala were taken on-board. A young Chandramohan was engaged to play the role that Harananth had essayed in the Telugu version. Another youngster called Kamalahasan was summoned to dub for Chandramohan. To play the role of the sister, VCG approached a young girl whom he had seen many a time at a bus-stop in Habibullah Road. She was a college student from a poor family, and VCG secured the concurrence of her father to introduce her in his movie. It was thus that Jaya was roped in to play the role of the sister, and in the future, she would become the wife of VCG.


VCG wanted the famed Kannada director Puttanna Kanagal to direct the project. AVM, himself a great admirer of Puttanna’s works, was skeptical of getting the director on-board. However, the determined VCG, along with SP. Muthuraman, camped in Mysore for a whole week and secured Puttanna’s acquiescence. Puttanna took his time in making the movie, but each frame bespoke his brilliance; each look, each word, each angle was a lesson in film-craft, reminisced VCG in an interview many years later. When the completed movie was shown to AVM, the patriarch was seen overcome with emotion.


However, released in 1971, the movie titled 'சுடரும் சூறாவளியும்' (AVM Chitramala Combines), despite having an engrossing story ending in a heart-rending twist, bolstered even further by a riveting screenplay and heartwarming, subtle performances, could not repeat the success of ‘Chitti Chellelu’. Puttanna who watched the movie in a near-empty Wellington Theater, was so disheartened by the failure that he left, refusing to meet AVM as he felt that he had let down the hoary production house. AVM Chettiar, on the other hand, was unperturbed by the loss; he had only wanted to meet the celebrated director to express his heartfelt appreciation of the movie.


* * * * * *


Let us listen to two versions of the song 'அன்பு வந்தது’ from this long-forgotten movie. I fell in love with the song when I first listened to it as a child, and each listen renewed afresh my love for the lines and the lilt. Years later, when our son was born, I used to sing the opening lines many a night to lull him to sleep. And even as he fell asleep with his little fingers entwined trustingly in mine, the magic of the bard who with his astute perspicacity, summarized the marvel of parenthood in the simple lines, made my eyes moist with tears of bliss and gratitude....


அன்பு வந்தது...

என்னை ஆள வந்தது....

சொந்தம் வந்தது....

தெய்வ சொர்கம் வந்தது....


* * * * *


Manickam (Gemini Ganesh), a young widower, is finding it increasingly difficult to make both ends meet and his children Raja and Meena are forced to go hungry most days. Manickam cannot to bear to see the little ones suffer the pangs of hunger. But what can he do except shed tears of despair? Enters a wily scoundrel who takes advantage of Manickam’s poverty and lures him to forge cheques and get them encashed. Manickam hesitates but succumbs finally to the temptation.


He is paid well for the crime, and goes home, carrying joyfully his share of the spoils. He buys delicious snacks and fruits for his children. ‘Meena, catch! Raja, catch!’ he cries excitedly, as he throws the apples that he has bought for them. And as the famished children grab the fruits in wondering delight, Manickam laughs aloud with happiness, for their days of deprivation seem now a distant dream. He takes the kids out for a treat, and as they enjoy themselves in the zoo and the beach, he sings this song, lost in joyous dreams of a prosperous, carefree future…


நாலு பேர்கள் வாழும் வாழ்வு

நாமும் வாழலாம்.....

தினம் நல்ல ஆடை நகைகளோடு

மலர்கள் சூடலாம்....

கண்ணிரெண்டில் கலக்கமின்றி

அமைதி காணலாம்....

காலம் வெல்லும் வெல்லும் என்று

உறுதி கொள்ளலாம், 

உறவு கொள்ளலாம்....


https://www.youtube.com/watch?v=e04PAh9O_FU


Alas! Little does he know how short-lived his happiness is going to be! He reaps the bitter harvest of the sins he sowed and is imprisoned for his crimes. The orphaned children find shelter and succour in a kind-hearted woman’s house. She has a son of her own and brings up all the three children with love and care.


Meanwhile, Manickam serves his term and is released, but is unable to trace his children. His crooked accomplice accosts him and convincing him that his search for his kids was futile, persuades him to go to Bangalore with him. Manickam is coaxed gradually into falling back to crime and takes to drink as well. He cannot help thinking of his children, and drink is his only comfort.


As the years roll by, Raja grows up to be a responsible, honest youth (Muthuraman), and Meena, his doting sister, grows to be a naïve, cheerful girl (Jaya). The second version of song reflects all this. Manickam drowning his sorrows in drink, the child Raja remembering his father and singing the lines, the passage of time, the very special, endearing bond that has evolved between brother and sister, and Raja’s staunch determination to take care of Meena. 


ஆற்று வெள்ளம் போன பின்பும்

ஆற்று மண்ணிலே....

வரும் ஊற்று வெள்ளம் போலிருந்து

உறவு கொள்ளுவேன்...

பரிவு கொள்ளுவேன்....

தெய்வம் பார்த்த பிள்ளைப்போல

தங்கையை பார்ப்பேன்....

செல்வம் பார்த்த ஏழைப்போல

நிம்மதி காண்பேன்....


https://www.youtube.com/watch?v=zd31dPxjoEs


* * * * * *


How adroitly MSV employs the same tune woven in the silken strands of Tilak Kamod for the two versions! And what wonderful vistas of familial bliss and love, each one studded with distinct beauty, does the poet nonpareil summon in his lyrics! The simple desires of a father for his little children, and his determination (as accentuated by the twice-repeated 'வெல்லும்') to secure for them a tranquil life filled with comforts find an evocative platform on the bard's page.


This song surely must rank among the best of SPB’s early years, and the fervent hopes of the future that the lyrics beckon find delightful delineation in his rendition.


And as for the second version- I am filled with worshipful awe at Kannadasan's metaphors-he likens the the joy that the brother gets at the sight of his sister to the rapture of a poor man at the sight of wealth! SPB drawls over the opening lines in a drunken stupor, L.R. Anjali sings for the child, MSV’s interludes verily mirror the years rolling by, the manly majesty of TMS is just what the steely, resolute lines of Raja need, and S. Janaki is a late entrant - singing for the sister, she is the last pleasant surprise that MSV stores in this ballad.

- Saravanan Natarajan

https://www.facebook.com/share/v/1JvT7KJEiK/

Wednesday, September 23, 2026

மென்குரலோனின் முத்துச்சரங்கள்

  மென்குரலோனின் முத்துச்சரங்கள்


Part # 1- A Solo

நேற்று P.B.ஸ்ரீனிவாஸின் பிறந்த நாள். அவரை பற்றி இன்னும் என்ன எழுதுவது! அவரை சந்தித்த ஒவ்வொரு முறையும் எனக்கேற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள், நினைவுக்கூறிய பாடல்களென பல பதவிவுகள் எழுதிவிட்டேன். 

அவரின் பாடல்களை இன்று மட்டுமல்ல, அடிக்கடி நினைத்து பார்ப்பதுண்டு. பல வருடங்கள் பாடிக்கொண்டிருந்தாலும் தமிழை பொருத்தவரை அவரது பொற்காலம் என்னவோ 1961- 66க்கு உள்பட 5-6 வருடங்கள் தான். ஆனால், அந்த குறுகிய காலத்தில், முக்கியமாக மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் PBS பாடிய பாடல்கள் அத்தனையும் தமிழ் திரையிசையின் பொக்கிஷங்கள். அவற்றிலிருந்து  நான்கு பாடல்களை உங்கள் கவனதுக்கு கொண்டு வர ஆசைப்படுகிறேன்....

முதல் பாடல் மட்டும் இன்றைய பதவில். வரும் நாட்களில் மற்ற மூன்றையும் ஒவ்வொன்றாக கொண்டாடலாம்.

முதலில் ஒரு சோலோ பாடல். 'காலங்களில் அவள் வசந்தம்', 'சின்னச்சின்ன கண்ணனுக்கு', 'நேற்றுவரை நீ யாரோ', 'கண்களே கண்களே', 'நிலவுக்கு என் மேல்', 'மயக்கமா கலக்கமா', 'மனிதன் என்பவன்', "மௌனமே பார்வையாய்' 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' 'பூ வரையும் பூங்கொடியே', 'மாடி மேலே மாடி கட்டி', 'உங்கள் பொன்னான கைகள்', 'நிலவே என்னிடம் நெருங்காதே' .... இப்படி விஸ்வநாதன்- ராமமூர்த்தி/ அல்லது தனித்து விஸ்வநாதன் இசையில் PBS பாடிய வகை- வகையான சோலோ பாடல்கள் தசாப்தங்கள் கடந்து, தலைமுறைகள் கடந்து இன்றும் வானொலிகளிலும் டிவி பாடல் போட்டிகளிலும் அமர்களமாய் வலம் வருகின்றன....

'தென்றல் வீசும்' என்றொரு படம். கல்யாண்குமார், கிருஷ்ணகுமாரி நடிப்பில் 1962ல் வெளிவந்தது. இயக்கியவர் பெரியவர் B.S. ரங்கா. ( கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மொழிகளில் பல படங்கள் இயக்கியவர். இவரது வீடு எங்கள் எதிர் தெருவில் தான் இருக்கிறது. அவர் மறைந்து பல வருடங்களாகியும் இன்றும் 'B.S.Ranga' என்ற பெயர் பலகை அந்த பங்களாவின் வெளியே கம்பீரமாக காட்சி அளிக்கிறது)

 'தென்றல் வீசும்' படத்தில் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் 10 பாடல்கள். அவற்றில் ஒரே ஒரு பாடலைத்தான் PBSஸுக்கு கொடுத்தார்கள். ஒரு  பாடல் தான்- ஆனால் எப்பேர்பட்ட பாடல்! எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மாயவநாதன் எழுதியது. 

//அழகான மலரே அறிவான பொருளே

தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே

உன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்

என் கண்ணில் மகளே நீ கண்டதென்ன...

விளையாடும் காலோ கவிபாடும் நாவோ

செண்டாடும் கொடியோ நின்றாடும் ஒளியோ

அவள் தந்த பாடல் நான் பாடுகின்றேன்

என் பாடல் போலே உன் பாடல் வேண்டாம்.....//

மனைவியை இழந்த ஒரு ஆண்  அழுதுக்கொண்டிருக்கும் தன் சிறு மகளை சமாதானப்படுத்தி உறங்கச்செய்ய பாடும் தாலாட்டாக இருக்கலாம். ( படம் பார்த்ததில்லை). தென்றலாய் வீசுகிறது வசீகரிக்கும் PBSஸின் குரல். இழையிழையாய் இதம், மயிலிறகால் வருடும் மாயம்.....

https://youtu.be/VaBopXeP-pY?feature=shared

Monday, September 21, 2026

GKV நினைவுகள்

 உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்...🎵


ஜெமினி கணேஷ், சாவித்திரி, M.R. ராதா ஆகியோரின் நடிப்பில் 1965ல் வெளிவந்த படம் 'ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார்'. கண்ணதாசன் பாடல்களை எழுதினார். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணந்து பணியாற்றிய கடைசி படங்களில் ஒன்று. வழக்கம் போல் முத்து- முத்தாய் பாடல்கள்.


வழக்கம் போல் ஜெமினி- சாவித்திரியின் ரசிக்கவைக்கும் ரோமேன்ஸ்.


வழக்கம் போல் M.R. ராதாவுக்கு..... அது தான் இல்லை. ராதாவுக்கு இந்த படத்தில் ஒரு அற்புதமான குணசித்திர வேடம் அமைந்தது. தான் உண்மையில் ஒரு செல்வச்செழிப்பான ஜமீன்தார் என்பதை அறியாத ஒரு முடி திருத்துபவராக படம் நெடுக தன் முத்திரையை ஆழமாக பதிக்கிறார். 


அவர் அறிமுகமாகுவதே ஒரு பாடலகாட்சியில் தான். ஒரு முடித்திருத்தகம். அதன் உரிமையாளர் அழகிரிசாமியும் ( M.R. ராதா) மூன்று முடி திருத்துபவர்களும் மும்முரமாக தங்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கத்தியை தீட்டிவிட்டு அழகிரிசாமி தன் வேலையை தொடக்குகிறார். வாடிக்கையாளருக்கு முகச்சவரம் செய்துக்கொண்டே இந்த பாடலை பாடும் ராதாவின் முக பாவங்களும் சேட்டைகளும் பிரமாதம். Arresting body language! பதிலுக்கு வாடிக்கையாளராக வரும் ராமாராவுடைய முகபாவங்களும் just hilarious! மற்ற மூன்று ஊழியர்களும் கோரசில் அமர்களமாக கலந்துக்கொள்கிறார்கள்.


இப்பொழுதெல்லாம் சென்னையில் சலூனுக்கு போனால் ஒரு ஐந்து நட்சத்திர விடுதி உணர்வு வருகிறது. வசீகரமான வரவேற்பறை மற்றும் வரவேற்ப்பாளர். அழகாக அலங்கரிக்கப்பட்ட அறைகள். சீருடை அணிந்து நுனிநாக்கில் ஆங்கிலம் தவழும் பணியாளர்கள். அதற்கெல்லாம் ஏற்ப விலையும்.


இந்த பாடலை பார்க்கும் போது என் சிறு வயதில் நான் முடித்திருத்த சென்றுவந்த எளிமையான 'மலபார் ஹேர் சலூன்' நினைவில் வருகிறது. அங்கு உபயோப்படுத்தப்பட்ட மோட்டர் என் மண்டையை தொட்டதும் நான் அலறத்தொடங்கிவிடுவேன் என்று அம்மா இப்பொழுதும் (தேவையில்லாமல்) அரவிந்திடம் நினைவுக்கூர்ந்து சிரிப்பார், with a lot of exaggeration!


ஆனால் இப்பொழுது போல்  மௌனமாக இல்லாமல் அந்தக்காலத்தில் முடித்திருத்துபவர்கள் வாடிக்கையாளர்களிடம் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டே வேலை செய்வார்கள். சமீபத்திய செய்திகள், அரசியல், சினிமா, கிரிக்கெட் என்று எல்லா தலைப்புகளிலும் சரளமாக சொற்பொழிவு ஆற்றக்கூடிய விஷயஞானம் மிக்கவர்கள். As actor and writer George Burns once remarked, ‘Too bad that all the people who know how to run the country are busy driving taxicabs and cutting hair!’


கவியரசரும் தன் பங்குக்கு இது ஒரு சலூனில் பாடப்படும் வெறும் ஒரு அறிமுக பாடல் என்று லேசாக எடுத்துக்கொள்ளாமல் ஆழமான சிந்தனைத்துளிகளை பாடல்வரிகளில் விதைக்கிறார்.


//சொந்தமுமில்லே

ஒரு பந்தமுமில்லே

சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்...

நாங்கள் மன்னரும் இல்லே

மந்திரி இல்லே

வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்!//


In his ‘Death the Leveller’, James Shirley held death high as a great leveler of mankind, and our own Maruthakasi seconded the thought in his ‘சமரசம் உலாவும் இடமே’. Here Kannadasan makes us realize that there is another great leveler in life, and that is the barber shop, where we all have to submit to the hairdresser. Sceptre and crown must necessarily tumble down, and along with the humble scythe and spade bow in unison to the barber’s scissors!


//வளரவிட்டால் மனிதரெல்லாம்

குரங்குகளாவர்-

மனித குரங்குகள் ஆவார்;

நாங்கள் வழித்து விட்டால்

மறுபடியும் மனிதர்களாவர்!//


பல வருடங்களுக்கு பிறகு 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சவுக்கியமே' என்று எழுதிய கவியரசர்  அந்த தத்துவத்தை 'முடி'யைக்கொண்டு இங்கேயே பறைசாற்றியிருக்கிறார்....


//இருக்கும்போது தைலம் போட்டு

அழகு செய்கிறார்-

தலையை அழகு செய்கிறார்!

அது இறங்கி விட்டால் திரும்பிப் பார்க்க வெறுப்புக் கொள்கிறார்-

அவரே வெறுப்பு கொள்கிறார்!

உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்

இந்த உலகம் உன்னை மதிக்கும்

இடத்தை விட்டு விழுந்து விட்டால்

ஏறி மிதிக்குமே….//


கவியரசர் இப்படி நம் கவனத்தை கவரும் போது, மெல்லிசை மன்னர்கள் மட்டும் என்ன லேசுப்பட்டவர்களா? மேற்கத்திய இசையில் Barbershop Quartet Music என்று ஒரு வகை உண்டு. வாத்தியங்கள் இல்லாமல் வெறும் Vocal Harmony பட்டும் கொண்டது- அதை பிரபலப்படுத்தியது அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் பத்தொண்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த Mills சகோதரர்கள்- தங்கள் தந்தை நடத்தி வந்த முடித்திருத்தகத்தில்!


இங்கே நம் மெல்லிசை மன்னர்கள், விசில், ட்ரம்ப்பெட், போங்கோஸ் மற்றும் கோரஸ் குரல்களுடன் Barbershop இசையை ஒரு அழகான நவீன வடிவத்தில் அலங்கரிக்கிறார்கள்! கத்திரிக்கோல்களின் நறுக்கும் சத்தத்தை சந்தமாக்கி இந்தப்பாடலை சொந்தமாக்கிக் கொள்கிறார்கள்!


இந்த வித்யாசமான பாடலை M.R. ராதாவுக்காக பிண்ணனி பாட மெல்லிசை மன்னர்கள் தேர்வு செய்வது - அவர்களின் உயிர் நண்பரான G.K. வெங்கடேஷை... GKVயும் தனது தனித்துவமான குரலில், அலட்டலில்லா உற்சாகத்துடன் அமர்காகளமாய் பாடி  மெல்லிசை மன்னர்களின் தேர்வை நியாயப்படுத்துகிறார். 


https://youtu.be/3c1tETWe9kE?feature=shared


குர்ஜடா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷின் பிறந்தநாள் இன்று 🙏


- Saravanan Natarajan

Friday, September 18, 2026

பூனையும் புறாவும்

 பூனையும் புறாவும் 😃


'மியாவ் மியாவ் பூனைக்குட்டி' பாடலை கேட்கும் போதும் பார்க்கும் போதும் எனக்கு எப்பவும் எழும் கேள்வி " இது சவுகார் ஜானகி பாடுவதாக அமைந்த பாடல் தானே... பிறகு இதை M.S. ராஜேஸ்வரி ஏன் மழலைக்குரலில் பாடுகிறார்?"


https://youtu.be/B6eIOCBwizw?si=Aox4gTkRyuU7F_hY


M.S. ராஜேஸ்வரி குழந்தை குரலில் பல பாடல்கள் பாடியிருக்கிறார்- ஆனால் அப்பாடல்களில் திரையில் தோன்றி நடிப்பவர்கள் சிறுவர்/சிறுமிகளாக இருப்பார்கள். உதாரணம்- குட்டி பத்மினிக்காக அவர் பாடிய "கோழி ஒரு கூட்டிலே'.


ஆனால் வயது வந்த நடிகைகளுக்கு பாடும் போது தன் இயல்பான குரலில் அழகாக பாடியக்கூடியவயர் தானே ராஜேஸ்வரி! பண்டரிபாய்க்காக அவர் பாடிய 'புது பெண்ணின் மனதை தொட்டுப்போனவரே', குமாரி கமலாவுக்காக அவர் பாடிய 'ஓ ரசிக்கும் சீமானே', வைஜெயந்திமாலாவுக்காக அவர் பாடிய 'சொன்ன சொல்லை மறந்திடலாமோ' போன்ற பாடல்களை எவ்வளவு நன்றாக பாடியிருந்தார்! ஏன் பல வருடங்கள் கழித்து 'நாயகன்' படத்தில் 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலை எவ்வளவு அருமையாய் பாடினார்!


இந்த 'மியாவ் மியாவ்' பாடல் சவுகார் ஜானகி மேல் படமாக போகிறது என்று ராஜேஸ்வரிக்கு யாரும் சொல்லவில்லையா?  யாரும் சொல்லவில்லை என்றாலும் 'அத்தான் மனது வெல்லக்கட்டி' போன்ற வரிகளை பார்த்தவுடனாவது இது ஒரு குழந்தை பாடல் அல்ல என்று தோன்றியிருக்குமே! அஞ்சலி தேவிக்காக ராஜேஸ்வரி பாடிய 'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா', சவுகார் ஜானகிக்காக பாடிய 'படித்தினால் அறிவு பெற்றோர்' பாடல்களிலும் எனக்கு இதே குறை தோன்றும். எல்லாம் அழகான, பிரபலம் அடைந்த பாடல்கள் தான். ஆனால் ஏன் தனது இயல்பான குரலில் பாடாமல் மழலை குரலில் பாடினார் ராஜேஸ்வரி என்று இன்றுவரைக்கும் புரியாத புதிராக இருக்கிறது. மூன்று பாடல்களுக்கும் இசையைத்த K.V. மகாதேவனோ அவரது உதவியாளர் புகழேந்தியோ இதை எப்படி அனுமதித்தார்கள்! சரி, அந்தகாலத்து ரசிகர்களுக்கு இந்த சந்தேகம் வரவில்லையா?


'மியாவ் மியாவ்' பாடல் இடம்பெற்ற 'குமுதம்' 1961ல் வெளிவந்தது. இதே கதையை பீம்சிங் இயக்கத்தில் AVM நிறுவனம் ஹிந்தியில் 'Pooja Ke Phool' என்ற பெயரில் 1964ல் வெளியிட்டது. இதில் அந்த பார்வையற்ற பெண் வேடத்தில் நடித்தவர் நிம்மி. K.V. மகாதேவன் அமைத்த அதே மெட்டை மதன் மோகன் இரவல் வாங்கி 'Meow Meow Meri Sakhi' என்ற பாடலை வடிவமைத்தார். பாடலை இனிமையாக லதா மங்கேஷ்கர் பாடினார். 


https://youtu.be/9nKnhNvEFns?si=hcVrx8xoqzz7TZPi


இதற்கிடையில் 1962ல் இதே கதை 'மஞ்சி மனசுலு' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு 1962ல் வெளிவந்தது. அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கிலும் சவுகார் ஜானகியே நடித்தார். K.V. மகாதேவன் இசையில் அதே மெட்டு. ஒரே மாற்றம்- பூனை புறாவாக மாறியது! 


பாடலை பாடியவர்- S.ஜானகி!


https://youtu.be/9EkMup6bn1I?si=o6Zf3ytlXFkP3niW


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/1SNrw8GHdm/

Tuesday, September 15, 2026

SAPTHAPATHI - RATHA THILAGAM

 On the merry-go-round 🎵

நேற்று 'சப்தபதி' என்ற பழைய பெங்காலி படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். 'மஹாநாயக்' உத்தம் குமார்-  'மஹாநாயிகா' சுசித்ரா சென் நடிப்பில் 1961ல் வெளிவந்த படம். அற்புதமான கதை, அருமையான நடிப்பு. 

இரண்டாம் உலகப்போரின் பிண்ணனியில் கல்கத்தாவில் ஒரு வங்காள இளைஞனுக்கும் ஒரு ஆங்கிலோ இந்திய பெண்ணினுக்குமிடைய மலரும் காதல், பிரிவு, எதிர்பாராத வகையில் மீண்டும் சந்திப்பது என்று அழகாய் செல்லும் திரைக்கதை. பல இடங்களில் நம் 'ரத்தத்திலகம்' படத்தை நினைவூட்டியது.

'ரத்தத்திலகம்' கவியரசர் கண்ணதாசன் தயாரிக்க, தாதா மிராசி இயக்கத்தில் 1963ல் வெளிவந்த படம். இந்திய- சீன எல்லைப்போர் தான் கதைகளம். நடிகர் திலகமும் நடிகையர் திலகமும்  போட்டிப்போட்டுக்கொண்டு அற்புதமாக நடித்திருப்பார்கள். 

இரண்டு படங்களிலும் கல்லூரி மாணவர்களாக அறிமுகமாகிறார்கள் நாயகனும் நாயகியும். இரண்டிலும் மோதலில் தொடங்கி காதலில் விழுகிறார்கள். 

இரண்டிலும் ஷேக்ஸ்பியரின் 'Othello' நாடகம் இடம்பெறுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் முழுக்கமுழுக்க ஆங்கிலத்தில் அரங்கேறும் இந்த நாடகத்திற்காக சப்தபதியில் உத்தம் குமாருக்கும் சுசித்ராவுக்கும் டப்பிங் பேசிய அதே உத்பல் தத்தும் ஜெனிஃபர் கெண்டலும் தான் ரத்ததிலகத்தில் சிவாஜிக்கும் சாவித்திரிக்கும் டப்பிங் பேசியிருக்கிறார்கள்!

உத்பல் தத் ( தில்லுமுல்லுவின் ஹிந்தி மூலமான கோல்மாலில் தேங்காய் ஸ்ரீனிவாசன் தமிழில் நடித்த பாத்திரத்தில் கலக்கியவர்) ஒரு மகா கலைஞன். நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தனது "Little Theatre Group" மூலம் ஷேக்ஸ்பியரின் பல ஆங்கில நாடங்களை அரங்கேற்றியவர். 

ஆங்கிலேய பெண்ணான ஜெனிஃபர் கெண்டல் தன் பெற்றோர் நடத்தி வந்த "Shakespeareana Company" என்ற நாடகக்குழுவோடு உலகமெங்கும் சென்று நடித்துக்கொண்டிருந்தார். கல்கத்தாவில் The Tempest  நாடகத்தில் நடிக்க வந்த போது ஹிந்தி நடிகர் சஷி கபூரை சந்தித்து, காதலித்து, மணந்துக்கொண்டு ஜெனிஃபர் கபூரானார். ஜெனிஃபரும் ஒர் மிகத்திறமையான நடிகை. சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப்பெற்றவர்.

இதோ ரத்தத்திலகத்தில் அந்த 'Othello' நாடகம். உத்பல் தத்தும் ஜெனிஃபரும் எவ்வளவு உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார்கள்! சொந்த குரல் இல்லாவிட்டாலும் ஒத்தெல்லோவாகவும்  டெஸ்டெமோனாவாகவும் சிவாஜியும் சாவித்திரியும் இந்த ஆங்கில நாடகத்தில் எப்படி நடித்திருக்கிறார்கள் பாருங்கள்! முகபாவங்களும் உடல் மொழியும்....அடடா...அடடா...

https://youtu.be/lSAcVpljPE0?feature=shared

இன்னொரு ஆச்சரியம்- சப்தபதியில் ஹேமந்த குமார் இசையில் பாடலாசிரியர் கவுரிபிரசாத் மஜூம்தார் எழுதிய ஒரு ஆங்கில பாடல் இடம்பெற்றிருந்தது. திரையில் சுசித்ரா சென் பாடி நடனமாடுவதாக படமாக்கப்பட்ட இந்த பாடலை சூசி மில்லர் என்ற ஆங்கிலேய பாடகியை கல்கத்தாவுக்கு வரவழைத்து பாடவைத்திருந்தார்கள். பாடல் இதோ:

https://youtu.be/mHHcQrrCEHA?feature=shared

ரத்தத்திலகத்திலும் அதே சூசி மில்லரின் குரலில் அதே பாடல் இடம்பெற்றது!

https://youtu.be/c4TeKP3UwkY?feature=shared

சப்தபதி பட டைட்டிலில் பிண்ணனி பாடியவர்கள் பட்டியலில் ஹேமந்த குமார், சந்தியா முகர்ஜி பெயர்கள் பெங்காலியில் வந்தபிறகு ஆங்கிலத்தில் 'Suzi Miller' என்று வருகிறது. ஆனால்.... ரத்தத்திலகம் டைட்டிலில் சூசி மில்லரின் பெயர் இடம்பெறவில்லை!

பாடலை அறிந்த பலர் L.R. ஈஸ்வரி என்றனர்! சிலர் உஷா உதுப் என்றனர்! Suzie Miller did not get due credit. 

பி.கு: இதே ஒத்தெல்லோ நாடகம் தமிழ் சினிமாவில் ஏற்கனவே இடம்பெற்றிருந்தது. அதுவும் தமிழில்! 1953ல் வெளிவந்த 'அன்பு' படத்தில் ஒத்தெல்லோவாக சிவாஜியும் டெஸ்டிமோனாவாக பத்மினியும் நடித்திருந்தார்கள்!

https://youtu.be/QJy4pQ66Da8?feature=shared

- Saravanan Natarajan

Saturday, September 5, 2026

THENARUVIYIL - AGAYA GANGAI

 🎵தேனருவியில் நனைந்திடும் மலரோ...🎵

பாரதிராஜாவிடம் நான்கைந்து வருடங்கள் உதவியாளராக பணிபுரிந்து விட்டு மனோபாலா முதல் முதலில் இயக்கிய படம் 'ஆகாய கங்கை' (1982). பாரதிராஜாவுடன் இருந்த போது மனோபாலாவுக்கு அறிமுகமான  கார்த்திக், சுஹாசினி, உஷா (ராஜேந்தர்), வடிவுக்கரசி, கவுண்டமணி, கமலா காமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

ஒரு வித்தியாசமான காதல் கதை... தயக்கங்களாலும் குழப்பங்களாலும், மௌனங்களாலும் மோதல்களாலும் அடிப்பட்டு, மிதிப்பட்டு, ச்சீ வேண்டாமென்று தூர எறியப்பட்ட காதல், செத்துப்பிழைத்து மீண்டும் மலர்வதுதான் கதைக்களம். ஆனால் 'Chai With Chitra' வில் மனோபாலா ஒத்துக்கொண்டது போல் மணிவண்ணனின் கதை,  திரைக்கதையில் பாக்கியராஜின் பங்களிப்பு எல்லாம் இருந்தும் கதையமைப்பில் குறைகள் இருந்ததால் படம் தோல்வி அடைந்தது. 

வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்குள் முடங்கிய இந்த 'ஆகாய கங்கை' படம் இன்றும்  நம் நினைவில் நிற்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம்- நம் இளையராஜாவின் இன்னிசை. அதுவும் இந்த பாடல்... ஆஹா... 

நான் சில நாட்களுக்கு முன் எழுதியிருந்ததுப்போல் SPB- ஜானகியின் duetகளில் அவ்விரண்டு பேர்களின் வித்தியாசமான பங்களிப்பு கொண்ட பாடல்களில் இதுவுமொன்று. இதில் பாடல்வரிகளை SPB மட்டுமே பாடுகிறார். (கடைசியில் மட்டும் ஜானகி பல்லவி வரிகளை பாடுகிறார்).

SPB ஆரம்பித்து கொடுக்கும் ஜதிகளை ஜானகி பற்றிக்கொள்கிறார்.... பற்றிக்கொள்கிறார்! ஜதிகளும் ஆலாபனைகளுமாய் பாடல் பயணிக்கும் பாதைகளெங்கும் சுர சுடர்களாய் மின்னுகிறார் இந்த வித்தகி...❤️‍🔥💥🔥

ராஜாவின் அலாதி கற்பனையில் சுத்த தன்னியாசியும் பாகேஷ்ரியும் தேன் அருவிகளாய் கலந்து பொழிகின்றன... 🌊🎵

காதலனின் தவிப்பையும், ஏக்கத்தையும், குழப்பத்தையும், கெஞ்சலையும் கொஞ்சலையும் பாடல் வரிகள் பிரதிபலிக்க வேண்டும். பண்ணோடும் புலமையோடும் பொருத்தமான வரிகள் மெட்டுக்குள் அழகாக வந்து அமர்கின்றன. கமல்ஹாசனும் பாலகுமாரனும் இளையராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த ஒரு கவிஞர் முதல் முதலில் ராஜாவுக்கு எழுதிய பாடலிது.

'நீ நிலவோ... ஏன் தொலைவோ' என்று அந்த கவிஞர் எழுதியிருந்ததை இளையராஜா 'ஏன் தொலைவோ... நீ நிலவோ?' என்று மாற்றினாராம். ( அந்த 'தொலைவோ' வில் SPBயின் சினுங்கலான அழுத்தம் நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள 384,400 கி.மி. தூரத்தை அளவெடுக்கிறது!)🌛🥰

ராஜாவுடன் தனக்கேற்பட்ட அந்த முதல் அனுபவத்தை அந்த கவிஞர் இப்படி நினைவுக்கூர்கிறார்....

'காதலியின் இதயத்தை புரிந்து கொள்ள இயலாமல் காதலன் தடுமாறும் கதை. பதிலை எதிர்பார்க்கும் படையெடுப்பே பாட்டாகிறது. இன்னிசை இமயம் இளையராஜா அவர்களுடைய அற்புதமான இசை, செவி வழி பாய்ந்து நரம்புகளில் ஊடுருவி ஒரு மந்திரக்கோல் போன்று மனதை வசியப்படுத்திக் கொண்டிருந்த அந்த இசையை அசை போட்டு பாடலை எழுதி முடித்தேன். மறுநாள் இளையராஜா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். பாடல் நன்றாக வந்திருப்பதாக பாராட்டி விட்டு 'நீங்கள் எழுதியிருந்ததில் ஒரே ஒரு சின்ன திருத்தம் மட்டும் செய்திருக்கிறேன்' என்றார். 'நீ நிலவோ' என்பது உவமையாகவும் 'ஏன் தொலைவோ' என்பது ஒரு கேள்வியாகவும் தனித்தனியே நிற்கிற மாதிரி அமைந்திருந்தது. இளையராஜா செய்திருந்த திருத்தமோ உவமைக்குள் ஒரு கேள்வியும் உள்ளடக்கி இரண்டையும் ஒன்றாக இணைத்திருந்தது. ஓர் இசையமைப்பாளரின் உள்ளே இருந்த கவிஞர் ஒருவரை கண்டு கொண்டேன்' 

அந்த கவிஞர்- இன்று பிறந்த நாள் காணும் திரு. மு. மேத்தா ❤

https://www.youtube.com/watch?v=BEwSlbvRYwc

- Saravanan Natarajan

#SPBJanakiuniqueduets 

https://www.facebook.com/saravanan.natarajan.319/posts/pfbid03241ChZWbj1RkBPeTuu47FHeY8P7L5PA8GJ1ouYLgv2wEzHyPkBiHKQfwia7NddWfl

Tuesday, September 1, 2026

Sushila Janaki

இசையரசி எந்நாளும் நீயே 🙏

https://youtu.be/-MIb_Fyxk3Q?si=sRwYmM1A5voEp0CX

P.B. ஸ்ரீனிவாஸ் சாரிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்த போது 'சுசீலாம்மா- ஜானகியம்மா ரெண்டு பேரையோடையும் எல்லா பாஷையிலும் நிறைய பாடியிருக்கீங்க....' என்று முடிப்பதற்குள் PBS சொன்னார்- 'ஒருவர் சரஸ்வதியின் கையிலிருக்கும் வீணை... மற்றொருவர் கிருஷ்ணரின் உதட்டில் இருக்கும் புல்லாங்குழல்...'

ஆஹா... என்ன அழகான, பொருத்தமான metaphors! 

இரண்டு நாட்களுக்கு முன் சுசீலாம்மாவை அவரது வீட்டில் சந்தித்தபோது அவரிடம் PBS இப்படி சொன்னதை நினைவுகூர்ந்தேன். அப்போது அவர் சொன்னார் ' அந்த வீணை நான் தான்... அந்த கிருஷ்ணர் புல்லாங்குழல் ஜானகி- தெய்வீகமாவும் ஒலிக்கும், குறும்பாக சிரிக்கும், காதலாக கொஞ்சும், சோகமாக அழும்... அது ஜானகி... அந்த மாதிரி திறமை.. variety... feelings...வேற யார் குரல்லயும் வராது....'

ஜானகியம்மா காலமான செய்தி அறிந்தவுடன் சுசீலாம்மா உடைந்துப்போய்விட்டாராம். 'போயிட்டாளே போயிட்டாளே...' என்று குமுறியிருக்கிறார். அவர் வெளியிட்ட இரங்கல் பதிவுகளில் ( ஆங்கிலம், தமிழ், தெலுங்கு) ஜானகி  என்ற பெண் மேல் அவருக்கு இருந்த பாசம், ஜானகி என்ற பாடகியின் திறமை மேல் இருந்த வியப்பு....இதெல்லாம் கண்ணீர் துளிகளாய் வெளிப்பட்டன....

'அந்த காலத்தில் மெட்ராஸில் (திரையிசையில்) இரண்டு பெரும் தூண்கள் இருந்தன... அதில் ஒன்று சரிந்துவிட்டது...' என்று ஆரம்பித்தார். ஆம், உண்மை தானே! அந்த காலத்தில் அனைத்து தென்னிந்திய மொழி படப்பாடல்களும் சென்னை ஸ்டூடியோக்களில் தானே பதிவாகின. சுசீலாம்மாவும் ஜானகியம்மாவும் நான்கு மொழிகளிலும் கோலோச்சியவர்கள். என் தெலுங்கு நண்பன் வினெய் சொல்வான்- அந்த காலத்து பாடர்களை பற்றி பேசும் போது அவன் வீட்டு பெரியவர்கள் 'சுசீலா-ஜானகி' என்று சேர்த்தே சொல்வார்களாம். 

'ஜானகிக்கு நிகரே இல்லை... குரலைக்கொண்டு எத்தனை வகையான ஜாலம்!! குரலை எப்படியெல்லாம் மாற்றி பாடுவார்- கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி, பாடல் சூழலுக்கேற்ப உணர்ச்சிகளை அற்புதமாய் பிரதிபலிக்கும் திறன்- அவரை போல பாடகி இனிமேல் நமக்கு கிடைக் மாட்டார்...   சரஸ்வதி தேவி தன்னருகிலேயே ஜானகி இருக்க வேண்டுமென்று ஜானகியை அழைத்துக்கொண்டுவிட்டார்... எனதன்புள்ள ஜானகி... நீ என்றென்றும் எங்கள் இதயங்களில் நிலைத்து நிற்பாய்...' என்று தனது அஞ்சலியை முடித்தார் சுசீலாம்மா.  

மேலும் தனது P.சுசீலா டிரஸ்ட் மூலம் விருதுகள் வழங்க தொடங்கியபோது முதல் விருதை ஜானகிக்கு கொடுத்ததை நினைவுகூர்ந்து ' என் வாழ்க்கையில் நான் செய்த நல்ல காரியம் அது!' என்றார்- எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்!

நடுவில் இன்னொன்றையும் கூறினார்- 'என்னைப்பற்றி ஜானகியிடம் போய் தவறாய் பேசியவர்கள், என்னிடம் வந்து ஜானகியை பற்றி தவறாய் பேசியவர்கள், எழுதியவர்கள்... உங்களுக்கெல்லாம் இப்போது சந்தோஷமா?' என்று வெடித்தார் சுசீலாம்மா.

உண்மைதான். 2001ல் நான் tfmpage போன்ற தளங்களுக்குள் நுழைந்தபோது மிகவும் அதிர்ச்சியளித்தது இந்த விஷயம் தான். சுசீலாம்மா- ஜானகியம்மா ரசிகர்களிடையே அப்படி ஒரு சண்டை! இதில் மிகவும் வேதனை அளித்தது- அவர்கள் அவிழ்த்துவிட்ட பொய்கள், உபயோகித்த கீழ்த்தரமான வார்த்தைகள், நியாயமற்ற ஒப்பீடுகள, ஆதாரமற்ற விமர்சனங்கள்.... நான் சமாதானமாக ஏதாவது எழுதினாலும் என் மேல் பாய்ந்தார்கள்... நான் நினைத்துக்கொண்டதுண்டு... ஜானகியை மட்டம்தட்டி தான் சுசீலாவை உயர்த்த வேண்டுமா... Suseelamma is unquestionably great on her own merit!

இந்த சச்சரவுகள் சுசீலாம்மா- ஜானகியம்மா காதுகளுக்கும் நிச்சயம் எட்டியிருக்கும். வேதனை அடைந்திருப்பார்கள். நிஜமாகவே  இருவருக்குள் ஒரு சின்ன மனக்கசப்பு கூட இருந்ததில்லை. There was an endearing mutual respect and admiration between them. 

'வெண்ணிற ஆடை' (1965) படத்தில் சுசீலாம்மாவுக்கு பல அருமையான பாடல்கள். ஒரே ஒரு பாடலை ('சித்திரமே நில்லடி' ) ஜானகி பாடியிருப்பார். ஆனால் பட டைட்டிலில் பிண்ணனி பாடியவர்கள் பட்டியலில் ஜானகி பெயர் இடம்பெற்றிருக்காது.

இருபது வருடங்களுக்கு பிறகு வந்த 'காக்கி சட்டை' படத்தில் ஜானகிக்கு மூன்று பாடல்கள். சுசீலாவுக்கு ஒன்று. பட டைட்டிலில் ஜானகியின் பெயருக்கு கீழே சுசீலாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதை நான் ஒரு முறை ஜானகியம்மாவிடம் சுட்டி காட்டியபோது அதிர்ச்சியடைந்தார். 'அப்படியா போட்டாங்க! ரொம்ப தப்பு. சுசீலா எனக்கு சீனியர். அவங்க பேரு தான் முதல்ல வந்திருக்கனும்!' என்றார். 

2006. நான் துபாயிலிருத்து விடுமுறைக்கு சென்னைக்கு வந்திருந்தபோது இங்கே 'சாதக பறவைகள்' குழுவினர் சுசீலாம்மா- ஜானகியம்மாவை வைத்து 'Melody Queens' என்ற மேடை நிகழ்ச்சியை நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்போவதாக நகரம் எங்கும் சுவரொட்டிகளை கண்டேன். நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும், டிக்கெட் கிடைக்குமா என்று யோசித்துக்கொண்டிருந்த போதே முரளி அண்ணாவிடமிருந்து அழைப்பு. எனக்காக டிக்கெட் எடுத்துவைத்திருந்தார்!

ஆஹா... அந்த நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. பார்வையாளர்கள் வரிசையில் PBS, SPB, மலேசியா வாசுதேவன் அமர்ந்திருந்தனர். சுசீலாம்மாவும் ஜானகியம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் புகழ்ந்து பேசியது, ஜானகியம்மா சுசீலாம்மாவின் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டது, சுசீலாம்மா ஜானகியம்மாவை வாரி அணைத்துக்கொண்டது... கண்கொள்ளா காட்சிகளாக நினைவில் நிற்கின்றன.

'செந்தூரப்பூவே' ஜானகியம்மாவுக்கு தேசிய விருது வாங்கித்தந்த பாடல். அதன் தெலுங்கு வடிவமான 'சிரிமல்லெப்பூவா' பாட்டையும் ஜானகியே பாடியிருந்தார். அன்று அந்த மேடையில் ஜானகியம்மா தெலுங்கு வடிவத்தையும் சுசீலாம்மா தமிழ் வடிவத்தையும் பாடினார்கள். கடைசியில் அந்த இரு குரல்களும் 'செந்தூரப்பூவே' என்று ஒன்றாக ஒலித்த போது பரவசத்தில் பலர் எழுந்து நின்று கைத்தட்டினோம். 

https://youtu.be/FPgHx5WItgE?si=bbYaRPigt2HJ8g4L

'தேடினேன் வந்தது' பாடலை சுசீலாம்மா பாடி முடித்ததும், ஜானகியம்மா ஓடி வந்து செய்த குறும்பான செயல்:

https://youtu.be/aLwhM34uMkM?si=q1ehsct-LVHgHgYb

'அனுபவம் புதுமை'- உண்மையாகவே புதுமையான அனுபவமாய் அமைந்தது- ஜானகியம்மா பாடுவதை PBS சிரிப்புடன் ரசிக்கிறார்:

https://youtu.be/szKXhBbIC9o?si=rfD3PDshWGWjjdWr

சுசீலாம்மா என்னிடம் ஜானகியம்மாவை பற்றி மேலும் சொன்னது- 'ஜானகி மெட்ராஸுக்கு வந்து சினிமால பாடறதுக்கு முன்னாடியே அவங்கள பத்தி கேள்விபட்டிருக்கேன்... அப்போ நான் சினிமால பாட ஆரம்பிச்சாச்சு. ஜானகி ஆந்திரால அப்பப்போ ஸ்டேஜ்ல பாடிக்கிட்டிருந்தாங்க. அப்படி ஒரு programmeல நான் 'தெனாலி ராமக்கிருஷ்ணா' படத்தில பாடின ஜெயதேவரின் அஷ்டபதி 'சந்தன சர்ச்சித்த' பாடலை ஜானகி பாடியிருக்காங்க. அந்த கச்சேரிக்கு என் அப்பா போயிருக்கிறார். அவர் ஜானகி பாடினத ரொம்ப ரசிச்சு அங்கேயே அவங்கள பாராட்டி பேசியிருக்கார். அப்புறம் இங்க வந்து எங்கிட்டே "ஜானகின்னு ஒரு பொண்ணு.... ரொம்ப நல்லா பாடறா"'ன்னு சொன்னார். 

கொஞ்ச நாள்ல ஜானகியும் மெட்ராஸுக்கு வந்து என்ன மாதிரியே AVMல ஸ்டாஃப் ஆர்ட்டிஸ்டா சேர்ந்தாங்க. அப்போலேந்து நல்லா பழகினோம். 

சிங்காரவேலனே தேவா! அந்த பாட்ட வேற யாராலயும் பாடியிருக்க முடியாது. அவ்வளவு கஷ்டமான ஸ்ருதி... அவங்க எவ்வளவு ஈஸியா பாடிட்டாங்க. அப்பப்பா! 

என் அப்பாக்கூட எங்கிட்ட 'சிங்காரவேலனே தேவா" ரெக்கார்ட் வாங்கி தாம்மா'ன்னு கேட்டார்..."

என்று அந்த காலத்து நினைவுகளில் மூழ்கிய சுசீலாம்மா தொடர்ந்தார்... 'நிறைய பாட்டு ஜானகி தமிழ்ல பாடினா, நான் அத தெலுங்கில பாடினேன்....  அந்த பாட்டெல்லாம் நான் எப்படி பாடினேன்னு தெரியல... ஆனா ஜானகி என்னை பார்க்கும்போது 'ரொம்ப நல்லா பாடியிருக்கீங்க!' ன்னு  பாராட்டுவாங்க.... அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு...' என்றார். 

அப்படிப்பட்ட பாடல்கள் சிலவற்றை யோசித்து பார்த்தேன்...

'இந்த மன்றத்தில் ஓடி வரும்' பாடலை தமிழில் ஜானகி பாடினார். தெலுங்கில் சுசீலா பாடினார்.

https://youtu.be/eUQA0xLA7G8?si=GVHIsy9v6SrI6bii

https://youtu.be/1cwHrULI3_4?si=_Nv4m50dqAsmxVog

'இப்படியோர் தாலாட்டு பாடவா' பாடலை தமிழில் ஜானகி பாடினார். தெலுங்கில் சுசீலா. 

https://youtu.be/MlNHnm4L1js?si=02nUzYhzx_pCI_Fz

https://youtu.be/AWPIDPi6ZWc?si=gaEmcxTswjCjwHrz

'ப்ரியா' படம் ஒரே நேரத்தில் தமிழிலும் கன்னடத்திலும் தயாரானது. 'டார்லிங் டார்லிங் டார்லிங்' பாடலை தமிழில் சுசீலாவும் கன்னடத்தில் ஜானகியும் பாடினார்கள். 

https://youtu.be/OdDSdRJXUog?si=kY4xNupIunsehOW1

https://youtu.be/KXkRMzxOzBM?si=CJrT247bv9CkpqAD

60-70 களில் female duets என்றால் பெரும்பாலும் P. சுசீலா- L.R. ஈஸ்வரியை தான் பாட வைப்பார்கள். ஆனாலும் சுசீலா- ஜானகிக்கும் சில நல்ல டூயட் பாடல்கள் அமைந்தன. தெலுங்கில் இன்னும் நிறைய பாடல்கள் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். சுசீலா- ஜானகி இணைந்து பாடிய பாடல்களை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்தினேன். மற்றவர்கள் அவர்களுடன் சேர்ந்து பாடிய பாடல்களை தவிர்த்து, இவ்விருவர் மட்டுமே பாடிய பாடல்களில் எனக்கு ஞாபகம் வந்தவை:

1. C.N. பாண்டுரங்கன் இசையில் 'அரசகுமாரா புவனேந்திரனே' ( பூலோக ரம்பை- 1958)

பாடல் லிங்க் கிடைக்கவில்லை.

2. T.R. ராஜகோபாலன் இசையில் 'பணம் காசு படைச்சாலே' (கண் திறந்தது- 1959)

https://youtu.be/qQRLnYcG9-4?si=d8lo3bOd02QZJb_U

(Watch from 20.00 onwards)

3. G. ராமநாதன் இசையில் 'அன்னமே சொர்ணமே' ( தெய்வத்தின் தெய்வம்- 1962)

https://youtu.be/JhkYaDmS3U4?si=MfnAMLR1k9RKKH6p

4. MSV-TKR இசையில் 'என் கதைதான் உன் கதையும்' (பந்தபாசம்- 1962)

https://youtu.be/B435_uYwdYE?si=U89jRHfX1TgrC5OX

5. ஆநிநாராயண ராவ் இசையில் 'மங்கள மேடை' (மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்- 1962) 

https://youtu.be/Ryk80gBdb4w?si=RWgVZiFaFYtajh-o

6. MSV-TKR இசையில் 'குங்குமப்பொட்டு குலுங்குதடி' ( இது சத்தியம் -1963)

https://youtu.be/iYOQGte70Ok?si=qvaS1mV7BtdLSpjA

7. லக்ஷ்மிகாந்த்- பியாரேலால் இசையில் 'யார் அறிவாரோ ராணி நிலையை' ( மாயமணி -1964)1963ல் வெளிவந்த L-Pயின் முதல் படமான 'பாரஸ்மணி' யின் தமிழ் டப்பிங். ஹிந்தியில் லதாவும் கமல் பாரோட்டும் பாடியிருந்தார்கள்.

https://youtu.be/6kkYYUNCWxM?si=ukze2Eucv5MsLwUy

8. K.V. மகாதேவன் இசையில் 'அழகன் அழகன்' (தொழிலாளி-1964)

https://youtu.be/8ZpqHrkqEcE?si=ET8PudZsQwcH4sE_

9. T.R. பாப்பாவின் இசையில் 'கண்கள் இரண்டில் யாரடி வந்தார்' (காதல் படுத்தும் பாடு- 1966)

https://youtu.be/7OqYE6Ne_4s?si=uNt-wkwyIY2LhLdw

10. S. ராஜேஸ்வரராவ் இசையில் 'இருளிலும் ஒளி தரும்' (பக்த பிரகலாதா- 1967)

https://youtu.be/EfOYLsl2Nb4?si=Ela_73Kw1xi2pzoZ

11. கோதண்டபாணி இசையில் 'பூரமரத்து நிழலுமுண்டு' ( குழந்தை உள்ளம் -1969)

https://youtu.be/R96szoB9AX0?si=-kNfiyOPS2UiZzB3

12. K.V. மகாதேவன் இசையில் 'காலத்தை வென்றவன் நீ' ( அடிமைப்பெண்-1969)

https://youtu.be/Wvgdr8DwaF0?si=oJF10WCeXHBNmfS4

13. K.V. மகாதேவன் இசையில் 'மாத்தூரு ராமக்கா' (குலமா குணமா- 1971)

https://youtu.be/PZYFGNjogcU?si=H_ZPJdab3

14. MSV இசையில் 'பல்லவி என்று மன்னனும் கேட்க'  (சொல்லத்தான் நினைக்கிறேன்- 1973)

https://youtu.be/PZYFGNjogcU?si=H_ZPJdab3NhWVGp4

15. ஷியாம் இசையில் 'வேதனை காட்டில் அலைந்திடும் மான் நான்' (உணர்ச்சிகள்- 1976)

https://youtu.be/o80uU1PuKDY?si=KRvsnEY7yUjZ24r1

(Watch from 1.19.19 onwards)

என் பள்ளிக்கூட நண்பன் எழில்வேந்தனின் தந்தை கவிஞர் வேழவேந்தன் எழுதிய பாடல். அவன் வீட்டு மாடியில் ரெக்கார்ட் ப்ளேயரில் இந்த பாடலை முதல்முறை கேட்டேன். 

16. MSV இசையில் 'நிறைந்து வாழ்க' (பெருமைக்குரியவள்-1977)

https://youtu.be/atI1K-GkDdY?si=_4wPWXBjLz8ERoil

17. இளையராஜா இசையில் 'தேவதைகள் வாழ்த்துவது' (திருக்கல்யாணம்- 1978)

https://youtu.be/wuocGtSAL84?si=NNLi9ZEgSV9HyMYR

18. இளையராஜா இசையில் 'ஆத்தாடி ஆத்தா' (மாரியம்மன் திருவிழா)

https://youtu.be/92zGcoungIo?si=S03HHLJwZ5qUufTw

https://youtu.be/jY1QsKeqbGs?si=4xSQWbKgIwAXkTqR

19. சங்கர்- கணேஷ் இசையில் 'இளம் வயது வந்தால்' (கைப்பிடித்தவள் - 1978)

https://youtu.be/WnnfgtBQ5eo?si=oy3sdm7UisR-9bMH

20. இளையராஜா இசையில் 'ஜில் மாலிஷ் பூட் பாலிஷ்' (பட்டாக்கத்தி பைரவன் - 1979)

https://youtu.be/o0gCq2JVbqM?si=Vvt7p7cGDfvjVcTu

21. இளையராஜா இசையில் 'நெஞ்சுக்குள்ளே சிங்கக்குட்டி' ( பட்டாக்கத்தி பைரவன் - 1979)

https://youtu.be/sjZZwSkg9Rg?si=o329PL_RzpmW3Z6H

22. ஷியாம் இசையில் 'வெண்ணிலா வானில் நீந்தும் பொன்மாலை' ( நான் நன்றி சொல்வேன்- 1979)

https://youtu.be/sdBtAf4Kgjg?si=-ISB7-jwyYh5zohC

23. இளையராஜா இசையில் 'நீர் கொடுக்க பிறந்ததம்மா ஓடை' (பாலநாகம்மா- 1981)

https://youtu.be/0aJwAwP3Sec?si=MVaXDYoufMMT4RzV

24. கங்கை அமரன் இசையில் 'காலம்காலமாய் பெண்தானே' (கற்பூர தீபம்- 1985)

https://youtu.be/FgD3g74SNn0?si=B6Snu79VcG2K-1Of

25. உஷா கண்ணா இசையில் 'கண்களே காதல் செய்தாலே பாவம்' (தர்மம்- 1985) உஷா கண்ணா இசையமைத்த 'zindagi pyar ka geet hai' ஹிந்தி பாடலின் மெட்டு. 

https://youtu.be/zxCXfNjqZ10?si=DSiqrygJN_GlXbP_

ஜானகியம்மா சுசீலாம்மாவை மனதார பாராட்டி அடிக்கடி கேட்டிருக்கிறேன். அதுவும் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் சுசீலாம்மா பாடிய பல பாடல்களை சிலாகித்து பேசுவார். 'நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்', 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து', 'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்,' 'என்னை எடுத்து தன்னை கொடுத்து' பாடல்களை, சுசீலாம்மா பாடிய நுணுக்கங்களை ரசித்து ரசித்து விவரிப்பார். நான் நினைத்துக்கொள்வேன்- அதே காலகட்டத்தில் தமிழில் ஜானிகம்மாவுக்கு comparatively குறைந்த அளவிலான பாடல்களே கிடைத்தன... ஆனாலும் அவர் என்றும் பொறாமைக்கோ காழ்ப்புணர்ச்சிக்கோ சற்றும் இடம் அளித்ததில்லை.  மாறாக சுசீலாம்மாவை ஒரு ரசிகையாக வியந்திருக்கிறார். 

நான் சில முறை ஜானகியம்மாவிடம் என் ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறேன்- 'விஸ்வநாதன்- ராமமூர்த்தி, அதுக்கப்புறம் MSV ம்யூசிக்ல உங்களுக்கு இன்னும் நிறைய பாட்டு கொடுத்திருக்கலாம்...' அதற்கு ஜானகியம்மா சொன்னார் 'ஆமா... சுசிலாக்கு தான் நிறைய கொடுத்தாங்க... ஆனா நீயே சொல்லு... அந்த பாட்டுக்கெல்லாம் சுசீலாவை தவிர வேற யாராவது சிங்கரை யோசிச்சிருக்க கூட முடியுமா?' 

- Saravanan Natarajan 

https://www.facebook.com/saravanan.natarajan.319/posts/pfbid0RPt76JZUPUYJyFpmnHnSPHSwKAdzCqAA67cFS5SgGocDixr3o33EemLG7eQLRMhel

Wednesday, August 26, 2026

Onam wishes

 🎵மலையாளக்கரையோரம் தமிழ் பாடிய குருவிகள்🎵


முகநூலெங்கும் ஓணம் வாழ்த்துக்கள் நிறைந்திருக்கின்றன. எப்பொழுதும் போல் மனது திரையிசையின் பக்கம் துள்ளிச்சென்றது.


தமிழ் படங்களில் மலையாள வரிகள்  இடம்பெற்றிருந்த பாடல்கள் அல்லது கேரள தொடர்புடைய பாடல்கப் ஒவ்வொன்றாக நினைவில் வந்தன.  அவற்றை பட்டியலிட்டால் என்ன என்று தோன்றவே... இதோ... எதோ ஒன்று மறந்து போவதற்குள்... (இந்த பாடல்கள் ஒன்றைக்கூட யேசுதாஸ் பாடவில்லை!)


1. லட்டு லட்டு- அபூர்வ சகோதரர்கள் (1949)


பல மொழிகள் பேசும் படையினரை விதவிதமாக  சமையல் செய்து அவரவர் மொழிகளில் பாடி அவர்கள் கவனத்தை திசைத்திருப்புகிறார் பானுமதி. இதில் மலையாள வரிகளும் வருகின்றன.. 'காலன் ஓலன் எரிசேரி...' என்று கேரள உணவு வகைகளை நாவூரும் வகையில் பாட்டிலேயே பட்டியலிடுகிறார்...


https://youtu.be/6IsdQUhG9hk?feature=shared


2. திராவிடமாம்- நாடோடி மன்னன் (1958)


 நான்கு தென்னக மொழிகளில் பாடல் வரிகள் கொண்ட இந்த பாடலில் மலையாள வரிகளை எழுதியவர் P. பாஸ்கரன், பாடியவர் சாந்தா P. நாயர். 


https://youtu.be/eOE9lcJhRn0?feature=shared


3. அழகான மலையாளம்- வாழ்க்கை வாழ்வதற்கே (1964)... 


பச்சை குத்தும் ஒரு கேரளத்து பெண் தமிழில் பாடும் பாடல்... விஸ்வதாதன்- ராமமூர்த்தி இசையில் L.R. ஈஸ்வரி அழகாக பாடுகிறார்.....


https://youtu.be/27GTkUSMzys?feature=shared


4. சேதி கேட்டோ சேதி கேட்டோ- எதிர் நீச்சல் (1968)


V. குமாரின் இசையில் வாலியின் வரிகளை  S.C.கிருஷ்ணன், P. சுசீலா, ஜமுனாராணி மற்றும்  K. சுவர்ணா பாடுகிறார்கள்


https://youtu.be/uImeB1GLhEg?feature=shared


5. அழகே தமிழே நீ வாழ்க- திருமலை தென்குமரி (1970)


குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த இந்த படத்தில் வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாய் கொண்ட பிரயாணிகள் பேருந்தில் போகும்போது பொழுதை கழிக்க அவரவர் மொழிகளில் சில வரிகளை பாடுகிறார்கள். 'கண்ணுகள் பூட்டி' எனத்தொடங்கும் மலையாள வரிகளை மாதுரி பாடுகிறார்.


https://youtu.be/eVqpe4E86u8?feature=shared


6. விருந்தோ நல்ல விருந்து- நீரும் நெருப்பும் (1971)


இது அதே அபூர்வ சகோதரர்கள்- Corsican Brothers- கதை. பானுமதி நடித்த பாத்திரத்தில் ஜெயலலிதா. படையினரை பல மொழிகளில் பாடி ஏமாற்றும் அதே பாடல்காட்சி- மலையாள வரிகளை பாடகர்/ நடிகர் சதனுடன் இணைந்து L.R. ஈஸ்வரி 'குட்டநாடன் புளிசேரி' என்று தொடங்கும்போதே சுவையூட்டும்...


https://youtu.be/nOrWLBnf_00?feature=shared


7. இந்திய நாடு என் வீடு- பாரத விலாஸ் (1973)


(தமிழ் கலந்து) பல மொழிகள் ஒலிக்கும் இந்த பாடலில் 'படைச்சோன் படைச்சோன்' என்றும் மலையாள பாகத்தை மெல்லிசை மன்னரும் ஈஸ்வரியும் பாடுகிறார்கள். திரையில் V.K. ராமசாமியும் ராஜசுலோச்சனாவும்.


https://youtu.be/DnGCsPQjcls?feature=shared


8. மந்தார மலரே மந்தார மலரே- நான் அவனில்லை (1974)- செண்டைகள் முழங்க கதகளி நடனம் போல் நளினமான அசைவுகள் கொண்ட அமர்க்களமான பாடல்- கண்ணதாசனுடன் P. பாஸ்கரனும் இணைந்து இயற்றிய பாடலை பாடியது ஜெயச்சந்திரனும் L.R. ஈஸ்வரியும். 


https://youtu.be/WSx2dyIT46A?feature=shared


9.கரலின்டே கரையே- பாப்பாத்தி (1979) ஜெய்கணேஷ்- ரதிதேவி நடிப்பில் வந்து பல(!) காரணங்களால் பிரபலமடைந்த படம். இசை- ஜெயவிஜயா இரட்டையர்கள். (இவர்களில் ஜெயனின் மகன் தான் நடிகர் மனோஜ் K. ஜெயன்). அம்பிலியும் ஷெரீன் பீட்டர்ஸும் பாடும் மென்மையான பாடல்:


https://youtu.be/_JgXV7fP7lA?feature=shared


10. ஞான் ஞான் பாடனும்- பூந்தளிர் (1979) மலையாள பெண்ணாக வரும் சுஜாதாவுக்கு ஜென்ஸி பாடிய பாடல். இளையராஜாவின் அற்புதமான இசைவார்ப்பு:


https://youtu.be/uqWwm_0SNyk?feature=shared


11. ஸ்வரராக ஸ்ருதியோடு- அந்த 7 நாட்கள் ( 1981)


மெல்லிசை மன்னரின் இசையில் ஜெயச்சந்திரன்- வாணி ஜெயராம் குரல்களில்


https://youtu.be/2Et4ZHQbMnA?feature=shared


 12. சப்தசுரதேவி உணரு- அந்த 7 நாட்கள் (1981)


மெல்லிசை மன்னரின் இசையில் ஜெயச்சந்திரன்- ஜானகி குரல்களில்


https://youtu.be/sb65lkOAHA8?feature=shared


13. மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது- மூக்கணாங்கயிறு (1985) கார்த்திக், விஜி, வனிதா நடித்ததாக ஞாபகம். தமிழ் வரிகளை வாலியும் மலையாள வரிகளை மாங்கொம்பு கோபாலகிருஷ்ணனும் எழுத, மெல்லிசை மன்னரின் இன்னிசையில் மலையாளியான ஜெயச்சந்திரன் தமிழ்வரிகளை பாட, தமிழரான வாணி ஜெயராம் மலையாள வரிகளை பாடுகிறார்:


https://youtu.be/HqZ8TP8AHS8?feature=shared


14. மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி- ராஜாதி ராஜா (1989)

மலையாள வரிகள் இல்லையென்றாலும் இந்த பாடலை சேர்க்காமல் இருக்க முடியமா💁‍♂️


https://youtu.be/xoFIgsMm-Ts?feature=shared


15. சுந்தரி நீயும்- மைக்கில் மதன காமராஜன் (1990) 

இளையராஜாவின் இசையில் கமல்- ஜானகி....ஆஹா 💖💖


https://youtu.be/mXlPF2L4pDY?feature=shared


16. குலாவில்லே முத்து வந்தல்லோ- முத்து (1995) 

A.R. ரகுமானின்  G.V. பிரகாஷ் குரலில் ஆரம்பிக்கும் பாடல் உதித் நாராயண், சித்ரா பாட, இடையில்  கல்யாணி மேனனின் வருகையுடன் கேரள கலை கட்டுகிறது


https://youtu.be/GtE1JK8yjVc?feature=shared


17. நெஞ்சினிலே நெஞ்சினிலே- உயிரே (1998)

A.R. ரகுமான் இசையில் வைரமுத்து, கிரீஷ் புத்தஞ்சேரி வரிகளை ஜானகியுடன் M.G. ஸ்ரீகுமார் குழுவினர் பாடுகிறார்கள். 


https://youtu.be/FnQYEdC-Tw0?feature=shared


18. திருவோணம் திருநாளாம்- கவலை படாதே சகோதரா (1998)

இளையராஜா இசையமைத்து சுஜாதாவுடன் பாடும் பாடல்:


https://youtu.be/vHo6URYGqIM?feature=shared


19. மலையாளக்கரையோரம்- அன்பே அன்பே (2003)

பரத்வாஜின் இசையில் கார்த்திக் குழுவினர்.


https://youtu.be/A5LWT0WLZ8A?feature=shared


20. மனசுக்குள்ளே தாகம்- ஆட்டோகிராஃப் (2004)

பரத்வாஜின் இசையில் ஹரீஷ் ராகவேந்திரா, ரேஷ்மி.


https://youtu.be/RtLVOXrEnws?feature=shared


21. தேன் குடிச்ச நிலவு- நான் அவனில்லை (2007)

நரேஷ் ஐயர், தீபா பாடியது


https://youtu.be/SWUa-7ZoqZY?feature=shared


22. ஓமணப்பெண்ணே- விண்ணைத்தாண்டி வருவாயா (2010)

A.R. ரகுமான் இசையில் பென்னி தயாள், கல்யாணி மேனன்.


https://youtu.be/vj2_z1GYXcU?feature=shared


23. ஆரோமலே- விண்ணைத்தாண்டி வருவாயா (2010)

A.R. ரகுமான் இசையில் அல்லயன்ஸ் ஜோசெஃப்/ ஷ்ரேயா கோஷால்.


https://youtu.be/q7OUFE3dw6E?feature=shared


24. சில்லென்ன ஒரு மழைத்துளி- ராஜா ராணி (2013)

G.V. பிரகாஷ் குமார் இசையில் க்ளின்டன் கெரேஜோ, அல்ஃபோன்ஸ் ஜோசஃப், அல்கா அஜித்


https://youtu.be/kQBuN9e_qbU?feature=shared


25. கேரளா போலொரு- கேரள நாட்டிளம் பெண்களுடனே (2014)

S.S.குமரன் இசையில் ஜெஸ்ஸி கிஃப்ட், கல்யாணி மேனன், குமரன்


https://youtu.be/0ruWwql5U1k?feature=shared


26.கேரளச் சேச்சியல்லோ- துணை முதல்வர் (2015)

ஜெய் இசையில் அனுராதா ஸ்ரீராம்


https://youtu.be/sWgDb1wCKGU?feature=shared


27. ஜிமிக்கி கம்மல்- காற்றின் மொழி (2018)

வேலபடின்டே புஸ்தகம் என்ற மலையாள படத்தில் ஷான் ரகுமான் இசையில் வினீத் ஸ்ரீனிவாசன், ரெஞ்சித் உன்னி பாடிய பிரபல பாடல் அப்படியே காற்றின் மொழி படத்திலும் இடம்பெற்றிருந்தது.


https://youtu.be/a8d-Pk7tlco?feature=shared


28. எங்க ஸ்டேட்டு கேரளமானோ- நட்பே துணை (2019)

ஹிப்ஹாப் தமிழா இயற்றி, இசையமைத்து, பாடிய பாடல்


https://youtu.be/CtyIEJIP_zE?feature=shared


29. தும்பி துள்ளல்- கோப்ரா (2022)

A.R.ரகுமான் இசையில் ஷ்ரேயா கோஷால், நிதின் அபயங்கார்


https://youtu.be/dtK-4Oh7qlk?feature=shared


இன்னும் பல பாடல்கள் இருக்கலாம். நினைவில் வரும்போது சேர்த்துக்கோள்கிறேன். 


ஓணம் ஆஷம்ஸகள்💖💖


#songpostsfromme 


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/1Am7EGe5rZ/

Saturday, August 22, 2026

சவுகார் ஜானகி

 சவுகார் ஜானகி!


90களில் அழகான மாலை ஒன்று நினைவில் வருகிறது. அப்போது நண்பர்கள் பிறந்தநாள் என்றால் Birthday Card வாங்கி எல்லோரும் அதில் ஓரிரு வரிகள் எழுதி கையெழுத்திடுவோம். எல்லோரும் சேர்ந்து ஒரு சின்ன பரிசு பொருள் வாங்கி கொடுப்போம். அந்த நண்பன் மற்ற நண்பர்களுக்கு ஏதாவது restaurantடில் Birthday treat கொடுப்பது வழக்கம். இனிமையான, கலகலப்பான தருணங்கள்!


ஒரு வருடம் (அநேகமாக 1995 என்று நினைக்கிறேன்) நண்பன் அச்சுதனின் பிறந்தநாள். அவன் அப்போது ஆசைப்பட்டுக்கொண்டிருந்த 'Full face helmet' ஒன்று அவனுக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தோம். ( அதற்கு ஒரு வாரம் முன்பு தான் தன் ஹெல்மெட்டை எங்கேயோ தொலைத்து விட்டு வீட்டில் அவன் அப்பா அவனிடம்  மிக கோபமாக இருந்த நேரம்.. அவன் பாஷையில் 'டின் கட்டிடாங்க, மச்சான்!' )


புது ஹெல்மெட் கிடைத்த சந்தோஷத்தில் பிறந்தாளை நாங்கள் வழக்கமாக கொண்டாட செல்லும் Palimar, Woodlands, Shanthi Vihar, Carnival... இதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு Harrington Roadடில் இருந்த 'Coconut Grove' ரெஸ்டாரெண்ட்டு கூட்டிச்சென்றான். 


Motorbike பார்க் செய்யும்போதே அந்த ambience எங்களை கவர்ந்தது. Tasteful interiors, attractive table arrangements... அழகுணர்ச்சி மிக்க ஒருவரால் வடிவமைக்கப்பட்டது என்பதை உணர்ந்துக்கொண்டேன். மரங்களும் செடிகள் சூழ்ந்த outdoor seating. ஒரு ஓரமான டேபிளாய் பார்த்து அமர்ந்துக்கொண்டோம். 


அது ஒரு வாரநாள்  என்பதால் என்னவோ கூட்டம் அதிகமில்லை. சிப்பந்தி ஒருவர் menu cards கொண்டு வந்து கொடுத்தார். எங்களில் பெரும்பாலானோர் vegetarian  என்பதால் சற்று ஏமாற்மாக இருந்தது. மெனுவில் முக்கால்வாசி அசைவ வகைகள், அதிலும் பிரதானமாக seafood varieties! Steward ஒருத்தர் order எடுத்துக்கொள்ள எங்கள் அருகில் வந்தார். நாங்கள் எங்கள் பிரச்சனை சொல்லி வேறு ரெஸ்டாரெண்ட்டுக்கு போகலாமென்ற முடிவோடு எழுந்தோம்.


அப்போது 'What can we serve you, Gentlemen?' என்றொரு மிக பரிச்சயமான குரல். தலை மேல் ஒரு chef அணிந்துக்கொள்ளும் உயரமான தொப்பி. தோளிலிருந்து முட்டி வரை ஏப்ரன்... என்று சிரித்த முகதுத்துடன் ஒரு பெண்மணி.... 


அவர்! சிங்கப்பூர் நைட்கிளப்பில் மிக நவீனமான உடையில் தோன்றி ஸ்டைலாக  பாடிய சித்ரா, தன் கணவன் இறந்துவிட்டான் என்று நம்பி சிறு வயது முதல் விதவையாக வாழ்ந்து எதிர்பாராமல் அவனை உயிரோடு கண்டும் தன் உரிமையை நிலைநாட்ட முடியாமல் தவித்த கமலா, மூக்குத்தியும் மடிசாரமுமாய் கிட்டுவுடன் சதா சண்டை போட்டுக்கொண்டிருந்த பட்டு, 'file'- 'life' என்று வார்த்தைகளில் விளையாடி 'அச்சா' என்று முடித்த கம்பீரமான கலெக்டர் ஜானகி, நடிகை பாமா வரவுக்காக இரவல் வைர நெக்லஸை மாட்டிக்கொண்டு தன் வயது தெரியவேண்டாமென்று குழ்தைகளை ரூமில் பூட்டி வைத்த பார்வதி, தன் மகள் கிருஷ்ணாவின் நல்வாழ்வை எண்ணி தன் வாழ்க்கையை தியாகம் செய்த தேவி, 'There is a time to be in and a time to be out!' என்று நளினமாக வலம் வந்த விமலா, water pipe மீது லாவகமாக ஏறி மாடியில் குதித்த மீனாக்ஷி துரைஸ்வாமி... 


'Ma'am... aren't you...?' என்று தடுமாறிய என்னை பார்த்து கலகலவென சிரித்தார். 'Yes, this is my restaurant... what will you all have?' என்று அன்பாக வினவினார். எங்கள் vegetarian preference அறிந்து... 'Leave it to me.. I'll take care of it personally...' என்று சொல்லிவிட்டு சுறுசுறுப்பாக உள்ளே விரைந்தார்.


சற்று நேரத்துக்கெல்லாம் ஆவி பறக்கும் soup வந்தது. It was rich and creamy. சவுகார் வந்தார். 'How do like it Gentlemen? This is Muligatawny soup... I got the recipe from Veeraswamy's in London...மிளகு தண்ணிய தான் Muligatawnyனு பேர் வெச்சாங்க British. It is now one of the signature dishes of Veeraswamy's! Of course, I have added my own ingredients!' என்றார்.


பிறகு வந்ததெல்லாம் Menu cardல் இல்லாத vegetarian items! ஒவ்வொன்றையும் நேரில் வந்து எங்களுக்கு விளக்கிவிட்டு ஆசையாய் அவரே பரிமாறினார். அந்த பிஸரெட்டும், தக்காளி பப்புவும், பிசிபேலாவும், குட்டி வங்கய கூராவும் இத்தனை வருடங்களுக்கு பிறகு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்த டின்னரை பற்றி நண்பர்களிடையே இப்போதும் பேசிக்கொள்வோம். அவ்வளவு ருசி! 


எதற்காக கூடியிருக்கிறோம் (Some special occasion?) என்று கேட்டறிந்து surprise ஆக எங்கள் டேபிளுக்கு ஒரு cake கொண்டு வரச்செய்து ( It's on the house, gentlemen!), அவரும் எங்களுடன் சேர்ந்து 'Happy Birthday' பாடினார்! நாங்கள் புறப்படும்போது 'You are a fine set of young men... Good Luck!' என்று பரிவாக வழியனுப்பினார்.


உயர்ந்த மனிதர் 🙏



- சரவணன் நடராஜன் 

https://www.facebook.com/share/p/1EnvhswkHi/

Thursday, August 20, 2026

Kanava idhu unmaiya

 கனவா....  இது உண்மையா....


ஜானகி அம்மாவை சென்ற வாரம் அவர்கள் இல்லத்தில் சந்தித்ததை பற்றி எழுத சில முறை ஆரம்பித்து , முடியாமல் அந்த முயற்சியையே விட்டுவிட்டேன். எதில் ஆரம்பிப்பது, எப்படி தொடர்வது, எதில் முடிப்பது என்பதற்கெல்லாம் மேலே அந்த பிரம்மிப்பை, அந்த கரை புரண்டோடிய உணர்சிகளை, இந்த அன்பை பெறுவதற்கு நான் தகுதியானவன் தானா...  அந்த தகுதிக்கு உடையவனாக என்னை நானே மேம்படுத்திக்கொள்ள வேண்டுமே என்ற ஆதங்கத்தை, அந்த நெகிழ்சி நிறைந்த தருணங்களை விவரிக்க வார்த்தைகள் வராமல் தடுமாறியது தான் நிஜம்.


இன்னும் கனவு போல் இருக்கிறது... அவருடன் இருந்த அந்த இரண்டு- இரண்டரை மணி நேரம். பாடல்களை பற்றி(யும்) பேசினோம்....


SPB- ஜானகி duet பாடல்களில் வித்தியாசமான Vocal Arrangements, அதாவது நான் நினைவுக்கூர்ந்த ஒவ்வொரு பாடலிலும் SPBயும் ஜானகியும் அந்தந்த பாடல் சூழ்நிலைக்கேற்ப எப்படி செயல்பட்டார்கள் என்பதை கொஞ்ச நேரம் அலசினோம்.


இது எப்படி ஆரம்பித்தது என்றால் என் மனதில் அந்த நொடியில் தோன்றிய, அப்பொழுது என் மனநிலைக்கேற்ற 'கனவா, இது உண்மையா.... மனமே, பதில் இல்லையா' என்ற பாடல்- படம்:  'சலங்கையில் ஒரு சங்கீதம்' தெலுங்கில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது. (Kalise Prathi Sandhyalo from Alapana).


SPB பாடியதும், ஜானகி அம்மா முதல் பல்லவியில் இரண்டு வரிகள் பாடுவார், முதல் சரணத்தின் முடிவில்  பல்லவி ஒரு வரி பாடுவார், பின் இரண்டாம் சரணத்தின் landing notesஸை பிடித்துக்கொண்டே பாடலின் முடிவில் முழு பல்லவியையும் பாடுவார். இடையில் ஜானகிக்கு சரணங்களில் humming மட்டும் தான்.... ஆனால் அதிலும் எத்தனை அழகுகள் சேர்த்திருப்பார் இந்த மாயக்காரி...


SPBயின் ஒவ்வொரு வரிக்கும் ஜானகியின் பதில்கள் சிலிர்க்க வைக்கும்....  ஒரு முறை கேட்கும்போது SPB பாடிய வரியை 'ஆமாம் சரி தான், எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!'  என்று ஜானகி ஆமோதிப்பபோல் இருக்கும், மீண்டும் கேட்கும்போது SPB வரிகளுக்கு ஜானகி  'ஆ.. அப்படியா!' என்று ஆச்சரியப்படுவது போல் தோன்றும்- இன்னும் சொல்லப்போனால் 'முத்தம் ஒன்று சிந்திவிட்டேன் அன்னமே' என்று SPB கதகதப்பாக அறிவிப்பதை தொடரும் hummingல் 'Oh wow!' என்று ஜானகி புருவம் உயர்த்தி ரசிப்பதுப்போலும், 'அது உள்ளிருந்து தீ வளர்க்கும் இன்னுமே' என்று SPB தணலில் தவிப்பதை தொடர்ந்து வரும் hummingல் ஜானகி தோளை குலுக்கி 'oh, come on... no big deal' என்று ஏளனம் செய்வதுப்போல் தோன்றும்.... 😊 மீண்டுமொரு முறை கேட்கும் போது SPBயின் கெஞ்சல்களுக்கு ஜானகி கொஞ்சல்களாக அரவணைக்கிறார் என்று தோன்றும், சில சமயம் இருவருமே ஏதோ ஒரு தவிப்பில் உருகுகிறார்கள் , ஒரு வேதனையில் வாடுகிறார்கள் என்பதுப்போல் தோன்றும்...  எத்தகைய வித்தகர்கள் இவ்விருவரும்! 


இளையராஜாவின் மன ஓட்டத்தை நம்மால் புரிந்துக்கொள்வது சாத்தியமில்லை. நாம் கீழே புழங்கும்  சாதாரண மனிதர்கள். அவர், இன்றல்ல, என்றிலிருந்தோ மேலவையில் சஞ்சரிக்கும் ஒரு உன்னதமான படைப்பாளி....


முகப்பிசையே (prelude) இல்லாமல் SPB குரலில் பல்லவியுடன் பாடல் நேரிடையாக ஆரம்பிப்பது இளையராஜா இந்த பாடலெங்கும் நிறைத்த ஆச்சரியங்களில் முதலாவது. 


மாயாமாளவ கௌளயின் வீச்சுகளைக்கொண்டு பிண்ணிய ஒரு மின்னலை நம் செவிகளுக்குள் ஏவுகுகிறார். பாடல் முழுதும், மறைந்திருக்கும் மாயமோகினிப்போல் ஒரு சலங்கை ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். 


முதல் இடையிசையில் மிருதங்கமும் தபலாவும் திரையை விலக்க, வீணையும் சிதாரும் புல்லாங்குழலும் சந்த்தூரும் புரியும் ஒரு மாயாஜாலத்திலிருந்து நாம் மீண்டு வருவதற்கு முன் அதே மிருதங்கம் ஆர்ப்பாட்டமும் அவசரமும் கொண்டு திரையை இழுத்து மூடுகிறது. 


சரணங்களில் பாலுவும் ஜானகியும் இந்த விந்தை உலகின் அரசன்- அரசி போல் இசை பரிவட்டங்களுடன் கம்பீரமாக வலம் வருகிறார்கள்.


இரண்டாவது இடையிசையின் அழகை வர்ணிக்க வெறு‌ம் வார்த்தைகளால் இயலாது. வீணைக்கும் சித்தாருக்கும் இடையே ராஜா அமைத்திருக்கும் counterpoint....  அடடா.... Sheer Brilliance! பின்பு புல்லாங்குழலும் சந்த்தூரும் வீணை- சிதாரின் அரியணையில் மிடுக்காக அமர்ந்து அந்த ஓட்டத்தை தோய்வில்லாமல் தொடர்கின்றன. 


அந்த 'கனவா' வார்த்தைக்குப் பின் ஒரு comma போட்டதுப்போல் ஒரு pause...  தனக்குத்தானே கேள்வி கேட்பதுப்போல்... வியப்பதுப்போல்....


'இது உண்மையா?' என்று SPB வினவும்போது ஒரு குழப்பத்தின் தவிப்பு தெரியும். பின்வரும் ஜானகியின் அந்த 'உண்மையா' ஒரு கூடுதல் அழுத்தத்துடன் வெளிப்படும்- இது உண்மையாய் இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் அங்கு மேலோங்கி நிற்க்கும்....


எப்பேர்பட்ட creativity!


என் கைப்பேசியில் பாடலை ஜானகி அம்மாவும் நானும் ஒன்றாக கேட்டோம்...  அவரும் என் கையைப்பற்றி கைப்பேசியை தாங்கியபடி இந்த பாடலை  கேட்டுக்கொண்டிருந்தார். என் கைகளில் சிறு உதறல்... கண்களில் சிறு குளம். அவர் முகத்தை பார்க்க துணிவில்லாமல் தலையை குனிந்து தரையை பார்த்துக்கொண்டிருந்தேன்... இன்னொரு கையால் என் தோளை மெல்ல  தட்டிக்கொடுத்தார்... அவர் முகத்தை தயக்கத்துடன் அண்ணாந்து பார்த்தேன்.... அவர் கண்களில் புரிதலும் இதழ்களில் வாஞ்சையான புன்னகையும் தவழ்ந்தன...  உணர்சிவசப்படும் ரசிகர்கள் அவருக்கு ஒன்றும் புதியதாக இருந்திருக்காது.....


அங்கு வார்த்தைகள் அவசியமில்லாததால் தொண்டையிலேயே தங்கிவிட்டன...


https://www.youtube.com/watch?v=wA4xtm60Tjw


🎵வாழ்க்கை போகும் போக்கிலே போகுதே...

வாழ்க என்று சொல்லடி வாழ்கிறேன்....🎵


- Saravanan Natarajan


#SPBJanakiuniqueduets

https://www.facebook.com/share/p/1G6M5Nvxxj/

Wednesday, August 19, 2026

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை..

 அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா..... 🙏


ஜானகியம்மா என்னிடம் அடிக்கடி சொன்னதது ' என்னமோ தெரியல சரவணா... சினிமா ஃபீல்ட்ல யார்கிட்டேயும் நான் touchல இல்ல... சாரதாவை தவிர.... சாரதா எனக்கு ஃப்ரெண்டுக்கு மேல... தங்கச்சி மாதிரின்னு கூட சொல்லலாம்.... நான்னா அவளுக்கு உயிரு....' 


ஜானகியம்மா மறைந்துப்போய் ( இப்படி டைப் செய்யும் போதே கை நடுங்குகிறது...) ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது... இன்னும் என் துக்கம் குறைந்தபாடில்லை... இப்படி ஆகிவிட்டதே என்று மனது ஆற்றாமையில் தவிக்கிறது...


ஜானகியம்மாவிடம் மிக நெருக்கமாக இருந்த சாரதாவை பார்த்தால் சற்று ஆறுதல் கிடைக்கலாமென்று நண்பர் சுந்தரிடம் கேட்டேன். என் மனநிலையை நன்கு உணர்ந்த அவர் அவரது நண்பர் ஸ்ரீதரிடம் சொல்லி இன்று சாரதாவை மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது அழகான வீட்டில் சந்தித்தோம்.


கைக்கூப்பி மிக அன்பாக வரவேற்றார், மூன்று முறை 'ஊர்வசி' பட்டம் வென்ற சாரதா. எளிமையான தோற்றத்திலும் கம்பீரமான ஓர் அழகு இருந்தது. வயது 81 ஆகிறதாம். சன்னமாக, ஆனால் துல்லியமாக அழகான தமிழில் பேசினார்.  


ஏற்கனவே என்னை பற்றி அவர்கள் சொல்லியிருந்ததால் கனிவான பார்வையுடன் என்னை பற்றி மென்மையாக விசாரித்தார். சில பொதுவான விஷயங்கள் பேசியப்பிறகு 'ஜானகியம்மா...' என்று மெல்ல ஆரம்பித்தேன். என் குரல் தடுமாறியது...


 சாரதாவின் முகத்தில் ஒரு நொடி பெரும் வலி வந்தது போல் ஒரு துடிப்பு... பிறகு சொன்னார்... 'ஜூலை 8 ஜானகியை பார்க்க மைசூருக்கு டிக்கட் புக் செஞ்சிருந்தேன்.. ஆனால் என் கூட துணையா வர இருந்தவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. அதனால postpone பண்ண வேண்டியதா போச்சு... அதுக்குள்ள 11th அன்னிக்கு ஜானகி போயிட்டா...'


தன்னால் சொன்னபடி வர இயலவில்லை என்பதை ஜானகியம்மாவிடம் சாரதா தெரிவித்த போது ஜானகியம்மா தன் ஏமாற்றத்தை கொட்டி அனுப்பிய வாய்ஸ் மெஸேஜை போட்டு என்னை கேட்க வைத்தார் சாரதா... "ஏம்மப்பா...' என்று ஜானகியம்மாவின் குரலை கேட்டதும் என் கண்கள் குளமாகின. 'Abba' ன்னுதான்  என்னை கூப்பிடுவார்... நெல்லூர் வழக்கம்...' என்றார் சாரதா.


60 வருடங்களுக்கு மேல் தழைத்து வந்த ஜானகியம்மாவுடனான தனது நட்பை பற்றி நிறைய பகிர்ந்துக்கொண்டார். இதே மகாலிங்கபுரத்தில் இசையமைப்பாளர் சலபதி ராவின் வீட்டில் ஜானகியம்மாவை முதல் முதலில் சந்தித்ததை பற்றி கூறினார். ஜானகியம்மாவின் மாமனார், மாமியார், கணவரை பற்றியெல்லாம் சுவாரசியமாக பேசினார். ஜானகியம்மாவின் கணவர் திரு ராம்பிரசாதின் சிபாரிசின் பேரில் தான் தன்னால் மலையாள சினிமாவில் நுழைய முடிந்தது என்று நன்றியுடன் நினைவு கூறினார்.


'மலையாளத்தில் எத்தனை அருமையான பாடல்களை உங்களுக்காக ஜானகியம்மா பாடினார்!' என்று வியந்தபடியே என் மனதிற்கு மிக நெருக்கமான'சூர்யகாந்தி சூர்யகாந்தி..' பாடலை பாட ஆரம்பித்தேன்... உடனே சாரதாவும் சேர்ந்து பாடினார்... அற்புதமாக... பல்லவியும் முதல் சரணத்தையும் முழுவதுமாக பாடினார்... சூரியகாந்தி பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கும் வரை இந்த பாடலும் காற்றலைகளில் தவழ்ந்து ஒலித்துகொண்டிருக்கும்...


https://youtu.be/5QvWHZN8hO8?si=0kMJZwFpHud6yweE


'மலையாளத்தில எனக்கு நூத்துல எண்பது பாட்டு ஜானகிதான் பாடியிருப்பார். நான் தயாரிச்ச ஒரு மலையாள படத்துக்கு முதல்ல appoint பண்ணியிருந்த music director ஜானகிக்கு ஒரு பாட்டுக்கூட கொடுக்கிறதா இல்ல. நான் அந்த music directorரையே மாத்திட்டேன்..' என்றார் சிரித்துக்கொண்டே. 


'தமிழிலும் எனக்கு ஜானகி கொடுத்த பிரமாதமான அறிமுகம் 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாட்டு...' என்றார் சாரதா. அந்த காவிய பாடலின் சில வரிகளையும் பாடினார்...


https://youtu.be/_p0aPLPRk0E?si=T8NsmPiYDrQkf2bI


'துளசி மாடம்' படத்திலும் சந்திரகாந்தாவும் நீங்களும் பாடுற பாட்டை சூலமங்கலம் ராஜலட்சுமியோடு சேர்ந்து ஜானகியம்மா தான பாடினாங்க..' என்றேன். 'எந்த பாட்டு.. கவனமில்லையே?' என்று கேட்ட சாரதா, 'மையைத் தொட்டு எழுதியவர்...' என்று நான் ஆரம்பித்தவுடனே 'என் மனதை தொட்டு எழுதிவிட்டார்..' என்று புன்னகையுடன் முடித்தார்...


https://youtu.be/X0GlMuQ5CgI?si=hmJEXEWlOC3ZcrLZ


'மழை மேகம்' படத்தில் ஜானகியம்மா அவருக்காக பாடிய துள்ளலான 'சொக்கு பொடி போட்டானா மச்சான் மச்சான்' பாடலையும் மென்மையான 'ஒரு கோடி சுகம் வந்தது' பாடலையும் நான் நினைவுகூற சந்தோஷமாக தலையசைத்தார்.


https://youtu.be/6Jy9edK8Rk4?si=yCO4kSfet7jHxtFR


https://youtu.be/KOn5RYHAvNk?si=uZZ660DBcjRIrWw8


இதற்கெல்லாம் மேலே என் மனதை முழுவதுமாக ஆட்கொண்ட பாடலொன்று சாரதாவுக்காக ஜானகியம்மா பாடியது. அதை என் அலைபேசியில் ஒலிக்கச்செய்து அவரிடம் கொடுத்தேன்... அந்த பொன்னூஞ்சலை கட்டி விட்டு சிறிது நேரம் அவரை அதில் ஆட்டி விட்டேன்...


https://youtu.be/uIfJJescPBY?si=dmcvxYjqjv05xpdi


சாரதாவின் கண்களிலிருந்து கொட்டிய கண்ணீர் என் கைகளை நனைத்தது... ஒரு விசும்பலுடன் ஃபோனை என்னிடம் திருப்பி கொடுத்தார். அவர் கைகளை தட்டிக்கொடுத்தேன். கனமான மௌனம்.


'ஒவ்வொரு நாள் காலேலயும் நான் walk போகும் போது சூரிய பகவான பார்த்து முதல்ல வேண்டிக்கிறது 'என் ஜானகிய பார்த்துக்கோ' னு தான்... எல்லாம் போச்சு...' என்று சொன்னார் உடைந்த குரலில். 


பிறகு இன்னும் நிறைய ஜானகியம்மாவை பற்றி பேசினோம். கிளம்பும்போது சாரதா சொன்னார் 'அழுதுட்டா மனசு லேசாயிடும்... ... உனக்கெல்லாம் சின்ன வயசு... ஜானகியோட ஆசி உனக்கு என்னைக்கும் இருக்கும்... எப்ப வேணும்னாலும் இங்க வா...' 


காரில் வீடு திரும்பும் போது மடை திறந்தது போல் கண்ணீர் கசிந்தது. நிஜமாகவே மனதில் பாரம் குறைந்தது போல் இருக்கிறது. இன்று அநேகமாக தூக்கம் என் கண்களை தழுவும்... அமைதி என் நெஞ்சில் நிலவும்... ஜானகியம்மா தொடர்ந்திருப்பார்... துணையிருப்பார் 🙏

- சரவணன் நடராஜன்

https://www.facebook.com/share/19SD2FN1zX/

Monday, August 17, 2026

பாட்டுரசிகனின்பரிதாபங்கள்

 ஒரு பாடல்ரசிகனின் பரிதாபங்கள் #16


🎵நாலுப்பக்கம் வேடருண்டு🎵


போன வெள்ளிக்கிழமை மாலை நண்பர் பிரசன்னாவின் அழைப்பின் பேரில் நண்பர் ஸ்ரீதர் வுட்லேன்ட்ஸ் ரெஸ்டாரென்ட்டில் ஏற்பாடு செய்திருந்த நண்பர்களின் சந்திப்பு. அற்புதமான மாலைப்பொழுதாக அமைந்தது. Kindred souls each one of them- great conversation, sumptuous repast,  laughter and bonhomie.


பிரசன்னாவை முன்பு சந்தித்திருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் தான் அவருடன் ஆறஅமர பேச முடிந்தது. அவரது இசை பரம்பரை, இசையில் நாட்டம், இளையாஜா பாடல்கள் மீது தீராத மோகம் என்று அழகாக விவரித்தார். ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தோம்.

  

ஒவ்வொரு நொடியும் சுவாரஸ்யமாக கழிந்துக்கொண்டிருந்த போது தான் சம்பவம் நிகழ்ந்தது. 

என் எதிரே அமர்ந்திருந்த OISG சங்கர் (எனக்கு பரிச்சமில்லாத)  தனது நண்பர் ஒருவரை பற்றி ஏதோ சொல்ல ஆரம்பித்தார்... என்ன சொன்னார் என்று சுத்தமாக நினைவு இல்லை. ஏனென்றால் அந்த நண்பரின் பெயர்-"ஆரண்ய"நிவாஸ்!


அந்த நொடியிலிருந்து நான் Woodlandsசிலிருந்து Wood landsசுக்கு கடத்தபட்டேன்!ஆம் Wood lands -அதாவது ஒரு காட்டு பகுதியில் அடுத்த நொடியில் இருந்தேன்.


அது அடர்ந்த காடு. போலிஸ்காரர்களிமிருந்து தப்பிவந்த டாக்டர் ரமேஷூம் (நடிகர் திலகம்) ஜானகியும் (சுஜாதா) காட்டின் நடுவில் வெட்டி அடுக்கப்பட்டிருந்த தேக்குமர wood logs கட்டுக்களுக்குள் ஒரு மிகச்சிறிய இடத்தில் மறைந்திருந்தார்கள், தங்களை மறந்திருந்தார்கள்....


//🎵ஆரண்யக் காண்டமிதை தொடங்கு

அயோத்தி பஞ்சணை போல் மயங்கு

சாகுந்தலம் படிக்க இறங்கு

தலையடியில் கை வைத்து உறங்கு

தலையடியில் கை வைத்து உறங்கு

அம்மம்மா என்னம்மா..🎵.//


என்று பாடியபடியே அங்கு வாணிம்மா என்னை ஆட்கொண்டார். SPB என்னை ஆறத்தழுவி வரவேற்க காத்திருந்தார். கவியரசர் எழுதிக்கொடுத்த வரிகள் மெட்டுக்குள் அழகாக வந்தமர்வதை மெல்லிசை மன்னர் மெச்சிக்கொண்டிருந்தார்!


இவ்வளவு நெருக்கமான காட்சியில்...🤭 பாவம் சுஜாதா என்று ஒரு நொடி பரிதாபப்பட்டேன்... படத்தில் ( அண்ணன் ஒரு கோயில்) சிவாஜி கண்ணாடி அணிந்து இருப்பாரே... இந்த நெருக்கமான காட்சியிலும் கண்ணாடி அணிந்திருந்தாரா என்று யோசிக்கலானேன். அதே நொடியில் இந்த காட்சிக்கு தேவையில்லாத ஒரு ஓவர்கோட்டை சிவாஜி அணிந்திருந்தாக ஒரு ஞாபகம். அதைக்கூட மன்னித்துவிடலாம், அவரின் பிங்க் கலர் பேண்ட் என் நினைவில் வந்து தொலைத்து.... என் தட்டில் இருந்த சப்பாத்தியை அந்த காஸ்ட்யூம் டிசைனர் என எண்ணிக்கொண்டு பீஸ்பீஸாக கிழித்து திருப்தியடைந்தேன்.


பாடல்வரிகள் மீண்டும் என் கவனத்தை ஈர்த்தன. கதாநாயகன் பெயர் ரமேஷ். கதாநாயகி பெயர் ஜானகி. காட்டினில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த கட்டத்தில் ரமேஷையும் ஜானகியையும் ராமாயணத்தோடு எவ்வளவு அழகாக பொருத்துகிறார் கண்ணதாசன்!


ஆரண்யக் காண்டம்! (பாடல் காட்சிக்கு இரண்டாவது வார்த்தை வேறொரு மொழியில் கூட ...ச்சே ச்சே மனது ஏன் இப்படி துஷ்ட வழியில் செல்லவேண்டும்🙈) வனவாசத்தில் மரக்குடிலில் ஜானகி ரமேஷை தன் மடியை அயோத்தி பஞ்சனை போல் பாவிக்கும்படி அழைக்கிறார். 


அடுத்து, ரகுவம்சம் எழுதிய காளிதாசன் தானே சாகுந்தலத்தையும் எழுதினார்!


🎵சாகுந்தலம் படிக்க இறங்கு

தலையடியில் கை வைத்து உறங்கு🎵


இதில் 'இறங்கு' என்ற வார்த்தை வரும் போது மெட்டும் சற்று கீழே இறங்கும். MSV🙏🙏


'தலையடியில் கை வைத்து உறங்கு' என்று இரண்டாம் முறை பாடும் போது, வாணிம்மா சற்று குரலை தாழ்த்தி நாணத்துடன் கிசுகிசுப்பதாக  தோன்றியது....


சில நிமிடங்கள் தற்சமயத்திற்கு மீண்டு வந்தேன். நண்பர் நாராயணன் orkut , blog காலங்களை பற்றி தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார். சங்கர் 'விடுதலை' பாடல்களை பற்றி தன் மேலான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இந்த பாடல் எனக்கு விடுதலை அளிக்காமல் துரத்திக்கொண்டே வந்து கைவிலங்கு பூட்டி மீண்டும் அந்த காட்டுக்குள் அழைத்துச்சென்றது. 


சரணங்களில் ரம்மியமான திலங் ஸ்கேல் மனதுக்குள் ஓடிமுடிந்ததும் அந்த interlude இசையில் சற்று நேரம் லயித்தது. பாடல் காட்சியில் சரணங்களில் சிவாஜி- சுஜாதவை focus செய்தாலும் இடையிசையில் காட்டுப்பாதைகளில் இவர்களைத்தேடி வேகமாக வரும்  போலிஸ் ஜீப்பை காண்பிப்பார்கள். ஜீப்பிலிருந்து அதிவேகமாக குதித்து இறங்கி தேடலை மேற்கொள்ளும் போலிஸ்காரர்களை காண்பிப்பார்கள். (அந்தகாலத்து போலிஸ்கார்கள் எப்படித்தான் அந்த லூஸான ட்ராயர்களை சீருடையாக ஏற்றுக்கொண்டார்களோ என்று ஒரு நொடி பரிதாபப்பட்டேன்) இந்த சஸ்பென்ஸான தேடலுக்காக MSV பாடலின் நடையில் திடீரென்று acceleratorரை அழுத்துவார். மிருதங்கமும் stringsசும் பரபரப்பாக தாண்டவமாடும்.


இந்த சுனாமியின் நடுவே ஒரு சாந்தமான சூழலை கொண்டுவர முடியுமா? முடியமே... வாணிம்மா 'ஆஆஆ....' என்று ஆரம்பித்து, SPB தொடர்ந்து,  வாணிம்மா முடிக்கும் அந்த ஹம்மிங்கை கேட்டுப்பாருங்கள்....இல்லை இல்லை...கேட்க மட்டும் செய்யுங்கள்.... ஆஹா.... ஆஹா...💖


மீண்டும் சுதாரித்துக்கொண்டு நண்பர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்று கவனிக்க முயற்சித்தேன். பிரபலமான ஒரு முகநூல் குழுவை பற்றி நகைச்சுவை கதைகள்- சிரித்து, ரசித்து கேட்டுக்கொண்டிருந்தேன். குருஜி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது காஃபி ஆர்டர் பண்ணலாமா என்று ஸ்ரீதர் கேட்டார். ஆர்வி ஆர்வமாய் தனக்கு பால் வேண்டுமென கேட்டவுடன் இந்த பாடல் என்னை மீண்டும் தன்பால் இழுத்துக்கொண்டது....


//🎵பாலோடு பாத்திரத்தை எடுத்து

பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து

தாகங்கள் தீரும் வரை குடித்து

சல்லாப நாடகத்தை நடத்து

சல்லாப நாடகத்தை நடத்து

அம்மம்மா என்னம்மா...🎵//


அந்த 'என்னம்மா'வை SPB ஒரு குறும்பான சிரிப்போடு உச்சரிப்பதை எண்ணி சிலாகித்துக்கொண்டேன். 


எவ்வளவு அழகான பாடல், ஆனால் நண்பர்கள் கூடிமகிழும் வேளை பார்த்துதானா அது என்னை இப்படி அலைக்கழிக்க வேண்டும்🤷‍♂️


பாடலின் ஒலி வடிவம்:


https://www.youtube.com/watch?v=lFrGDYnFx80


நான் இவ்வளவு சொல்லியும் பாடலை பார்த்தே ஆகவேண்டுமென்றால், Caveat Emptor, though😬:


https://youtu.be/eYKLxl-Gi28?feature=shared


சரி, எப்படியோ அந்த பாடலின் பிடியிலிருந்து என்னை விடிவித்துக்கோண்டு மீண்டும் வந்தேன், மீண்டு வந்தேன். எல்லோரும் மேஜையை விட்டு எழுந்து வெளியே வந்தோம். ஃபோட்டோ செஷன் முடிந்து இந்த இனிமையான சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்த பிரசன்னாவுக்கும் ஸ்ரீதர் சாருக்கும் நன்றிக்கூறி விட்டு கிளம்பினோம்.


நாராயணன் தன் புது 'ஓலா' பைக்கில் என்னை வீட்டில் இறக்கி விடுவதாக ஏற்பாடு. நண்பர்களில் யாரோ ஒரு புண்ணியவான் 'ஓலா' பைக் எப்படி இருக்கிறது என்று கேட்டு வைத்தார். 'ஓலா' பைக் பற்றி பேச்சு சற்று நேரம் தொடர்ந்தது. அவ்வளவுதான்..... நான் எப்போது பைக்கில் நாராயணன் பின்னால் ஏறினேன்.... வழியில் அவர் என்னிடம் எதையாவது பேசினாரா.... இறக்கிவிடும்போது நன்றி தெரிவித்து விடைப்பெற்றேனா எதுவும் நினைவில் இல்லை...


ஏனென்றால் நான் இப்போது இளையராஜாவிடமும்,  யேசுதாஸிடமும், (சற்று இறுக்கமாக) ஜென்ஸியிடமும் சிக்கிவிட்டிருந்தேனே....🤦‍♂️


//🎵ஓலா  ஓலா ஓலல்லா... 

ஓலா ஓலா ஓலல்லா.....🎵//


நான் பைக்கில் எங்கே வந்தேன்? நான் தான் மீன் கொடித் தேரில் ஊர்வலம் போன மன்மத ராஜனாக மாறிவிட்டிருந்தேனே.... 🙆‍♂️


https://youtu.be/fdnQExH7fZs?feature=shared


- பரிதாபங்கள் தொடரும்....

#பாட்டுரசிகனின்பரிதாபங்கள்

https://www.facebook.com/share/p/18sdunDZHZ/

Sunday, August 16, 2026

Jikki anniversary post

 🎵ஓராயிரம் பாடலும் பாடுமே...🎵


It is the anniversary today of the demise of Pillavalu Gajapathi Krishnaveni, our beloved Jikki. Let us commemorate the memory of this talented chanteuse by recollecting, not a song from the glorious 50s when she reigned over Tamil film music, but from a song from the early years of Ilaiyaraja. Let us also look at the songs that came Jikki’s way in the 80s and early 90s….


* * * * * * *


Vattathukkul Sathuram (1978/ MAM Films) had Latha, Sumitra, Saratbabu, Srikanth and Savitri essaying the lead roles. The film was produced by N.S.Mani and directed by S.P. Muthuraman.


It was a trend at that time to adapt popular novels for celluloid, and Maharsihi was one writer whose works were in demand just then. Bhuvana Oru Kelvikkuri, Saaindhadamma Saaindhaadu, Nadhiyai Thedi Vandha Kadal were all his stories. 


Vattathukkul Sathuram was based on Maharishi's story as well. The film explored a theme unusual for Tamil cinema- female bonding, and the ultimate sacrifice that Anu (Latha) makes, all for the sake of her friend Malathi (Sumitra). Sridhar's Avalukkendru Or Manam did traverse this path earlier, though the situations and sequences were wholly different. 


Babu's camerawork in Vattathukkul Sathuram was of particular appeal; the angles were innovative and the black & white frames austere and telling. Sure the proceedings had their fair share of melodrama, but the subtle and refined performances, especially that of Latha (fetching her the Filmfare Award) saved the movie from remaining yet another tearjerker. 


* * * * * * * *


Ilaiyaraja's music was, of course, another highpoint of the movie. Since the story revolved around the two female leads, all the 4 songs were by female singers. 'Itho itho en nenjile', the flagship number, remains a timeless ode to friendship. Tracing the years rolling by as Baby Indira and Baby Sumathi grow up to Latha and Sumitra, the opening lines are sung by Umadevi and Indira, and then S. Janaki and B.S.Sashirekha take over in scintillating style. 'Aada sonnare ellorum' is a breezy club dance number that Jency crooned in her very first year in Tamil film music. 'Perazhagu meni konden' is another club song, but the pathos which was just hinted at in 'Aada sonnare' becomes palpable in this song, rendered by Janaki with characteristic understanding. 


* * * * * * * * 


I sing to use the waiting, 

my bonnet but to tie, 

And shut the door unto my house; 

no more to do have I.. 

Till, his best step approaching, 

we journey to the day, 

and tell each other how we sang 

to keep the dark away. 


-Emily Dickinson (Time and Eternity) 


Anu falls in love with Malathi's brother. But he is disdainful of her dubious parentage and wards off her overtures callously. A smitten Anu refuses to see the writing on the wall and asks him to meet her at nightfall in the village outskirts. The unfeeling fool doesn't care for her tryst, and even worse, he doesn't care for her trust. For he complains to his mother of Anu's behaviour. The highly incensed mother draws the village elders and the group of indignant people march towards the riverbank where Anu is awaiting him with growing impatience.


So as she waits at the rendezvous, this is the song that Anu sings softly to herself, blissfully ignorant of the approaching humiliation and the calamitous path her life would take henceforth. She sings, with her heart overflowing with love, her dreams filled with happy tidings of their marriage, her eyes searching restlessly for the sight of her man. 


Right from the opening humming, Jikki brings to life the myriad musings that the song evokes. How poignantly the longings of a love struck heart find portrayal in her caressing rendition! And Ilaiyaraja shows his class in style, for even as the lines are sung tenderly as they ought to be, he fills the interludes with hurried, suspense-filled moments as the angle shifts to the gang of the infuriated villagers marching towards Anu, while a lone flute brings us back to the pining girl waiting in the woods…


Let us too revel in this captivating calm before the storm.


https://www.youtube.com/watch?v=apzH-KcDmIg


* * * * * * * * 


Who knows what made Ilaiyaraja think of Jikki and summon her to sing this song? By 1978, Jikki's glorious second innings was showing signs of waning; her last song at that point of time was perhaps way back in 1975- 'Manathukku theriyum' for A.M .Raja in Enakkoru Magan Pirappaan. 


So when it seemed that Jikki was being banished to oblivion yet again, Ilaiyaraja escorted her back to the limelight, and gave her second innings a rejuvenating extended lease. And….serendipity did happen- the veteran chanteuse did justice to the trust placed on her. The voice that ruled the 50s with unassuming majesty was dulcet as ever in 1978- ravages of age had not withered much the charm. This haunting song and the popularity it enjoyed showed that Jikki could not be written off so easily. While it wasn't as though she was inundated with work, some memorable songs did come her way in the subsequent years. 


And while Ilaiyaraja was the composer who kept her career afloat, there were others who employed her vocals in the coming years, though sparingly. 


'Naan unna nenachen' with SPB & Vani Jairam(Kannil Theriyum Kathaigal/ 1980/ Shankar-Ganesh):


https://www.youtube.com/watch?v=MizIU1PuDg4


'Andha ramanum indha seethaiyuim' (Paakku Vethalai/ 1981/ Malaysia Vasudevan):


https://www.youtube.com/watch?v=nDtIp132Jh4


'Raathiri pooththau kaattu roja' (Dhaayam Onnu/1988/ Ilaiyaraja):


https://www.youtube.com/watch?v=IWc_4zOF1uY


She sang for the aunt all through the 50s, now she sings for the niece in the 80s:'Ninaithathu yaaro nee thaane' with Mano (Paattukku Oru Thalaivan/ 1989/ Ilaiyaraja):


https://youtu.be/EAjZ9mczvxE


Poovodu kaathu vandhu' (Dharmam Vellum/ 1989/ Ilaiyaraja): 


https://www.youtube.com/watch?v=ezpM6Hyw4mg


'Oththaiyadi paadhaiyile' (Aatha Un Kovilile/ 1991/ Deva):


https://www.youtube.com/watch?v=tVYVcNoE5D4


 'Iravu naadagam iraval poo mugam' with Jamunarani (Annan Ennada Thambi Ennada/ 1992/ Gyan Verma):


https://www.youtube.com/watch?v=lNXsiCv8eM4


Selvame chithirame poonthere' (Pangaali/ 1992/ Ilaiyaraja):


https://youtu.be/oAaOSqOjzkc


Vanna vanna solleduthu' (Senthamizh Paattu/ 1992/ MSV-Ilaiyaraja):


https://www.youtube.com/watch?v=TtvQQw2dzOQ


 'Chinnamuthu chinnamuthu' (Chinnamuthu/ 1994/ Deva):


https://www.youtube.com/watch?v=rjDPAA8UeHE


'Kolam podum pen' (Muthal Manaivi/ Music released in 1994/ Gnanadevan):


https://www.youtube.com/watch?v=FLlHTT9GwhI


‘Paalirukkuthu Pazhamirukkuthu’ with Malaysia Vasudevan (Mapillai Thozhan/ music released in 1994/ Deva):

https://www.youtube.com/watch?v=32RyFT8B-gw


Jikki had some memorable songs in Telugu as well in this period, like 'Jaanaavule' in Aaditya 369 (1991) for Ilaiyaraja:


https://www.youtube.com/watch?v=SgDOziuTb_E


Lustrous flashes from dying embers…

https://www.facebook.com/share/p/188i8XKEER/

Thursday, August 13, 2026

Hitchcock birthday remembrance

 பீதிப் படங்களின் பிதா மகன்… 


கே.பி.ஜனார்த்தனன்


அப்பா கொடுத்தனுப்பிய கடிதத்தை அந்த போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தான் சிறுவன் ஆல்ஃப்ரட். வாங்கிப் படித்த அதிகாரி அவனை லாக்கப்பில் அடைத்துவிட்டாராம் பத்து நிமிடம். ‘தப்பு பண்ற பசங்களுக்கு இதுதான் கிடைக்கும்,’ என்றார் அவனை விடுவிக்கும்போது. நடுங்கிப் போன அந்தப் பையன்தான், தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் நம்மை ஒன்றரை மணி நேரம் நடுங்க வைத்த ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்! சஸ்பென்ஸுக்கு மறு பெயர். பீதிப் படங்களின் பிதாமகன்! 


Alfred Hitchcock... இன்று பிறந்த நாள்!


படத்தில் இவர் வைக்கிற சஸ்பென்ஸ் போக, படத்தில் இவர் எங்கே தலையைக் காட்டுகிறார் என்று கண்டுபிடிக்க ஆவலுடன் தேடுவார்கள் ரசிகர்கள். ஆம், ஒரு பாதசாரி, சக பயணி, கஸ்டமர் என்று தன் ஒவ்வொரு படத்திலும் ஒரு மினி மினிட் மின்னி மறைவார் இந்த இயக்குனர் நட்சத்திரம். வேறு பாத்திரங்களே வரமுடியாத ‘Life Boat’ படத்தில் கூட தலையைக் காட்டி விட்டார். எப்படி? ஹீரோ படிக்கும் பேப்பரில் ஒரு விளம்பரத்தில் போஸ் கொடுக்கும் மாடலாக! எந்தப் படத்தில் எந்த இடத்தில் வருகிறார் என்பதைத் தொகுத்து (Hitchcock Cameos) ஒரு வலைத்தளத்தில் போட்டிருக்கிறார்கள்.


லண்டனில் ஜனனம். கண்டிப்பாக வளர்க்கப்பட்ட குடும்பம். அப்பாவுக்கு பலசரக்கு கடை. கேபிள் கம்பெனியில் வேலை பார்த்தபோது சினிமாவால் ஈர்க்கப்பட்டவர், தன் டிராயிங் திறமையால் பாரமவுண்ட் ஸ்டூடியோவில் டைட்டில் வரையும் வேலை தேடிக்கொண்டார் ஓசைப் படாமல். மௌனப் பட காலம் அது.


‘மனைவியிடம் சொல்லி விடு’ என்ற படத்தின் டைரக்டர் திடீரென்று நோயில் விழ, மீதிப் படத்தை முடிக்கும் பொறுப்பு கிடைத்தது. திறமை திரையில் பளிச்சிட, அடுத்தொரு படத்தை இயக்கும் வாய்ப்பு! ‘The Lodger’(1927). அது பேர் வாங்கித் தர, படங்கள் தொடர்ந்தன. அதன் பிறகு தொப்பியில் இறகு செருகிக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. ‘Strangers on a Train’, ‘Rear Window’, ‘I Confess’, ‘Vertigo’, ‘Psycho’, ‘North By Northwest’, ‘The Birds’... ஒவ்வொரு படமும் விறுவிறுப்புக்கும், சஸ்பென்ஸுக்கும் பாடம் எடுத்தன.

 

சாதாரண மனிதனை கொண்டுபோய் ஒரு அசாதாரண சிக்கலில் வைப்பது தான் ஹிட்ச்காக் படத்தின் அண்டர் லைன். மௌனப் பட காலத்தில் உருவெடுத்தவர் இல்லையா? வசனம் இன்றிக் காட்சிகளை நகர்த்துவதில் சமர்த்தர். சுவர்களில் விழும் நிழலிலிருந்து கதவிடுக்குகளினூடே எட்டிப்பார்க்கும் காமிரா கோணம் வரை இவரின் ஒவ்வொரு ஷாட்டும் திகிலை வளர்க்கும். ஒரே அறையில் நடக்கும் ‘Rope.’ ஒரு படகுக்குள் நடக்கும் ‘Life Boat’... என்று இவரின் சோதனைகள் எல்லாம் சாதனைகள்.


அதிர்ச்சியை விட பீதியையே அளிக்க விரும்பினார். திடீரென்று ஒரு திருப்பத்தைக் கொடுத்து ஆடியன்ஸைத் தூக்கி வாரிப் போடச் செய்வது முதல் வகை. படத்தில் வரும் பாத்திரங்களுக்குத் தெரியாத விஷயங்களால் என்ன ஆவார்களோ என்று பதைபதைப்பை உண்டாக்குவதே இவர் விரும்பிய அடுத்த வகை. அவரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “ரெண்டு பேர் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேஜைக்கு அடியில் ஒரு வெடிகுண்டு. அது வெடித்தால் அதிர்ச்சி. வெடிக்கவில்லையானால்...?”


‘Psycho’ தான் மாஸ்டர்பீஸ். ஆபீஸ் பணத்தை திருடிக் கொண்டு ஓடும் அந்தப் பெண் ரோட்டோர விடுதியொன்றில் தங்குகிறாள். பாத்ரூமில் பதறப் பதறக் கொல்லப்படுகிறாள். தேடிவரும் தங்கையை விடுதிக்குச் சொந்தக்காரனான கொலைகாரனிடமிருந்து காப்பாற்றும் காதலன்... என்று விரியும் இந்தப் படத்தைப் பேசாத ரசிகன் இல்லை. பாராட்டாத பத்திரிகை இல்லை.


‘North by Northwest’ ரொம்பவே பிரபலம். உலகின் தலைசிறந்த டாப் டென் த்ரில்லர்களில் ஒன்று. வேறொரு நபர் என்று தவறாகக் கதாநாயகனைக் குறிவைக்கும் கும்பல் ஒரு பக்கம், துரத்தும் போலீஸ் மறுபக்கம்... இறுதியில் வரும் அந்த breathtaking சஸ்பென்ஸ்! கதையின் முடிச்சு இந்தியிலும் வந்து கலக்கியது.


‘Rope’ஒரே ஷாட் படம். படத்தில் மொத்தக் காட்சியும் ஒரு விருந்து மட்டுமே.  முதல் காட்சியிலேயே ஒரு கொலை விழுந்து சடலம் மேஜைக்கு அடியில் மறைக்கப்படுகிறது. அங்கேயே துப்பு துலக்கப்பட்டு... இப்படிப் போகும்  இடைவெளியின்றி நடக்கும் கதையை ஒரே ஷாட்டில் எடுத்தார். அப்போதெல்லாம் ஒரு ரோலில் பத்து நிமிட அளவே ஃபிலிம் இருக்கும் என்பதால், பத்தாவது நிமிட முடிவில் ஒரு இருட்டான பொருள் திரையை நிறைக்க, அந்த இடத்தில் ரீலை மாற்றி அங்கிருந்து தொடரும் ஷாட்.

 

குறும்பு இவரது விரும்பு. லிஃப்டில் நுழையும்போது தன்னோடு வருகிறவரிடம் சத்தமாகப் பேசிக்கொண்டே வருவார் இப்படி. "... அந்தப் பொண்ணு கத்தியால குத்தப்பட்டுக் கிடக்கிறா. என் சட்டையெல்லாம் ரத்தம். ஸைரன் சத்தம் தூரத்தில கேட்குது.  எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே. நான் ஒரு கர்சீப்பை எடுத்து...." என்று அவர் சொல்லும்போது நாலாவது மாடி வர, லிஃப்டிலிருக்கும் மற்றவர்களைத் தலையைப் பிய்த்துக் கொள்ள விட்டுவிட்டு, நண்பருடன் வெளியேறுவார் கூலாக!


‘படிகள் 39’ படப்பிடிப்பின்போது நடிகை மேட்லின் கரோலையும்  நடிகர் ராபர்ட் டொனால்டையும் விலங்கால்  இணைத்து படம் எடுத்தபோது, சாவியைத் தொலைத்து விட்டது போல ஒரு நாள் பூராவும் இருந்து அவங்க தவிப்பை ரசித்தாராம்.


மிகப் பிரபலமான நடிகை இன்க்ரிட் பெர்க்மன் ஒருமுறை இவரிடம் ஒரு காட்சியை, "என்னால் அதை இயற்கையாகச் செய்ய முடியும்னு தோணலே.." என்றதும் இவர் சொன்னது: "அப்ப அதை அப்படியே  நடிச்சுடு!"  பின்னால் இன்க்ரிட் எல்லாரிடமும், "எனக்கு கிடைச்ச பெஸ்ட் அட்வைஸ் அதுதான்!" என்றார்.


‘பறவைகள்’  இவரின் மிகப் பேசப் (பார்க்கப்)பட்ட படம்.  கோபமுற்ற பறவைகள் அந்த நகரின் மக்களை துரத்தித் துரத்தி தாக்குவதுதான் கதை. டெஃபண்டி மாரியரின் நாவல் அது. படமாக்க எண்ணி வாங்கிய ஹிட்ச்காக் தன் திரைக்கதை ஆசிரியரிடம் (அவரும் ஒரு பிரபல நாவலாசிரியர் தான்) சொன்னார்: "நாவலைப்  படிச்சிட்டீங்களா? இனி கதையை மறந்துடுங்க. பறவைகள் மனிதர்களைத் தாக்கும் ஐடியாவை மட்டும்தான் நாம எடுத்துக்கறோம்!"


மலை உச்சியில் நாயகனும் நாயகியும் பேசிக் கொண்டிருப்பதாக   ஒரு காட்சியை எடுத்தார் ஹிட்ச்காக்.  அந்த சீனைப் பிடிக்காத நடிகர் தன் வருத்தத்தை திரைக்கதை ஆசிரியரிடம் வெளியிட, அவரோ தான் எழுதாத இந்த சீனை எதற்கு சேர்த்தார் ஹிட்ச்காக் என்று இவரிடமே கேட்டார். "நீங்கள் என்னை நம்புகிறீர்களா, அல்லது ரெண்டு சீன்ல வர்ற நடிகரை நம்பறீங்களா?" என்றார் இவர் சூடாக.

 

உதவி இயக்குனரான அல்மா ரெவில் மனைவியாகி வாழ்க்கையையும் இயக்க உதவினார். வாழ்நாள் சாதனை அவார்ட் பெறும்போது ஹிட்ச்காக் உதிர்த்த வார்த்தைகள் மிகுந்த ரசனை. "என் வாழ்வில் என்னிடம் அன்பு செலுத்திய, ஊக்கப்படுத்திய, உடனுழைத்த நான்கு பேருக்கு நன்றி சொல்லணும் நான். முதலாமவர் ஒரு சினிமா எடிட்டர். அடுத்தவர் ஒரு திரைக் கதாசிரியர். மூன்றாவது என் மகளின் தாய். நான்காவது ஒரு பிரமாதமான சமையல்காரி. இந்த நான்கு பேரின் பெயர் அல்மா ரெவில்!"


ஒரு சஸ்பென்ஸ் என்னவென்றால் மாஸ்டர் அஃப் சஸ்பென்ஸ் என்றழைக்கப்பட்ட இவர் நிஜவாழ்வில் ஒரு சின்ன சஸ்பென்ஸைக் கூட தாங்கிக்க மாட்டார் என்பதுதான். எழுதிய லெட்டரைக் கூட தானே எடுத்துச் சென்றுதான் போஸ்ட் செய்வாராம்.


இவரது ஸ்கிரிப்ட் ரைட்டர் Angus MacPhail -ம் இவரும் சேர்ந்து பிரபலப்படுத்திய ஒரு விஷயம்தான் மெக்கஃபின் (MacGuffin) என்பது. அப்படின்னா? ஒரு பொருள். கதையை நகர்த்த உதவணும் அது. கேரக்டர்களை ஓட வைக்கணும். அது ஒரு ரகசிய பைலாக இருக்கலாம். பணம், வெடிமருந்து, ஆபத்தான அதிசயமான ஏதோ ஒன்று. அது என்ன என்பது முக்கியமில்லை. கதை நகர்ந்து முன் செல்லச் செல்ல அதன் முக்கியத்துவம் குறைந்து மறைந்துவிடும். நிறைய படங்களில் அப்படி ஒரு மெக்கபிஃன் வரும்.


‘படம் தொடங்கிய பின் யாரும் திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,’ என்ற ஸ்டிரிக்டான அறிவிப்புடன் வெளியான 'Psycho' ஸ்க்ரிப்டைப் பார்த்துவிட்டு பாரமவுண்ட் உதட்டைப் பிதுக்கவே, சொந்தமாகத் தயாரித்துக் கொடுக்க, அவர்கள் வெளியிட்டார்களாம். நல்ல லாபம் அதனால் இவருக்கும்.


என்ன ஆச்சரியம்! உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் இவருக்கு ஒரு தடவை கூட இயக்குனருக்கான ஆஸ்கார் பரிசு கிடைக்கவில்லை. ஐந்து தடவை நாமினேஷன் கிடைத்தும்! ஆனால் இவரின் 'Rebecca' படத்துக்கு சிறந்த தயாரிப்பாளர் ஆஸ்கார் கிடைத்தது. பிரிட்டனின் ஸர் பட்டம் வரை உயரம் சென்றார். 1922-இல் டைட்டில் கார்டு எழுதி தன் திரையுலக வாழ்வைத் தொடங்கியவர் 1980-இல் தன் வாழ்க்கையின் எண்ட் கார்டை எழுதினார்.


உதிர்த்த முத்துக்கள்... 

‘கதையை விட அதைப் படமாக்கும் ஸ்டைலைத்தான் நான் நம்புவது. எதைச் செய்கிறீர்கள் என்பது அல்ல, எப்படி ஒன்றைச் செய்கிறீர்கள் என்பதே உங்களை ஒரு கலைஞன் ஆக்குகிறது. ஓவியன் ஒரு கூடை பழங்களை, வரைவதற்கான பொருளாக எடுத்துக் கொள்வதைப் போல, கதை கலைக்கு ஒரு விஷயம், அவ்வளவே.’


‘அது ஒரு நல்ல படம் என்றால், ஒலி நின்று விட்டாலும் ரசிகர்களுக்கு கதையில் என்ன நடக்கிறது என்று தெளிவாகத் தெரிய வேண்டும்.’

‘திரைக்கதையை எழுதி வைத்துக்கொண்டு ஏற்ற லொகேஷன் தேடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. லொகேஷன் முதலில். அதைக் கதையில் கொண்டு வர வேண்டும்.’


‘ஒரு கேரக்டரை புதியவர் செய்யாமல் பிரபல நடிகர் செய்வதால் ஆன நன்மை என்னவெனில் ஆடியன்ஸுக்கு இன்னும் அதிக உணர்வு கிடைக்கும், ஏற்கனவே அவரைத் தெரிந்திருப்பதால்.’


‘மர்மம், திகில் இரண்டும் மைல்கள் அப்பாற்பட்டவை. மர்மம் மூளை சார்ந்தது. யார் செய்தார்கள் என்று கொண்டுபோவது. திகில் என்பது உணர்வு சார்ந்தது.’


தமாஷாக சொன்னது, 'வால்ட் டிஸ்னிக்குத்தான் (கார்ட்டூன் படம் எடுக்கிறவர்) பெஸ்ட் நடிகர்கள் வாய்க்கிறது. அவருக்குப் பிடிக்கலைன்னா அந்த ஆளைக் கிழிச்சுப் போட்டுடலாம்.'


‘எல்லாமே அதிர்ஷ்டம்தான். நான் பயந்தவனாக, ஒரு கோழையாக  இருப்பது அதிர்ஷ்டம். ஏன்னா, ஒரு ஹீரோவால் ஒரு நல்ல சஸ்பென்ஸ் படத்தை எடுக்க முடியாது.’


‘முடிந்தவரை கேரக்டரின் சூழ்நிலையை நடக்கும் சம்பவங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக ‘North by Northwest’ படத்தின் காட்சி... ஏலம் நடக்கும் இடத்தில் வில்லன்கள் வளைக்கிறார்கள் Cary Grant-ஐ. எப்படித் தப்புவது? யோசித்து, கன்னாபின்னாவென்று அவர் ஏலம் கேட்கத் தொடங்கவே, அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறார்.’


‘ஒரு நல்ல படத்தை உருவாக்க மூன்று விஷயங்கள் வேண்டும்: திரைக்கதை, திரைக்கதை, திரைக்கதை.’


(‘அமுதம்' Feb.2008 இதழில் வெளியான எனது ‘சந்தித்ததும் சிந்தித்ததும்' -அத்: 12)

Janarthanan KB 

https://www.facebook.com/share/p/19BPprQuT6/