dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Thursday, July 30, 2026

Unnai thotta kaatru

 SPBயின் பல பாடல்களுக்கு பெண் பாடகிகள் வெறும் ஹம்மிங் மட்டும் செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஜானகியம்மா தான் இப்படி கூட்டு சேருவது வழக்கம்.... இதயம் ஒரு கோவில், வானுயர்ந்த சோலையிலே, கூட்டத்திலே கோயில் புறா, ஒரு குங்குமச்செங்கமலம், தேனருவியில் நனைந்திடும் மலரோ, வா வென்னிலா, வானம் கீழே வந்தால் என்ன... என்று சொல்லிக்கொண்டே போகலாம்....


ஏன் 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' பாடலே ஒரு வகையில் இதுபோல தானே!


ஜானகியை தவிர வசந்தா (இரண்டில் ஒன்று/ பொட்டு வைத்த முகமோ/ திருமகள் தேடி வந்தாள்/இன்று முதல் செல்வமிது...), சசிரேகா (இந்திர லோகத்து சுந்தரி), பூரணி ( வெள்ளம் போலே துள்ளும்), ரமோலா (படுத்தாள் புரண்டாள்), L.R. ஈஸ்வரி ( ஓராயாயிரம் முத்துக்கள்), L.R. அஞ்சலி (ராமன் ஆண்டாலும்), சைலஜா (மழை தருமோ என் மேகம்/ சின்னப்புறா ஒன்று..) இவர்களெல்லாம் SPB பாடலுக்கு ஹம்மிங் செய்திருக்கிறார்கள்...'மாலை மலர் பந்தலிட்ட மேகம்' பாடலில் SPB வரிகளை பாட வாணிமா ஸ்வரங்கள் மட்டும் பாடுவார்...


கேள்வி என்னவென்றால் பெண் பாடகி பாட, SPB வெறும் ஹம்மிங் மட்டும் செய்த பாடல் ஏதேனும் உண்டா??


இரண்டு நாட்களுக்கு முன் திருமதி சுவர்ணாவுடன் பேசிக்கொண்டிருந்த போது குமார் இசையமைத்த இந்த அழகான பாடல் நினைவில் வந்தது, இந்த கேள்விக்கு விடையும் வந்தது! 


சுவர்ணாம்மா முழு பல்லவியும் (SPBயின் ஹம்மிங் உட்பட) அழகாக பாடி காண்பித்தார்.


இதோ அந்த பாடல்... வாலி எழுதி, V.  குமார் இசையில் சுசீலாம்மா பாட, SPB ஹம்மிங் மட்டும் செய்கிறார்...


என்னைத் தொட்ட பாடல் உங்களையும் தொட...


https://youtu.be/S-_ttkRjXeE


இதை தவிர சுசீலாம்மா பாட, SPB ஹம்மிங் மட்டும் செய்த இன்னொரு பாடலும் உண்டு 😊


#songpostsfromme 


- Saravanan Natarajan

No comments:

Post a Comment