dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Saturday, August 22, 2026

சவுகார் ஜானகி

 சவுகார் ஜானகி!


90களில் அழகான மாலை ஒன்று நினைவில் வருகிறது. அப்போது நண்பர்கள் பிறந்தநாள் என்றால் Birthday Card வாங்கி எல்லோரும் அதில் ஓரிரு வரிகள் எழுதி கையெழுத்திடுவோம். எல்லோரும் சேர்ந்து ஒரு சின்ன பரிசு பொருள் வாங்கி கொடுப்போம். அந்த நண்பன் மற்ற நண்பர்களுக்கு ஏதாவது restaurantடில் Birthday treat கொடுப்பது வழக்கம். இனிமையான, கலகலப்பான தருணங்கள்!


ஒரு வருடம் (அநேகமாக 1995 என்று நினைக்கிறேன்) நண்பன் அச்சுதனின் பிறந்தநாள். அவன் அப்போது ஆசைப்பட்டுக்கொண்டிருந்த 'Full face helmet' ஒன்று அவனுக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தோம். ( அதற்கு ஒரு வாரம் முன்பு தான் தன் ஹெல்மெட்டை எங்கேயோ தொலைத்து விட்டு வீட்டில் அவன் அப்பா அவனிடம்  மிக கோபமாக இருந்த நேரம்.. அவன் பாஷையில் 'டின் கட்டிடாங்க, மச்சான்!' )


புது ஹெல்மெட் கிடைத்த சந்தோஷத்தில் பிறந்தாளை நாங்கள் வழக்கமாக கொண்டாட செல்லும் Palimar, Woodlands, Shanthi Vihar, Carnival... இதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு Harrington Roadடில் இருந்த 'Coconut Grove' ரெஸ்டாரெண்ட்டு கூட்டிச்சென்றான். 


Motorbike பார்க் செய்யும்போதே அந்த ambience எங்களை கவர்ந்தது. Tasteful interiors, attractive table arrangements... அழகுணர்ச்சி மிக்க ஒருவரால் வடிவமைக்கப்பட்டது என்பதை உணர்ந்துக்கொண்டேன். மரங்களும் செடிகள் சூழ்ந்த outdoor seating. ஒரு ஓரமான டேபிளாய் பார்த்து அமர்ந்துக்கொண்டோம். 


அது ஒரு வாரநாள்  என்பதால் என்னவோ கூட்டம் அதிகமில்லை. சிப்பந்தி ஒருவர் menu cards கொண்டு வந்து கொடுத்தார். எங்களில் பெரும்பாலானோர் vegetarian  என்பதால் சற்று ஏமாற்மாக இருந்தது. மெனுவில் முக்கால்வாசி அசைவ வகைகள், அதிலும் பிரதானமாக seafood varieties! Steward ஒருத்தர் order எடுத்துக்கொள்ள எங்கள் அருகில் வந்தார். நாங்கள் எங்கள் பிரச்சனை சொல்லி வேறு ரெஸ்டாரெண்ட்டுக்கு போகலாமென்ற முடிவோடு எழுந்தோம்.


அப்போது 'What can we serve you, Gentlemen?' என்றொரு மிக பரிச்சயமான குரல். தலை மேல் ஒரு chef அணிந்துக்கொள்ளும் உயரமான தொப்பி. தோளிலிருந்து முட்டி வரை ஏப்ரன்... என்று சிரித்த முகதுத்துடன் ஒரு பெண்மணி.... 


அவர்! சிங்கப்பூர் நைட்கிளப்பில் மிக நவீனமான உடையில் தோன்றி ஸ்டைலாக  பாடிய சித்ரா, தன் கணவன் இறந்துவிட்டான் என்று நம்பி சிறு வயது முதல் விதவையாக வாழ்ந்து எதிர்பாராமல் அவனை உயிரோடு கண்டும் தன் உரிமையை நிலைநாட்ட முடியாமல் தவித்த கமலா, மூக்குத்தியும் மடிசாரமுமாய் கிட்டுவுடன் சதா சண்டை போட்டுக்கொண்டிருந்த பட்டு, 'file'- 'life' என்று வார்த்தைகளில் விளையாடி 'அச்சா' என்று முடித்த கம்பீரமான கலெக்டர் ஜானகி, நடிகை பாமா வரவுக்காக இரவல் வைர நெக்லஸை மாட்டிக்கொண்டு தன் வயது தெரியவேண்டாமென்று குழ்தைகளை ரூமில் பூட்டி வைத்த பார்வதி, தன் மகள் கிருஷ்ணாவின் நல்வாழ்வை எண்ணி தன் வாழ்க்கையை தியாகம் செய்த தேவி, 'There is a time to be in and a time to be out!' என்று நளினமாக வலம் வந்த விமலா, water pipe மீது லாவகமாக ஏறி மாடியில் குதித்த மீனாக்ஷி துரைஸ்வாமி... 


'Ma'am... aren't you...?' என்று தடுமாறிய என்னை பார்த்து கலகலவென சிரித்தார். 'Yes, this is my restaurant... what will you all have?' என்று அன்பாக வினவினார். எங்கள் vegetarian preference அறிந்து... 'Leave it to me.. I'll take care of it personally...' என்று சொல்லிவிட்டு சுறுசுறுப்பாக உள்ளே விரைந்தார்.


சற்று நேரத்துக்கெல்லாம் ஆவி பறக்கும் soup வந்தது. It was rich and creamy. சவுகார் வந்தார். 'How do like it Gentlemen? This is Muligatawny soup... I got the recipe from Veeraswamy's in London...மிளகு தண்ணிய தான் Muligatawnyனு பேர் வெச்சாங்க British. It is now one of the signature dishes of Veeraswamy's! Of course, I have added my own ingredients!' என்றார்.


பிறகு வந்ததெல்லாம் Menu cardல் இல்லாத vegetarian items! ஒவ்வொன்றையும் நேரில் வந்து எங்களுக்கு விளக்கிவிட்டு ஆசையாய் அவரே பரிமாறினார். அந்த பிஸரெட்டும், தக்காளி பப்புவும், பிசிபேலாவும், குட்டி வங்கய கூராவும் இத்தனை வருடங்களுக்கு பிறகு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்த டின்னரை பற்றி நண்பர்களிடையே இப்போதும் பேசிக்கொள்வோம். அவ்வளவு ருசி! 


எதற்காக கூடியிருக்கிறோம் (Some special occasion?) என்று கேட்டறிந்து surprise ஆக எங்கள் டேபிளுக்கு ஒரு cake கொண்டு வரச்செய்து ( It's on the house, gentlemen!), அவரும் எங்களுடன் சேர்ந்து 'Happy Birthday' பாடினார்! நாங்கள் புறப்படும்போது 'You are a fine set of young men... Good Luck!' என்று பரிவாக வழியனுப்பினார்.


உயர்ந்த மனிதர் 🙏



- சரவணன் நடராஜன் 

https://www.facebook.com/share/p/1EnvhswkHi/

Thursday, August 20, 2026

Kanava idhu unmaiya

 கனவா....  இது உண்மையா....


ஜானகி அம்மாவை சென்ற வாரம் அவர்கள் இல்லத்தில் சந்தித்ததை பற்றி எழுத சில முறை ஆரம்பித்து , முடியாமல் அந்த முயற்சியையே விட்டுவிட்டேன். எதில் ஆரம்பிப்பது, எப்படி தொடர்வது, எதில் முடிப்பது என்பதற்கெல்லாம் மேலே அந்த பிரம்மிப்பை, அந்த கரை புரண்டோடிய உணர்சிகளை, இந்த அன்பை பெறுவதற்கு நான் தகுதியானவன் தானா...  அந்த தகுதிக்கு உடையவனாக என்னை நானே மேம்படுத்திக்கொள்ள வேண்டுமே என்ற ஆதங்கத்தை, அந்த நெகிழ்சி நிறைந்த தருணங்களை விவரிக்க வார்த்தைகள் வராமல் தடுமாறியது தான் நிஜம்.


இன்னும் கனவு போல் இருக்கிறது... அவருடன் இருந்த அந்த இரண்டு- இரண்டரை மணி நேரம். பாடல்களை பற்றி(யும்) பேசினோம்....


SPB- ஜானகி duet பாடல்களில் வித்தியாசமான Vocal Arrangements, அதாவது நான் நினைவுக்கூர்ந்த ஒவ்வொரு பாடலிலும் SPBயும் ஜானகியும் அந்தந்த பாடல் சூழ்நிலைக்கேற்ப எப்படி செயல்பட்டார்கள் என்பதை கொஞ்ச நேரம் அலசினோம்.


இது எப்படி ஆரம்பித்தது என்றால் என் மனதில் அந்த நொடியில் தோன்றிய, அப்பொழுது என் மனநிலைக்கேற்ற 'கனவா, இது உண்மையா.... மனமே, பதில் இல்லையா' என்ற பாடல்- படம்:  'சலங்கையில் ஒரு சங்கீதம்' தெலுங்கில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது. (Kalise Prathi Sandhyalo from Alapana).


SPB பாடியதும், ஜானகி அம்மா முதல் பல்லவியில் இரண்டு வரிகள் பாடுவார், முதல் சரணத்தின் முடிவில்  பல்லவி ஒரு வரி பாடுவார், பின் இரண்டாம் சரணத்தின் landing notesஸை பிடித்துக்கொண்டே பாடலின் முடிவில் முழு பல்லவியையும் பாடுவார். இடையில் ஜானகிக்கு சரணங்களில் humming மட்டும் தான்.... ஆனால் அதிலும் எத்தனை அழகுகள் சேர்த்திருப்பார் இந்த மாயக்காரி...


SPBயின் ஒவ்வொரு வரிக்கும் ஜானகியின் பதில்கள் சிலிர்க்க வைக்கும்....  ஒரு முறை கேட்கும்போது SPB பாடிய வரியை 'ஆமாம் சரி தான், எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!'  என்று ஜானகி ஆமோதிப்பபோல் இருக்கும், மீண்டும் கேட்கும்போது SPB வரிகளுக்கு ஜானகி  'ஆ.. அப்படியா!' என்று ஆச்சரியப்படுவது போல் தோன்றும்- இன்னும் சொல்லப்போனால் 'முத்தம் ஒன்று சிந்திவிட்டேன் அன்னமே' என்று SPB கதகதப்பாக அறிவிப்பதை தொடரும் hummingல் 'Oh wow!' என்று ஜானகி புருவம் உயர்த்தி ரசிப்பதுப்போலும், 'அது உள்ளிருந்து தீ வளர்க்கும் இன்னுமே' என்று SPB தணலில் தவிப்பதை தொடர்ந்து வரும் hummingல் ஜானகி தோளை குலுக்கி 'oh, come on... no big deal' என்று ஏளனம் செய்வதுப்போல் தோன்றும்.... 😊 மீண்டுமொரு முறை கேட்கும் போது SPBயின் கெஞ்சல்களுக்கு ஜானகி கொஞ்சல்களாக அரவணைக்கிறார் என்று தோன்றும், சில சமயம் இருவருமே ஏதோ ஒரு தவிப்பில் உருகுகிறார்கள் , ஒரு வேதனையில் வாடுகிறார்கள் என்பதுப்போல் தோன்றும்...  எத்தகைய வித்தகர்கள் இவ்விருவரும்! 


இளையராஜாவின் மன ஓட்டத்தை நம்மால் புரிந்துக்கொள்வது சாத்தியமில்லை. நாம் கீழே புழங்கும்  சாதாரண மனிதர்கள். அவர், இன்றல்ல, என்றிலிருந்தோ மேலவையில் சஞ்சரிக்கும் ஒரு உன்னதமான படைப்பாளி....


முகப்பிசையே (prelude) இல்லாமல் SPB குரலில் பல்லவியுடன் பாடல் நேரிடையாக ஆரம்பிப்பது இளையராஜா இந்த பாடலெங்கும் நிறைத்த ஆச்சரியங்களில் முதலாவது. 


மாயாமாளவ கௌளயின் வீச்சுகளைக்கொண்டு பிண்ணிய ஒரு மின்னலை நம் செவிகளுக்குள் ஏவுகுகிறார். பாடல் முழுதும், மறைந்திருக்கும் மாயமோகினிப்போல் ஒரு சலங்கை ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். 


முதல் இடையிசையில் மிருதங்கமும் தபலாவும் திரையை விலக்க, வீணையும் சிதாரும் புல்லாங்குழலும் சந்த்தூரும் புரியும் ஒரு மாயாஜாலத்திலிருந்து நாம் மீண்டு வருவதற்கு முன் அதே மிருதங்கம் ஆர்ப்பாட்டமும் அவசரமும் கொண்டு திரையை இழுத்து மூடுகிறது. 


சரணங்களில் பாலுவும் ஜானகியும் இந்த விந்தை உலகின் அரசன்- அரசி போல் இசை பரிவட்டங்களுடன் கம்பீரமாக வலம் வருகிறார்கள்.


இரண்டாவது இடையிசையின் அழகை வர்ணிக்க வெறு‌ம் வார்த்தைகளால் இயலாது. வீணைக்கும் சித்தாருக்கும் இடையே ராஜா அமைத்திருக்கும் counterpoint....  அடடா.... Sheer Brilliance! பின்பு புல்லாங்குழலும் சந்த்தூரும் வீணை- சிதாரின் அரியணையில் மிடுக்காக அமர்ந்து அந்த ஓட்டத்தை தோய்வில்லாமல் தொடர்கின்றன. 


அந்த 'கனவா' வார்த்தைக்குப் பின் ஒரு comma போட்டதுப்போல் ஒரு pause...  தனக்குத்தானே கேள்வி கேட்பதுப்போல்... வியப்பதுப்போல்....


'இது உண்மையா?' என்று SPB வினவும்போது ஒரு குழப்பத்தின் தவிப்பு தெரியும். பின்வரும் ஜானகியின் அந்த 'உண்மையா' ஒரு கூடுதல் அழுத்தத்துடன் வெளிப்படும்- இது உண்மையாய் இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் அங்கு மேலோங்கி நிற்க்கும்....


எப்பேர்பட்ட creativity!


என் கைப்பேசியில் பாடலை ஜானகி அம்மாவும் நானும் ஒன்றாக கேட்டோம்...  அவரும் என் கையைப்பற்றி கைப்பேசியை தாங்கியபடி இந்த பாடலை  கேட்டுக்கொண்டிருந்தார். என் கைகளில் சிறு உதறல்... கண்களில் சிறு குளம். அவர் முகத்தை பார்க்க துணிவில்லாமல் தலையை குனிந்து தரையை பார்த்துக்கொண்டிருந்தேன்... இன்னொரு கையால் என் தோளை மெல்ல  தட்டிக்கொடுத்தார்... அவர் முகத்தை தயக்கத்துடன் அண்ணாந்து பார்த்தேன்.... அவர் கண்களில் புரிதலும் இதழ்களில் வாஞ்சையான புன்னகையும் தவழ்ந்தன...  உணர்சிவசப்படும் ரசிகர்கள் அவருக்கு ஒன்றும் புதியதாக இருந்திருக்காது.....


அங்கு வார்த்தைகள் அவசியமில்லாததால் தொண்டையிலேயே தங்கிவிட்டன...


https://www.youtube.com/watch?v=wA4xtm60Tjw


🎵வாழ்க்கை போகும் போக்கிலே போகுதே...

வாழ்க என்று சொல்லடி வாழ்கிறேன்....🎵


- Saravanan Natarajan


#SPBJanakiuniqueduets

https://www.facebook.com/share/p/1G6M5Nvxxj/

Wednesday, August 19, 2026

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை..

 அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா..... 🙏


ஜானகியம்மா என்னிடம் அடிக்கடி சொன்னதது ' என்னமோ தெரியல சரவணா... சினிமா ஃபீல்ட்ல யார்கிட்டேயும் நான் touchல இல்ல... சாரதாவை தவிர.... சாரதா எனக்கு ஃப்ரெண்டுக்கு மேல... தங்கச்சி மாதிரின்னு கூட சொல்லலாம்.... நான்னா அவளுக்கு உயிரு....' 


ஜானகியம்மா மறைந்துப்போய் ( இப்படி டைப் செய்யும் போதே கை நடுங்குகிறது...) ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது... இன்னும் என் துக்கம் குறைந்தபாடில்லை... இப்படி ஆகிவிட்டதே என்று மனது ஆற்றாமையில் தவிக்கிறது...


ஜானகியம்மாவிடம் மிக நெருக்கமாக இருந்த சாரதாவை பார்த்தால் சற்று ஆறுதல் கிடைக்கலாமென்று நண்பர் சுந்தரிடம் கேட்டேன். என் மனநிலையை நன்கு உணர்ந்த அவர் அவரது நண்பர் ஸ்ரீதரிடம் சொல்லி இன்று சாரதாவை மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது அழகான வீட்டில் சந்தித்தோம்.


கைக்கூப்பி மிக அன்பாக வரவேற்றார், மூன்று முறை 'ஊர்வசி' பட்டம் வென்ற சாரதா. எளிமையான தோற்றத்திலும் கம்பீரமான ஓர் அழகு இருந்தது. வயது 81 ஆகிறதாம். சன்னமாக, ஆனால் துல்லியமாக அழகான தமிழில் பேசினார்.  


ஏற்கனவே என்னை பற்றி அவர்கள் சொல்லியிருந்ததால் கனிவான பார்வையுடன் என்னை பற்றி மென்மையாக விசாரித்தார். சில பொதுவான விஷயங்கள் பேசியப்பிறகு 'ஜானகியம்மா...' என்று மெல்ல ஆரம்பித்தேன். என் குரல் தடுமாறியது...


 சாரதாவின் முகத்தில் ஒரு நொடி பெரும் வலி வந்தது போல் ஒரு துடிப்பு... பிறகு சொன்னார்... 'ஜூலை 8 ஜானகியை பார்க்க மைசூருக்கு டிக்கட் புக் செஞ்சிருந்தேன்.. ஆனால் என் கூட துணையா வர இருந்தவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. அதனால postpone பண்ண வேண்டியதா போச்சு... அதுக்குள்ள 11th அன்னிக்கு ஜானகி போயிட்டா...'


தன்னால் சொன்னபடி வர இயலவில்லை என்பதை ஜானகியம்மாவிடம் சாரதா தெரிவித்த போது ஜானகியம்மா தன் ஏமாற்றத்தை கொட்டி அனுப்பிய வாய்ஸ் மெஸேஜை போட்டு என்னை கேட்க வைத்தார் சாரதா... "ஏம்மப்பா...' என்று ஜானகியம்மாவின் குரலை கேட்டதும் என் கண்கள் குளமாகின. 'Abba' ன்னுதான்  என்னை கூப்பிடுவார்... நெல்லூர் வழக்கம்...' என்றார் சாரதா.


60 வருடங்களுக்கு மேல் தழைத்து வந்த ஜானகியம்மாவுடனான தனது நட்பை பற்றி நிறைய பகிர்ந்துக்கொண்டார். இதே மகாலிங்கபுரத்தில் இசையமைப்பாளர் சலபதி ராவின் வீட்டில் ஜானகியம்மாவை முதல் முதலில் சந்தித்ததை பற்றி கூறினார். ஜானகியம்மாவின் மாமனார், மாமியார், கணவரை பற்றியெல்லாம் சுவாரசியமாக பேசினார். ஜானகியம்மாவின் கணவர் திரு ராம்பிரசாதின் சிபாரிசின் பேரில் தான் தன்னால் மலையாள சினிமாவில் நுழைய முடிந்தது என்று நன்றியுடன் நினைவு கூறினார்.


'மலையாளத்தில் எத்தனை அருமையான பாடல்களை உங்களுக்காக ஜானகியம்மா பாடினார்!' என்று வியந்தபடியே என் மனதிற்கு மிக நெருக்கமான'சூர்யகாந்தி சூர்யகாந்தி..' பாடலை பாட ஆரம்பித்தேன்... உடனே சாரதாவும் சேர்ந்து பாடினார்... அற்புதமாக... பல்லவியும் முதல் சரணத்தையும் முழுவதுமாக பாடினார்... சூரியகாந்தி பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கும் வரை இந்த பாடலும் காற்றலைகளில் தவழ்ந்து ஒலித்துகொண்டிருக்கும்...


https://youtu.be/5QvWHZN8hO8?si=0kMJZwFpHud6yweE


'மலையாளத்தில எனக்கு நூத்துல எண்பது பாட்டு ஜானகிதான் பாடியிருப்பார். நான் தயாரிச்ச ஒரு மலையாள படத்துக்கு முதல்ல appoint பண்ணியிருந்த music director ஜானகிக்கு ஒரு பாட்டுக்கூட கொடுக்கிறதா இல்ல. நான் அந்த music directorரையே மாத்திட்டேன்..' என்றார் சிரித்துக்கொண்டே. 


'தமிழிலும் எனக்கு ஜானகி கொடுத்த பிரமாதமான அறிமுகம் 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாட்டு...' என்றார் சாரதா. அந்த காவிய பாடலின் சில வரிகளையும் பாடினார்...


https://youtu.be/_p0aPLPRk0E?si=T8NsmPiYDrQkf2bI


'துளசி மாடம்' படத்திலும் சந்திரகாந்தாவும் நீங்களும் பாடுற பாட்டை சூலமங்கலம் ராஜலட்சுமியோடு சேர்ந்து ஜானகியம்மா தான பாடினாங்க..' என்றேன். 'எந்த பாட்டு.. கவனமில்லையே?' என்று கேட்ட சாரதா, 'மையைத் தொட்டு எழுதியவர்...' என்று நான் ஆரம்பித்தவுடனே 'என் மனதை தொட்டு எழுதிவிட்டார்..' என்று புன்னகையுடன் முடித்தார்...


https://youtu.be/X0GlMuQ5CgI?si=hmJEXEWlOC3ZcrLZ


'மழை மேகம்' படத்தில் ஜானகியம்மா அவருக்காக பாடிய துள்ளலான 'சொக்கு பொடி போட்டானா மச்சான் மச்சான்' பாடலையும் மென்மையான 'ஒரு கோடி சுகம் வந்தது' பாடலையும் நான் நினைவுகூற சந்தோஷமாக தலையசைத்தார்.


https://youtu.be/6Jy9edK8Rk4?si=yCO4kSfet7jHxtFR


https://youtu.be/KOn5RYHAvNk?si=uZZ660DBcjRIrWw8


இதற்கெல்லாம் மேலே என் மனதை முழுவதுமாக ஆட்கொண்ட பாடலொன்று சாரதாவுக்காக ஜானகியம்மா பாடியது. அதை என் அலைபேசியில் ஒலிக்கச்செய்து அவரிடம் கொடுத்தேன்... அந்த பொன்னூஞ்சலை கட்டி விட்டு சிறிது நேரம் அவரை அதில் ஆட்டி விட்டேன்...


https://youtu.be/uIfJJescPBY?si=dmcvxYjqjv05xpdi


சாரதாவின் கண்களிலிருந்து கொட்டிய கண்ணீர் என் கைகளை நனைத்தது... ஒரு விசும்பலுடன் ஃபோனை என்னிடம் திருப்பி கொடுத்தார். அவர் கைகளை தட்டிக்கொடுத்தேன். கனமான மௌனம்.


'ஒவ்வொரு நாள் காலேலயும் நான் walk போகும் போது சூரிய பகவான பார்த்து முதல்ல வேண்டிக்கிறது 'என் ஜானகிய பார்த்துக்கோ' னு தான்... எல்லாம் போச்சு...' என்று சொன்னார் உடைந்த குரலில். 


பிறகு இன்னும் நிறைய ஜானகியம்மாவை பற்றி பேசினோம். கிளம்பும்போது சாரதா சொன்னார் 'அழுதுட்டா மனசு லேசாயிடும்... ... உனக்கெல்லாம் சின்ன வயசு... ஜானகியோட ஆசி உனக்கு என்னைக்கும் இருக்கும்... எப்ப வேணும்னாலும் இங்க வா...' 


காரில் வீடு திரும்பும் போது மடை திறந்தது போல் கண்ணீர் கசிந்தது. நிஜமாகவே மனதில் பாரம் குறைந்தது போல் இருக்கிறது. இன்று அநேகமாக தூக்கம் என் கண்களை தழுவும்... அமைதி என் நெஞ்சில் நிலவும்... ஜானகியம்மா தொடர்ந்திருப்பார்... துணையிருப்பார் 🙏

- சரவணன் நடராஜன்

https://www.facebook.com/share/19SD2FN1zX/

Monday, August 17, 2026

பாட்டுரசிகனின்பரிதாபங்கள்

 ஒரு பாடல்ரசிகனின் பரிதாபங்கள் #16


🎵நாலுப்பக்கம் வேடருண்டு🎵


போன வெள்ளிக்கிழமை மாலை நண்பர் பிரசன்னாவின் அழைப்பின் பேரில் நண்பர் ஸ்ரீதர் வுட்லேன்ட்ஸ் ரெஸ்டாரென்ட்டில் ஏற்பாடு செய்திருந்த நண்பர்களின் சந்திப்பு. அற்புதமான மாலைப்பொழுதாக அமைந்தது. Kindred souls each one of them- great conversation, sumptuous repast,  laughter and bonhomie.


பிரசன்னாவை முன்பு சந்தித்திருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் தான் அவருடன் ஆறஅமர பேச முடிந்தது. அவரது இசை பரம்பரை, இசையில் நாட்டம், இளையாஜா பாடல்கள் மீது தீராத மோகம் என்று அழகாக விவரித்தார். ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தோம்.

  

ஒவ்வொரு நொடியும் சுவாரஸ்யமாக கழிந்துக்கொண்டிருந்த போது தான் சம்பவம் நிகழ்ந்தது. 

என் எதிரே அமர்ந்திருந்த OISG சங்கர் (எனக்கு பரிச்சமில்லாத)  தனது நண்பர் ஒருவரை பற்றி ஏதோ சொல்ல ஆரம்பித்தார்... என்ன சொன்னார் என்று சுத்தமாக நினைவு இல்லை. ஏனென்றால் அந்த நண்பரின் பெயர்-"ஆரண்ய"நிவாஸ்!


அந்த நொடியிலிருந்து நான் Woodlandsசிலிருந்து Wood landsசுக்கு கடத்தபட்டேன்!ஆம் Wood lands -அதாவது ஒரு காட்டு பகுதியில் அடுத்த நொடியில் இருந்தேன்.


அது அடர்ந்த காடு. போலிஸ்காரர்களிமிருந்து தப்பிவந்த டாக்டர் ரமேஷூம் (நடிகர் திலகம்) ஜானகியும் (சுஜாதா) காட்டின் நடுவில் வெட்டி அடுக்கப்பட்டிருந்த தேக்குமர wood logs கட்டுக்களுக்குள் ஒரு மிகச்சிறிய இடத்தில் மறைந்திருந்தார்கள், தங்களை மறந்திருந்தார்கள்....


//🎵ஆரண்யக் காண்டமிதை தொடங்கு

அயோத்தி பஞ்சணை போல் மயங்கு

சாகுந்தலம் படிக்க இறங்கு

தலையடியில் கை வைத்து உறங்கு

தலையடியில் கை வைத்து உறங்கு

அம்மம்மா என்னம்மா..🎵.//


என்று பாடியபடியே அங்கு வாணிம்மா என்னை ஆட்கொண்டார். SPB என்னை ஆறத்தழுவி வரவேற்க காத்திருந்தார். கவியரசர் எழுதிக்கொடுத்த வரிகள் மெட்டுக்குள் அழகாக வந்தமர்வதை மெல்லிசை மன்னர் மெச்சிக்கொண்டிருந்தார்!


இவ்வளவு நெருக்கமான காட்சியில்...🤭 பாவம் சுஜாதா என்று ஒரு நொடி பரிதாபப்பட்டேன்... படத்தில் ( அண்ணன் ஒரு கோயில்) சிவாஜி கண்ணாடி அணிந்து இருப்பாரே... இந்த நெருக்கமான காட்சியிலும் கண்ணாடி அணிந்திருந்தாரா என்று யோசிக்கலானேன். அதே நொடியில் இந்த காட்சிக்கு தேவையில்லாத ஒரு ஓவர்கோட்டை சிவாஜி அணிந்திருந்தாக ஒரு ஞாபகம். அதைக்கூட மன்னித்துவிடலாம், அவரின் பிங்க் கலர் பேண்ட் என் நினைவில் வந்து தொலைத்து.... என் தட்டில் இருந்த சப்பாத்தியை அந்த காஸ்ட்யூம் டிசைனர் என எண்ணிக்கொண்டு பீஸ்பீஸாக கிழித்து திருப்தியடைந்தேன்.


பாடல்வரிகள் மீண்டும் என் கவனத்தை ஈர்த்தன. கதாநாயகன் பெயர் ரமேஷ். கதாநாயகி பெயர் ஜானகி. காட்டினில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த கட்டத்தில் ரமேஷையும் ஜானகியையும் ராமாயணத்தோடு எவ்வளவு அழகாக பொருத்துகிறார் கண்ணதாசன்!


ஆரண்யக் காண்டம்! (பாடல் காட்சிக்கு இரண்டாவது வார்த்தை வேறொரு மொழியில் கூட ...ச்சே ச்சே மனது ஏன் இப்படி துஷ்ட வழியில் செல்லவேண்டும்🙈) வனவாசத்தில் மரக்குடிலில் ஜானகி ரமேஷை தன் மடியை அயோத்தி பஞ்சனை போல் பாவிக்கும்படி அழைக்கிறார். 


அடுத்து, ரகுவம்சம் எழுதிய காளிதாசன் தானே சாகுந்தலத்தையும் எழுதினார்!


🎵சாகுந்தலம் படிக்க இறங்கு

தலையடியில் கை வைத்து உறங்கு🎵


இதில் 'இறங்கு' என்ற வார்த்தை வரும் போது மெட்டும் சற்று கீழே இறங்கும். MSV🙏🙏


'தலையடியில் கை வைத்து உறங்கு' என்று இரண்டாம் முறை பாடும் போது, வாணிம்மா சற்று குரலை தாழ்த்தி நாணத்துடன் கிசுகிசுப்பதாக  தோன்றியது....


சில நிமிடங்கள் தற்சமயத்திற்கு மீண்டு வந்தேன். நண்பர் நாராயணன் orkut , blog காலங்களை பற்றி தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார். சங்கர் 'விடுதலை' பாடல்களை பற்றி தன் மேலான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இந்த பாடல் எனக்கு விடுதலை அளிக்காமல் துரத்திக்கொண்டே வந்து கைவிலங்கு பூட்டி மீண்டும் அந்த காட்டுக்குள் அழைத்துச்சென்றது. 


சரணங்களில் ரம்மியமான திலங் ஸ்கேல் மனதுக்குள் ஓடிமுடிந்ததும் அந்த interlude இசையில் சற்று நேரம் லயித்தது. பாடல் காட்சியில் சரணங்களில் சிவாஜி- சுஜாதவை focus செய்தாலும் இடையிசையில் காட்டுப்பாதைகளில் இவர்களைத்தேடி வேகமாக வரும்  போலிஸ் ஜீப்பை காண்பிப்பார்கள். ஜீப்பிலிருந்து அதிவேகமாக குதித்து இறங்கி தேடலை மேற்கொள்ளும் போலிஸ்காரர்களை காண்பிப்பார்கள். (அந்தகாலத்து போலிஸ்கார்கள் எப்படித்தான் அந்த லூஸான ட்ராயர்களை சீருடையாக ஏற்றுக்கொண்டார்களோ என்று ஒரு நொடி பரிதாபப்பட்டேன்) இந்த சஸ்பென்ஸான தேடலுக்காக MSV பாடலின் நடையில் திடீரென்று acceleratorரை அழுத்துவார். மிருதங்கமும் stringsசும் பரபரப்பாக தாண்டவமாடும்.


இந்த சுனாமியின் நடுவே ஒரு சாந்தமான சூழலை கொண்டுவர முடியுமா? முடியமே... வாணிம்மா 'ஆஆஆ....' என்று ஆரம்பித்து, SPB தொடர்ந்து,  வாணிம்மா முடிக்கும் அந்த ஹம்மிங்கை கேட்டுப்பாருங்கள்....இல்லை இல்லை...கேட்க மட்டும் செய்யுங்கள்.... ஆஹா.... ஆஹா...💖


மீண்டும் சுதாரித்துக்கொண்டு நண்பர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்று கவனிக்க முயற்சித்தேன். பிரபலமான ஒரு முகநூல் குழுவை பற்றி நகைச்சுவை கதைகள்- சிரித்து, ரசித்து கேட்டுக்கொண்டிருந்தேன். குருஜி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது காஃபி ஆர்டர் பண்ணலாமா என்று ஸ்ரீதர் கேட்டார். ஆர்வி ஆர்வமாய் தனக்கு பால் வேண்டுமென கேட்டவுடன் இந்த பாடல் என்னை மீண்டும் தன்பால் இழுத்துக்கொண்டது....


//🎵பாலோடு பாத்திரத்தை எடுத்து

பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து

தாகங்கள் தீரும் வரை குடித்து

சல்லாப நாடகத்தை நடத்து

சல்லாப நாடகத்தை நடத்து

அம்மம்மா என்னம்மா...🎵//


அந்த 'என்னம்மா'வை SPB ஒரு குறும்பான சிரிப்போடு உச்சரிப்பதை எண்ணி சிலாகித்துக்கொண்டேன். 


எவ்வளவு அழகான பாடல், ஆனால் நண்பர்கள் கூடிமகிழும் வேளை பார்த்துதானா அது என்னை இப்படி அலைக்கழிக்க வேண்டும்🤷‍♂️


பாடலின் ஒலி வடிவம்:


https://www.youtube.com/watch?v=lFrGDYnFx80


நான் இவ்வளவு சொல்லியும் பாடலை பார்த்தே ஆகவேண்டுமென்றால், Caveat Emptor, though😬:


https://youtu.be/eYKLxl-Gi28?feature=shared


சரி, எப்படியோ அந்த பாடலின் பிடியிலிருந்து என்னை விடிவித்துக்கோண்டு மீண்டும் வந்தேன், மீண்டு வந்தேன். எல்லோரும் மேஜையை விட்டு எழுந்து வெளியே வந்தோம். ஃபோட்டோ செஷன் முடிந்து இந்த இனிமையான சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்த பிரசன்னாவுக்கும் ஸ்ரீதர் சாருக்கும் நன்றிக்கூறி விட்டு கிளம்பினோம்.


நாராயணன் தன் புது 'ஓலா' பைக்கில் என்னை வீட்டில் இறக்கி விடுவதாக ஏற்பாடு. நண்பர்களில் யாரோ ஒரு புண்ணியவான் 'ஓலா' பைக் எப்படி இருக்கிறது என்று கேட்டு வைத்தார். 'ஓலா' பைக் பற்றி பேச்சு சற்று நேரம் தொடர்ந்தது. அவ்வளவுதான்..... நான் எப்போது பைக்கில் நாராயணன் பின்னால் ஏறினேன்.... வழியில் அவர் என்னிடம் எதையாவது பேசினாரா.... இறக்கிவிடும்போது நன்றி தெரிவித்து விடைப்பெற்றேனா எதுவும் நினைவில் இல்லை...


ஏனென்றால் நான் இப்போது இளையராஜாவிடமும்,  யேசுதாஸிடமும், (சற்று இறுக்கமாக) ஜென்ஸியிடமும் சிக்கிவிட்டிருந்தேனே....🤦‍♂️


//🎵ஓலா  ஓலா ஓலல்லா... 

ஓலா ஓலா ஓலல்லா.....🎵//


நான் பைக்கில் எங்கே வந்தேன்? நான் தான் மீன் கொடித் தேரில் ஊர்வலம் போன மன்மத ராஜனாக மாறிவிட்டிருந்தேனே.... 🙆‍♂️


https://youtu.be/fdnQExH7fZs?feature=shared


- பரிதாபங்கள் தொடரும்....

#பாட்டுரசிகனின்பரிதாபங்கள்

https://www.facebook.com/share/p/18sdunDZHZ/

Sunday, August 16, 2026

Jikki anniversary post

 🎵ஓராயிரம் பாடலும் பாடுமே...🎵


It is the anniversary today of the demise of Pillavalu Gajapathi Krishnaveni, our beloved Jikki. Let us commemorate the memory of this talented chanteuse by recollecting, not a song from the glorious 50s when she reigned over Tamil film music, but from a song from the early years of Ilaiyaraja. Let us also look at the songs that came Jikki’s way in the 80s and early 90s….


* * * * * * *


Vattathukkul Sathuram (1978/ MAM Films) had Latha, Sumitra, Saratbabu, Srikanth and Savitri essaying the lead roles. The film was produced by N.S.Mani and directed by S.P. Muthuraman.


It was a trend at that time to adapt popular novels for celluloid, and Maharsihi was one writer whose works were in demand just then. Bhuvana Oru Kelvikkuri, Saaindhadamma Saaindhaadu, Nadhiyai Thedi Vandha Kadal were all his stories. 


Vattathukkul Sathuram was based on Maharishi's story as well. The film explored a theme unusual for Tamil cinema- female bonding, and the ultimate sacrifice that Anu (Latha) makes, all for the sake of her friend Malathi (Sumitra). Sridhar's Avalukkendru Or Manam did traverse this path earlier, though the situations and sequences were wholly different. 


Babu's camerawork in Vattathukkul Sathuram was of particular appeal; the angles were innovative and the black & white frames austere and telling. Sure the proceedings had their fair share of melodrama, but the subtle and refined performances, especially that of Latha (fetching her the Filmfare Award) saved the movie from remaining yet another tearjerker. 


* * * * * * * *


Ilaiyaraja's music was, of course, another highpoint of the movie. Since the story revolved around the two female leads, all the 4 songs were by female singers. 'Itho itho en nenjile', the flagship number, remains a timeless ode to friendship. Tracing the years rolling by as Baby Indira and Baby Sumathi grow up to Latha and Sumitra, the opening lines are sung by Umadevi and Indira, and then S. Janaki and B.S.Sashirekha take over in scintillating style. 'Aada sonnare ellorum' is a breezy club dance number that Jency crooned in her very first year in Tamil film music. 'Perazhagu meni konden' is another club song, but the pathos which was just hinted at in 'Aada sonnare' becomes palpable in this song, rendered by Janaki with characteristic understanding. 


* * * * * * * * 


I sing to use the waiting, 

my bonnet but to tie, 

And shut the door unto my house; 

no more to do have I.. 

Till, his best step approaching, 

we journey to the day, 

and tell each other how we sang 

to keep the dark away. 


-Emily Dickinson (Time and Eternity) 


Anu falls in love with Malathi's brother. But he is disdainful of her dubious parentage and wards off her overtures callously. A smitten Anu refuses to see the writing on the wall and asks him to meet her at nightfall in the village outskirts. The unfeeling fool doesn't care for her tryst, and even worse, he doesn't care for her trust. For he complains to his mother of Anu's behaviour. The highly incensed mother draws the village elders and the group of indignant people march towards the riverbank where Anu is awaiting him with growing impatience.


So as she waits at the rendezvous, this is the song that Anu sings softly to herself, blissfully ignorant of the approaching humiliation and the calamitous path her life would take henceforth. She sings, with her heart overflowing with love, her dreams filled with happy tidings of their marriage, her eyes searching restlessly for the sight of her man. 


Right from the opening humming, Jikki brings to life the myriad musings that the song evokes. How poignantly the longings of a love struck heart find portrayal in her caressing rendition! And Ilaiyaraja shows his class in style, for even as the lines are sung tenderly as they ought to be, he fills the interludes with hurried, suspense-filled moments as the angle shifts to the gang of the infuriated villagers marching towards Anu, while a lone flute brings us back to the pining girl waiting in the woods…


Let us too revel in this captivating calm before the storm.


https://www.youtube.com/watch?v=apzH-KcDmIg


* * * * * * * * 


Who knows what made Ilaiyaraja think of Jikki and summon her to sing this song? By 1978, Jikki's glorious second innings was showing signs of waning; her last song at that point of time was perhaps way back in 1975- 'Manathukku theriyum' for A.M .Raja in Enakkoru Magan Pirappaan. 


So when it seemed that Jikki was being banished to oblivion yet again, Ilaiyaraja escorted her back to the limelight, and gave her second innings a rejuvenating extended lease. And….serendipity did happen- the veteran chanteuse did justice to the trust placed on her. The voice that ruled the 50s with unassuming majesty was dulcet as ever in 1978- ravages of age had not withered much the charm. This haunting song and the popularity it enjoyed showed that Jikki could not be written off so easily. While it wasn't as though she was inundated with work, some memorable songs did come her way in the subsequent years. 


And while Ilaiyaraja was the composer who kept her career afloat, there were others who employed her vocals in the coming years, though sparingly. 


'Naan unna nenachen' with SPB & Vani Jairam(Kannil Theriyum Kathaigal/ 1980/ Shankar-Ganesh):


https://www.youtube.com/watch?v=MizIU1PuDg4


'Andha ramanum indha seethaiyuim' (Paakku Vethalai/ 1981/ Malaysia Vasudevan):


https://www.youtube.com/watch?v=nDtIp132Jh4


'Raathiri pooththau kaattu roja' (Dhaayam Onnu/1988/ Ilaiyaraja):


https://www.youtube.com/watch?v=IWc_4zOF1uY


She sang for the aunt all through the 50s, now she sings for the niece in the 80s:'Ninaithathu yaaro nee thaane' with Mano (Paattukku Oru Thalaivan/ 1989/ Ilaiyaraja):


https://youtu.be/EAjZ9mczvxE


Poovodu kaathu vandhu' (Dharmam Vellum/ 1989/ Ilaiyaraja): 


https://www.youtube.com/watch?v=ezpM6Hyw4mg


'Oththaiyadi paadhaiyile' (Aatha Un Kovilile/ 1991/ Deva):


https://www.youtube.com/watch?v=tVYVcNoE5D4


 'Iravu naadagam iraval poo mugam' with Jamunarani (Annan Ennada Thambi Ennada/ 1992/ Gyan Verma):


https://www.youtube.com/watch?v=lNXsiCv8eM4


Selvame chithirame poonthere' (Pangaali/ 1992/ Ilaiyaraja):


https://youtu.be/oAaOSqOjzkc


Vanna vanna solleduthu' (Senthamizh Paattu/ 1992/ MSV-Ilaiyaraja):


https://www.youtube.com/watch?v=TtvQQw2dzOQ


 'Chinnamuthu chinnamuthu' (Chinnamuthu/ 1994/ Deva):


https://www.youtube.com/watch?v=rjDPAA8UeHE


'Kolam podum pen' (Muthal Manaivi/ Music released in 1994/ Gnanadevan):


https://www.youtube.com/watch?v=FLlHTT9GwhI


‘Paalirukkuthu Pazhamirukkuthu’ with Malaysia Vasudevan (Mapillai Thozhan/ music released in 1994/ Deva):

https://www.youtube.com/watch?v=32RyFT8B-gw


Jikki had some memorable songs in Telugu as well in this period, like 'Jaanaavule' in Aaditya 369 (1991) for Ilaiyaraja:


https://www.youtube.com/watch?v=SgDOziuTb_E


Lustrous flashes from dying embers…

https://www.facebook.com/share/p/188i8XKEER/

Thursday, August 13, 2026

Hitchcock birthday remembrance

 பீதிப் படங்களின் பிதா மகன்… 


கே.பி.ஜனார்த்தனன்


அப்பா கொடுத்தனுப்பிய கடிதத்தை அந்த போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தான் சிறுவன் ஆல்ஃப்ரட். வாங்கிப் படித்த அதிகாரி அவனை லாக்கப்பில் அடைத்துவிட்டாராம் பத்து நிமிடம். ‘தப்பு பண்ற பசங்களுக்கு இதுதான் கிடைக்கும்,’ என்றார் அவனை விடுவிக்கும்போது. நடுங்கிப் போன அந்தப் பையன்தான், தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் நம்மை ஒன்றரை மணி நேரம் நடுங்க வைத்த ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்! சஸ்பென்ஸுக்கு மறு பெயர். பீதிப் படங்களின் பிதாமகன்! 


Alfred Hitchcock... இன்று பிறந்த நாள்!


படத்தில் இவர் வைக்கிற சஸ்பென்ஸ் போக, படத்தில் இவர் எங்கே தலையைக் காட்டுகிறார் என்று கண்டுபிடிக்க ஆவலுடன் தேடுவார்கள் ரசிகர்கள். ஆம், ஒரு பாதசாரி, சக பயணி, கஸ்டமர் என்று தன் ஒவ்வொரு படத்திலும் ஒரு மினி மினிட் மின்னி மறைவார் இந்த இயக்குனர் நட்சத்திரம். வேறு பாத்திரங்களே வரமுடியாத ‘Life Boat’ படத்தில் கூட தலையைக் காட்டி விட்டார். எப்படி? ஹீரோ படிக்கும் பேப்பரில் ஒரு விளம்பரத்தில் போஸ் கொடுக்கும் மாடலாக! எந்தப் படத்தில் எந்த இடத்தில் வருகிறார் என்பதைத் தொகுத்து (Hitchcock Cameos) ஒரு வலைத்தளத்தில் போட்டிருக்கிறார்கள்.


லண்டனில் ஜனனம். கண்டிப்பாக வளர்க்கப்பட்ட குடும்பம். அப்பாவுக்கு பலசரக்கு கடை. கேபிள் கம்பெனியில் வேலை பார்த்தபோது சினிமாவால் ஈர்க்கப்பட்டவர், தன் டிராயிங் திறமையால் பாரமவுண்ட் ஸ்டூடியோவில் டைட்டில் வரையும் வேலை தேடிக்கொண்டார் ஓசைப் படாமல். மௌனப் பட காலம் அது.


‘மனைவியிடம் சொல்லி விடு’ என்ற படத்தின் டைரக்டர் திடீரென்று நோயில் விழ, மீதிப் படத்தை முடிக்கும் பொறுப்பு கிடைத்தது. திறமை திரையில் பளிச்சிட, அடுத்தொரு படத்தை இயக்கும் வாய்ப்பு! ‘The Lodger’(1927). அது பேர் வாங்கித் தர, படங்கள் தொடர்ந்தன. அதன் பிறகு தொப்பியில் இறகு செருகிக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. ‘Strangers on a Train’, ‘Rear Window’, ‘I Confess’, ‘Vertigo’, ‘Psycho’, ‘North By Northwest’, ‘The Birds’... ஒவ்வொரு படமும் விறுவிறுப்புக்கும், சஸ்பென்ஸுக்கும் பாடம் எடுத்தன.

 

சாதாரண மனிதனை கொண்டுபோய் ஒரு அசாதாரண சிக்கலில் வைப்பது தான் ஹிட்ச்காக் படத்தின் அண்டர் லைன். மௌனப் பட காலத்தில் உருவெடுத்தவர் இல்லையா? வசனம் இன்றிக் காட்சிகளை நகர்த்துவதில் சமர்த்தர். சுவர்களில் விழும் நிழலிலிருந்து கதவிடுக்குகளினூடே எட்டிப்பார்க்கும் காமிரா கோணம் வரை இவரின் ஒவ்வொரு ஷாட்டும் திகிலை வளர்க்கும். ஒரே அறையில் நடக்கும் ‘Rope.’ ஒரு படகுக்குள் நடக்கும் ‘Life Boat’... என்று இவரின் சோதனைகள் எல்லாம் சாதனைகள்.


அதிர்ச்சியை விட பீதியையே அளிக்க விரும்பினார். திடீரென்று ஒரு திருப்பத்தைக் கொடுத்து ஆடியன்ஸைத் தூக்கி வாரிப் போடச் செய்வது முதல் வகை. படத்தில் வரும் பாத்திரங்களுக்குத் தெரியாத விஷயங்களால் என்ன ஆவார்களோ என்று பதைபதைப்பை உண்டாக்குவதே இவர் விரும்பிய அடுத்த வகை. அவரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “ரெண்டு பேர் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேஜைக்கு அடியில் ஒரு வெடிகுண்டு. அது வெடித்தால் அதிர்ச்சி. வெடிக்கவில்லையானால்...?”


‘Psycho’ தான் மாஸ்டர்பீஸ். ஆபீஸ் பணத்தை திருடிக் கொண்டு ஓடும் அந்தப் பெண் ரோட்டோர விடுதியொன்றில் தங்குகிறாள். பாத்ரூமில் பதறப் பதறக் கொல்லப்படுகிறாள். தேடிவரும் தங்கையை விடுதிக்குச் சொந்தக்காரனான கொலைகாரனிடமிருந்து காப்பாற்றும் காதலன்... என்று விரியும் இந்தப் படத்தைப் பேசாத ரசிகன் இல்லை. பாராட்டாத பத்திரிகை இல்லை.


‘North by Northwest’ ரொம்பவே பிரபலம். உலகின் தலைசிறந்த டாப் டென் த்ரில்லர்களில் ஒன்று. வேறொரு நபர் என்று தவறாகக் கதாநாயகனைக் குறிவைக்கும் கும்பல் ஒரு பக்கம், துரத்தும் போலீஸ் மறுபக்கம்... இறுதியில் வரும் அந்த breathtaking சஸ்பென்ஸ்! கதையின் முடிச்சு இந்தியிலும் வந்து கலக்கியது.


‘Rope’ஒரே ஷாட் படம். படத்தில் மொத்தக் காட்சியும் ஒரு விருந்து மட்டுமே.  முதல் காட்சியிலேயே ஒரு கொலை விழுந்து சடலம் மேஜைக்கு அடியில் மறைக்கப்படுகிறது. அங்கேயே துப்பு துலக்கப்பட்டு... இப்படிப் போகும்  இடைவெளியின்றி நடக்கும் கதையை ஒரே ஷாட்டில் எடுத்தார். அப்போதெல்லாம் ஒரு ரோலில் பத்து நிமிட அளவே ஃபிலிம் இருக்கும் என்பதால், பத்தாவது நிமிட முடிவில் ஒரு இருட்டான பொருள் திரையை நிறைக்க, அந்த இடத்தில் ரீலை மாற்றி அங்கிருந்து தொடரும் ஷாட்.

 

குறும்பு இவரது விரும்பு. லிஃப்டில் நுழையும்போது தன்னோடு வருகிறவரிடம் சத்தமாகப் பேசிக்கொண்டே வருவார் இப்படி. "... அந்தப் பொண்ணு கத்தியால குத்தப்பட்டுக் கிடக்கிறா. என் சட்டையெல்லாம் ரத்தம். ஸைரன் சத்தம் தூரத்தில கேட்குது.  எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே. நான் ஒரு கர்சீப்பை எடுத்து...." என்று அவர் சொல்லும்போது நாலாவது மாடி வர, லிஃப்டிலிருக்கும் மற்றவர்களைத் தலையைப் பிய்த்துக் கொள்ள விட்டுவிட்டு, நண்பருடன் வெளியேறுவார் கூலாக!


‘படிகள் 39’ படப்பிடிப்பின்போது நடிகை மேட்லின் கரோலையும்  நடிகர் ராபர்ட் டொனால்டையும் விலங்கால்  இணைத்து படம் எடுத்தபோது, சாவியைத் தொலைத்து விட்டது போல ஒரு நாள் பூராவும் இருந்து அவங்க தவிப்பை ரசித்தாராம்.


மிகப் பிரபலமான நடிகை இன்க்ரிட் பெர்க்மன் ஒருமுறை இவரிடம் ஒரு காட்சியை, "என்னால் அதை இயற்கையாகச் செய்ய முடியும்னு தோணலே.." என்றதும் இவர் சொன்னது: "அப்ப அதை அப்படியே  நடிச்சுடு!"  பின்னால் இன்க்ரிட் எல்லாரிடமும், "எனக்கு கிடைச்ச பெஸ்ட் அட்வைஸ் அதுதான்!" என்றார்.


‘பறவைகள்’  இவரின் மிகப் பேசப் (பார்க்கப்)பட்ட படம்.  கோபமுற்ற பறவைகள் அந்த நகரின் மக்களை துரத்தித் துரத்தி தாக்குவதுதான் கதை. டெஃபண்டி மாரியரின் நாவல் அது. படமாக்க எண்ணி வாங்கிய ஹிட்ச்காக் தன் திரைக்கதை ஆசிரியரிடம் (அவரும் ஒரு பிரபல நாவலாசிரியர் தான்) சொன்னார்: "நாவலைப்  படிச்சிட்டீங்களா? இனி கதையை மறந்துடுங்க. பறவைகள் மனிதர்களைத் தாக்கும் ஐடியாவை மட்டும்தான் நாம எடுத்துக்கறோம்!"


மலை உச்சியில் நாயகனும் நாயகியும் பேசிக் கொண்டிருப்பதாக   ஒரு காட்சியை எடுத்தார் ஹிட்ச்காக்.  அந்த சீனைப் பிடிக்காத நடிகர் தன் வருத்தத்தை திரைக்கதை ஆசிரியரிடம் வெளியிட, அவரோ தான் எழுதாத இந்த சீனை எதற்கு சேர்த்தார் ஹிட்ச்காக் என்று இவரிடமே கேட்டார். "நீங்கள் என்னை நம்புகிறீர்களா, அல்லது ரெண்டு சீன்ல வர்ற நடிகரை நம்பறீங்களா?" என்றார் இவர் சூடாக.

 

உதவி இயக்குனரான அல்மா ரெவில் மனைவியாகி வாழ்க்கையையும் இயக்க உதவினார். வாழ்நாள் சாதனை அவார்ட் பெறும்போது ஹிட்ச்காக் உதிர்த்த வார்த்தைகள் மிகுந்த ரசனை. "என் வாழ்வில் என்னிடம் அன்பு செலுத்திய, ஊக்கப்படுத்திய, உடனுழைத்த நான்கு பேருக்கு நன்றி சொல்லணும் நான். முதலாமவர் ஒரு சினிமா எடிட்டர். அடுத்தவர் ஒரு திரைக் கதாசிரியர். மூன்றாவது என் மகளின் தாய். நான்காவது ஒரு பிரமாதமான சமையல்காரி. இந்த நான்கு பேரின் பெயர் அல்மா ரெவில்!"


ஒரு சஸ்பென்ஸ் என்னவென்றால் மாஸ்டர் அஃப் சஸ்பென்ஸ் என்றழைக்கப்பட்ட இவர் நிஜவாழ்வில் ஒரு சின்ன சஸ்பென்ஸைக் கூட தாங்கிக்க மாட்டார் என்பதுதான். எழுதிய லெட்டரைக் கூட தானே எடுத்துச் சென்றுதான் போஸ்ட் செய்வாராம்.


இவரது ஸ்கிரிப்ட் ரைட்டர் Angus MacPhail -ம் இவரும் சேர்ந்து பிரபலப்படுத்திய ஒரு விஷயம்தான் மெக்கஃபின் (MacGuffin) என்பது. அப்படின்னா? ஒரு பொருள். கதையை நகர்த்த உதவணும் அது. கேரக்டர்களை ஓட வைக்கணும். அது ஒரு ரகசிய பைலாக இருக்கலாம். பணம், வெடிமருந்து, ஆபத்தான அதிசயமான ஏதோ ஒன்று. அது என்ன என்பது முக்கியமில்லை. கதை நகர்ந்து முன் செல்லச் செல்ல அதன் முக்கியத்துவம் குறைந்து மறைந்துவிடும். நிறைய படங்களில் அப்படி ஒரு மெக்கபிஃன் வரும்.


‘படம் தொடங்கிய பின் யாரும் திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,’ என்ற ஸ்டிரிக்டான அறிவிப்புடன் வெளியான 'Psycho' ஸ்க்ரிப்டைப் பார்த்துவிட்டு பாரமவுண்ட் உதட்டைப் பிதுக்கவே, சொந்தமாகத் தயாரித்துக் கொடுக்க, அவர்கள் வெளியிட்டார்களாம். நல்ல லாபம் அதனால் இவருக்கும்.


என்ன ஆச்சரியம்! உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் இவருக்கு ஒரு தடவை கூட இயக்குனருக்கான ஆஸ்கார் பரிசு கிடைக்கவில்லை. ஐந்து தடவை நாமினேஷன் கிடைத்தும்! ஆனால் இவரின் 'Rebecca' படத்துக்கு சிறந்த தயாரிப்பாளர் ஆஸ்கார் கிடைத்தது. பிரிட்டனின் ஸர் பட்டம் வரை உயரம் சென்றார். 1922-இல் டைட்டில் கார்டு எழுதி தன் திரையுலக வாழ்வைத் தொடங்கியவர் 1980-இல் தன் வாழ்க்கையின் எண்ட் கார்டை எழுதினார்.


உதிர்த்த முத்துக்கள்... 

‘கதையை விட அதைப் படமாக்கும் ஸ்டைலைத்தான் நான் நம்புவது. எதைச் செய்கிறீர்கள் என்பது அல்ல, எப்படி ஒன்றைச் செய்கிறீர்கள் என்பதே உங்களை ஒரு கலைஞன் ஆக்குகிறது. ஓவியன் ஒரு கூடை பழங்களை, வரைவதற்கான பொருளாக எடுத்துக் கொள்வதைப் போல, கதை கலைக்கு ஒரு விஷயம், அவ்வளவே.’


‘அது ஒரு நல்ல படம் என்றால், ஒலி நின்று விட்டாலும் ரசிகர்களுக்கு கதையில் என்ன நடக்கிறது என்று தெளிவாகத் தெரிய வேண்டும்.’

‘திரைக்கதையை எழுதி வைத்துக்கொண்டு ஏற்ற லொகேஷன் தேடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. லொகேஷன் முதலில். அதைக் கதையில் கொண்டு வர வேண்டும்.’


‘ஒரு கேரக்டரை புதியவர் செய்யாமல் பிரபல நடிகர் செய்வதால் ஆன நன்மை என்னவெனில் ஆடியன்ஸுக்கு இன்னும் அதிக உணர்வு கிடைக்கும், ஏற்கனவே அவரைத் தெரிந்திருப்பதால்.’


‘மர்மம், திகில் இரண்டும் மைல்கள் அப்பாற்பட்டவை. மர்மம் மூளை சார்ந்தது. யார் செய்தார்கள் என்று கொண்டுபோவது. திகில் என்பது உணர்வு சார்ந்தது.’


தமாஷாக சொன்னது, 'வால்ட் டிஸ்னிக்குத்தான் (கார்ட்டூன் படம் எடுக்கிறவர்) பெஸ்ட் நடிகர்கள் வாய்க்கிறது. அவருக்குப் பிடிக்கலைன்னா அந்த ஆளைக் கிழிச்சுப் போட்டுடலாம்.'


‘எல்லாமே அதிர்ஷ்டம்தான். நான் பயந்தவனாக, ஒரு கோழையாக  இருப்பது அதிர்ஷ்டம். ஏன்னா, ஒரு ஹீரோவால் ஒரு நல்ல சஸ்பென்ஸ் படத்தை எடுக்க முடியாது.’


‘முடிந்தவரை கேரக்டரின் சூழ்நிலையை நடக்கும் சம்பவங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக ‘North by Northwest’ படத்தின் காட்சி... ஏலம் நடக்கும் இடத்தில் வில்லன்கள் வளைக்கிறார்கள் Cary Grant-ஐ. எப்படித் தப்புவது? யோசித்து, கன்னாபின்னாவென்று அவர் ஏலம் கேட்கத் தொடங்கவே, அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறார்.’


‘ஒரு நல்ல படத்தை உருவாக்க மூன்று விஷயங்கள் வேண்டும்: திரைக்கதை, திரைக்கதை, திரைக்கதை.’


(‘அமுதம்' Feb.2008 இதழில் வெளியான எனது ‘சந்தித்ததும் சிந்தித்ததும்' -அத்: 12)

Janarthanan KB 

https://www.facebook.com/share/p/19BPprQuT6/

Wednesday, August 12, 2026

S Varalakshmi Birthday Rememberance

 காதலாகினேன்....🎵


ஆந்திராவின் காகிநாடா அருகே ஜக்கம்பேட்டா என்ற சிற்றூரில் சரியாக நூறாண்டுகளுக்கு முன், அதாவது 1925ஆம் வருடம் இதே ஆகஸ்ட் 13 அன்று பிறந்து, சிறு வயதிலேயே சங்கீதம் கற்று, சென்னையில் குடிபெயர்ந்து, ஏழு வயதில் சினிமாவில் பாடி-நடிக்க தொடங்கினார் S. வரலட்சுமி.


முப்பதுகளில் தொடங்கிய அவரது திரைப்பயணம் தொண்ணூறுகள் வரையில் தொடர்ந்து.


தெலுங்கிலும் தமிழிலும் அற்புதமான வேடங்களை ஏற்று நடித்தார். அருமையான பாடல்களை பாடினார். C.R. சுப்புராமன் முதல் இளையராஜா வரை பல மேதைகளின் இசையமைப்பில் பாடினார் வரலட்சுமி. அவரின் பாடல்கள் மேல் எனக்கு தீராக்காதல். பட்டாடையில் ஜொலிக்கும் வைர இழைகளைப்போல் கம்பீரமான குரலில் மெய்சிலிர்க்க வைக்கும் பிருகாக்கள். மேல்ஸ்தாயியிலும் சுகமாக சஞ்சரிக்கும் லாவகம். காதல், ஏமாற்றம், பக்தி, சோகம், வாத்சல்யம் என்று உணர்ச்சிகளை அழகாக பிரதிபலிக்கும் திறமை. 


இதோ எடுத்துக்காட்டாக வரலட்சுமியின் சில பாடல்கள்:


1. காதலாகினேன் (ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி/ 1947)


https://youtu.be/5u6nH2mTHcU?feature=shared


2. நல்ல வாழ்வு என் உள்ளம் போலே (நவஜீவனம்/1949)


https://youtu.be/XbOqQ0ejqzQ?feature=shared


3. அவர் தானே என் ஆருயிர் வாழும் தெய்வம் (மோகனசுந்தரம்/1951)


https://youtu.be/3LT9j7IGp8c?feature=shared


4. ஏமாற்றம் தானா என் வாழாவிலே ( சக்கரவர்த்தி திருமகள்/1957)


https://youtu.be/kmfE62Z2KqU?feature=shared


5. சிங்கார கண்ணே (வீரபாண்டிய கட்டபொம்மன் /1959)


https://youtu.be/4zSFKpIQHjk?feature=shared


6. மனம் கனிந்தருள் (வீரபாண்டிய கட்டபொம்மன்/1959)- உடன் பாடியவர் V.N.சுந்தரம்


https://youtu.be/-qvxG8w7LUk?feature=shared


7. முத்துப்புகழ் படைத்து (சிவகங்கை சீமை/1959)- உடன் பாடியவர் (ராதா)ஜெயலட்சுமி


https://youtu.be/bHIG0uJQ0IQ?feature=shared


8. தென்றல் வந்து வீசாதோ (சிவகங்கை சீமை/1959)- உடன் பாடியவர் T.S. பகவதி


https://youtu.be/rGu1LMh1maM?feature=shared


9. தாமதம் செய்யாதே தோழி (வடிவுக்கு வளைகாப்பு/1962)


https://youtu.be/fqxnGMuG2as?feature=shared


10. வெள்ளிமலை மன்னவா (கந்தன் கருணை/1967)


https://youtu.be/vKB7IptwcwE?feature=shared


11. கவிதையில் எழுதிய காவியத்தலைவி (காவியத்தலைவி/1970)- உடன் பாடியவர் P. சுசீலா


https://youtu.be/TEe_D44e7EA?feature=shared


12. ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜசோழன்/1973)


https://youtu.be/hX21GDqXrDM?feature=shared


13. இந்த பச்சைக்கிளிக்கொரு (நீதிக்கு தலைவணங்கு/1976)


https://youtu.be/NqArumgu-QU?feature=shared


14. சொல்லவல்லாயோ கிளியே (கவரிமான்/1979)


https://youtu.be/u1pA6LTRLM0?feature=shared


15. உன்னை நான் அறிவேன் (குணா/1991)


https://youtu.be/brk2NpX_aD8?feature=shared


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/1bY3yXxw71/

S Janaki. Memories

 கலைந்திடும் கனவுகள்....

கண்ணீர் சிந்தும் நினைவுகள்....😔


//கண்ணா.... அதீ.... பாலசந்தர் படத்தில ஸ்ரீதேவிக்காக ஒரு ஹிந்தி பாட்டு பாடினேனே... விஸ்வநாதன் ம்யூசிக்ல...?


ஆமாம்மா.... tu hai raja... 


ஆங்.... அதேதான்... அத அனுப்ப முடியுமா? கேட்டு ரொம்ப நாளாச்சு...


Sure மா. இதோ அனுப்பறேன்...


https://youtu.be/7F9_Hl4fuKU?si=_0AtA7DTDGvHaUt1


எவ்வளவு நல்ல பாட்டில்ல? கடைசில அவ தன்ன மறந்து தமிழ்ல பாடிடறா பார்த்தியா? அதே ட்யூன்ல... 


பாலசந்தரும் விஸ்வநாதனும் சேர்ந்தாங்னா இப்படிதான் நல்ல நல்ல பாட்டா வரும். P.B. ஸ்ரீனிவாஸ் தான் இந்த பாட்ட எழுதினார்.... 


ராஜா ம்யூசிக்லக்கூட ஒரு தமிழ் படத்தில ஹிந்தி பாட்டு பாடிருக்கேன்.


ஆமாம்மா. நண்டு. அந்த பாட்டெல்லாம் கூட PBS தான் எழுதினார். பூபிந்தர் கூட நீங்க பாடின 'Kaise kahoon' பாட்டு ரொம்ப melodious ஆ இருக்கும்...


https://youtu.be/ATmt0jZXvpk?si=etE1Gvg5NDqNbhon


பூபிந்தர்... என்ன deep voice! ரொம்ப நல்ல Singer!


ஆமாம் மா. ம்யுசிக் படிச்சவர். கஜல் ஆல்பம் நிறைய பாடிருக்கார். R.D. Burman ட்ருப்ல கிட்டார் வாசிருக்கார். 'Chingari koi bhadke', 'Dum maao dum', 'Chura liya hai' பாட்டுக்கெல்லாம் பூபிந்தர் தான் கிட்டாரிஸ்ட்.  'Dil doondtha hai' பாட்டு அவர் பாடினது தான்...


ஆஹா... very nice song! மதன் மோகன் ம்யுசிக் தானே? கய்யாம் சாப் ம்யுசிக்ல கூட பூபிந்தர் பாட்டு ஒண்ணு ரொம்ப நல்லாருக்குமே....


'Kabhi kisi ko mukammal jahan nahi milta?'


ஆ.... அதே தான். 


அதே நண்டு படத்தில ஒரு mujra dance பாட்டு...  


ஆமாம் மா 'Hum hain akele' பாட்டு


https://youtu.be/2lG1xXBwBfM?si=-mQj5wrwZY82_3s4


இதில்ல கண்ணா .. இதுக்கு முன்னாடி வேற ட்யூன்ல ராஜா போட்டிருந்தார். P.B. ஸ்ரீனிவாஸூம் ரொம்ப நல்லா எழுதியிருந்தார். அதான் முதல்ல record பண்ணாங்க... ஆனா அத கேட்டுட்டு producers... directorலாம் அது ரொம்ப classஆ இருக்கு... வேண்டாம்... இன்னும் சிம்பிளா வேணும்னு கேட்டாங்க... அப்ப தான் இந்த 'Hum hain akele' பாட்டு வந்துது...


முதல்ல போட்ட பாட்டு 'Hum hain jawan' னு வரும்...


இந்த பாட்டு தான மா...


https://youtu.be/rfgTYPZhuIY?si=vkCoeHA7-h7luNJn


ஆமாம்... இதே தான்... எவ்வளவு அழகான ட்யூன்! ரொம்ப ரசிச்சு பாடினேன். ச்ச... சினிமால வராம போச்சு!


சினிமால வந்துதுமா. அதையும் நீங்க தான பாடினீங்க...


என்ன சொல்ற கண்ணா? 


ஆமாம் மா. ஒரு வருஷம் கழிச்சு ராஜா உங்கள இதே ட்யூன பாட வெச்சார்... கேளுங்க...


https://youtu.be/TRzjsgiHruw?si=bwCkOM0cidAoKY_j


ஆ.... எவ்வளவு ஜோரா இருக்கு! தமிழ் சிச்சுவேஷனுக்கேத்தா மாதிரி ராஜா ஆர்க்கெஸ்ட்ரேஷன்ல சின்ன சின்ன changes பண்ணிருக்கார்! திருப்பி திருப்பி கேட்டுக்கிட்டிருக்கேன்... இத மறந்தே போயிட்டேன்... ரொம்ப thanks கண்ணா.... //


இப்படியே இன்னும் எத்தனையோ பரிமாற்றங்கள் voice message ஆகவும் chat ஆகவும் ஃபோனில் பத்திரமாக இருக்கின்றன.... 


ஒரு மாதமாகிறது... ஒரு அழைப்புக்கூட வரவில்ஸை... இனி வரப்போவதுமில்லை....


💔


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/14jGceATbLn/


Monday, August 10, 2026

கொஞ்சம் நில்லடி - காதலித்தால் போதுமா

 க்வாண்டோ க்வாண்டோ க்வாண்டோவும் அரவிந்தும்😃


அரவிந்த் ஸ்கூலில் நேற்று 'Prom Evening'- அதாவது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் நடத்தும் ஒரு விழா. அரவிந்த் பங்குபெற்றது ஒரு க்ரூப் டான்ஸில். நிகழ்ச்சிக்காக அவன் வீட்டினிலிருந்து கிளம்பும்முன் எடுத்த படம் இது. 


நான் ஹைதரபாத்திலிருந்து திரும்பி வந்த மாலை அரவிந்தின் அறைக்குள் நுழைந்தபோது ஏதோ பாட்டை முணுமுணுத்து கொண்டே கண்ணாடி முன்னால் தலையையும் கை- கால்களை அசைத்து ஆடிக்கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் சற்று வெட்கத்தோடு ' Papa, you should knock!' என்று சினுங்கினான். நான் சிரித்துக்கொண்டே மன்னிப்பு கேட்டேன். 'What's going on?' என்று  கேட்டேன். அப்போது தான் இந்த நிகழ்ச்சி பற்றி கூறினான். மீண்டும் அந்த பாடலை அவன் பாட ஆரம்பித்தான்...


Tell me when will you be mine?

Tell me quando, quando, quando

We can share a love divine

Please don't make me wait again...


ஏதோ மறந்து போன நினைவுகள் என்னைத் தட்டியெழுப்ப, I suddenly found myself singing the next few lines...


When will you say yes to me?

Tell me quando, quando, quando

You mean happiness to me

Oh my love, please tell me when?


ஆச்சரியத்தில் என்னை பார்த்துக்கொண்டே அரவிந்த் தொடர்ந்தான், இறுதியில் நானும் சேர்ந்துக்கொண்டேன்...


I can't wait a moment more

Tell me quando, quando, quando

Say it's me that you adore

And then darling, tell me when?


'How do you know this song??' யாரும் கேள்விப்படாத (அவனை பொருத்தவரையில்) பழைய தமிழ் பாடல்களிலேயே மூழ்கியிருக்கும் எனக்கு எப்படி இந்த பாடல் தெரிந்திருக்கிறது என்று ஆச்சரியப்பட்டான் 😳


இந்த பாடலை நானும் சிறு வயதில் கற்றிருக்கிறேன் என்று கூறி, இந்த பாடலின் வரலாற்றை பற்றி ஒரு மினி லெக்சர் கொடுத்தேன் 💁‍♂️


Engelbert Humperdinck என்ற ஆங்கில பாடகர் பாடி, 1968ல் வெளிவந்த 'A Man Without Love' என்ற ஆல்பத்தில் வந்த மிக பிரபலமான பாடல் இந்த 'Quando Quando Quando' 


https://youtu.be/j2etakoV-rg?feature=shared


எவ்வளவு அழகான பாடல்! ஒரு சுவாரஸ்யமான தகவல்:  இந்த பாடகர் Engelbert Humperdinck பிறந்த ஊர்- நமது சிங்கார சென்னை!!


இந்த பாடலின் original ஒரு இத்தாலிய மொழி பாடலாகும். 1962ல் Tony Renis என்பவர் பாடி வெளிவந்த அந்த பாடல்:


https://youtu.be/0HNxJPIviDE?feature=shared


இன்னும் ஒன்றை சொல்லாமல் வீடியோவை மட்டும் காண்பித்த போது அரவிந்த் வாயடைத்து போனான்:


https://youtu.be/-XSiJgO4IO4?feature=shared


அவர்களின் டான்ஸ் WhatsApp குரூப்பில் அரவிந்த் இதை பகிர்ந்ததும் அவனது நண்பர்களுக்கும், ஏன் அந்த டான்ஸ் டீச்சருக்குமே ( அவரே ஒரு 2K kid  தான், பாவம்) ஒரே பரப்பரப்பு, excitement 😄 


பழைய இசையமைப்பாளர் வேதாவை பற்றி யாராவது அவர் ஹிந்தி பாடல்களை காப்பியடித்தவர் என்று சொல்லி கேட்கும்போது எனக்கு கடுங்கோபம் வரும். How dare they underestimate our Vedha? 


அவர் ஹிந்தி பாடல்களை மட்டுமா காப்பியடித்தார்?


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/1JE2fv21wm/

Wednesday, August 5, 2026

Eppodhum polirundhu - Burma Rani

 Today, The Lok Sabha held a two minute silence honoring the memory of victims of the atomic bombings in Hiroshima and Nagasaki on its 80th anniversary.


One thought led to another, and (you know me well!) it came about to this recall. 


During World War II,  Indian film producers were forced by the British Authorities to produce war propaganda movies in support of the allies. Burma Rani (1945) was one such Tamil movie produced by The Modern Theaters that revolved around a spy network operating in Japan-occupied Burma and the rescue of two British Indian Air Force Pilots. 


Presenting here the song 'Eppodhum polirundhu' from Burma Rani featuring the vocals of the sadly forgotten comedienne C.T. Rajakantham, who had formed a hugely successful comic partnership with Kali N. Rathinam in the 40s.


The titles of the movie do not mention the names of the lyricists or the music composer. Modern Theaters generally had a team of composers ( G. Ramanathan/ Susarala Dakshinamoorthy & others)...hence one or more of them could have worked on the score of Burma Rani. 


The song commences at around 1.08 in the video. The Japanese police come to know that the head of the spy network is a woman named Miss. Mangalam and all women having the said name are investigated. One of them happens to be a teacher in Rangoon, and the sequence shown is a police officer entering her classroom and watching the proceedings...The strict Miss Mangalam takes the attendance, enforces discipline and teaches her students, all in the course of this short hilarious song...


Then, when the clearly smitten Police Officer wishes to interrogate Miss. Mangalam, she dismisses the class and sets about diverting his questions and playing to his amorous glances with subtle coquetry and cunning. When she hears the signal from her co-conspirators, she sends away the police officer with a promise of a future rendezvous and goes down a secret staircase...


So, here then is this 80 year old film sequence and song...


Song: Eppodhum Polirundhu

Film: Burma Rani (1945)

Vocals:  C.T. Rajakantham & Chorus

Lyrics & Music: The Modern Theaters Team


https://youtu.be/iQ2a9kGb_7o?feature=shared


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/1EfD36B7iE/

Tuesday, August 4, 2026

Chandrababu Birthday Rememberance

 இங்கிருந்து அங்கே ஒரு ஜம்ப்.. அங்கிருந்து இங்கே ஒரு ஜம்ப். இங்குமங்கும் அணிலைவிட அதிவேகமாக தாவல்கள்... அது என்னமோ ரப்பர் மாதிரி இஷ்டத்துக்கு வளைகிற உடல்.. ஆம், சந்திரபாபு என்றதுமே அந்த அந்தர்பல்டிகள் தான் நினைவுக்கு வரும்.

வைரத்தை பட்டை தீட்டுவதுபோல நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் கொடுத்தவர். கதாநாயகனை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டு வாங்கிய ஒரே நடிகர். லட்சம் தொட்ட முதல் காமெடி நடிகரும்!


இன்று பிறந்த நாள்.


ஆரம்பித்து வைத்த முன்மாதிரிகள் அனேகம். அதில் ஒன்று காமெடி நடிகர் கதாநாயகனாக நடிப்பது. கண்ணதாசனின் 'கவலை இல்லாத மனிதன்.' மற்றொன்று காமெடி நடிகர் சோகக் காட்சிகளிலும் சோபிக்க முடியும் என்று காட்டியது. ‘குமார ராஜா’ ஒன்று போதுமே?


“கல்யாணம் என்பது எது வரை?”என்று கதாநாயகன் பாடினால் “கழுத்தினில் தாலி விழும்வரை!” என்று அழகாகப் பதில் பாட இவர்தான் வேண்டும்! ('பாத காணிக்கை')


பாபு - நாகேஷ் ஜோடி சேரும்போதெல்லாம் அமர்க்களம்தான்.‘கடவுளைக் கண்டேன்’ முதல் ‘அன்னை’ வரை.


பத்மினி படத்தை வைத்துக்கொண்டு “உனக்காக, எல்லாம் உனக்காக..” பாடினாலும், சாவித்திரி படத்தை வைத்துக்கொண்டு “கோவா மாம்பழமே..” பாடினாலும் மாலினி படத்தை வைத்துக்கொண்டு “பம்பரக் கண்ணாலே…” பாடினாலும் அலுக்கவே அலுக்காது அந்த ஸ்டைல்!


“காவேரி ஓரம், கவி சொன்ன காதல்…” பாடலில் பாபுவின் பால் ரூம் டான்ஸ் திறமையை பார்க்கலாம் என்றால் ‘பதி பக்தி’ பாடலில் ராக் ஸ்டைலை ரசிக்கலாம்.

ஆம், எந்த மாதிரியும் ஆட வல்லவர். ‘சபாஷ் மீனா’ வில் சரோஜாதேவியுடன் “ஏறுங்கம்மா.. ரிக்‌ஷா ஏறுங்கம்மா…” விலிருந்து ‘நீதி'யில் “முத்தமிழின் செல்வன் வாழ்க..” என்று சிவாஜி, ஜெயலலிதாவுடன் ஆடுவது வரை சலிக்காத நடனம் அவருடையது.

பொம்மலாட்ட பொம்மை போல் பாட வேண்டுமா? “நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே குருவி பிடிக்கப் போனேன்..” (காத்தவராயன்)

கையையும் காலையும் மடித்து இடுப்பை ஒயிலாக ஒடித்து அவர் ஆடும் அந்த சந்திரபாபு ஸ்டைல் தனி முத்திரை பெற்றது.


அந்தப் படம் மட்டும் நன்கு ஓடியிருந்தால் ஜோரான டைரக்டராகவும் ஜொலித்திருப்பார். ஆம், அவர் தயாரித்து இயக்கிய ‘தட்டுங்கள் திறக்கப்படும்’. கே.ஆர்.விஜயா, சாவித்திரி, மனோகர் நடித்த க்ரைம் த்ரில்லர் அது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுத்திருப்பார். ஷாட்டுக்களை அந்தக் காலகட்டத்துக்கு ரொம்பவே அட்வான்ஸாக அமைத்திருப்பார். சாவித்திரியும் மனோகரும் விவாதிக்கும் காட்சியில் அந்த பிரம்மாண்ட செட்டின் ஒரு மூலையில் தொடங்கி, சுற்றி நடந்து அதே இடம் வரும் டிராலி ஷாட்டும் சரி, ஆடும் நாற்காலியில் குழந்தையைத் தாலாட்டும் சாவித்திரியை கணப்புக்குள் இருந்து காமிரா எட்டிப் பார்ப்பதும் சரி, சட்டென்று நிமிர்ந்து ரசிப்போம்.


அப்புறம் அந்த அட்டகாச ஷாட்: மாடியிலிருந்து மனோகரின் உடலை ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு நம்மை நோக்கி வருவார்கள். அப்படியே அந்த ஸ்ட்ரெச்சர் நம் தலைக்கு மேலாக படியிறங்கும்போது அசந்து போவோம். (காமிரா: பி.எஸ்.லோகநாதன்) படமே ஓர் உயர் தரத்தில் இருக்கும். பாபு பாடும் அந்தப் பிரபல "கண்மணி பாப்பா... மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான் என்று சொன்னது தப்பா..."(எம்.எஸ்.வி.)


ஆரம்பத்தில் அவர் பாடியது அவருக்கே அல்ல. ஏ.வி.எம்மின் ‘பெண்’ படத்தில் எஸ். பாலச்சந்தருக்கு. "கல்யாணம்... உல்லாசமாகவே.. உலகத்தில் வாழவே.."

ஏன், சிவாஜிக்கே பின்னணி பாடியிருக்கிறார். “ஜாலி லைஃப்.. தம்பதி யானால் ஜாலி லைஃப்.” (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) பாடலில். “பெண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே.. பின்னாலே நீயும் ஓடுவே.. என்ன சொன்னாலும் பின் பாட்டு பாடுவே.. என்னை கண்டாலும் காணாத மாதிரி.. எதோ காணாததை கண்ட மாதிரி…” என்ற வரிகளை அவர் பாடும் விதமே அலாதி!


சந்திரபாபுவுக்கே மற்றவர்கள் பாடியதும் உண்டு. யார் யார்? ‘அன்னை’யில் டிஎம்எஸ். ( “லைலா மஜ்னு..”) ‘பறக்கும் பாவை’யில் ஜேசுதாஸ் (“சுகம் எதிலே இதயத்திலா..”) ஏன், சீர்காழி கூட… ("அலங்கார வல்லியே.." - 'சபாஷ் மீனா')


நிறைய காமெடி நடிகர்களைப் போலவே சொந்த வாழ்க்கை சற்றே சோகம் சிந்துவது. 46 வயதில் மறைவு என்பது நம்மைத் திகைக்க வைத்த ஒன்று.


“குங்குமப்பூவே..”வை துள்ளலாக பாடிய அதே குரல் தான், “ஒண்ணுமே புரியலே உலகத்திலே..”வை உருக்கமாகவும் 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..”யை அட்டகாசமாகவும் பாடுவது! அங்கே கிஷோர்குமார் என்றால் இங்கே இவர் பிரபலம் yodelling-இல்.


இவரது காமெடி டிராக்குக்காகவே கூடுதலாக ஓடிய படங்களும் உண்டு. உதா: ‘சகோதரி.’ விளம்பரத்தில் அந்த “நான் ஒரு முட்டாளுங்க..” தனி இடம் பெற்றது.


அவர் நாயகனாக நடிப்பதற்காக அவரே எழுதிய கதையாம் அது. அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பீம்சிங் திரைக்கதையில் படம் வந்து வெற்றியும் பெற்றது: ‘பாவமன்னிப்பு' 


சொல்ல வேணுமா? ‘சபாஷ் மீனா’வின் அந்த ஃபேமஸ் காட்சி! சிவாஜியின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், சந்திரபாபு டைப்பிஸ்ட் ஆகவும், பாபுவின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், இவர் டைப்பிஸ்ட் ஆகவும் சட்டென்று மாறும், தூள் கிளப்பிய சாகா வரம் பெற்ற காட்சி..


அதே படத்தில் சிவாஜியுடன் ஒரு காட்சி. பயந்த குரலில் தொடங்கி படிப்படியாக இறங்கி அழுகைக் குரலுக்கு அட்டகாசமாக மாறுவார். பாபு: “முதல்ல யார் வர்றாங்க தெரியுமா கண் முன்னால? அப்பா வர்றார். அப்புறம் அந்த கலெக்டர் அப்பாத்துரை வர்றார். (குரலில் பயம்.) அப்புறம் ஜெயில் வருதுடா.. அப்புறம் விலங்கு வருது... (குரலில் நடுக்கம்) அப்புறம் தூக்குக் கயிறு…” (குரலின் அழுகை)


டவுன் சந்திரபாபு கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது எரியும் கற்பூரத்தை முழுங்கும்போதும், கிராமத்து சந்திரபாபு டவுனில் இட்லியை பிளேட் பிளேட்டாக விழுங்கும்போதும் அந்த காமெடியிலும் வித்தியாசத்தை துல்லியமாக காட்டியிருப்பார்.


கைலியை தூக்கி முழங்காலில் செருகிக்கொண்டு இந்த காலிலிருந்து அந்த காலுக்கும் உடம்பை மாற்றி மாற்றி பேசிக் கலாய்ப்பது அவருக்கே உரித்தானது. மெட்ராஸ் பாஷையை அவர் போல யாரால் அத்தனை தத்ரூபமான பேசமுடியும்?


‘ராஜா’ படத்தில்... மீசையால் அவதிப்பட்ட சந்திரபாபு சலூனில் சென்று ‘மீசையை எடுத்துருப்பா!’ என்கிறார். அவன்: ‘சார், உங்க முகத்திலேயே அழகா இருப்பது மீசை ஒண்ணுதான்!’ இவர்: ‘அப்படின்னா மீசையை வெச்சிட்டு முகத்தை எடுக்க சொல்றியா?’


எப்ப எங்கே கேட்டாலும் மனது (சுற்றி யாருமில்லாவிடில் உடம்பும்) துள்ளும் பாடல்கள்! பத்மினி பிரியதர்சினியுடன் 'பாதகாணிக்கை’யில் வண்டலூர் ஜூவில் ஆடும் “தனியா தவிக்கிற வயசு.. இந்த தவிப்பும் எனக்கு புதுசு..”

ஜமுனா ராணியுடன் பாடும் “நீயாடினால் ஊராடிடும்.. நானாடினால் யார் ஆடுவார்..”. (பாண்டித்தேவன்)

“தடுக்காதே என்னை தடுக்காதே..”(நாடோடி மன்னன்)

“கொஞ்சம் தள்ளிக்கணும்..” (கடவுளைக் கண்டேன்)

“சிரிப்பு வருது சிரிப்பு வருது..” (ஆண்டவன் கட்டளை)

“உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு..” (மகாதேவி)

“எப்போ வச்சுக்கலாம்.. எப்படி வெச்சுக்கலாம்..” (பந்த பாசம்)

“நம்பள்கி பியாரி நம்பள் மஜா..” (பாதுகாப்பு)

ஒவ்வொரு தம்பதியையும் சிலிர்க்க வைத்த அந்தப் பாடல் சிகரம்! “பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது… ஐயா, பொறந்துவிட்டா..”

Janarthanan KB

https://www.facebook.com/share/1cTJR9cJh7/

Monday, August 3, 2026

Dakshinamoorthy Swami

 நல்ல மனம் வாழ்க🙏


Dakshinimamoorthi Swami departed to merge with the Cosmos and be one with the Celestial beings on this day in 2013.


Presenting here some personal anecdotes that I wrote as a part of an article on the great Swami and his immortal works...


* * * * * * * * 


In the late 80s/ early 90s, I used to frequent a video library called ‘Harini Videos’ in V.M. Street near my house. They had a decent collection of movies from the 70s, which I used to rent for their memorable songs. Once I asked for Nanda En Nila, and when the owner said that they didn’t have it, I asked for Oru Koyil Iru Deepangal. The owner, as was his wont, grumbled good naturedly on the never-heard-of movies that I seemed to want (Till the last I saw of him in 1990-91, he wouldn’t believe that there was a movie called Thunai Iruppaal Meenakshi!) and as I was leaving the library, a person who was sitting and chatting with the owner asked me why I wanted those two movies in particular. I explained to him about their common factor- Dakshinamoorthi’s wonderful music, and then spoke at length about Dakshinamoorthi’s works in Tamil. Imagine my embarrassment when at the end, the gentleman who had been listening to me so far with an indulgent smile introduced himself amusedly as Dakshinamoorthi’s son!


Another experience was thrilling, to say the least. In the late 90s, a journalist/writer was tracing the life and times of Tamil Film Music greats as a series in a magazine. Though much elder to me, he had become a good friend, bound as we were by a common passion for film music. We used to spend hours discussing the artistes and their works, and listening to their songs. One Saturday, I was listening to ‘Aandavan illa ulagamedhu’ and it struck me that my friend hadn’t written about Dakshinamoorthi yet. I gathered my collection of Dakshinamoorthi’s songs and hurried to his house. When I told him my desire, his eyes widened in amazement- for he had just returned from meeting Dakshinamoorthi Swami and was intending to write about him!


And a few years later, I caught a glimpse of the venerable Swami. Slight in build, spartan and simple in his attire, and though he seemed feeble due to his advanced years, he was erect in his bearing and majestic in his gait. I saw him from a distance at the inner sanctum of the Kapaleeswarar temple one evening, and gazed at him with wonder. As the lights from the lamps danced on his face, Swami, with his eyes closed in prayer, reflected an inner glow and serenity that reposed as a halo over his person.


Imagine my excitement, when good friend 'Ragapravaham' Sundar suggested that we go meet Swami in November 2010!  I was in Chennai on my annual vacation then and jumped with joy at the prospect. 


We visited Swami at his residence in Mylapore. Swami greeted us with old-world courtesy, treated us with utmost kindness and spoke to us animatedly at length on his various and varied experiences. A wry sense of humour that peeped in at unexpected intervals revealed his fun loving side. His eyes lit up when I helped him with some lines of a song that he was trying to recall. He sang some lines from few of his songs in the course of the conversation.... what a fine, stately voice he had, even at that age! His wife Smt. Kalyani and daughter Smt. Gomathishri joined the conversation... they ensured that we felt at home and were gracious in their hospitality.


I can never forget his response when we urged him to take care of his health. He said, “I am trying to become thinner, so that I may not be a burden to my pall-bearers when they carry my body!” Avatarapurushar! 


As we parted, we took the blessings of Swami. By a happy coincidence, it happened to be my birthday that day, and I felt an inexplicable rapture settle on me as we took leave of that divine soul.


Swami passed away on 2 August 2013 at the ripe age of 92. Co-incidentally it was on that very morning that a detailed article on him was published in The Hindu….. a quirky twist of fate indeed!


In August 2014, Sundar wished to celebrate the 25th year of Ragapravaham by presenting a special program. He wanted to present some not so frequently heard composers. He took three composers for himself, and allotted me three. And in my lot fell Swami.


Swami’s wife Smt. Kalyani, his daughter Gomathishri and their family attended the program. After I completed my presentation on Swami, Smt. Gomathishri came on stage and spoke few kind words in appreciation. She said that she was deeply moved that her father and his works were presented in such detail.


I was in the corridor outside the hall as Swami’s family was leaving. His grandson thanked me for the segment on Swami. Smt. Kalyani then held out her hands and as I clasped them, her moist eyes spoke the volumes that her lips left unsaid.... I was overwhelmed by emotion… Swami was smiling from above…


சுவாமியின் நினைவுகள் தேன் தமிழ்போல்.... வான் மழைபோல்..... சிறந்து என்றும் வாழ்க🙏


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/1BSERJVhC8/

Sunday, August 2, 2026

Kalyani Menon rememberance day

 I read with sorrow of the passing away of Kalyani Menon.


Here is an extract of my account of Kalyani Menon when I presented the lilting ‘Nee varuvaai ena’ from the movie Sujatha as part of the ‘Song of the Day Series’ in tfm page/ dhool way back in June, 2004. 


The Wikipedia page on Kalyani Menon is a word by word copy of my article….  I should have become immune to such blatant acts of plagiarism, as they have become too many in number to respond to or get perturbed about. 


“Nee varuvaai ena’ was a song written by Kannadasan, set to tune by M.S. Viswanathan and sung evocatively by Kalyani Menon. Sujatha (1980/ Sujatha Cine Arts) was the film from the Balaji stable that followed in the wake of the massive success of Billa. The film starred Shankar, Raveendar, Saritha, Rajalakshmi and others. I believe the film came and bit the dust even as Billa was nonchalantly notching record box office collections. The movie was a remake of the Malayalam film ‘Shalini Ente Koottukaari’ in which Shobha essayed the title role. 


The highpoints of MSV’s album were, of course, the two versions of ‘Nee varuvaaiyena’- the pleasing solo by Kalyani Menon, and a shorter pathos version, movingly rendered by Jayachandran—the thogayara that makes up most of the song, ‘Antharanganeerkkulathe poothezhundha thamaraigal’, should have been a celebrated landmark in Jayachandran’s career, as his voice, bereft of any instrumental accompaniment, makes a lingering, haunting statement. MSV fills this delightful song with dainty guitar bits and lilting flute notes. I particularly fall for the terrace-formation like tempo buildup that commences with ‘kangal urangavillai, imaigal thazhuvavillai’; and upon reaching the summit with ‘Vaaraayo,’ the gentle decent from the crescendo that the synthesizer facilitates back to the Pallavi. The charanams too soar towards the end in similar alluring arrangements. 


Towards the late 70s and later in the early 80s, some upcoming singers found themselves singing for MSV. T.L. Maharajan, Jolly Abraham, Seergazhi Sivachidambaram, B.S. Sasirekha, S.P.Shailaja, and even Bombay Jayshree bagged such prized opportunities. Kalyani Menon was among these beneficiaries, and though she has sung for many other composers, this song remains the most popular in her career.


https://www.youtube.com/watch?v=0mJ1J2VAtz0


Some years back, I was in Chennai in December, and found myself, albeit unwillingly, chauffeuring my mother to various concert halls. And thus one balmy morning, we entered the Balamandir German Hall a little after the concert had commenced. I was soon spellbound by the song (‘Evarani nirnayinchiri ra’, if I remember right), and was wondering about the vocalist who seemed quite familiar. And glancing at the program, I was jerked out of my lethargy when I realized that the singer who was effortlessly traversing those intricate Harikhambodhi passages was none other than Kalyani Menon! 


Kalyani Menon learned classical music from the famed guru ‘Sangeethabhooshanam’ M.R. Sivaraman Nair. She soon made a mark as a classical vocalist of merit and then gradually branched out into singing for films as well. ‘Kanneerin mazhayathum’, the song that Kalyani sang for the legendary composer M.S.Baburaj in Ramu Kariat’s 1977 film Dweep, is a tender, tremulous song, punctuated by moments of moving poignancy. She made her debut in Madras in 1977, through the famed Dhananjayan’s Malayalam dance drama ‘Magdalana Mariyam’ that was choreographed for Madras DD as part of the Vallathol Centenary celebrations. Kalyani sang Vallathol Narayana Menon’s lines that were set to tune by the Dhananjayans.


Kalyani’s first film song in Tamil was under Ilaiyaraja’s baton, and the song ‘Sevvaaname ponmegame’, which she sang along with Jayachandran, T.L. Maharajan & B.S. Sasirekha in K.Balaji’s Nallathoru Kudumbam (1979), did find frequent airtime. And Balaji continued to ensure that Kalyani sang in some of his films in the early 80s- ‘Nee varuvaaiyena’ (Sujatha/ 1980/ MSV), the hilarious ‘Devadas’ dance drama (‘Thanniya potta sandhosham pirakkum’) that she sang along with Kamal (Savaal/1981/MSV), the breezy duet with SPB- ‘Hey rajave un rajathi’ (Vaazhve Mayam/1982/Gangai Amaran) and the reflective ‘Vidhi varaindha paadhai vazhiye’ (Vidhi/1984/S-G). Kalyani also sang a memorable duet with K.J.Yesudas for Shankar-Ganesh – ‘Naan iravil ezhuthum kavithai muzhuthum’ (Suba Muhoortham/1983). 


Another song that stays on in memory, thanks to Radio Ceylon, is Kalyani’s wonderful duet with Jayachandran ‘Theril vandhaal devadhai, enai thedi vandhaaL thaaragai’ (from an unreleased film called Mookuthi Meengal).


https://www.youtube.com/watch?v=PMKhB5QW5RE


https://www.youtube.com/watch?v=Fwo0hnenRKs


https://www.youtube.com/watch?v=qXmQFaNqLOc


https://www.youtube.com/watch?v=5AQF_Ja3Qyw


https://www.youtube.com/watch?v=oSuAwZvLoS4


And Kalyani Menon was soon forgotten by Tamil Cinema, and would have probably remained so, had not A.R. Rahman brought her back to sing ‘Vaadi saathukkudi’ in Pudhiya Mannargal, and followed it up with giving her that ‘Omana thingal’ piece in ‘Kuluvalile’ (Muthu). Her later songs for ARR include ‘Alaipaayuthe kanna’ (Alaipaayuthe) and ‘Adhisaya thirumanam’ (Paarthaale Paravasam). Kalyani featured in ARR’s historical ‘Vandhe Maataram’ album; and also in Ussele, the album by Srinivas, in which Kalyani & Unnikrishnan sang Gopalakrishna Bharathi’s ‘Eppo varuvaaro’ set to a modern beat. 


Her talented son Rajeev Menon has never failed to acknowledge his mother’s constant encouragement and support for all his endeavors. As a mark of respect, when the audio cassette of his magnum opus Kandukkonden Kandukkonden was released in a grand function, Kalyani Menon was called to receive the first cassette from Kamalhasan. Kalyani had also made a brief appearance in the film as Aishwarya’s music tutor. Rajeev has also gone on record that the movie, though inspired from Sense & Sensibility, was also a reflection of their own coming up in life, as his widowed mother had single-handedly brought up her two sons.


Kalyani Menon  has left behind some exquisite imprints in the annals of Tamil film music. Om Shanthi🙏


https://youtu.be/oAq-8rmSgHU

https://www.facebook.com/share/p/1JseFBLohc/