dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Monday, July 20, 2026

Sivaji Ganesan remembrance day

Sivaji Ganesan- His Other Voices- 23 singers other than TMS


It is inevitable that when we think of Sivaji’s songs, the first name that pops up is TMS. What a magnificent partnership between the singer and the actor…. A greatly enriching, remarkably unique  association that transcended decades-  from Koondukkili & Thookku Thooki(1954) to Gnanapparavai (1991)… How Tiruchi Loganathan's refusal paved way for TMS to sing for Sivaji in 'Thookku Thookki', how after considering so many other singers, MSV came back to TMS for 'Andha naal mudhal', how Sivaji requested a day's time to come back with a style and swagger that could match TMS in 'Yaar andha nilavu', how TMS jogged around the studio to get the 'panting' effect for 'Andha naal gnabagam', how they came back to TMS for 'Palootti valartha kili' after getting Kovai Soundararajan to render it, how Sivaji wanted TMS to recite the English lines after the recording of 'Devane ennai paarungal' was completed with Joseph Krishna reciting the lines....vignettes surrounding the actor and singer are many that old-timers repeat with relish.   None understood the thespian and his needs better than TMS. Indeed, for many of us, TMS seemed merging into Sivaji when he sang for him….the dynamics were just perfect… As a child, I remember being disillusioned when I first saw the face of TMS in a poster outside the Apparswami temple in Mylapore...I had expected him to even resemble Sivaji :)


However, there were other singers, both before and during TMS’s time, who got to sing for Sivaji, and many of such instances were memorable, resulting in some lovely songs. Of course, acceptance would have been grudging, and perhaps not forthcoming, for the absence of TMS- his majesty and empathy would have would have doubtless found stiff resistance in general perception…


Yet, as I lay awake last night, I commenced listing the singers, other than TMS, who did get to sing for Sivaji Ganesan. And that becomes the subject of today’s post....Presenting the list below, with many of the songs close to my heart: 


1. C.S. Jayaraman in Kuravanji:


https://www.youtube.com/watch?v=LPaZhIljwyE


2. Ghantasala in Tenali Raman:


https://www.youtube.com/watch?v=o6uyx-Nt3Zs


3. A.M. Raja in Ethirparathathu:


https://www.youtube.com/watch?v=ioWLx2jyCD4


4. Chandrababu in Kalyanam Panniyum Brahmachari:


https://youtu.be/9-7KheawC4k?si=_giBfL9BvT6SMj4O


5. Madhavapeddi Sathyam in Mangaiyar Thilakam:


https://youtu.be/MdaOL6jyhLo?si=PIzoqKzIJhxH6_AV


6. S.C. Krishnan in Raja Rani:


https://youtu.be/f57AvVWAlRw?si=8dRZ2prgjsuXl7PJ


7. V. N. Sundaram in Veerapandiya Kattabomman:


https://www.youtube.com/watch?v=0WBAyd6iRxo


8. Trichy Loganathan in Kalvanin Kadhali


https://youtu.be/xTzMJb1d-zE?si=a_NJfzPApnt1pYUS


9. G.K. Venkatesh in Sethamarai (could not find a video of the movie). ‘Ezhaiayi nin kovilai’ (Panam) is another fantastic number by GKV- again video of the movie does not have the song. 


https://www.youtube.com/watch?v=UAFQI5rd_Ck


10. Seergazhi Govindarajan in Kappalottiya Thamizhan:


https://www.youtube.com/watch?v=4fPff1_R7mA


11. P.B. Srinivas in Naan Sollum Ragasiyam:


https://www.youtube.com/watch?v=yiOrWn5ksxc


12. T.A. Mothi in Sabash Meena:


https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y


13. MSV in Paava Mannippu (only humming)


https://www.youtube.com/watch?v=vOm1VbH843A


14. Ajit Singh in Thavapudhalvan:


https://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk


15. Saibaba in Ennaippol Oruvan:


https://youtu.be/fznah5TS8kE?si=blz7vs_6chKv3zZS


16. SPB in Sumathi En Sundari:


https://www.youtube.com/watch?v=6MT758TvZnM


17. Kovai Soundararajan in Dr. Siva:


https://www.youtube.com/watch?v=X8JDMne6e4w


18. Yesudas in Andaman Kadhali:


https://youtu.be/SBPrtLchBG8?si=e8KEcIsPcgoB7GmQ


19. Jayachandran in Rishimoolam:


https://www.youtube.com/watch?v=uKOWOGren-8


20. Malaysia Vasudevan in Imaigal:


https://www.youtube.com/watch?v=xqpTjeUxwRc


21. Ilaiyaraja in Muthal Mariyathai:


[https://www.youtube.com/watch?v=K5x0UZ6Lg9c](https://www.youtube.com/watch?v=K5x0UZ6Lg9c)


22. Mano in Thampathiyam:


https://youtu.be/kaNLRVnnYfw?si=MD1G4SA-qbdxJM8_


23. Sivaji Ganesan singing for himself in Thevar Magan:


https://www.youtube.com/watch?v=u_6YmmXLOP8


Also in Raja Raja Chozhan:


https://youtu.be/q09dYjrH2LU?si=PPQDP3aXmN1BH3vC


Request friends to let me know if I have left out any other singer who sang for the Nadigar Thilakam.


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/14eUaL1V2pY/


Saturday, July 11, 2026

CHANDRABOSE - BIRTHDAY REMEMBERANCE

 அழகான சந்தங்கள்

அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள்
யார் தந்தது 🎵
சந்திரபோஸின் பிறந்த நாள் இன்று. அவரின் இசைப்பயணத்தை தூள் தளத்தில் நெடுந்தொடராக 2017ல் பதிவிட்டேன். அவரை 2010ல் சந்தித்ததை பற்றியும் அவருடன் அவரின் பாடல்களை பற்றி ரசனைகளை பகிர்ந்ததை பற்றியும் கூட விலாவாரியாக எழுதியிருக்கிறேன்.
பின்- எழுபதுகளிலும் எண்பதுகளிலும் திரைப்பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் தங்கள் இதயங்களில் சந்திரபோஸுக்கு நிச்சயமாக ஓர் தனியிடம் ஒதுக்கியிருப்பார்கள்.
இளையராஜா விஸ்வரூபம் எடுத்து தமிழ் திரையிசையை ஆண்டு வந்த காலகட்டங்களில் சந்திரபோஸும் கிடைத்த படங்களிலெல்லாம் அழகான பாடல்களை தந்துக்கொண்டிருந்தார்.
ஏவிஎம், பாலாஜி, குகநாதன் போன்ற பெரிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு வரிசையாக இசையமைத்தார். அந்த படங்களின் பாடல்கள் எல்லோரும் அறிந்ததே. அந்த 'மசாலா' படங்களுக்கு தேவையான துள்ளல் பாடல்களை வஞ்சனையின்றி கொடுத்த அதே வேளையில் அதே படங்களில் ஓரிரு அற்புதமான மெலடி பாடல்களையும் சேர்க்க தவறவில்லை சந்திரபோஸ்.
இவைகளை தாண்டி என் மனதில் சந்திரபோஸ் என்றால் நினைவில் வருபவை அதிக விளம்பரம் இல்லாமல் வந்த சின்ன-பட்ஜெட் படங்கள் அல்லது வந்த சுவடு தெரியாமல் தோல்வி அடைந்த படங்களில் சந்திரபோஸ் அமைத்த அற்புதமான பாடல்கள்.
'ராஜாத்தி ரோஜாக்கிளி' என்றொரு படம். அதில் யேசுதாஸ்- ஜானகி பாடிய 'ஓடையின்னா நல்லோட' பாடலை கேட்கும் போதெல்லாம் மனதை மயிலிறகால் தடவித்தருவது போல் ஒரு இதம் நம்மை ஆட்கொள்ளும். அதே படத்தில் 'யாரோ..மன்மதன்' பாடலை பாடியப்பின் SPB சந்தோஷத்தில் சந்திரபோஸை கட்டித்தழுவினாராம்.
'எங்கள் தாய்குலமே வருக' என்ற படத்தில் 'வான் வந்து தேன் சிந்தும் நேரம்' பாடலை இதைவரை நீங்கள் கேட்டதில்லை என்றால் தயவுசெய்து உடனே கேளுங்கள். 'கோயில் யானை' படத்தின் 'பூவே தாழம்பூவே' பாடலில் SPBயும் ஜானகியும் செய்யும் குறும்புகளில் கிறங்கி கிடப்பதில் தான் எத்தனை சுகம்! 'மாதவி வந்தாள்' படத்தின் 'மாலை முத்து மாலை' பாடலில் சுசீலாவின் குரலினிமைகள் எவ்வளவு அழகாக வெளிப்படுகின்றன! 'மாமியார்கள் ஜாக்கிரதை' படத்தில் SPB பாடிய 'விழிகளே விழிகளே' பாடலை கேட்டால் புரியும் சந்திரபோஸின் உன்னதம்.
'காளிச்சரண்' படத்தின் ' தொடலாம் தொட்டாலும் யோகம் தான்' பாடலை அந்த படம் வந்துப்போன பல வருடங்களுக்கு பிறகும் வாணிமா முனுமுனுத்ததை நான் கேட்டிருக்கிறேன். 'இது எங்கள் ராஜ்ஜியம்' படத்தின் 'தங்க கொலுசு' பாடலும் 'பொண்ணு புடிச்சிருக்கு ' படத்தின் 'ஆவணி மாசம் பொறக்கட்டும்' பாடலும் நிச்சயமாக மலேசியா வாசுதேவனின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம்பெறும்.
'கரையை தொடாத அலைகள்' என்றொரு படம். பழம்பெரும் இயக்குனர் P. மாதவன் தன் மகன் அருணை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுத்த படம். ரசிகர்களில் மனதை தொடாமல் சென்றுவிட்டது. ஆனால் அதில் SPB பாடிய இரு பாடல்கள்- காதலின் குதூகலத்தை குறும்பாக சொல்லும் 'மாவெடுத்து பூக்கோலம்' மற்றும் காதல் தோல்வியை விரக்தியோடு சொல்லும் 'பூ பறிக்கும் நேரத்திலே' மனதை தொட்டது.
'காலமெல்லாம் உன் மடியில்' படத்தை பலர் மறந்திருக்கலாம்... ஆனால் அதன் 'மன்மத ஓடங்களே' மற்றும் 'கார்மேகம் ஊர்கோலம் போகும்' பாடல்களை மறக்க முடியுமா? 'செல்வாக்கு' படத்தில் 'இளமையின் நினைவுகள் ஆயிரம்' என்று ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடுவதை கேட்கும்போதெல்லாம் கனவில் மிதப்பதுப்போல் இருக்கும். 'வடிவங்கள்' படத்திற்காக 'நிலவென்ன பேசுமோ... இளங்காற்று வீசுமோ... விழியோடு உறவாடும்
மொழியென்ன மௌனமோ…' என்ற பாடலில் சந்திரபோஸின் குரல் செவியில் விழுந்த கணம் இதயத்தை போய் துளைக்கும்.
இவைகளை போல ஒரு மிக இனிமையான பாடலொன்றை இன்று கேட்கலாமா? 1988ல் வலம்புரி ஜான் இயக்கத்தில் வெளிவந்த 'அது அந்த காலம்' படத்திலிருந்து. வலஜி ராகத்தின் சுகங்களை ஸ்வரங்களும் சாகித்யமுமாய் என்ன ஒரு இசைவிருந்து படைத்திருக்கிறார் சந்திரபோஸ்! யேசுதாஸும் வாணி ஜெயராமும் அற்புதமாய் பாடியிருக்கிறார்கள். ஒரு முறை வாணிமாவிடம் இந்த பாடலை நான் நினைவுக்கூர்ந்த போது, பரவசத்தில் அவர் கண்களில் சிறு துளிகள் எட்டி பார்த்தன...
அது... அந்த காலம்...

Wednesday, July 8, 2026

Janet Leigh - Psycho

 அந்தப் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ஜீவனாம்சம் கொடுக்கத் திணறிக் கொண்டிருக்கும் தன் காதலனை மணம் செய்து கொள்ள பணம் வேணும். கம்பெனியில் நம்பி ஒப்படைத்த நாற்பதினாயிரம் டாலரை அபேஸ் பண்ணிக் கொண்டு  காரில் விரைகிறாள் அவள். 


மழை, புயல்..  மோட்டல் ஒன்றில் தங்க வேண்டியதாகிறது. நார்மல் அல்லாத நார்மன் தான் அதன் ஓனர். ஷவரில் குளிக்கும் போது மெல்லக் கொல்லப் படுகிறாள்... ஆம், அதேதான். ‘Psycho.’ 

ஹிட்ச்காக்கின்  ஹிட்  டாக்கி.


‘மெயின் பிக்சர் ஆரம்பித்தபின் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று தியேட்டர்களில் அறிவிக்கப்பட்ட அந்தப் படத்தில் ஹீரோயினாக வந்தவர்...


Janet Leigh... இன்று பிறந்த நாள்.


அந்த சின்னதானாலும் முக்கியமான வேடத்திற்கு ஆஸ்கார் நாமினேஷன் பிளஸ் கோல்டன் க்ளோப் அவார்ட் கிடைத்தது.  ஒரு வாரம் எடுக்கப்பட்டது அந்த ஷவர் காட்சி. நடிக்கும்போது தெரியவில்லை ஆனால் அதை திரையில் பார்த்ததும்? ஷவரில் குளிப்பதையே நிறுத்திவிட்டார்.


பிற்பாடு ‘Hitchcock’ என்று படம் எடுத்தபோது அதில்  இவராக நடித்தது அழகு நடிகை Scarlett Johansson.


‘Houdini’ படத்தில் நடிக்கும்போது கணவர் Tony Curtis -ஐ விட இவர் பிரபலமாக இருந்தார். ஆனாலும் அவர் பெயரை முதலில் போட வைத்தார்.


தம்பதிகள் சேர்ந்து நடித்த படங்களில் முக்கியமானது The Vikings. இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் Jamie Lee Curtis. அவரும் பிரபல நடிகை (‘True Lies’)


அந்த ப்ரஃபசரிடம் படிக்கிற மாணவி  ஒருத்தி அவரை முத்தமிட்டுவிட, பார்க்கும் அவர் மனைவி பத்ரகாளியாகிறாள். தப்பிக்க, தான் ஒரு சீக்ரட் போலீஸ் என்று ஒரு பொய் சொல்கிறார். அது யாரடா என்று நிஜப் போலீஸ் துரத்த… காமெடி ரகளை! கணவர் டோனியுடன் நடித்த ‘Who Was That Lady?’ 


பிரபல டைரக்டர் நடிகர் Orson Welles இன் ‘Touch of Evil’ படத்தில் நடித்தது பெருமிதம் தரும் அனுபவம்.

Janarthanan KB 

https://www.facebook.com/share/1EKEVPtwrs/

Monday, July 6, 2026

பாலமுரளி கிருஷ்ணா பிறந்தநாள் நினைவுகள்

 🎵ஆயிரம் நினைவாகி…..ஆனந்தக் கனவாகி...🎵


The unusual plot of I.V.Sashi’s Malayalam film Aa Nimisham (1977) written by Sheriff caught KB’s fancy and he set forth to adapt the core plot. Adding his inimitable deft touches, he presented it as Nool Veli (1979/ Kalakendra Movies). Sridevi had won laurels for her performance in the Malayalam original, and in Tamil, Saritha walked away with the honors. Sujatha was equally impressive in a brilliant, subtle performance. Saratbabu, Narayana Rao, Ramanamoorthi and Anumanthu were the others in the cast. 


A happily married man, in a moment of sudden weakness, seduces a girl who is their ward. His wife unexpectedly witnesses the despicable act. The happenings in the aftermath form rest of the story. The film was strengthened by KB’s seasoned handling of a sensitive theme and powerful performances by the three lead players: Saratbabu in the role of the remorse-torn architect Babu, Sujatha in the role of his wife- the writer Vidya, and Saritha in the role of Baby- the innocent, playful girl-next door who grows up overnight to a woman wrecked by guilt. 


MSV and Kannadasan, as usual for a KB venture, came up with a set of memorable songs: 


Naana paaduvadhu naana- SPB, Vani Jairam & L.R. Anjali

Therottam ananda shenbagapoovaattam- SPB 

Veenai sirippu aasai azhaippu- SPB & Vani Jairam

Mounathil vilaiyaadum manasaatchiye- Balamuralikrishna 


* * * * * 


Launch forth, my soul, into a main of tears, 

Full-fraught with grief, the traffic of thy mind; 

Torn sails will serve, thoughts rent with guilty fears; 

Give care the stern, use sighs in lieu of wind: 

Remorse thy pilot; thy misdeeds thy card; 

Torment thy haven, shipwreck thy best reward. 


- Robert Southwell (St. Peter's Complaint) 


The deed is done; the perpetrators have been witnessed in action. The picture perfect household falls headlong into turmoil...Can things be the same ever again? A husband filled with shame and sorrow, a wife whose each glance is replete with reproach and scorn, the other woman shattered physically and mentally…. Penitence is barred; the torturing, gnawing consciousness of guilt is the horrendous punishment …guilt that pursues inexorably, armed with whips and stings. 


ரகசியச் சுரங்கம் நீ

நாடக அரங்கம் நீ

சோதனைக் களம் அல்லவா,

நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா


ஒரு கணம் தவறாகி

பல யுகம் துடிப்பாயே

ஊமையின் பரிபாஷை

கண்களில் வடிப்பாயே….


Kannadasan’s mighty pen flies furiously, as the lines beckon the wretchedness of the havoc wrought by a stern, questioning conscience… MSV conjures up a saga in Sama... Balamuralikrishna brings a remarkably pensive delineation. The grim verdict of lifelong anguish that he delivers in the lines ஆசையில் கல்லாகி…அச்சத்தில் மெழுகாகி.... யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ is the high-point of this sermon.  

 

A song for eternity.


https://youtu.be/Ms4zuHOEZww?si=-ZvgGJRAacDUfBoL


It is the birth anniversary today of Mangalampalli Balamuralikrishna🙏🙏

Saturday, July 4, 2026

Aaduvom vaarungal paangiyare - Savithri 1941

 கேதாரம்!


'ஹரி நாராயண ஹரி நாராயண  ஹரி நாராயண எனு மனவே...' நேற்று காலை கேசவபெருமாள் கோயில் பிரகாரத்தை சுற்றி வருகையில் இந்த பாடல் ஒலித்தது. 'யாகம், தவம், விரதம் போன்ற கடினமான வழிப்பாட்டு முறைகளை விட சிறந்தது நாராயணனின் பெயரை உச்சரிப்பது' என்ற புரந்தரதாசரின் பரவசமான வரிகளை MLVயின் ( அதுவும் அவரது பிறந்தநாளில்) மதுரமான குரலில் கேட்டபோது அப்படியே மெய்மறந்து ஆண்டாள் சந்நிதியின் முன் இருக்கும் மண்டபத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். 


கேதாரம்! அமர்க்களமான ராகம். மங்களகரமான ராகம். வீடு திரும்பும்போது பாம்பே ஜெயஸ்ரீ குரலில் 'ஆனந்த நடன பிரகாசம்' கேட்டுக்கொண்டு வந்தேன். L. வைத்தியநாதன் இசையமைத்த 'பஞ்சபூதம்' தொகுப்பிலிருந்து முத்துசாமி தீக்ஷிதரின் இந்த கேதாரம்... ஜெயஸ்ரீயின் கணீர் குரலில் நிதானமாக வந்து விழும் சங்கதிகளுடன் ஒரு சலசலக்கும் நதிபோன்ற நகர்ந்து செல்லும் கேதாரம். ஈஸ்வரனின் சிறப்புகளை அழகாக பட்டியலிடும் பாடலில் 'கேதாரடி க்ஷேத்ராதாரம்' வரியில் ராக முத்திரை எவ்வளவு சூட்சுமமாக வெளிபடுகிறது!


பிறகென்ன... நாள்முழுதும் கேதாரத்தையே வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது. MDR தனது ஆழமான bass குரலில் ரசித்து ரசித்து பாடிய 'பஜனா சேயவே ஓ மனசா ப்ரணதார்த்தி ஹருணி' இழையிழையாய் மனதை பிண்ணிப்போட்டது. நெடுநூரி கிருஷ்ணமூர்த்த குரலில் 'ராமா நீபை தனக்கு' தன்னை எப்படி மறக்கலாம் என்று முறையிட்டது.


மதியம் ஒரு வேலையாக திருவான்மியூர் சென்றுவிட்டு திரும்புபோது மாலையாகிவிட்டிருந்தது. அடையாறு பாலத்திலிருந்து பார்த்தால் அஸ்தமிக்கும் சூரியன் தனது நிறங்களை வானமெங்கும் பரவவிட்டிருந்தான். அந்த ஆரஞ்சு நிறத்தை வானத்திலிருந்து அடையாறும் பெற்றுக்கொண்டு ரம்மியமாக ஜொலித்தது.


'ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்

ராத்திரி வாசலில் கோலமிடும்...."


வரிகள் தன்னிச்சையாக உதடுகளில் வந்து ஒட்டிக்கொண்டன. ஆஹா.... கேதாரம்! 


ஒரு பரப்பரப்பான நகரித்திலும் மாலைகள் அழகாக இருக்கலாகெமன இந்த 'பொன்மாலைப் பொழுது' பாடல் எவ்வளவு இயல்பாக உணர்த்துகிறது! நகரத்திலும் சூரியன் வண்ணங்களைத் தூவி விடைபெறும், மேல்வானம் சிவக்கும், கூடு திரும்பும் பறவைகள் ஒலி கேட்கும், இலைகள் அசையும், தென்றல் வீசும், குழந்தைகள் குதூகலமாக விளையாடும், காதலர்கள் ரகசியமாக சந்திப்பார்கள், மனம் இனம்புரியாத சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கும்....


பாடலின் தொடக்கத்திலேயே வரும் புல்லாங்குழல் இசை, மாலையின் மெல்லிய தென்றல் காற்றைப்போல செவியை வருடிச்செல்கிறது.... கிட்டாரும் வயலின்களையும் கொண்டு இளையராஜா என்ன ஒரு மாயாஜாலத்தை செய்திருக்கிறார்! என்ன ஒரு மனதை மயக்கும் விந்தை! 


வீட்டுக்கு வந்தும் மீண்டும் ஒரு முறை பாடலை கேட்டேன்.... மீண்டு வர வெகு நேரமாயிற்று.... I was lost in a trance....


https://youtu.be/Jc3l43V4naU?si=rkBph8VY5L9QNTb7


1980ல் வந்த இந்த 'நிழல்கள்' படப்பாடலுக்கு முன், ஏன் இளையராஜாவுக்கு முன் கேதாரத்தில் எந்த திரைப்பட பாடலும் வரவில்லையா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.


மிகுந்த யோசனைக்கு பிறகு ஒரே ஒரு பாடல் ஞாபகம் வந்தது. 1941ல் வெளிவந்த 'சாவித்திரி' படத்தில் சாந்தா ஆப்தே பாடிய 'ஆடுவோம் வாருங்கள் பாங்கியரே'... பாபநாசம் சிவன் இயற்றி, துறையூர் ராஜகோபால சர்மா மெட்டமைத்து, கமல் தாஸ் குப்தா வாத்தியங்கள் ஒருங்கிணைத்த பாடல். அழகான கேதாரம்!


https://youtu.be/gIBoEzXQQJ8?si=9xVDhWeHpuVREmRz


மெல்லிசை மன்னரின் ஒரு பாடல் கூட கேதாரத்தில் வரவில்லையே என்று யோசித்தேன். சரி, MSV பெரும்பாலும் ஒரு ராகத்தில் ஒரு பாடல் அமையவேண்டுமென்று முயற்சித்தில்லை. பாடல் சூழலுக்கேற்ப அவர் மனதில் மெட்டுக்கள் அலையலையாக வந்து குவியும்... சில சமயம் அவற்றை சில ராகங்களுக்குள் நாம் தான் பொறுத்தி பார்கிறோம்... 


ஆனாலும் இளையராஜாவின் 'இதுவொரு பொன்மால பொழுது' பாடலுக்கு முன் கேதாரத்தில் எந்த MSV பாடலும் அமையவில்லையா?


சட்டென்று 'வந்தனம் வந்தனம் வந்தனம்' என்று துள்ளிக்கொண்டே L.R.ஈஸ்வரி மனதில் வந்தமர்ந்தார்! ஆமாம் 1978ல் நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'அதிர்ஷ்டக்காரன்' படத்தில் ஒரு நாட்டியநாடக பாடலின் சில வரிகள் கேதாரத்தில் அமைந்தன, தற்செயலாக!


https://youtu.be/OG4vmzjP9xY?si=OONTulDmWFCeKuej


(29.42லிருந்து பார்க்கவும்)


அதற்கு பிறகும் மெல்லிசை மன்னரின் ஒரு பாடல் கேதாரத்தை ஆதாரமாய் கொண்டு வந்ததே என்று ஒரு உறுத்தல்... நினைவில் அகப்படாமல் தவியாய் தவித்தேன்... இரவு எங்கள் தெருவில் சிறிது நேரம் நடைபயிற்சி செய்துகொண்டிருக்கும் போது திடீரென்று இந்த பாடல் ஞாபகம் வந்தது.... ஆஹா... எவ்வளவு அழகான வார்ப்பு! பிரமாதமான வாத்திய அமைப்புகள்.... TMSசின் கம்பீரம்.... வாணியின் வசீகரம்... 1981ல் வெளிவந்த 'மாடி வீட்டு ஏழை' படத்தின் 'முத்தமிழ் சொந்தங்கள்' 💖


கேதாரம்!


https://youtu.be/r7KFsghIhOM?si=-IsMGR6XVEq675ZH


இதற்கு சில வருடங்களுக்கு பிறகு பட்டித்தொட்டியெங்கும் ஒலித்த இளையராஜாவின் கேதாரம் தான் உங்கள் எல்லோருக்கும் தெரியுமே! என்ன, ஞாபகம் வரவில்லையா? மேலே உள்ள  மெல்லிசை மன்னரின் 'முத்தமிழ் சொந்தங்கள்' பாடலின் சரணத்தில் முதல் நான்கு வரி ஒவ்வொன்றுக்கும் பிறகு வரும் வயலின் Bitடை மீண்டும் கேட்டுப்பாருங்கள்! செண்டை முழங்க, தோழியர் சூழ, அந்த சுந்நரனும் சுந்நரியும் எட்டிப்பார்கிறார்களா?


https://youtu.be/5R3_k3hJLfk?si=RibGJaqNE51HIqJ5


கேதாரம்!


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/1EY7Uijuu7/

Friday, July 3, 2026

Varuvai Manamohana

 வருவாய் மனமோகனா....

ஓடி வருவாய் மனமோகனா...🎵


தன்னிடம் நடனம் பயிலும் ஒரு மாணவியை வசியப்படுத்தி தன் ஆசை வலையில் சிக்க வைக்க முயற்சிக்கும் ஒரு கயவன். தயக்கங்கள் இருந்தபோதும் அந்த டான்ஸ் மாஸ்டர் ஒரு நல்லவன் என் நம்பி அவன் செய்யும் குறும்புகளை ரசிக்கும் அந்த பெண். 


இந்த கட்டத்தில் அவன் கற்றுக்கொடுக்க அவள் ஒரு பாடலை பாடி ஆடுகிறாள்.


இது தான் 1953ல்  வெளிவந்த TKS சகோதரர்களின் ' இன்ஸ்பெக்டர்' படத்தின் 'வருவாய் மனமோகனா' பாடலின் பின்னணி. (தமிழகத்தில் நாடக கலை தழைத்து வளர்ந்ததில் அவ்வை T.K. சண்முகம் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவரது 'எனது நாடக வாழ்க்கை' புத்தகத்தை பல முறை ரசித்து படித்திருக்கிறேன். எத்தனை மெனக்கெடல், கடின உழைப்பு!  அவரது கலை சேவையை முறையாக ஆவணப்படுத்த வேண்டும்) 


கவிஞர் மருதகாசியின் அழகான வரிகள் பெரியவர் G. ராமனதனின் ரம்மியமான சிம்மேந்திர மத்தியமத்தில் எவ்வளவு சௌக்கியமாக அமர்கின்றன. 


நடுநடுவே அந்த மாஸ்டரின் ( T.K. சண்முகம்) நகைச்சுவையான குறுக்கீடுகள் மிகவும் சுவாரஸ்யமானவை.


"உன் வரவை எதிர்பார்த்து துடியாய் துடிக்கும் எம்முன் வருவாய் மனமோகனா..."🎵


- "துடிப்பு வரலையே! Faceல துடிப்பு வரவேண்டாம்? அப்படியே புழுவைப்போல துடிக்கணும்மா!"💁‍♂️


"விரகத்தீயினால் சறுகாய் எனது உடல் கருகும்முன்னே...."🎵


- "உடம்பு கருகலையே! அப்படியே தானே இருக்கு!"💁‍♂️


"பருவ காலம் அல்லவோ...."🎵


- "பருவ காலம் வார்த்தையிலே தானே இருக்கு! அது பாவத்துல வந்து அப்படியே பார்க்கிறவங்க உயிரைப் போய் தொட வேண்டாம்?!"💁‍♂️


கடைசியில் "தருக" என்று எப்படி கெஞ்ச வேண்டும் என்பதற்கு வாத்தியார் குறிப்பிடும் உதாரணங்கள்- Scintillating 😃


MLVயுடன் மாஸ்டருக்காக பின்னணி பாடுபவர் V.N. சுந்தரம். நாடக கம்பெனியிருந்து திரைத்துறைக்கு வந்தவர். முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் சில படங்களில் நடித்தார். பிறகு ஐம்பதுகளில் பின்னணி பாடகராக உறுவெடுத்து தன் அருமையான குரல்வளத்தால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். மணமகள் படத்தில் MLVயுடன் 'சின்னஞ்சிறு கிளியே' பாடலை இசைத்தது  இவரே. 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் சிவாஜிக்காக 'வெற்றிவடிவேலனே' என்று பரவசமாக பாடியதும் இவரே. 2006-07 வாக்கில் அவரை மயிலாப்பூர் மாடவீதியில் எளிமையான தோற்றத்தில் நடந்து செல்வதை ஒரு முறை பார்த்தேன்.  2008ல் நண்பர் ஒருவர் மூலம் அவரது முகவரி கிடைத்தது. நான் துபாயில் இருந்த காலக்கட்டம். அடுத்த வருடம் சென்னை வரும்போது அவரை சந்திக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். Man proposes, but God.....? 2009ல் நான் இந்தியா வந்தபோது சுந்தரம் இந்த உலகிலேயே இல்லை.... 


இந்த பாடலில் சுந்தரத்தின் சௌந்தரிய விலாசங்கள் பளிச்சிடுகின்றன. எத்தனை சரளமாய் சங்கதிகள் வந்து விழுகின்றன! What an abundance of talent! So sadly under-utilized!


வசந்குமாரியை பற்றி என்ன சொல்வது! ஒவ்வொரு வரியிலும் லாவகமாக எண்ணிலடங்கா சங்கீத சூட்சமங்களை தெறிக்கிறார். ராகமும் பாவமும் தாளமும் வியப்போடு அவரின் குரல் கட்டுக்குள் அடங்கி அசைகின்றன. 


https://youtu.be/3LhBhdl7j68?feature=shared


தமிழ் திரையிசை பெற்ற பெரும் பேறு அதன் ஆரம்பகாலத்தில் M.S. சுப்புலட்சுமி, M.L. வசந்தகுமாரி, D.K. பட்டம்மாள், N.C. வசந்தகோகிலம் போன்ற உன்னதமான இசை விற்பன்னர்கள் இசைத்த திரைப்பாடல்கள். 


அதுவும் ஐம்பதுகள் தோறும் வசந்தகுமாரி பாடிய திரைப்பாடல் தொகுப்பு தமிழ் திரையிசை வரலாற்றின் மிக அழகான அத்தியாயம். C.R. சுப்புராமன் தொடங்கி G. ராமநாதன், S.M. சுப்பையா நாயுடு, சுதர்சனம், C.N. பாண்டுரங்கன், கோவிந்தராஜுலு நாயுடு, விஸ்வநாதன்- ராமமூர்த்தி, வேதா போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் வசந்தகுமாரியை கொண்டு உருவாக்கிய வகைவகையான, சவாலான பாடல்கள் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள்.


நேற்று வசந்தகுமாரியின் பிறந்த நாளுக்காக எழுத நினைத்த பதிவு. ஏதோ ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அதைப்பற்றி எழுதுவதற்காக நான் தேடித்தேடி சேகரித்து பதிவு செய்துக்கொண்ட அவரது திரைப்பாடல்கள் கொண்ட நான்கு CDக்களை கேட்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான்... மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருந்துவிட்டேன்.


அதனால் என்ன.... MLV யை போன்ற கலைஞர்களை எந்த நாளும் கொண்டாடலாம் 🙏


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/18ua4nNCSN/

மருதநாட்டு வீரன் Marudha Naattu Veeran

 ஜானகியம்மாவிடமிருந்து மதியம் வாய்ஸ் மெசேஜ் ' அதீ, மருநாட்டு வீரனோ மருதநாட்டு மன்னனோ ஏதோ படம்... அதுல சௌந்தராஜனும் நானும் ஒரு பாட்டு பாடினோம்... சிவாஜி கணேசன் படம்... அது சைனாக்காரன் போல வேஷம் போட்டு பாடற பாட்டு. சைனா பாட்டு போலே... ஆனா சைனா பாட்டு இல்ல, தமிழ் பாட்டு தான்... "ஜீவகன் நான்தான்"ங்கிறத வார்த்தைக்கு ஒவ்வொரு லெட்டர் முன்னாடி ஒரு 'ஹ' சேர்த்திடுவாங்க... 'ஹஜிஹவஹகஹன் ...' அந்த மாதிரி வரும்... அந்த பாட்டு ரெக்கார்ட்ல வந்துதா? படத்தில இந்த பாட்ட கட் பண்ணிட்டாங்க... அப்போ சென்ஸாரு சைனாக்காரனை அவமானப்படுத்தறா மாதிரி இருக்குன்னு சொல்லி இந்த பாட்டை கட் பண்ணாங்க.... அந்த சாங் அதுக்கபுறம் கேட்கவேயில்லை... கேக்கனும் போல இருக்கு... உனக்கு கெடச்சா அனுப்றியா?"


'மருதநாட்டு வீரன்' சிவாஜி கணேசன், ஜமுனா நடித்து 1961ல் வெளியான படம். இசை- பெரியவர் S.V. வெங்கடராமன். பல வருடங்களுக்கு முன் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சானலில் படத்தை பார்த்த போது டைட்டிலில் பிண்ணனி பாடகர்கள் பட்டியலில் TMS, PBS, A.L. ராகவன், P. சுசீலா, ரத்னமாலாவுடன் S. ஜானகியின் பெயரும் இருந்தது. அப்போது ஜானகியின் ஆரம்பகால பாடல்களை வருடவாரியாக சேகரித்து கொண்டிருந்தேன். அதனால் ஆர்வமாக முழு படத்தையும் பார்த்தேன். TMS பாடிய 'பருவம் பார்த்து அருகில் வந்தும்', TMS- சுசீலா பாடிய 'விழியலை மேலே செம்மீன் போல' போன்ற இனிமையான பாடல்கள் இருந்தும் ஜானகி பாடிய எந்த பாடலும் படத்தில் இல்லை. சென்னை ஸ்டீரியோ ஹவுஸ் ரெக்கார்டிங் செண்டரில் இருந்த 'மருதநாட்டு வீரன்' LP ரெக்கார்டில் இருந்து அத்தனை பாடல்களையும் கேஸட்டில் பதிவு செய்துக்கொண்டேன்.... ஆனால் அதிலும் ஜானகி பாடிய பாடல் இல்லை. 


பட டைட்டிலில் ஜானகியின் பெயர் இருந்தும் அவர் படத்தில் பாடிய பாடல் என்னவென்று இத்தனை நாள் தெரியாமல் இருந்தது. இன்று ஜானகியம்மா மூலமாகவே இதற்கு விடை கிடைத்தது. 


நெட்டில் படம் இருக்கிறது. மதியம் உணவு இடைவெளியில் படத்தை மீண்டும் ஃபார்வர்ட் செய்து செய்து பார்த்தேன். ஒரு கட்டத்தில் தன் காதலி மருதநாட்டு இளவரசி ரத்னாவுக்கு (ஜமுனா) வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை அறிந்து தலைமறைவாக இருக்கும் ஜீவகன் (சிவாஜி) ஒரு சைனாக்கார ஜோதிடன் வேடத்தில் அரண்மணைக்கு வருகிறான். அந்த கட்டத்தில் தான் யார் என்பதை சூசகமாக ரத்னாவுக்கு உணர்த்துவதற்காக இந்த பாடல் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று யூகித்தேன். படத்தில் பாடல் இல்லை. 


வேலையெல்லாம் முடித்துவிட்டு மாலையில் என் கேஸட்- சீடி சேகரிப்புகளில் மீண்டும் தேட ஆரம்பித்தேன். பாடல் கிடைக்கவில்லை. பிறகு மாடி ஸ்டோர் ரூமில் இருக்கும் அட்டைப்பெட்டி ஞாபகம் வந்தது. அதிலிருந்து கொலாலம்பூர் கொலம்பியாவிலிருந்து பதிவு செய்து வந்த சீடி குவியலை கீழே எடுத்துவந்தேன். சிலவற்றை இதுவரை கேட்கவேயில்லை... பாடல் பட்டியலும் எழுதவில்லை. ஆனால் 'S. Janaki songs from the 50s and 60s' என்று கொலம்பியாவில் பதிவு செய்யச்சொல்லி வாங்கியது ஞாபகம் இருந்தது. ஒவ்வொரு சீடியாக கேட்க ஆரம்பித்தேன். 


ஆறாவது சீடியில் பாடல் அகப்பட்டது! உற்சாகம் பொங்க பாடலை பதிவேற்றினேன். 


https://youtube.com/watch?v=hUYaMeYY9eE&feature=shared


உடனே ஜானகியம்மாவுக்கு அனுப்பி வைத்தேன். பத்து நிமிடத்தில் அவரிடமிருந்து அழைப்பு 'Thank youன்னு சொன்னா போதாது கண்ணா....' என்று சொல்லி நிறுத்தி 'God bless you!' என்று அன்பொழுக முடித்தார்... 


She left me choked with emotion, as always...🙏


- Saravanan Natarajan

https://www.facebook.com/share/p/1D8G7rvNEw/

Thursday, July 2, 2026

MLV BIRTHDAY

 மகாவிதுஷி M.L.வசந்தகுமாரியின் பிறந்த நாள் இன்று. ஒரு காலத்தில் அவர் பாடிய திரைப்பாடல்களை தேடித்தேடி சேகரித்தேன்... பல கேஸட்களிலும் CDக்களிலும் அவற்றை பதிவு செய்தேன்....


'எல்லாம் இன்ப மயம்', 'ஆடாத மனமும் உண்டோ', 'ஆடல் காணீரோ', 'பாற்கடல் அலை மேலே', 'அந்தி மயங்குதடி', 'ஆடும் அருள் ஜோதி' போன்ற எண்ணற்ற பாடல்களில் அவரின் ஆளுமையை கண்டு வியந்திருக்கிறேன். அதே வேளையில் 'கூவாமல் கூவும் கோகிலம்', 'வஞ்சமிதோ வாஞ்சையிதோ', 'மஞ்சள் வெய்யில் மாலையில', 'எங்கே மறைந்தனையோ', 'கனியோ பாகோ கற்கண்டோ', 'சின்னஞ்சிறு கிளியே' போன்ற பாடல்களில் காட்சியின் சூழ்நிலைக்கேற்ப MLV மென்மையாக , மெல்லிசையாக உருமாறி ஒலித்தது மிக அழகு. 


'ஐயா சாமி ஆவோஜி சாமி', 'வருவாய் மனமோகனா' போன்ற பாடல்களில் துள்ளலாய் ஒலித்தது MLVயின் குரல் என்று உணர்ந்த போது அதிசயமாக இருந்தது.  


அதுப்போல இந்த பாடல்...Waltz style லில் எவ்வளவு அருமையாக அமைந்திருக்கிறது-மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணந்து இசையமைத்த முதல் படம்....சிவாஜி கணேசன்-பத்மினி இணைந்து நடித்த முதல் படம்.... கலைவாணர் N.S.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான "பணம்" படத்திலிருந்து...


முதல் படத்திலேயே எவ்வளவு வித்தியாசமாக யோசித்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்! Dainty, delightful arrangements. 


இந்த பாடலுக்கு MLVயை எப்படி தேர்ந்தெடுத்தார்கள்! அவரும் எப்படி நளினமாக இசைக்கிறார்.... classy, elegant and so stylish! 


MLVயுடன் பாடுவது.... G.K.வெங்கடேஷ்!


https://www.youtube.com/watch?v=3o-ZJpoEzAc


#songpostsfromme


- Saravanan Natarajan


https://www.facebook.com/share/p/1BfGL3qxuE/

Wednesday, July 1, 2026

AM Rajah birthday

 ‘பக்கயிந்தி அம்மாயி’.. 1953 இல் வந்த  தெலுங்குப் படம். எதிர் மாடியில் தரிசனம் தரும் அஞ்சலி தேவியோ கானப் பிரியை. காதலிக்கும் ரேலங்கிக்கோ பாட வராது. நண்பர்கள் ஒரு பாடகரை அழைத்து வருகிறார்கள்.  கட்டிலில் அமர்ந்து ரேலங்கி வாயசைக்க, கட்டிலுக்குக் கீழே அமர்ந்து ஆக்சுவலாகப் பாடுவார் அந்த பாடகர். பாடகராக நடித்ததும் பாடியதும்..


நம் ஏ.எம்.ராஜா… இன்று பிறந்த நாள்!


தென்னிந்திய சினிமாவில் தென்றலாக நுழைந்தவர்… தன் இசையால் தென்றலை வீசவும் செய்தவர். இவரது பாடகர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா இசையமைப்பாளர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா? மயக்கத்தைத் தவிர்க்க முடியாது, இரண்டிலும் ஏகத்துக்கு சாதித்திருப்பதால்.


'கல்யாண பரிசு' படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக நின்றது, பட்டுக்கோட்டையாரின் எட்டுப் பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா தந்த இசைப் பரிசு.


“காலையும் நீயே.. மாலையும் நீயே..” என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் இன்றைக்கும் அதன் பாடல்களை. ஆம் இசைக்கென்றே அவதரித்த படம்.. ‘தேன்நிலவு.’


கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டும் இரண்டு கைகளில்! ஆடிப்பெருக்கின் இசை சொல்லும்.  “தனிமையிலே இனிமை காண முடியுமா..” “காவேரி ஓரம்…”


இவருடைய progression (பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வரும் இசை) கனகச்சிதமாக, மிகச் சரியான வாத்தியங்கள் கொண்டு ஏராளம் வயலின்களுடன் ஒரு முழுமையான orchestration ஆக இருக்கும். “மலரே மலரே தெரியாதோ…” (தேன் நிலவு) பாடலிலும் சரி,   “புரியாது.. வாழ்க்கையின் ரகசியம் புரியாது..” (ஆடிப்பெருக்கு) பாடலிலும் சரி அதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு சின்ன மாற்றம் கூட செய்வதை விரும்ப மாட்டார் என்பார்கள் என்றால் அந்த அளவு ஒரு பர்ஃபெக் ஷனுடன் அது இருக்கும்.


பி.பி. ஸ்ரீனிவாஸின் மிக இனிமையான பாடல்களில் ஒன்று இவர் இசையில் அமைந்த “பண்ணோடு பிறந்தது தாளம்…” (விடிவெள்ளி) சீர்காழி கோவிந்தராஜனின் முத்துக்களில் ஒன்று “அன்னையின் அருளே வா..” அதுவும் இவர் இசையமைத்ததே. (‘ஆடிப்பெருக்கு').

இசையமைத்த ‘அன்புக்கோர் அண்ணி’ யில்தான் அந்த ஒரு நாள் விடாமல் ஒலித்த சூப்பர் ஹிட். “ஒரு நாள்.. இது ஒரு நாள்.. உனக்கும் எனக்கும் இது திருநாள்..”


“ஆடாத மனமும் ஆடுதே..” என்றிவர் பாடினால் ஆடாத மனமும் ஆடும்! “பாட்டு பாட வா..” என்று பாடினால் பாடாத வாயும் பாடும். “வாராயோ வெண்ணிலாவே..” பாடலின் அந்தக் குழைவு! “அதிமதுரா.. அனுராகா..” பாடலோ அதிமதுரம்! “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..” விருந்தானது காதலர்களுக்கு அப்போது. “எல்லாம் உனக்கே தருவேனே.. இனிமேல் உரிமை நீதானே…” பெண்களின் மனதை அள்ளிக் கொண்டது.


வளமான குரல் இருந்ததால் வாய்ப்புக்காக ரொம்ப சிரமப்படத் தேவை இருக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஜெமினி படம், கே.வி. மகாதேவனின் ‘குமாரி' என்று பாட ஆரம்பித்து ஹெலிகாப்டராக உயர்ந்தார். இங்கிருந்து இந்திக்குப் போன முதல் பாடகரும் இவர்தான்.

பிரிக்க முடியாதது? என்று கேட்டால் துள்ளிக் குதித்துக் கொண்டு வரும் பதில்: ஜெமினியும் இவர் குரலும். பாடகரே நடிகராக இருந்த காலம் மாறி நடிக்க மட்டும் நடிகர்கள் வந்தபோது ஜெமினி கணேசன் குரலின் இனிய பாதியாக இவர் இருந்ததை மறக்க முடியுமா? வேறு யாருக்காவது ராஜா பாடினால், 'அட, ஜெமினி இந்த நடிகருக்கு பின்னணி பாடியிருக்கிறாரே?' என்று ஒரு கணம் நாம் தடுமாறும் அளவுக்கு! 


“கண்களின் வார்த்தைகள் புரியாதோ..” (களத்தூர் கண்ணம்மா) “தங்க நிலவில் கெண்டை இரண்டும்..” (திருமணம்) “வாடிக்கை மறந்ததும் ஏனோ..” என்று ராஜா-ஜெமினி இனிமை லிஸ்ட் பெருமை மிக்கது.

எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சத்யன், பிரேம் நசீர் என்று நாலு மொழி நாயகர்களின் நாவசைப்புக்கும் பாடிக்கொண்டிருந்தவர். சிவாஜிக்கு “என்ன என்ன இன்பமே..” (அன்பு) “இடை கையிரண்டில் ஆடும்..” (விடிவெள்ளி) “திரைபோட்டு நாமே..” (ராஜா ராணி) “யாழும் குழலும் உன் மொழி தானோ..” (கோடீஸ்வரன்) என்றால் எம்ஜிஆருக்கு “கண்மூடும் வேளையிலே..” (மகாதேவி) “மாசிலா உண்மை காதலே..” “பேசும் யாழே பெண்மானே…” (நாம்) “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” (குலேபகாவலி) 


அதுபோன்ற ஒரு மதுரமான குரலை ஆண்டவன் தேர்ந்தெடுத்து அவருக்குக் கொடுத்தது, வேறென்ன, நம்மைச் சில வருடங்கள் மகிழ்விக்கத்தான்! எத்தகைய சால மென் குரல் என்பதை எந்த பின் வாத்தியமும் இல்லாமல் வெறும் குரலில் ஆரம்பிக்கும் இவரது சில பாடல்களில் உணர்கின்றோம். “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..” (மீண்ட சொர்கம்) என்று ஆரம்பிக்கும் போது! “காலையும் நீயே மாலையும் நீயே..” (தேன் நிலவு)  “சிங்காரப் பைங்கிளியே பேசு..” (மனோகரா) 


‘இல்லற ஜோதி’யில் “களங்கமில்லா காதலிலே..”  பாடலில் “நினைவிலே பேதமில்லை..” என்று இவர் என்ட்ரி ஆகும்போது ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே, அதை உலகில் வெகு சில குரல்கள் தான் கொடுக்க முடியும்! அதேபோல் “இதய வானின் உதய நிலவே..” பாடலில் “இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும் நீயாரோ..” என்றும்! "தேன் உண்ணும் வண்டு.." பாடலில் "வீணை இன்ப நாதம்.." “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” வில் அந்த மயக்கும் என்ட்ரி “பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே..”


ஜாலி பாடல்களிலும் கலீர் கலீரென ஒலிக்கும் குரல்.. “கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை..” “ஓஹோ எந்தன் பேபி..” 


எம். எல். வசந்தகுமாரியிலிருந்து (“இன்பக் குயில் குரல் இனிமை..” - மனிதனும் மிருகமும்) ஜமுனாராணி வரை (“சந்தோஷமே தான் சங்கீதமாக..” - சந்தானம்)  சேர்ந்து பாடியவர்.  ஜி. ராமநாதன் முதல் சங்கர் கணேஷ் இசையில் வரை… 


ராஜா - ஜிக்கி தாம் ஐம்பதுகளில் பிரபல பின்னணி ஜோடி. “அழகு நிலாவின் பவனியிலே..” இந்தப் பாடலைத் தொடர்ந்து வாழ்விலும் இணைந்தது அந்த ஜோடி. 


ஒரிரு வரி பாடினாலும் உள்ளம் கவரும் குரல். “வெண்ணிலா நிலா.. என் கண்ணல்லவா கலா..” என்று இரு வரிதான் பாடுவார் ‘ஆரவல்லி'யில் “சின்னப் பெண்ணான போதிலே..’’ போதாதா? சில பாடல்களை இவர் பாடினால் கேட்போருக்கு ஏற்படும் உணர்வு மிகப் பிரத்தியேகமானது. அதற்கு உதாரணம் “என் நெஞ்சின் பிரேம கீதம்..” (பணம் படுத்தும் பாடு) 


.எத்தனைக்கெத்தனை காதல் பாட்டுக்கு மன்னனோ அத்தனைக்கத்தனை சோகப்பாட்டுக்கும் அரசன். “மின்னல் போல் ஆகும் இந்த..”  “அன்பே.. நீ அங்கே..” “என் காதல் இன்பம் இதுதானா..” “அன்பே வா..அழைக்கின்றதெந்தன் மூச்சே..” “உன்னைக் கண்டு நான் வாட…” எல்லாவற்றுக்கும் மேலே மனம் பிழியும் சோகம் வழியும் அந்தப் பாடல்.. “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..” (மல்லிகா)


Re entry சில ஹிட்கள் பாடத் தந்தது. 'ரங்கராட்டினம்' படத்தில் வி. குமார் இசையில் “முத்தாரமே உன் ஊடல் என்னவோ..” சங்கர் கணேஷ் இசையில் 'அன்பு ரோஜா'வில் “ஏனடா கண்ணா..”  


“மலரே ஓ மலரே..” வெகு காலத்துக்குப்பின் இவர் இசையில் வந்த ‘வீட்டு மாப்பிள்ளை’யில் அந்த அசத்தும் பாடல்!  'நீ என் மலரல்ல..' எனும்போது என்னவொரு எழுச்சியும் வேகமும் அந்தக் குரலில்!

‘அம்மா என்னு ஸ்திரி’ மலையாள படத்துக்கு இசையமைத்தார். ‘பார்யா’ ‘அடிமைகள்’.. என்று ஜி. தேவராஜன் இசையில் ஏராளம் பாடல்கள் பாடினார் மலையாளத்தில்! “தாழம்பூ மணம் உள்ள தணுப்புள்ள ராத்திரியில்..” அங்கே சூபர்ஹிட்.


சில பாடல்களை இவர் தான் பாட முடியும் அத்தனை மென்மையாக… “பூவில் வண்டு போதை கொண்டு..” (அன்பு எங்கே) “போதும் உந்தன் ஜாலமே..” (கடன் வாங்கி கல்யாணம்)  “புதுமை நிலா அங்கே..” (கோமதியின் காதலன்)


ஒரு பாட்டின் உருக்கத்தை பாடகர் எத்தனை அப்லிஃப்ட் செய்ய முடியும்? சி. என். பாண்டுரங்கன் இசையில் ‘எதிர்பாராதது' படத்தில் இவர் பாடிய  “சிற்பி செதுக்காத பொற்சிலையே..” யைக் கேளுங்கள். 

மிகப் பெரும் மியூசிக் டைரக்டராகத் திகழ்ந்திருக்க வேண்டியவர் ஈ. எம். ராஜா. தன்னுடைய straightforwardness காரணமாக வாய்ப்புகளைத் துறந்ததாக சொல்லுவார்கள். 


இழந்தது நாம்.


Janarthanan KB 


https://www.facebook.com/share/1C9NECMTJ2/