Tiruchendurai Ramamurthy Sankar writes:
Camille Saint-Saëns ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேற்கத்திய சாஸ்திரீய இசைஅமைப்பாளர். பிறந்தது அல்ஜீரியாவில் என்பதால் இசையில் அராபிய இசையின் தாக்கம் இருக்கும். இவர் உருவாக்கிய பிரபல இசைநாடகம் ( ஓபரா) சாம்சன் அண்ட் டிலைலா. 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் குரல்களை வைத்து செய்யப்படும் choral பாணியில் ஹேண்டல், மெண்டொஹல்சன் போன்றவர்களின் இசையால் பெரிதும் கவரப்பட்டார். எனவே இவரது இசையில் choral அதிகமாகத் தென்படும். இதன் இயற்கையான அடுத்தகட்டம் பாடக/நடிகர்கள் பங்கேற்கும் இசைநாடகமான ஓபரா.
பைபிள் கதைகளை ( பழைய ஏற்பாடு ) ஆதாரமாகக் கொண்ட இந்த ஓபரா சாம்சன் அண்ட் டிலைலா இன்றும் மிகப்பிரபலமானது. ஆனால் 1876ல் முதலில் அரங்கேற்ற பிரான்ஸில் எந்த ஒரு ஓபரா ஹவுசும் தயாராகவில்லை. லிஸ்ட் (Liszt ) போன்ற பிரபல இசை அமைப்பாளர்கள் துணையுடன் வெய்மரில் அரங்கேற்றப்பட்டது.
இந்தக்குறிப்பிட்ட பகுதி Bacchanale என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட மது அருந்திவிட்டு கலாட்டா செய்வது என்று அர்த்தம். சாம்சன் அண்ட் டிலைலா இசைநாடகத்தின் மூன்றாவது பகுதி ( காட்சி 2) ல் , பாலஸ்தீனியர்கள் டாகனின் கோவிலில் தங்களது வெற்றியைக் கொண்டாட பலி ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறாத்கள். அந்தப் பூசாரிகள் மது அருந்திவிட்டு ஆடும் போது வரும் இசையே நீங்கள் கேட்கப்போவது. இந்த இசை முடிந்ததும் சாம்சன் இறைவனிடம் தன்னுடைய பலத்தை மீட்டுத்தருமாறு கேட்டு , பலத்தைப் பெற்றவுடன் அந்த வழிபாட்டு இடத்தின் தூண்களைப் பெயர்த்து அந்த இடத்தை நாசம் செய்கிறான்.
இந்த இசையை தன் கற்பனை வளத்துடன் நெறிப்படுத்தும் வெனிசூலா நாட்டைச் சேர்ந்த , 35 வயதான, குஸ்டாவ் டுடுமெல் இன்று மேற்கத்திய இசையின் நம்பிக்கை நட்சத்திரம்.
சம்பந்தமில்லாமல் எழுதுவது என்பது என் மேல் உள்ள குற்றச்சாட்டு. இந்த இசைக்கும் தமிழ்சினிமா பாடல்களுக்கும் என்ன சம்பந்தம்?
என்னால் உங்கள் பலத்தை திருப்பிக் கொடுக்க முடியாது. ஆனால் இந்த இசை மூலம் உங்கள் இளமைக்கால நினைவுகளைச் சற்றே திருப்பிக்கொடுக்கமுடியும்.
Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1376838879014501/
No comments:
Post a Comment