dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Monday, November 7, 2016

NEENGADHA ENNAM ONRU - VIDIYUM VARAI KAATHIRU

Pandian Hanumanthan writes:

The King’s Treasuries – 3

இளையராஜாவின் தாள வாத்திய உபயோகத்தில நான் கண்டு ரசித்த சில துளிகள்.

ஆரம்ப காலத்தில் எங்களுக்குள் ஒரு போட்டி. இளையராஜா பாடல்களில் இடையில் வரும் இசையில் சில வினாடிகளே ஒருவர் பாடி காட்ட அது என்ன பாட்டு என்று மற்றவர் கண்டு பிடிக்கவேண்டும்.

பிறகு அதையும் தாண்டி பாடல்களில் வரும் தாளத்தை மட்டும் மேஜை மீது நான் வாசிக்க (பல வருடங்கள் மற்றவர்கள் பாட தாளம் வாசிப்பதுதான் என் வேலை, காலேஜ் வந்த பிறகு தான் கிட்டார் , சார்ட்டர்ட் அக்கௌன்டன்சி போதுதான் பாட்டு ஆரம்பம.)

ஆக தாளத்தை வைத்து பாட்டு கண்டு பிடிக்க வேண்டும்.
அப்படி கண்டுபிடிக்க கூடிய தனித்தன்மை வாய்ந்த பாடல்கள் எண்ணிலடங்காது. உதாரணத்திற்கு சில பாடல்கள் இங்கு குறிப்பிடுகிறேன்.

1. ஆட்டமா தேரோட்டமா ( காப்டன் பிரபாகரன் )
2. மலை கோயில் வாசலில் ( வீரா)
3. தண்ணீ கருத்திருச்சு ( இளமை ஊஞ்சலாடுகிறது)
4. மாசி மாசம் ஆளான பொண்ணு ( தர்மதுரை)
5. வெத்தல வெத்தல வெத்தலையோ ( ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த பாடல்களில் வெறும் தாளத்தை மட்டும் உன்னிப்பாக கவனித்து வந்தால் அதன் தனித்தன்மை புரியும். மேற்சொன்ன பாடல்களில் வரும் தாளத்தை வேறு எந்த பாடல்களிலும் ராஜா உபயோகப்படுத்திய மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை.

இன்று நான் தரும் பாடல் " நீங்காத எண்ணம் ஒன்று " படம் விடியும் வரை காத்திரு, பாடல் வாலி, பாடியவர்கள் மலேஷியா வாசுதேவன் எஸ் ஜானகி . ஒரு வித்தியாசமான திரில்லர் , பாக்யராஜ் இயக்கி நடித்த படம்.( மற்றும் கராத்தே மணி ,சத்யகலா.)

இந்த பாடலிலும் ஒரு புதுமையை ராஜா கையாண்டுள்ளார். இரண்டு சரணத்திலும் முதல் வரியில் தாளத்தை கவனியுங்கள். முதல் சரணத்தில் வாசு " மேலே பறக்குது " என்று பாடும்பொழுதும் இரண்டாவது சரணத்தில் " ஆசை நினைவுகள் " என்று பாடும்போதும் தாளம் மாறுபடுவதை கவனியுங்கள். அபரீத கற்பனை. சில வினாடிகள்தான். இது இல்லை என்றாலும் பாட்டு பாதிக்கப்பட போவதில்லை. இதை ஏன் ராஜா அங்கு போட்டார் ? இது தேவையா ? என்று கேட்டால் ஒரே பதில்தான்
" அதுதான் இளையராஜா !!!

இப்போது பாட்டை கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=mSlVcxuUkGg Neengaatha ennam onru - Vidiyum Varai kaathiru


Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1375971739101215/

No comments:

Post a Comment