Tiruchendurai Ramamurthy Sankar writes:
The King's Treasuries- Part 15.
அவர் விடும் கணையோ..!
சிறு வயதில் "அந்தாக்சரி" என்ற ஹம் ஆப்கே ஹை கௌன் விளையாட்டு விளையாடும்போது தடுமாறும் 2 விஷயங்கள்.
1. 1,2,3,4 என்று எல்லா நம்பருக்கும் சினிமா பாட்டு ஸ்டாக் இருக்கும். ( ஒன்பதுக்கு நவக்ரஹம், நவராத்திரி ஒப்புக்கொள்ளப்படும்) . இந்த 5 தான் பிரச்சனை. அஞ்சு விரல் கெஞ்சுதடி என்ற ( மனோஜ்-கியான் - RV உதயகுமார்-உரிமைகீதம்) பாட்டு அப்போது இல்லை. அஞ்சு ரூபா நோட்ட கொஞ்சம் முன்ன மாத்தி மிச்சமில்லே, காசு மிச்சமில்லே ( அந்தமான் கைதி- டி.வி.ரத்தினம் பாடியது) பாட்டு தெரியாது.
2. ஐ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பாட்டும் அதிகம் கிடையாது. ( ஐ வில் சிங் ஃபார் யூ - TMS மனிதரில் மாணிக்கம் ( MSV இசை) , ஐ லவ் யூ ஆசையானெனே உன்மேலே - சந்திரபாபு / ரத்னமாலா- கோவிந்தராஜுலு நாயுடு (இசை) - அந்தமான் கைதி) . தவிர ஐ லவ் யூ ( நன்றி மீண்டும் வருக- ஷ்யாம்-மௌலி) படப்பாட்டும் அப்போது கிடையாது!
எங்களது வெகுநாள் குறை தீர்க்க வந்த பாடல் " ஐவகை மலர்" ( அதிகாரம்- வாலி - ஜானகி/சுரேந்தர்). ஆரம்ப நாட்களில், இளையராஜா இசையமைத்து வெளிவராத படங்கள் குறைந்தது 50 படங்கள் இருக்கும். மதுர, கோயம்புத்தூர் பக்கம்நிலத்தை வித்து, பூஜை போட்டு, ராஜா கஷ்டப்பட்டு பாட்டு போட்டபின் இரண்டாவது ஷெட்யூலுக்கே காசு இல்லாமல் முடங்கிய படங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று அதிகாரம். இந்தப்பாடல்களை 40 வருடம் கழித்து நினைவில் கொள்ள ஆட்கள் இருப்பதற்குக் காரணம் இலங்கை ஒலி பரப்புக் கூட்ட ஸ்தாபனம், தமிழ்ச்சேவை 2.
ஜெய்கணேஷ், பிரமீளா நடித்தது என்ற விவரம் பேசும்படம் பத்திரிகையில் பார்த்தது நினைவிருந்தது. சரவணனிடம் கேட்டதில் ஶ்ரீகாந்த்தும், சௌகார் ஜானகியும் கூட இருந்தார்கள் என்ற, அவர்களைத் தவிர, ப்ரொட்டியூசருக்கும், டைரக்டருக்கும் மட்டுமே தெரிந்த தகவலைச் , சொன்னார்! அவர் கொடுத்த விவரங்கள் .....
HMS ப்ரொடக்ஷன்ஸ் அதிகாரம்( 1980) . டைரக்ஷன் - ஸ்வர்ணமூர்த்தி! மற்ற பாடல்கள்
1. ஏய்! கனகம் எங்கிட்ட பண்ணாத கலகம் ( SPB-PS)
2. அன்னையின் ஆசைகள் ( வாணி ஜெயராம்)
3. இங்கு கங்கை ஒன்று ( மலேசியா வாசுதேவன்)
அவர் கொடுத்த தகவல் எத்தனை முக்கியம் என்றால், மியூசிக் இந்தியாவில் தேடினால், பெண்குட்டி சாரதேயின் படம் போட்டு இந்தப்பாடல்.உடன் நடிப்பவராக சேட்டன் திக்குரிசி சுகுமாரன் நாயராணு!
1978-79ல் ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்கவேண்டும். மாலை இளம் (அவள் ஒரு பச்சைக்குழந்தை) பாடலுக்குப் பிறகு சுரேந்தர் பாடிய அடுத்த பாடலாக இருக்கலாம்.
வாலியின் ஸ்டேப்பிள் "ரதி மதன் கலை ரசித்திடும் நிலை" போன்ற வரிகள் இருந்தாலும் , ஜானகியின் குரல் இந்தப்பாட்டை ராஜாவின் ஆரம்ப கால புதையல்களில் ஒன்றாக்குகிறது. ஜானகியின் குரல் தான் ரங்கராட்டினம் ஆடி, நம்மைத் தட்டாமாலை சுற்றி , நம்முடன் கண்ணாமூச்சி ஆடுகிறது. சுரேந்தர் , எஸ்.பி.பியின் ப..பா,பா, பா ஸ்டேப்பிள் ரவா உப்புமாவை தானும் கிண்டிப் பார்த்திருக்கிறார். வயசு , கொரலு பத்தல!
இப்படித்தான் ஆரம்பிக்கப்போகிறது என்று ஆரம்ப இசை கோடி காட்ட, முற்றிலும் எதிர்பாராத வகையில் தொடங்குகிறது பாடல். இளையராஜாவின் பாதாம் கீர் வாணி (?) என்பதால், ஆங்காங்கே , பின்னாளில் வந்த தங்கச் சங்கிலி ( தூரல் நீன்னு போச்சு), மயங்கினேன் சொல்ல ( நானே ராஜா நானே மந்திரி) போன்ற முந்திரிகள் தென்படலாம்.
கீர்வாணியின் த1 ஸ்வரத்தை , பஞ்சம கிரஹபேத வகுளாபரணத்தின் ரி1 போல் ஒலிக்க வைத்து haunting effect இருப்பதுபோல் தோன்றினாலும், ஆங்காங்கே சிம்மேந்திரமத்யமும் கேட்பதுபோல் தோன்றுகிறது.
சாதாரணமாக அவர் பாட்டில் ஏற்படக்கூடாத ராகக்குழப்பம் .....forget it !
அவர் விடும் கணை! Just fall in love..
Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1486927204672334/
No comments:
Post a Comment