Tiruchendurai Ramamurthy Sankar writes:
The King's Treasuries - Part 18
தென்றலடிக்குது நந்தவனக் கிளியே
இளையராஜா முதன் முதலில் பாடியது 1977 ல் வந்த 16 வயதினிலே படத்தில் " சோளம் வெதக்கயில". எழுபதுகளில் சோலோவாக அவர் பாடிய பல பாடல்கள் பிரபலமடைந்தன. ருக்குமணி வண்டி வருது, என்ன பாட்டு பாட, வாட வாட்டுது...போன்றவை.
இளையராஜா எஸ்.ஜானகியுடன் பாடிய பல டுயட் பாடல்கள் ....." பொன்னோவியம்( கழுகு ) ", பூமாலையே ( பகல் நிலவு ) போன்றவை பிரபலமானவை. ஷைலஜாவுடன் முதலில் 1979 ல் (பொண்ணு ஊருக்கு புதுசு ) சாமக்கோழி, ஜென்சியுடன் 1980 ல் காதல் ஓவியம் ( அலைகள் ஓய்வதில்லை) , சசிரேகாவுடன் விழியில் விழுந்து ( அலைகள் ஓய்வதில்லை)... உமா ரமணனுடன் 1984 ல் , மேகம் கருக்கயிலே ( வைதேகி காத்திருந்தாள்) .சரி ! ராஜா பாடிய முதல் டூயட் என்னவாக இருக்கும்? படம் வெளிவராது பாடல்கள் பிரபலமான மணிப்பூர் மாமியார் படத்தில் ஷைலஜாவுடன் " சமையல் பாடமே"? இருக்கலாம்.
[ஆண்கள் டூயட்டில் எஸ்.பி.பியுடன் கல்யாணமாலை ( புதுபுது அர்த்தங்கள் ) ஏசுதாசுடன் கடலோரம் ( ஆனந்தராகம்) போன்ற பாடல்கள். ]
என் யூகம், அவர் பாடிய முதல் டூயட் ...அந்தப்பாடகியுடன் அவர் அதற்குப் பிறகு டூயட் பாடவேயில்லை.....இன்னும் சொல்லப்போனால் அந்தப் பாடகியுடன், மற்ற பாடகர்களுடனும் ( மனோ) சேர்ந்து அவர் திரைப்பட வாழ்க்கையில் இன்னும் ஒரே பாடல்தான் பாடியிருக்கிறார், தேங்காய் ஶ்ரீனிவாசன் தயாரித்து நடித்து அழிந்த கிருஷ்ணன் வந்தான் படத்தில்.
அந்தப் பாடகி..பி.சுசீலா. பாடல் 1978 ல் வெளியாகி , 1979 வெளியான லட்சுமி படத்தில் " தென்ன மரத்துல தென்றலடிக்குது" . சுசீலாவை வேகமான பீட் பாடல்களுக்கு கேட்டேளே ( பத்ரகாளி), செவ்வந்தி ( 16 வயதினிலே) பயன் படுத்தியிருதாலும் இந்தப் பாடல் ஜெட் வேகம். கங்கை அமரனின் குயிலே, மயிலே, தென்றல் அபத்தங்களைத் தாண்டி ஹிட்டான பாடல். ஆரம்ப இசையிலேயே தென்னந்தோப்புக்குள் கூட்டிப் போகும் லாகவம்! கிட்டத்தட்ட கிராமத்து " தகிட ததிமி" ( சலங்கை ஒலி) போல் வேகம். அப்போது இந்தப்பாடல் ஒலிக்காத நாளோ, டீக்கடையோ கிடையாது.
இங்கேயும் ஒரு கங்கையில் வரும் " சோலை புஷ்பங்களே" கங்கை அமரனுக்குப் பதில் ராஜா , சுசீலாவுடன் பாடியிருக்கலாம். ஒன்றும் வித்தியாசம் இருந்திருக்காது!
படத்தில் ஒரு குரங்கும் , மற்றும் பலரில் ஶ்ரீதேவி, ஜெய்கணேஷ், மாஸ்டர் ஶ்ரீதர் போனவர்கள் நடித்திருந்தனர். குரங்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளைச் சுடுவது தவிர்த்து அனைத்து வீரதீர சாகசங்களும் புரியும். ப்ரொஃப்ஷனல் காதல் குரியராகச் செயல்பட்டு விசில் பாராட்டுகளை வாங்கியது. நான் சிலுக்கு ஸ்மிதா தெலுங்கு கற்றுக்கொடுத்து புரிந்துகொண்டதுபோல் ஶ்ரீதேவி தமிழில் பேசுவதை குரங்கு கவனமாகக் கேட்டு செயல்படும் நகைச்சுவைக் காட்சிகள் உண்டு. இந்தப்படத்தில் உள்ள மற்ற பாடல்கள் சசிரேகாவின் மேளம் கொட்ட நேரம் வரும் ( 2 முறை) , ஜானகியின் " வேலாயி வீராயி வெட்கமென்ன பூவாயி" .
பாடலாசிரியர்களில் ஆலங்குடி சோமு...மற்றொரு இனிய ஆச்சரியம்! மேளம் கொட்ட நேரம் வரும் பாட்டை திருமணத்திற்கு ஏங்கும் பெண்ணின் ஒருமித்த குரலாக சொல்லப் போய், ஒரு திருமணம் செய்து கொள்ளாத ஒரு ஆண் நண்பரிடம் செமையாகக் காய்ச்சி எடுக்கப்பட்டேன் பழைய தூள் தளத்தில்!
மாஸ்டர் ஶ்ரீதர் , ஏவிஎம் ராஜனைப் போன்று " சார்! போஸ்ட்" என்ற வசனத்தையே உணர்ச்சிப்பிழம்பாக, காது கண்கள் சிவக்கச் சொல்லக்கூடியவர். நடிகையின் பெயர் மீரா அல்லது பவானி என்று நினைக்கிறேன். நடனம் என்ற பெயரில் ஒரு மானாட மயிலாட அந்த நாளிலேயே.
ராஜா தன் படங்களில் வாணி ஜெயராமுடன் டூயட் பாடல்களை பாடவேயில்லை! ஈஸ்வரி...ம்ஹூம், ஒரு பாட்டைத் தவிர...ஈஸ்வரியே பாடவேயில்லை.
இந்தப்பாடல், எந்தவித வியாபார நிர்பந்தங்களும் இல்லாத உற்சாகமான கிராமத்து ராஜாவையும், சுசீலாவின் வித்தியாசமான முயற்சியையும் கொண்ட புதையல்.
Discussion at:
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1501519633213091/
No comments:
Post a Comment