உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்...🎵
ஜெமினி கணேஷ், சாவித்திரி, M.R. ராதா ஆகியோரின் நடிப்பில் 1965ல் வெளிவந்த படம் 'ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார்'. கண்ணதாசன் பாடல்களை எழுதினார். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணந்து பணியாற்றிய கடைசி படங்களில் ஒன்று. வழக்கம் போல் முத்து- முத்தாய் பாடல்கள்.
வழக்கம் போல் ஜெமினி- சாவித்திரியின் ரசிக்கவைக்கும் ரோமேன்ஸ்.
வழக்கம் போல் M.R. ராதாவுக்கு..... அது தான் இல்லை. ராதாவுக்கு இந்த படத்தில் ஒரு அற்புதமான குணசித்திர வேடம் அமைந்தது. தான் உண்மையில் ஒரு செல்வச்செழிப்பான ஜமீன்தார் என்பதை அறியாத ஒரு முடி திருத்துபவராக படம் நெடுக தன் முத்திரையை ஆழமாக பதிக்கிறார்.
அவர் அறிமுகமாகுவதே ஒரு பாடலகாட்சியில் தான். ஒரு முடித்திருத்தகம். அதன் உரிமையாளர் அழகிரிசாமியும் ( M.R. ராதா) மூன்று முடி திருத்துபவர்களும் மும்முரமாக தங்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கத்தியை தீட்டிவிட்டு அழகிரிசாமி தன் வேலையை தொடக்குகிறார். வாடிக்கையாளருக்கு முகச்சவரம் செய்துக்கொண்டே இந்த பாடலை பாடும் ராதாவின் முக பாவங்களும் சேட்டைகளும் பிரமாதம். Arresting body language! பதிலுக்கு வாடிக்கையாளராக வரும் ராமாராவுடைய முகபாவங்களும் just hilarious! மற்ற மூன்று ஊழியர்களும் கோரசில் அமர்களமாக கலந்துக்கொள்கிறார்கள்.
இப்பொழுதெல்லாம் சென்னையில் சலூனுக்கு போனால் ஒரு ஐந்து நட்சத்திர விடுதி உணர்வு வருகிறது. வசீகரமான வரவேற்பறை மற்றும் வரவேற்ப்பாளர். அழகாக அலங்கரிக்கப்பட்ட அறைகள். சீருடை அணிந்து நுனிநாக்கில் ஆங்கிலம் தவழும் பணியாளர்கள். அதற்கெல்லாம் ஏற்ப விலையும்.
இந்த பாடலை பார்க்கும் போது என் சிறு வயதில் நான் முடித்திருத்த சென்றுவந்த எளிமையான 'மலபார் ஹேர் சலூன்' நினைவில் வருகிறது. அங்கு உபயோப்படுத்தப்பட்ட மோட்டர் என் மண்டையை தொட்டதும் நான் அலறத்தொடங்கிவிடுவேன் என்று அம்மா இப்பொழுதும் (தேவையில்லாமல்) அரவிந்திடம் நினைவுக்கூர்ந்து சிரிப்பார், with a lot of exaggeration!
ஆனால் இப்பொழுது போல் மௌனமாக இல்லாமல் அந்தக்காலத்தில் முடித்திருத்துபவர்கள் வாடிக்கையாளர்களிடம் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டே வேலை செய்வார்கள். சமீபத்திய செய்திகள், அரசியல், சினிமா, கிரிக்கெட் என்று எல்லா தலைப்புகளிலும் சரளமாக சொற்பொழிவு ஆற்றக்கூடிய விஷயஞானம் மிக்கவர்கள். As actor and writer George Burns once remarked, ‘Too bad that all the people who know how to run the country are busy driving taxicabs and cutting hair!’
கவியரசரும் தன் பங்குக்கு இது ஒரு சலூனில் பாடப்படும் வெறும் ஒரு அறிமுக பாடல் என்று லேசாக எடுத்துக்கொள்ளாமல் ஆழமான சிந்தனைத்துளிகளை பாடல்வரிகளில் விதைக்கிறார்.
//சொந்தமுமில்லே
ஒரு பந்தமுமில்லே
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்...
நாங்கள் மன்னரும் இல்லே
மந்திரி இல்லே
வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்!//
In his ‘Death the Leveller’, James Shirley held death high as a great leveler of mankind, and our own Maruthakasi seconded the thought in his ‘சமரசம் உலாவும் இடமே’. Here Kannadasan makes us realize that there is another great leveler in life, and that is the barber shop, where we all have to submit to the hairdresser. Sceptre and crown must necessarily tumble down, and along with the humble scythe and spade bow in unison to the barber’s scissors!
//வளரவிட்டால் மனிதரெல்லாம்
குரங்குகளாவர்-
மனித குரங்குகள் ஆவார்;
நாங்கள் வழித்து விட்டால்
மறுபடியும் மனிதர்களாவர்!//
பல வருடங்களுக்கு பிறகு 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சவுக்கியமே' என்று எழுதிய கவியரசர் அந்த தத்துவத்தை 'முடி'யைக்கொண்டு இங்கேயே பறைசாற்றியிருக்கிறார்....
//இருக்கும்போது தைலம் போட்டு
அழகு செய்கிறார்-
தலையை அழகு செய்கிறார்!
அது இறங்கி விட்டால் திரும்பிப் பார்க்க வெறுப்புக் கொள்கிறார்-
அவரே வெறுப்பு கொள்கிறார்!
உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்
இடத்தை விட்டு விழுந்து விட்டால்
ஏறி மிதிக்குமே….//
கவியரசர் இப்படி நம் கவனத்தை கவரும் போது, மெல்லிசை மன்னர்கள் மட்டும் என்ன லேசுப்பட்டவர்களா? மேற்கத்திய இசையில் Barbershop Quartet Music என்று ஒரு வகை உண்டு. வாத்தியங்கள் இல்லாமல் வெறும் Vocal Harmony பட்டும் கொண்டது- அதை பிரபலப்படுத்தியது அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் பத்தொண்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த Mills சகோதரர்கள்- தங்கள் தந்தை நடத்தி வந்த முடித்திருத்தகத்தில்!
இங்கே நம் மெல்லிசை மன்னர்கள், விசில், ட்ரம்ப்பெட், போங்கோஸ் மற்றும் கோரஸ் குரல்களுடன் Barbershop இசையை ஒரு அழகான நவீன வடிவத்தில் அலங்கரிக்கிறார்கள்! கத்திரிக்கோல்களின் நறுக்கும் சத்தத்தை சந்தமாக்கி இந்தப்பாடலை சொந்தமாக்கிக் கொள்கிறார்கள்!
இந்த வித்யாசமான பாடலை M.R. ராதாவுக்காக பிண்ணனி பாட மெல்லிசை மன்னர்கள் தேர்வு செய்வது - அவர்களின் உயிர் நண்பரான G.K. வெங்கடேஷை... GKVயும் தனது தனித்துவமான குரலில், அலட்டலில்லா உற்சாகத்துடன் அமர்காகளமாய் பாடி மெல்லிசை மன்னர்களின் தேர்வை நியாயப்படுத்துகிறார்.
https://youtu.be/3c1tETWe9kE?feature=shared
குர்ஜடா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷின் பிறந்தநாள் இன்று 🙏
- Saravanan Natarajan
No comments:
Post a Comment