dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Sunday, October 4, 2026

சிங்கீதம்

 தொடவரவோ தொந்தரவோ...

உனதுளமே சம்மதமோ...🎵


சிங்கீதம் ஸ்ரீனிவாசராவின் படங்களை பற்றி, முக்கியமாக அவற்றில் இடம்பெற்ற பாடல்களை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.


சிங்கீதம் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றிலும், அவை எந்த மொழியில் இருந்தாலும், பாடல்கள் அற்புதமாய் அமையும். அவர் அபாரமான இசை ஞானம் கொண்டவர். 


'அபூர்வ சிங்கீதம்' என்ற தலைப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் கமல் ஏற்பாட்டில் நடைப்பெற்ற நிகழ்வில் 'அந்தி மழை பொழிகிறது' பாடலின் முதல் இடையிசையை இத்தனை வருடங்களுக்கு பிறகும் முழுமையாக ஞாபகம் வைத்து பாடிக்காட்டி அனைவரையும் அசத்தினார் 92 வயது சிங்கீதம்:


https://youtube.com/shorts/QFHnCN_6uhw?si=FbLBA_3-U2bO3ylq


இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும் போதே 'இரு நிலவுகள்' படத்தின் 'தொடவரவோ தொந்தரவோ' பாடல் அனிச்சையாய் உதட்டில் உட்கார்ந்துக்கொண்டது. சிறு வயது முதல் மிகவும் பிடித்த பாடல். ராஜன்- நாகேந்திரா இசையமைத்தது.


இந்த மெட்டை ராஜன்- நாகேந்திரா முதல்முதலில் 'கிரி கன்யா' (1977) என்ற படத்துக்காக உருவாக்கினார்கள். 'நகுநகுதா நீ பருவே' பாடல் பெரிய ஹிட்!


சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் இருவேடங்களில் நடித்த தெலுங்கு படம் 'சொம்மக்ககோடிதி சோக்ககோடிதி'.(1979) சிங்கீதம் இயக்கத்தில் கமல் நடித்த முதல் படம் இதுதான். 


இதற்கு இசையமைத்த ராஜன்-நாகேந்திரா 'நகுநகுதா நீ பருவே' பாடல் மெட்டை அப்படியே எடுத்து உருவாக்கிய 'தொலிவலபு தொந்தரலு' தெலுங்கு பாடலும் மெகா ஹிட்! தமிழில் இந்த படம் 'இரு நிலவுகள்' என்று டப் செய்து வந்தப்போது 'தொடவரவோ தொந்தரவோ' பாடல் இலங்கை வானொலியிலும் விவித் பாரதியிலும் ஒலிக்காத நாளில்லை. 


மலையாளத்திலும் 'ஜீவிக்கான் படிக்கனும்' என்று இந்த படம் டப் செய்யப்பட்டது. அங்கும் 'ஒரு வசந்தம் தொழுதுணர்னு' பாடல் மிகப்பெரிய ஹிட்!


இது டூயட் பாடல். கன்னடத்தில் பாடிய ஆண்குரல்- ராஜ்குமார். தெலுங்கிலும் தமிழிலும்- SPB. மலையாளத்தில், of course, யேசுதாஸ். 


ஆனால் நான்கு மொழிகளிலும் ஒலித்த ஒரே பெண் குரல்- ஜானகி! எப்பேர்ப்பட்ட வித்தகி!


நான்கு மொழிகளிலும் இந்த அழகான பாடலை கேளுங்கள். அவற்றை ஒருங்கினைத்து பதிவேற்றிய என் நண்பன் வினய்க்கு நன்றி 💖

Saravanan Natarajan 

https://www.facebook.com/share/v/19phrVd9MZ/

No comments:

Post a Comment