dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Tuesday, June 28, 2016

NINAIVALAIGAL - K.BALACHANDER

அச்சா....
'An ordinary sentence when put into proper place suddenly acquires brilliance'
- Robert Bresson (ஃப்ரெஞ்ச் திரைப்பட இயக்குநர்)


90களில் கல்கியில் கே.பாலசந்தர் அவர்கள் தனது 'நினைவலைகள்' தொடரை வாராவாரம் ஏதாவது மேற்படி quote உடன் ஆரம்பித்து எழுதியிருப்பார்...படு சுவாரசியம்..கீழே படியுங்கள்:
"ஓடினாள்; ஓடினாள்; வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்" - பராசக்தியில் கலைஞர்.
"எனக்கு மரத்துப் போய் விட்டது" - அரங்கேற்றம்.
"மாது வந்திருக்கேன்" - எதிர்நீச்சல்.
"கல்யாணத்துக்கு முன்னால் ஒரு பெண் கர்வமா இருக்கலாம்; கர்ப்பமாத்தான் இருக்கக்கூடாது" - அவள் ஒரு தொடர்கதை.
"பொடிமட்டை தும்முவதில்லை" - நவக்கிரகம்.
"இன்னிக்கி செத்தா நாளைக்கு பால் - புதுப்புது அர்த்தங்கள்.
'திரைப்படங்களில் ஆங்காங்கே திறமையுடன் பிரயோகப்படுத்தும் ஒரு சாதாரண வாக்கியம், உபயோகப்படுத்துகின்ற முறையிலே மிகப் பெரிய முக்கியத்துவம் பெறுகிறது' என்று Robert Bresson கூறியிருக்கும் கருத்தில் எத்தனை பெரிய உண்மை இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான். கலைஞரின் பராசக்தி வரிகள் குறள் வாசகம் போல் தமிழ்மொழியின் இலக்கியத்திற்குள் சங்கமம் ஆகிவிடுகிறது.
வாக்கியங்கள் இருக்கட்டும்; சில வார்த்தைகள்! அகராதியில் மட்டுமே காணப்படும் சில ஒற்றை வார்த்தைகளுக்கு தனிப்பட்ட முறையிலே முக்கியத்துவம் இல்லை. ஆனால் காட்சிகளில் பொருத்தமான இடங்களில் பொருத்தமான குணச்சித்திரங்களின் வழியாக பிரயோகிக்கப்படும்போது அந்த காட்சியின் பரிமாணமே விசுவரூபம் எடுக்கிறது.
உதாரணம்: 'இரு கோடுகள்' திரைப்படத்திலே வருகின்ற 'அச்சா' என்கிற வார்த்தை. அது பிரயோகிக்கப்பட்ட விதத்தை இங்கே நிணைவூட்ட விரும்புகிறேன்.
Let us see a clipping from this film.
கணவனால் கைவிடப்பட்டவளாக, கணவன் வேலை செய்யும் அலுவலகத்திற்கே மேலதிகாரியாக கலெக்டர் ஜானகி வருகிறாள். இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வரும் கதாநாயகன் ஜெமினி கணேசன் வாழ்க்கையில் இப்படி ஒரு புயல் அடிக்கிறது. முதல் திருமணச்செய்தியே இரண்டாவது மனைவியிடமிருந்து மறைக்கப்பட்ட நிலையில், கதாநாயகன் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்கு தள்ளப்படுகிறான்.
கலெக்டருக்கும் கதாநாயகனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக அலுவலக வம்பர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.
இந்த ஊர் வம்பு, மனைவி ஜெயந்தியின் காதுகளுக்குப்போய்ச் சேர, அவள் துடியாகத் துடிக்கிறாள். தன் கணவனிடம் விஷயத்தை வெளிப்படையாக சொல்லாமலே கணவனைச் சாடுகிறாள்.
அவளது அழுகையும், தொல்லைகளும், ஏச்சுக்களும் பேச்சுக்களுக்கும் பொறுக்க முடியாத நிலையில் 'நான் என்ன தவறு செய்தேன் என்று ஒரு வார்த்தையில் சொல்' என்று கணவன் கத்துகிறான்.
மனைவி ஜெயந்தி தனது அகலமான கண்களில் நீர் தளும்ப 'அச்சா' என்று சொல்கிறாள்.
அத்தனை வம்பு தும்புகளுக்கும் அடிப்படை காரணம் என்னவென்று அந்த ஒரே வார்த்தை 'அச்சா' கணவனுக்கு புரிய வைக்கிறது.
படம் பார்க்கும் எல்லோருக்கும் புரிகிறது. ஆம்! இந்த வார்த்தை கலெக்டர் ஜானகி அடிக்கடி உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை. 'இரு கோடுகள்' வெளியான நேரத்தில் இந்தக் காட்சியைப்பற்றி குறிப்பிடாதவர்களே இல்லை. எழுதாத பத்திரிக்கைகளே இல்லை.'
- கே.பாலசந்தர்

No comments:

Post a Comment