Tiruchendurai Ramamurthy Sankar writes:
ஸ்ரீதரின் வீழ்ச்சியைக் கண்ட ஒவ்வொரு ரசிகனுக்கும் வைர நெஞ்சம்தான்! சுமைதாங்கியும், காதலிக்க நேரமில்லையும் கொடுத்த ஸ்ரீதர் வைர நெஞ்சத்தோடு உரிமைக் குரல் கொடுக்க வேண்டியிருந்தது. புல்லைத்தின்ற புலியையும் நான் பார்த்தத்ற்குக் காரணம் ஸ்ரீதர் அல்ல, சிவாஜி/எம்ஜியார் ...ம் ம் ம்ம் அதைவிட முக்கியமாக எம்.எஸ்.வி!
வைர நெஞ்சம் (1975) படம் வருவதைப்பற்றி பேசும்படம் தொடங்கி சினிமாலயா வரை ஏகப்பட்ட பில்ட் அப். ( ஸ்ரீதரின் வராத சக்தி-80 போல! அதுதான் "நானும் ஒரு தொழிலாளி" என்றால் குழந்தை கூட நம்பாது. Appalling என்ற வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் நானும் ஒரு தொழிலாளி!) .
இன்றுவரை வைர நெஞ்சம் படத்தைச் சிலாகிப்பவர்கள் ( வெகு சிலர்!) எம்.எஸ்.வி , ஏ.சகுந்தலாவின் க்ளப் டான்ஸ் பாட்டிற்கு பூர்ய தன்ஸ்ரீ ராகத்தில் போட்ட டியூனைப் பற்றிச் சொல்பவர்களே! அது ஒரு ரணகளம். அந்தப் பாடலைக் கேட்டால் இரண்டு ஆபத்துகளில் ஒன்று நிச்சயம் ...ஒன்று பூர்ய தன்ஸ்ரீ ராகத்தை வெறுக்க ஆரம்பிப்பீர்கள் , இல்லையேல் ஏ.சகுந்தலாவையே பிடித்துவிடும். அது மிக மிக ஆபத்தானது.
இந்தப் படத்தின் பில்டப்பிற்கு மற்றுமொரு முக்கிய காரணம் ஹேமாமலினியின் சாயலில் பத்மப்பிரியா இருந்த்தாக பலரும் நம்பியது. ஹேமாவின் தாயார் ,ஜெயா சக்கரவர்த்தியே "எம் பொண்ணு மாதிரியே இருக்கை!" என்று சொல்லியதாக கதைகள் வேறு உலவின. ஒரிஜினல் ஹேமாமாலினியை ஹிந்திக்குப் பாக் செய்து அனுப்பிவிட்டு ஸ்ரீதர் டூப்ளிகேட்டை நம்புவதாக பாலசந்தர் ரசிகர்களான சில அண்ணாக்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். பெரியவர்கள் பேசும்போது ஒட்டுக்கேட்கும் நல்ல பழக்கத்தை வைத்திருந்தேன்.
நான் இந்தப் படத்தைப் பற்றி விரிவாக எழுதப் போவது இல்லை. ஜேம்ஸ்பாண்ட் படம் போல் என்று சொன்னால் ஷான் கானரி விஷம் குடித்து , தூக்கில் தொங்கி, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு , வடக்கிருந்து உயிர் துறப்பார்.
ஆனால் எனக்குப் பிடித்த இந்த பாட்டைப் பற்றி எழுதுவதற்கு பல காரணங்கள் உண்டு. டி.எம்.ஏஸ் தன்னுடைய குரலை சற்று மென்மைப் படுத்திக் கொண்டு பாடியது போல் தோன்றும். ( இதே சாயலில் உள்ள அலங்காரம் கலையாத சிலை ( * corrected ரோஜாவின் ராஜா) சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் ( மன்னவன் வந்தானடி)பாட்டிலும் அதே போல்) . சந்தத்திற்கு எழுதும்போதும் கவிஞரின் சற்றும் கலையாத கவியலங்காரம்.
பறவைகளின் ஒலியமுதம் பருவமகள் இசையமுதம்
பாராட்ட நீராடினாள் தாலாட்ட உனைத் தேடினாள்
பதுமையுடன் புதுமை மது பசியறியும் இளமை நதி
பாராட்ட நீயில்லையா சீராட்ட நானில்லையா
அந்த மிதக்கும் டியூன்! பாடலின் முதல் இரண்டு வரியை யாராவது ஸ்லோ டெம்போவில் கித்தாரில் வாசித்துவிட்டு வேறு ஏதாவது பிரபல பாடல் நினைவுக்கு வருகிறதா? சொல்லுங்கள்!
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1244708668894190/
No comments:
Post a Comment