Tiruchendurai Ramamurthy Sankar writes:
சில வருடங்களுக்கு முன் Best of the rest என்று MSV, இளையராஜா, ARR, கே.வி.மஹாதேவன், தவிர்த்து வேற்று மொழிப் படங்களின் இசையமைப்பாளர்களின் தமிழ்ப்படங்கள் பற்றி கலந்துரையாடினோம். ஜி.தேவராஜன் ( மலையாளம்) , விஜயபாஸ்கர்,ராஜன்-நாகேந்திரா ( கன்னடம்), சக்ரவர்த்தி ( தெலுங்கு) , லக்ஷ்மிகாந்த்-பியாரேலால், ஆர்.டி.பர்மன் ( ஹிந்தி) . ( ஜி.கே.வெங்க்டேஷை தமிழ் இசையில் சேர்த்துவிட்டோம்!)
அதிகபட்சம் பேர் ஜி.தேவராஜனையே விரும்பியிருந்தோம். இத்தனைக்கும் தமிழில் அவர் இசையமைத்த படங்கள் 1969 ல் காவல் தெய்வம் தொடங்கி 1983 வில்லியனூர் மாதா வரை ஏறத்தாழ 10 இருக்கும். முக்கியமானவை....
காவல் தெய்வம், துலாபாரம், பருவகாலம், அந்தரங்கம், ஸ்வாமி ஐய்யப்பன், குமாரவிஜயம், அன்னை வேளாங்கண்ணி, வில்லியனூர் மாதா.
இப்பதிவு ஜி.தேவராஜன்- டி.எம்.எஸ் கூட்டணி பற்றி மட்டுமே. ( அந்தரங்கம், பருவகாலம் பற்றி எழுதினால் தீபா, ரோஜாரமணி என்று மனசு சஞ்சலப்படும்! ) . ஏசுதாஸ், ஜெயசந்திரன் போன்ற மென்மையான குரல்களையே பயன்படுத்தியவருக்கு ஓம்காரம் நிறைந்த டி.எம்.எஸ்சின் குரல் மேல் ஒரு வியப்பு இருந்திருக்கவேண்டும். கீழ்க்கண்ட பாடல்கள் ரேடியோவில் ஆட்சி செலுத்தின என்றால் மிகையாகாது.
அற்புதமான பாடல்கள்
பூஞ்சிட்டுக் கன்னங்கள் ( துலாபாரம்)
சுவாமியே சரணம் & சபரிமலையில் வண்ணச் சந்திரோதயம் ( சுவாமி அய்யப்பன்)
நீலக்கடலின் ஓரத்தில் ( அன்னை வேளாங்கண்ணி) .
--துலாபாரம் படம் சிறுவயதில் பார்த்துவிட்டு , வீட்டுக்குத் திரும்பிப்போக பஸ் சார்ஜ்ஜிற்கு பிச்சை எடுத்து போகவேண்டும் என்ற மன நிலையை உருவாக்கிய படம். சற்று வளர்ந்தபின் டி.வியில் பார்த்த பிறகு , படத்தில் அடிக்கடி கர்ப்பம் தரித்த சாரதா போல் கர்ப்பம் தரித்துவிட்டோமோ என்ற பயத்தை உருவாக்கிது. அப்போதைய முருகனடிமையும், பிற்கால மேய்ப்பரடிமையுமான ஏவி.எம்.ராஜன் படத்தில் முழுநேரத் தொழிலாக அதையும், பகுதி நேரத்தில் தொழிற்சங்கத் தலைவராகவும் பணியாற்றியிருப்பார். சாரதா, காஞ்சனா என்ற இரு தோழிகளின் திசை மாறிய வாழ்க்கை பற்றிய படம். கம்யூனிஸ்ட் சிந்தனைகள், அவார்ட்டை எதிர் நோக்கித் திணிக்கப்பட்ட வறுமை...painful experience!
படத்தில் பிரபலமான பாடல்கள் பூஞ்சிட்டு கன்னங்கள், காற்றினிலே ( ஏசுதாஸ்).
திரையில் முத்துராமன் பாடும் கவிஞரின் இந்தப் பாடல் தமிழின் பெருமையை வர்ணிக்கும் பாடல். தமிழின் பெருமையை வர்ணிக்க டி.எம்.எஸ்ஸின் குரலை விட சிறந்தது வேறொன்றுமில்லை. MKT யின் ராதே உனக்கு, வள்ளலைப் பாடும் வாயால் போன்ற பாடல்கள் செஞ்சுருட்டியில் ,
ஏற்கெனவே,பிரபலமானவை. இந்தப்பாடலின் சிறப்பு வெவ்வேறு விதமாக அமைக்கப்பட்ட சரணங்கள்.
இந்தப் படத்தில் ஜி.தேவராஜுனுக்கு உதவி ஏ.கே.சேகர்!
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1253487764682947/
No comments:
Post a Comment